Total Pageviews

Thursday, February 16, 2012

ஜெயந்தி என்றொரு நீதிதேவதை!

அஜீத் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'சிட்டிசன்’ திரைப்படத்தில், அதிகாரிகளின் அராஜகத்தால் அத்திப்பட்டி எனும் கிராமமே அழிந்துபோகும். கிட்டத்தட்ட அதற்கு இணையான ஓர் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது,

 சென்னை, திருமுல்லைவாயில், ஜெயா காலனி. இதற்கு காரணமான நீதிபதி ஐ.ஜெயந்தியை... நீதிதேவதையாகவே போற்ற ஆரம்பித்துவிட்டனர் அந்த மக்கள்!

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேலான நரிக்குறவர்கள் வசிக்கும் 1.8 ஏக்கர் நிலம், தனக்குச் சொந்தமானது என்று அம்பத்தூர் முன்சீப் நீதிமன்றத்தில் பாலு என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 18 வருடங்களாக இழுபட்ட வழக்கில்தான்... 'அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது. அந்த மக்களே தொடர்ந்து அங்கு வாழலாம்’ என அதிரடியாக தற்போது தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி ஜெயந்தி.

'கிழிந்த உடைகளுடன் தினமும் காலையிலிருந்து மாலை வரை நீதிமன்றத்தில் காத்திருந்து நீதிக்காக போராடியுள்ளனர் அந்த ஏழைகள். ஆனால், மனுதாரர் தரப்பில் 'டாம் அண்ட் ஜெர்ரி' ஓடிப் பிடித்து விளையாடுவது போல 18 ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.
காரணம் இல்லாமல் வாய்தா கேட்டு வழக்கை தள்ளி வைப்பதால், சட்டங்களை அந்த ஏழைகள் தங்களின் நண்பனாக கருதாமல் எதிரியாகத்தான் கருதுவார்கள். வழக்கை ஒரு நாள் தள்ளிப் போட்டாலும்கூட, அது அந்த ஏழைகளின் ஒரு நாள் சாப்பாட்டில் மண் அள்ளி போடுவதற்கு சமமாகும்’
- இப்படியெல்லாம் நெத்தியடியாக இன்னும் பல கருத்துக் களையும் தீர்ப்பில் ஜெயந்தி வெளிப்படுத்தியிருப்பது... அவருடைய மதிப்பை பல படிகள் உயர வைத்துவிட்டது.

''ஜெயந்திம்மா இந்த கோர்ட்டுக்கு வந்த பின்னதான், கோர்ட்டுக் குள்ள எல்லாம் எங்களால வரமுடிஞ்சுதுங்க. அதுக்கு முன்ன... 'உள்ள வரக்கூடாது'னு அதிகாரிங்க வெரட்டி வெரட்டி அடிப்பாங்க. ஜெயந்தியம்மாதான் உள்ள அனுமதிக்கச் சொல்லி, என்ன பிரச்னைனு அன்பா, அக்கறையா விசாரிச்சாங்க. எங்களையும் சக மனுசங்களா மதிச்சி பேசின முதல் மனுஷி!'' என்று முகத்தில் நன்றியும், நெகிழ்ச்சியும் ததும்பப் பேசுகிறார் நரிக்குறவர்கள் பொதுநலச் சங்கத்தின் தலைவர் தனலட்சுமி.


''எப்பவுமே ஜெயந்தி இப்படித்தாங்க. இல்லாதவங்களுக்காக இரக்கப்படுறது... அவங்க ரத்தத்துல ஊறின ஒண்ணு'' என்று சொல்லி நெகிழ்கிறார், அவருடைய கல்வி வழிகாட்டிகளில் ஒருவரான, சென்னைப் பல்கலைக்கழக பொது நிர்வாகவியல் துறை பேராசிரியர் ரவிசங்கர்.

''ஜெயந்தியோட பூர்விகம்... கன்னியாகுமரி மாவட்டம். படிப்புனா... ஜெயந்திக்கு ரொம்பப் பிடிக்கும். மனித உரிமையியல், இந்திய அர சியல் சட்டம், இன்டர்நேஷனல் லா இப்படி பத்துக் கும் மேலான மேற்படிப்பு பட்டங்களை வாங்கியிருக் காங்க. ரெண்டு பிஹெச்.டி. முடிச்சிருக்காங்க.
'என்னோட படிப்பு ஆர்வத்துக்கு காரணமே... அப்பா ஐசக்தான். அவர் ஸ்கூல்ல தலைமை ஆசிரியரா இருந்தவர். எங்களோட சாப்பாட்டை பத்திக்கூட கவலைப்பட மாட்டார். யாராவது படிப்பு செலவுனு கேட்டா போதும்... கையில இருக்குற பணத்தை எடுத்துக் கொடுத்துடுவார். அந்த ஆர்வம்தான் என்னையும் படிக்கத் தூண்டிக்கிட்டே இருக்கு!’னு ஜெயந்தி சொன்னப்ப... நான் அசந்துட்டேன்.

ரோட்டுல ஒரு சின்னக் குழந்தை அழுக்கு சட்டையோட போறதை பார்த்தாலும்... பக்கத்துல அழைச்சு... 'என்ன படிக்கிறே... அப்பா, அம்மா எங்கே?'னு கேட்பாங்க. படிக்கலைனா... அந்தக் குழந்தையை பள்ளிக்கூடத்துல சேர்க்கறதுக்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பாங்க!

