Total Pageviews

Sunday, April 22, 2012

தலைவலி ஏற்பட காரணம் என்ன?

உடலில் பிரச்சினை ஏற்பட்டாலே அது மனதையும் பாதிக்கிறது. இதனால் டென்சனும், மன அழுத்தமும் தீராத தலைவலியை ஏற்படுத்துவதோடு உடலையும் பலமிழக்கச் செய்கிறது. தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள் அந்த அளவிற்கு படுத்தி எடுத்துவிடும். தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் கொடூரம் தெரியும்.


மூளை நரம்புகளில் சரியான ரத்த ஓட்டம் இல்லாமல் தடை படுவதனாலேயே தலைவலிக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். ஆழமாக மூச்சை இழுத்து விட்டால் தலைவலிக்கு ரிலீப் கிடைக்கும். அதேபோல் தலையை முன்னும் பின்னும் அசைத்து எக்ஸ்சசைஸ் செய்யலாம்.


கண்களின் சோர்வு


கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் சோர்வினால் தலைவலி ஏற்படும். எனவே இரவு நேரங்களில் கணினியில் அதிக வேலை பார்க்காமல் நன்றாக தூங்குங்கள். தலைவலி ரிலீப் ஆகும். அதேபோல் கண்களை டைட்டாக மூடி மெதுவாக திறந்து பயிற்சி எடுங்கள்.

மன அழுத்தம் தான் டென்சன் தலைவலிக்கு முக்கிய காரணம் எனவே மன அழுத்தம் தரும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பலாம். தலைவலிக்கும் போது வெது வெதுப்பான நீரில் முகம் கழுவுங்கள் மன அழுத்தம் நீங்கும் டென்சன் ரிலீப் ஆகும்.

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதும் தலைவலி ஏற்படுவதை தடுக்கும். யோகாசனம் செய்வதும் டென்சன் தலைவலியை நீக்கும். சவாசனா செய்வதால் உடனடி ரிலீப் கிடைக்கும்.

தலைவலிக்கும் இடத்தில் ஐஸ் பேக் வைத்தால் சரியாகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் 20 நிமிடத்திற்கு மேல் ஐஸ் பேக் வைப்பது தவறான செயல் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

நோய்களால் மன அழுத்தம்

சத்தான உணவுகளை தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு, உடல் எடை கூடுவது மற்றும் ரத்த கொதிப்பு, ஹார்ட் அட்டாக் என இளம்வயதிலேயே உடலானது நோய்களின் கூடாரமாகிறது.

உடலில் பிரச்னைகள் ஏற்படுவதால் டென்ஷன் அதிகரித்து அது மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. இதனை தவிர்க்க சிறு வயது முதல் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

பாரம்பரிய உணவுகள்

நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள், இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். 

அதேபோல் பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும்.

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...