டயானா அப்படிங்கற திருநங்கை, நோய் வாய்ப்பட்டு கவனிக்க ஆளில்லாம உடல்நிலை ரொம்ப மோசமா கிடந்தாங்க. கடைசி கட்டத்துலதான் ஜெயந்திகிட்ட உதவி தேடி வந்தாங்க. அதுக்குப் பிறகு, டயானாவுக்காக ரொம்ப பிரயத்தனம் பண்ணினாங்க ஜெயந்தி. ஆனாலும் காப்பாத்த முடியல! ராத்திரி பன்னிரண்டு மணினுகூட பார்க்காம ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போயி அடுத்து ஆக வேண்டிய வேலைகளையெல்லாம் ஜெயந்திதான் செய்து முடிச்சாங்க. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

அவங்களோட வேலை, படிப்பு, பொதுச்சேவைனு பல விஷயங்களுக்கும் உறுதுணையா இருக்கறது... கணவர் தேவதாஸ். குடிநீர் வடிகால் வாரியத்துல வேலை பார்க்கறார். இவங்களுக்கு ஒரே பொண்ணு மாஸி. பல் டாக்டருக்கு படிச்சுட்டிருக்காங்க! இத்தகைய குணம் வாய்ந்த அவங்களுக்கு லெக்சரரா பாடம் எடுக்கறதையே நான் பெருமிதமாத்தான் நினைப்பேன்'' என்று ஜெயந்தி பற்றி நம்மிடம் எடுத்து வைத்தார் ரவிசங்கர்.

ஆனால், ஜெயந்தியின் தீர்ப்பு தந்த மகிழ்ச்சி 24 மணிநேரம் கூட நீடிக்காததுதான் எதிர்பாராத சோகம். தற்போது சென்னை, 20-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்துக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுவிட்டார் ஜெயந்தி.
இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்று கொதிக்கும் ஜெயா காலனி மக்கள், 'ஜெயந்தியம்மாவ மறுபடியும் எங்க பகுதி நீதிமன்றத்துக்கே பணிமாற்றம் செய்யணும்’ என்று உயர் நீதிமன்றம், கமிஷனர் அலுவலகம் என்றெல்லாம் எழுப்பிக் கொண்டிருக்கும் கோஷங்களை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

- அவள் விகடன்

Monday, February 13, 2012

ஒழுக்கம் - தந்தை பெரியார்ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல. நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும்.

உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பன யெல்லாம் அவைகளைச்செய்கின்ற மதிக்கப்படுகின்றதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.

பாவத்திற்குப் பயந்து திருடாதவனும், காவலுக்குப் பயந்து திருடாதவனும், உதைக்குப் பயந்து திருடாதவனும், மானத்திற்குப் பயந்து திருடாதவனும் ஒரே யோக்கியதை உடையவனாவான்.

எது குற்றம்  குற்றம் என்பது நிர்ப்பந்த மில்லாமலே, ஒரு மனிதன்தான் எதை எதைச் செய்யப் பயப்படுகிறானோ, மறுக்கிறானோ, அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றம்.

ஒழுக்கம் கெடுவதற்கு காரணம்

ஒழுக்கக் குறைவாய் ஒருவன் நடக்க வேண்டுமானால்,அதனால் அவனுக்கு, ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்காத ஏதாவது லாபமோ திருப்தியோ ஆசைபூர்த்தியோ ஏற்பட வேண்டும். தன்னிலும் மேலாகவோ தன்னிடமிருப்பதைவிட அதிகமாகக் கொண்டோ வேறொருவன் இருக்கிறான் அனுபவிக்கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும் போதுதான் அதிருப்தியும் மனக்குறைவும் ஏற்படும். அதை நிவர்த்தித்துக் கொள்வதற்குத் தான் எந்த மனிதனும் ஒழுக்கக் குறைவாய் நியாய விரோதமாய்க் கட்டுத்திட்டத்துக்கு மீறி நடக்க வேண்டயவனாகலாம். புதிய உலகில் தனிப்பட்டவர் தேவைக்கும் தனிப்பட்டவர் மனக் குறைவுக்கும் ஏங்கித் திரியும் ஆசைக்கும் இடமே இருக்காது
.
ஒழுங்கு, கடவுள், மதம், சாத்திரம்

ஒழுங்காக ஒரு முறை இருந்தால் அரசாங்கம் வேண்டாம்; சாத்திரம் வேண்டாம்; கடவுளும் வேண்டாம். ஒழுங்கிற்கு விரோதமான இடங்களுக்குத்தான் இயற்கைக்கு மாறான இடங்குளுக்குத்தான் இவைகள் எல்லாம் தேவை. அதனாலேதான் சற்று ஒழுங்கு இருக்கிற இடத்திலே அரசன் இருப்பதில்லை; மற்றும் மதம், சாத்திரம் இவைகள் எல்லாம் இருப்பதில்லை.

ஒழுக்கத்திற்கும் மானத்திற்கும் உள்ள தொடர்பு

ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்க முள்ளவேன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்.
எந்தக் காரியங்களை ஒரு மனிதன்; தான் அப்படிச் செய்ய நினைத்ததும், மற்றவர்கள் அறியாதபடி செய்த்தும், வேறுபல நிர்ப்பந்தங்களால், இச்சைக்கு விரோதமாய்ச் செய்ய  முடியாமல் இருந்ததுமாய் இருக்கின்றனவோ, அந்தக் காரியங்களை மற்றவர்கள் செய்தால் அது எப்படுப்பட்ட காரியமானாலும் ஒருக்காலமும் குற்றமாகாது.

பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால் அது பிறரையும் பாதிக்கும். ஒழுக்கம் இல்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே சமுயதாய வாழ்க்கையில் ஒழுக்கம் பக்தியைவிட முதன்மையானது; இன்றியமையாதது.

Sunday, February 12, 2012

what is life ?Life is a Challenge....................Meet it
Life is a Gift..........................Accept it
Life is an adventure..................Dare it
Life is a sorrow................Overcome it
Life is a tragedy........................Face it
Life is a duty........................Perform it
Life is a mystery.....................Unfold it
Life is a song.............................Sing it
Life is an opportunity................Take it
Life is a journey.................Complete it
Life is a promise.......................Fulfill it
Life is a beauty........................Praise it
Life is a spirit.........................Realize it
Life is a struggle........................Fight it
Life is a puzzle.........................Solve it
Life is a goal........................Achieve it

                     -About life from Bagavath Geeta

மன நிம்மதி பெறுவது எப்படி?உங்கள முன்னேற்றத்தை எவரும் ஆக்கவோஅழிக்கவோ முடியாது.உங்களது தொழிலும்,உங்களது வாழ்கையும் உங்கள் முன்வினையாலேயே உருவாக்கபடுகிறது.தீதும் நன்றும் பிறர் தர வாரா! ஒருபோதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள் அல்லது உங்கள் துன்பத்திற்கு அடுத்தவரை பழிக்காதீர்கள்.


சூழ்நிலைக்கு  ஏற்ப நாம் மாற வேண்டும்

உங்கள் அமைதியை குலைக்கும் உங்களது ஒரு சூழ்நிலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.சூழ்நிலையை மாற்றுவதற்கு பதிலாக நீங்கள் உங்களையே இப்பொழுதைவிட நல்ல நிலைமைக்கு மாற்றி அமையுங்கள்.நீங்கள் மென்மேலும் தூய்மை அடையும் போது சூழ்நிலையும் மென்மேலும் ஒத்தவிதத்தில் வளர்ச்சி அடையும்.முயற்சி செய்து பாருங்கள்!


பொறுமை தரும் பலம்

எது நடந்தாலும் அதை பொருத்து கொள்ளுங்கள்.எதைக் குணப்படுத்த முடியாதோ அதை பொறுத்தே ஆகவேண்டும்.மகிழ்ச்சியுடன் சக்தி ங்களிடம் அதிகரிக்கும்.


பொறுப்புகளை என்ன செய்வது?

பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள்,தப்பி ஓடப் பார்க்காதீர்கள்.அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிடைக்காது.அதிகமான கவலைகள்தான் வந்துசேரும்."நான் செய்கிறேன்" என்ற ஆணவத்துடன் மென்மேலும் பொறுப்புகளை கூட்டி கொண்டு போகாதீர்கள்.(இதுதான் வம்பை விலைக்கு வாங்குவது).அதிக நேரத்தை பிரார்த்தனை,வழிபாடு மற்றும் த்யானத்தில் செலவிடுங்கள்.மனமே இல்லாதபோதுதான் பூரண திருப்தி கிட்டுகிறது.மனம் என்பது எண்ணங்களின் குவியலே.எண்ணமின்மைதான் பூரண அமைதி நிலவும் மிக உயர்ந்த நிலையாகும்.

தியானம் என்னும் அற்புத மருந்து

ஒழுங்கான தியான நேரத்தை கடைபிடியுங்கள்.தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது.மனதில் சஞ்சலமற்ற தன்மையை உண்டாக்குகிறது. முன்போல மனம் அலைந்து திரியாது.தியானம் உங்களது பல்வேறு திறமைகளை வளர்த்து குறைந்த நேரத்திலேயே வேலைகளை செய்வதற்கான ஆற்றலை வளர்க்கிறது.

வாழ்கை தத்துவங்கள்
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கிறது
மனதுக்கு பிடித்தவர்கள் பேசாத போது...

பாசம்
ஒரு காற்று மாதிரி,
இருப்பது நமக்கு தெரியாது
ஆனால்
அது இல்லாமல்
நம்மால்
இருக்க முடியாது

தோல்வியடையும் போது
துவண்டு விடாதே
தோல்வி ஒன்றும்
தொடர்கதை அல்ல;
தொடர்கதைக்கும் கூட
முற்றுப்புள்ளி உண்டு

எழுவதும் பின் விழுவதும்
அலைகளுக்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
எழுச்சி மட்டுமே
மனிதனுக்கு அழகு.

தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றி தான்....
அதற்காக வெற்றி அடைவதற்கான நாட்களை மட்டும் தள்ளி போட்டு விடாதே......

நாம் விதையாய் விழுவோம் மரமாய்
எழுவோம்!

மிளகு - பாம்பு கடிக்கு முதலுதவி சிகிச்சை


மிளகு- பாம்பு கடிக்கு முதலுதவி


பாம்பு என்றால் படையும் நடுங்கும். யாரையாவது பாம்பு கடித்துவிட்டால்,​​உடனே அந்த இடத்தில் கயிற்றால் கட்டுவதும்,​​ அந்த இடத்தில் பற்களை வைத்து ரத்தத்தை உறிஞ்சுவதும் சரியான நடவடிக்கை அல்ல.​ ​

பாம்பு கடித்த இடத்தை டிடர்ஜென்ட் சோப்பால் தேய்த்து தண்ணீரில் கழுவ வேண்டும்.​ பின்னர் பாம்பு கடித்தவருக்கு  20 மிளகுவை எடுத்து  பொடி செய்து அரை லிட்டர் தண்ணிரில்  கலந்து  குடிக்கச் செய்ய  வேண்டும் !  .​ இப்படிச் செய்வதன் மூலம் அந்த நபரை சாவிலிருந்து  காப்பாற்ற முடியும்.  அவருடைய உடம்பில் விசம் பரவாமல் இருக்க  உடனடியாக மருத்துவமனைக்கு  அழத்துச் செல்ல வேண்டும்.


óýÈ¢ : ¦ƒÂ¡ ¦¾¡¨Ä측ðº¢.

Saturday, February 11, 2012

சர்க்கரை குறைக்க வெண்டைக்காய்சர்க்கரை அளவை கட்டுப்படுத்த  குறைக்க
தினமும் இரு  வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் தலை பாகத்தையும் அடிபாகத்தையும் வெட்டிவிட்டு மிதமுள்ள  காயை 3 அல்லது 4 துண்டுகளாக வெட்டி அதை அரை லிட்டர் தண்ணிரில் இரவில் ஊற்விடுங்கள்.  காலையில் எழுந்தவுடன் வெண்டைக்காயை  துண்டுகளை வெளியில் எடுத்து  வீசி விட்டு தண்ணீரை மட்டும்  குடியுங்கள். குறைந்து 1 மணி  நேரம்  காபி அல்லது டீ  குடிக்க வேண்டாம்.இப்படி  இரு வாரங்கள்  குடித்து வந்தால்  உங்களது உடலில் உள்ள் சர்க்கரையின் அளவு கண்டிப்பாக் குறையும். 

அறியாமை, ஆண்டவனின் சாபம். அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை.

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.
 

Thursday, February 9, 2012

பொடுகு தொல்லை நீங்க

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும்.

இது போன்ற பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக, சில டிப்ஸ்

1)மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால்,பொடுகு தொல்லை நீங்கும்.

2)வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

3) தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால்,பொடுகு நீங்கும்.

3)வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

4) வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

5) எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன்,தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

6)தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

7)நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

8)வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால்,பொடுகு தொல்லை நீங்கும்.

9)தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து,சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

10)முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

கூந்தல் மிருதுவாக இருக்க

வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால்,கூந்தல் மிருதுவாகவும்,பளபளப்பாகவும் இருக்கும்.நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால்,கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

நன்றி தினமலர்!

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

 

குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்:பெற்றோருடன் அதிக ஒட்டுதல் எற்படும் (Bonding)பெற்றோர்கள் குழந்தைகளை நன்கு புரிந்து கொள்வார்கள். புரிந்து கொண்டால் தான் அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய இயலும் (Understanding)குழந்தைகள் தனது அனுபவங்களைப் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் (Sharing of experiences) -- பெற்றோர் தங்கள் அனுபவங்களையும் பாடங்களையும் குழந்தைகளுக்குக் கற்றுத் தர ஒரு சந்தர்ப்பமாக அமையும் (Passing of the knowledge) -- குழந்தைகளுக்குத் தங்கள் பெற்றோரிடம் எந்த விஷயமானாலும் பேசலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் (Building trust) -- தங்கள் பெற்றோரின் வாழ்வில் தாங்கள் ஒரு முக்கிய பகுதி என்பதை அறிந்து அவர்களுக்கு ஒரு சுயமதிப்பு ஏற்படும் (Self-esteem)

பெற்றோர்களுடன் சிறு வயதில் அதிக நேரம் செலவழித்து நெருக்கம் பெற்ற குழந்தைகள், தங்கள் பதின்ம வயதுகளில் தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட உண்மையாகும்.

நேரம் செலவழிப்பது என்பதை "தரமான நேரம்" (Quality Time) என்று கூறுகிறார்கள். ஏனோதானோவென்று குழந்தையுடன் இருப்பதை தரமான நேரம் என்று கருத இயலாது. அதற்கென்று சில அம்சங்கள் இருக்கின்றன:குழந்தையுடன் தனியாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களோடு பழக வேண்டும் (alone with and interacting with the child). இதிலே இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஏதோ ஒரு கல்யாணத்துக்குக் குழந்தையுடன் போய்வந்து விட்டு, "இன்று நான் என் குழந்தையோடு தரமான நேரம் செலவழித்தேன்" என்பது ஒப்புக் கொள்ளப்படமாட்டாது. நீங்களும் குழந்தையும் ஒரு தனி இடத்தில் இருக்க வேண்டும்.

 இன்னொன்று இருவரும் ஒரு தனி அறையில் அமர்ந்து இருவரும் தனித் தனியாக ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் அதுவும் சரி கிடையாது. இருவரும் பேசிப் பழக வேண்டும் அப்போது தான் அது தரமான நேரமாகக் கருதப்படும். இதிலே ஒருமித்த நேரம் (focussed time) என்றும், இணைந்து இருக்கும் நேரம் (hang around time) என்று இருவகைகள் உண்டு. ஒருமித்த நேரம் என்பது, இருவரும் இணைந்து ஒரு முக்கியமான செயலைச் செய்வது. இணைந்து இருக்கும் நேரம் என்பது இருவரும் சேர்ந்து ஏதாவது (முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) செய்வது. ஆனால் எந்த வகையில் நேரம் கழித்தாலும் உங்களது கவனம் 100% குழந்தையை நோக்கியதாக இருக்க வேண்டும்.சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது (demonstrating love through words and actions). நீங்கள் இணைந்து இருக்கின்ற நேரத்தில் உங்களது சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இருப்பினும் இதனைச் சூழ்நிலை மற்றும் குழந்தையின் வயது ஆகியவற்றை மனதில் கொண்டு செய்யலாம்.சிறப்பான தாக்கம் ஏற்படுத்த வேண்டும் (having a special impact). ஒருமிக்கும் நேரம் (connect times) என்று ஒன்று உண்டு.  


அதாவது நாம் குழந்தையை நீண்ட நேரம் பிரிவதற்கு சற்று முந்தைய நேரம் (நாம் அலுவலகம் செல்லும் போது அல்லது குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது), நீண்ட காலத்துக்குப் பின் மறுபடி காணும் நேரம் (அலுவலகத்திலிருந்து/பள்ளியிலிருந்து திரும்பிய நேரம்), இரவு படுக்கைக்குச் செல்லும் நேரம் போன்றவை. இந்த நேரங்களில் குறிப்பாக பெற்றோரின் அன்பும் கவனமும் கிடைக்கப்பெற்றால் குழந்தைகள் மிகவும் மனம் மகிழ்கிறார்கள். இது அவர்களின் மனதில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்களின் பிறந்த நாள் அல்லது அவர்கள் மேடையில் கலைத் திறனை வெளிப்படுத்தும் நேரம் ஆகியவற்றின் போதும் பெற்றோர்கள் உடனிருப்பது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.குழந்தைகள் விரும்பும் மற்றும் குழந்தைகள் ஆரம்பித்த வேலைகளின் போது (child initiated and child sanctioned activities). அதாவது குழந்தைக்குப் பிடித்தமான ஒரு வேலையின் போது நீங்கள் உடனிருந்தால் தான் அது தரமான நேரமாக கருதப்படும். ஒரு குழந்தைக்கு வீட்டுப் பாடம் செய்ய அவ்வளவாய்ப் பிடிக்காது எனும்போது வீட்டுப்பாடம் செய்ய நீங்கள் உதவினாலும் அது தரமான நேரமாக குழந்தைக்குத் தோன்றாது. அதற்குப் பிடிக்கிற ஒரு வேலையை அதற்கு அடுத்து அந்தக் குழந்தை செய்யும்போது நீங்கள் உடனிருந்தால் அது நன்று.

தரம் என்பதோடு நேரத்தின் அளவும் (quantity of time) முக்கியத்துவம் வாய்ந்ததே. குறிப்பாக குழந்தைகள் சிறிய வயதினராய் இருக்கும் போது மேலே குறிப்பிட்ட வகைகளில் அதிக நேரத்திற்கு அவர்களோடு பழகி இருக்க வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் சிறிய வயதில் அவர்களுக்கு உங்களின் அன்பும் கவனிப்பும் அதிகமாகத் தேவைப்படுகிறது. மேலும் சிறிய வயதிலே தான் உங்களாலும் அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்த இயலும்.

குழந்தைகளோடு நெருக்கத்தை வளர்க்க உங்கள் வாழ்நாளில் ஏறக்குறைய அவர்களின் முதல் பதினைந்து வருடங்களுக்காவது அன்றாடம் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அது கண்டிப்பாக பின்னாட்களில் அதிகமான பலனை அளிக்கும்.

நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.

உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.
 

Wednesday, February 8, 2012

போக்குவரத்து விழிப்பு உணர்வுப் பூங்கா''உங்களை எல்லாம் திருத்தவே முடியாது...' - வெளியே செல்லும் போதெல்லாம் ஏதாவது ஒரு லாரி, ஆட்டோ, மினி பஸ் டிரைவரை இப்படித் திட்டாமல் நாம் வீடு திரும்புவது அபூர்வம். என்றாவது அவர்களைத் திருத்த முயற்சித்திருக்கிறோமா என்றால், இல்லை. 'தனி மனுஷனால என்னத்தப் பெருசா சாதிச்சிட முடியும்?’ என்பது நாம் சொல்லும் சமாதானம்.
 
ஆனால், நரசிம்ம மணி என்ற இளைஞரை ஒருமுறை சந்தித்தால், நம் எண்ணம் அப்படியே தலைகீழாய் மாறிவிடும். யார் இவர்? மதுரைப் பக்கம் ஏதாவது லாரியை ஓரங்கட்டி, டிரைவருக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் நபரை நீங்கள் காண நேர்ந்தால், சந்தேகமே இல்லாமல் அவர்தான் நரசிம்ம மணி.

''அண்ணே, சில ரோடுகள்ல நடுவுல விட்டுவிட்டு கோடு போட்டிருக்காங்க. இன்னும் சில ரோடுகள்ல விடாம ஒரே கோடா போட்டிருக்காங்க அது எதுக்குண்ணே?' என்று அவர் கேட்க, ''தெரியலையே!'' என்று சொல்கிறார் டிரைவர். ''தெரியலைன்னு ஒப்பு கொள்வதே தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதற்கான முதல்படி'' என்று சொல்லி பிஸ்கட் பாக்கெட் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கும் நரசிம்ம மணி, ''விட்டு விட்டுப் போட்டிருந்தா வலது பக்கமா ஓவர் டேக் பண்ணிட்டு, திரும்பவும் நம்ம லைனுக்குள்ள வந்திடலாம். ஆனா, ஒரே கோடா இருந்துச்சுன்னா கண்டிப்பா கோட்டுக்கு அங்கிட்டுப் போகவே கூடாதுண்ணே! இதை மத்த டிரைவருக்கும் சொல்லிக் குடுங்கண்ணே' என்று அன்பொழுகச் சொல்கிறார்.
திருப்பாலை முனீஸ்வரன் நகர் விவேகானந்தா தெருவில் இருக்கும் அந்த வீட்டில் காலடி வைக்கும் போதே, சாலையில் நுழைந்த உணர்வு வந்துவிடுகிறது. காரணம், நடைபாதையையே சின்ன சாலை போல் மாற்றி ஆங்காங்கே சிக்னலும் வைத்திருக்கிறார். ஒரு ஹால், நான்கு அறைகளைக் கொண்ட அந்த வீட்டை டிரான்ஸ்போர்ட் ரூம், டிராஃபிக் ரூம், டூல்ஸ் ரூம், டிரையினிங் ரூம், ரெஸ்ட் ஹவுஸ் என்று போக்குவரத்து விழிப்பு உணர்வுப் பூங்காவாக மாற்றி வைத்திருக்கிறார் நரசிம்ம மணி.
விபத்து நடந்தால் யார் யாருக்குத் தகவல் கொடுக்க வேண்டும்?

முதலுதவி சிகிச்சை எப்படிச் செய்யலாம்? வாகனங்களின் தொழில்நுட்பங்கள், அவை செயலிழக்கும்போது எப்படிச் சமாளிப்பது? டூல்ஸ்களை எப்படிக் கையாள்வது என மாடல் கார், சாலைகளை வைத்து எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறார். இதற்கு எந்தக் கட்டணமும் இவர் வாங்குவதில்லை!

எப்படி வந்தது இந்த ஆர்வம்?

''1997-ல் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்துக் கொண்டு இருந்தபோது, ஒரு கொடூர விபத்து. லாரி டிரைவரின் தவறால் மோட்டார் சைக்கிளில் சென்ற என் நண்பன் உடல் நசுங்கி இறந்து போனான். தகவல் கிடைத்ததும் மாணவர்கள் எல்லாம் கோபத்தோடு கிளம்பிப் போனோம். தப்பு டிரைவர் மீதுதான் என்று தெரிந்தும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், இறந்துபோன என் நண்பனிடத்தில் டிரைவிங் லைசென்ஸ் கிடையாது. கோபம் தணிந்த பிறகுதான் புரிந்தது, ஒரு டிரைவருடைய அறியாமை யாரோ ஒருவரின் உயிரை அநியாயமாகப் பலி வாங்கிவிடுகிறதே என்பது! அப்போதே தீர்மானம் எடுத்தேன், 'யாருடைய சாவுக்கும் நான் காரணமாக இருக்க மாட்டேன்’ என்று.

அடுத்த கட்டமாக, அறியாத டிரைவர்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தினால் இன்னும் பல பேருடைய உயிரைக் காப்பாற்றலாமே என்ற எண்ணம் வந்தது. அதே நேரத்தில் பிறருக்குக் கற்றுக் கொடுக்க நான் தகுதியானவன்தானா என்று கேள்வியும் எழுந்தது. அதனால், இலகு ரக, கன ரக ஓட்டுனர் பயிற்சி மட்டுமின்றி நடத்துனர், ஜே.சி.பி ஆபரேட்டர் ஆகிய உரிமங்களை பெற்றதுடன் முதலுதவி சிகிச்சை, தீ விபத்து மேலாண்மை, எம்.ஏ,. பொது நிர்வாகம் போன்ற பிற படிப்புகளையும் கற்றுத் தேர்ந்தேன். 'ஏன் இப்படி வாழ்க்கையை வீணடிக்கிற?' என்று கேட்காமல், இதற்கெல்லாம் என் குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்ததுதான் மகிழ்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிரைவர்களுக்காகவே 'டிரைவிங் நீட்ஸ் அகாடெமி’ என்ற டிரஸ்ட்டை நான் தொடங்கியபோது, அதற்காக வீட்டின் கீழ் தளத்தையே விட்டுத் தந்தார்கள்.
லாரி டிரைவர்களுக்கு நான் சொல்லும் முக்கியமான விஷயம், ''மற்ற வாகன ஓட்டிகள் தவறாக வந்தால், அவர்களுக்குத்தானே நஷ்டம் என்று மோத விட்டு விடாதீர்கள். அந்த காரில் உங்களது மகன் வந்தால் எப்படி நடந்து கொள்வீர்களோ, அப்படி நடந்து கொள்ளுங்கள்!'' என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிறேன்.

பயிற்சி அளிக்க கடைசியாக நான் பயன்படுத்தும் ஆயுதம் வீடியோ. கவனக்குறைவு, சிக்னலை மதிக்காமை, அதிக வேகம், ஓவர் லோடு உள்பட வெவ்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 10 ஆயிரம் நேரடி விபத்துக் காட்சிகளை நான் வைத்திருக்கிறேன். இருண்ட அறைக்குள் புரொஜக்டரில் சினிமா போல அவற்றைக் காட்டி, சின்னத் தவறால் நொடியில் ரத்தமும் சதையுமாக மனிதர்கள் நசுங்கிப் போவதை விளக்கும்போது மனம் வெறுத்துப் போவார்கள். கோவிலுக்குச் சென்றால் எப்படி பக்தி வருமோ, அதைப்போல என் வீட்டைத் தேடி வந்தால் இனிமேல் யாருடைய சாவுக்கும் நான் காரணமாக இருக்க மாட்டேன் என்ற எண்ணம் ஒவ்வொரு டிரைவருக்கும் வந்துவிடும்.

கடைசியாக, ஒவ்வொரு டிரைவரிடமும் சின்ன நோட்டு ஒன்றைக் கொடுத்து, 'இன்று என்னால் உயிர் பிழைத்தவர்கள் இத்தனை பேர்’ என்று தினமும் அந்த டைரியில் எழுதச் சொல்வேன். ஒரு டிரைவர் ஒரே மாதத்தில் அந்த டைரியை முடித்துவிட்டு, 'வேறு டைரி தாங்க சார்’ என்று சொன்னார். என்னால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள்தான் என்னை இன்னும் இன்னும் செயல்பட வைக்கிறது' என்றார். டிரைவர்களுக்கு மட்டுமின்றி படித்த இளைஞர்களுக்கும், கல்லுரி, பள்ளி மாணவர்களுக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார் நரசிம்ம மணி!
-
மோட்டார் விகடன்

 பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை. 

ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.Tuesday, February 7, 2012

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை!
விஜயகுமார், சென்னையில் தனியார் நிறுவன ஊழியர். தன் குழந்தைகளின் எதிர்கால படிப்பிற்கு உதவும் என்று நினைத்து இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து கட்ட ஆரம்பித்தார். சரியாக மூன்று வருடம் அவரால் பணத்தைக் கட்ட முடியவில்லை. இன்று அந்த பாலிசி காலாவதியாகி, நிர்க்கதியாக கிடக்கிறது.
''இந்த பாலிசியில் மூணு வருஷம் மட்டும் கட்டினாப் போதும்; உங்க முதலீடு டபுளாயிடும்'' என்று சொன்னதை நம்பி பணத்தைப் போட்டார் வேலூர் சண்முகம். இன்று அவர் எடுத்த பாலிசி இருபது சதவிகிதம் மைனஸில் இருக்கிறதே என்று புலம்பித் தீர்க்கிறார்.
ன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பலரும் இப்படி விதவிதமாகப் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்காக நாம் வேறு யாரையும் குற்றம்சாட்ட முடியாது.

காரணம், இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும் முன் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று நாம் பார்ப்பதே இல்லை. இனியாவது, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் முன் என்னென்ன விஷயங்களைக் கட்டாயம் கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா?

யார் பெயரில் பாலிசி..?
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை பொறுத்தவரை, சம்பாதிக்கும் நபரின் பெயரில் எடுப்பதுதான் சரியானது. இன்ஷூரன்ஸ் என்பதே குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு, அவர் இல்லாத நிலையில் சமாளிப்பதற்கான ஒரு முன்னேற்பாடுதான். இது தெரியாமல், பாசத்தைக் காட்டுகிறேன் என மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் பாலிசி எடுப்பவர்கள் ஏராளம்.
மனைவி வேலைக்குச் செல்லும் பட்சத்தில் அவர் பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம்! வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட வாய்ப்பில்லாதவர் எனும் பட்சத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் பேரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது வீண்தான். ஒரு உதாரணத்தைப் பார்ப்போமா?

ஒரு குடும்பத் தலைவர் தன் பெயரில் 10 லட்ச ரூபாய்க்கும், தன் மனைவி பெயரில் 8 லட்ச ரூபாய்க்கும், இரு பிள்ளைகள் பெயரில் தலா 5 லட்ச ரூபாய்க்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தார். குடும்பத் தலைவர் விபத்து ஒன்றில் சட்டென போய் சேர்ந்துவிட, பத்து லட்ச ரூபாய்க்கான இழப்பீடு மட்டும் கிடைத்தது. அது, அவர் ஏற்கெனவே வாங்கி இருந்த கடனை அடைக்கவே சரியாகப் போய்விட்டது. தொடர்ந்து வந்த மாதங்களில் மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் எடுக்கப்பட்ட பாலிசி களுக்கு பிரீமியம் கட்டுவதற்கு வழியில்லாமல் அந்த பாலிசிகள் எல்லாம் வீணாகப் போனது. 

இதற்குப் பதில், குடும்பத் தலைவர் பெயரில் 28 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்து இருந்தால், இழப்பீடு தொகை அதிகமாக கிடைத்திருக்கும். கடனை அடைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை அவர் களின் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

காப்பீடா? முதலீடா?
கிட்டத்தட்ட 75 சதவிகிதத் துக்கும் அதிகமானவர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியை முதலீடாகவே கருதுகிறார்கள். இது தவறு. இப்படி பார்க்கும்போது அந்த பாலிசி மூலம்  எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறோமே ஒழிய, ஆபத்தான காலத்தில் நம் குடும்பத்திற்கு அது எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பதைப் பார்க்கத் தவறி விடுகிறோம்.  எனவே, குழப்பத்தை தவிர்த்து, இனியாவது இன்ஷூரன்ஸை ஒரு காப்பீடாக மட்டுமே பார்ப்பது நல்லது.

கவரேஜை கவனிங்க!
அதிகபட்சம் 2 அல்லது 3 லட்ச ரூபாய் கவரேஜ் கொண்ட பாலிசிகளை மட்டுமே வைத்திருப்பவர்களே நம்மில் பலர். குறைவான கவரேஜ் கொண்ட பாலிசிகளைத் தேர்வு செய்வது நாம் செய்யக்கூடாத பெருந்தவறு.

குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கொண்ட பாலிசி களையே நாம் தேர்வு செய்ய வேண்டும்.

உதாரணத்துக்கு, 40 வயதான ஒருவர் ஆண்டுக்கு 10,000 ரூபாய் பிரீமியம் கட்டுகிறார்.  அவர் எடுத்தது யூலிப் பாலிசியாக இருந்தால் அவருக்கு கிடைக்கும் கவரேஜ் ஒரு லட்ச ரூபாய்தான். இதுவே டேர்ம் பிளான் என்கிறபோது இந்த 10,000 ரூபாய் பிரீமியத்துக்கு சுமார் 12 லட்ச ரூபாய் கவரேஜ் கிடைக்கும். பிரீமியம் ஒன்றுதான், ஆனால் நமக்கு கிடைக்கும் கவரேஜ் அதிகம் என்பதால் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க விரும்புகிறவர்கள் முதலில் டேர்ம் பிளானை தேர்வு செய்வதே நல்லது.

எவ்வளவுக்கு பாலிசி..?
பொதுவாக ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப் போல 10 முதல் 12 மடங்கு தொகைக்கு பாலிசி எடுப்பது நல்லது. உதாரணமாக, ஒருவரின் மாதச் சம்பளம் 20,000 ரூபாய் என்றால், ரூ.24 லட்சம் முதல் ரூ.29 லட்சம் வரையில் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கான பிரீமியத் தையும் உங்களால் கட்ட முடியும் என்றால் மட்டுமே அந்த தொகைக்கு பாலிசி எடுக்கலாம். இல்லை எனில், எவ்வளவு தொகைக்கு பிரீமியம் கட்ட முடியுமோ, அந்த அளவுக்கான பாலிசியை இப்போது எடுத்து விட்டு, தகுதி அதிகரித்தபிறகு கவரேஜ்-ஐ உயர்த்திக் கொள்ளலாம்.
கார் கடன், வீட்டுக் கடன் போன்றவை வாங்கியிருந்தால் அந்த தொகைக்கு இணையாக டேர்ம் பிளான் எடுத்துக் கொள்வது கட்டாயம். இந்த டேர்ம் பிளானை ஆன்லைன் மூலம் எடுக்கும்போது பிரீமியம் இன்னும் குறையும்.

பிரீமியம் கட்டும் ஆப்ஷன்..!
பிரீமியம் செலுத்துவதற்கான கால இடைவெளியை மாதத்திற்கு ஒருமுறை என்று வைத்துக் கொள்ளாமல் காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு ஒரு முறை என வைத்திருப்பது நல்லது. மாதம்தோறும் கட்டினால் அதிகமாக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதோடு, அதற்கான கிரேஸ் பிரீயட் 15 நாட்கள் மட்டுமே என்பதையும் மறக்கக்கூடாது. 

யூலிப் பாலிசி!
காப்பீடு, முதலீடு என இரண்டையும் கலந்து செய்த கலவை இது! குறைந்த கவரேஜ் மட்டுமே இதில் கிடைக்கும். இந்த பாலிசியில் போடப்படும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், சந்தையின் ஏற்ற, இறக்கத்தைப் பொறுத்தே நம் லாப, நஷ்டம் அமையும் என்பதை நன்கு புரிந்து கொண்டு நீண்டகால நோக்கில் பணத்தைப் போட நினைக் கிறவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்கலாம்.
இதில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் பணத்தைக் கட்டிவிட்டு, மேற்கொண்டு பிரீமியம் கட்டாமல் விடுவது லாபகரமாக இருக்காது. அந்த ஆண்டுகளில் கமிஷன் மற்றும் பிரீமிய ஒதுக்கீடு கட்டணம் அதிகமாகச் சென்றிருக்கும் நான்காவது ஆண்டில் பிரீமியம் கட்டவில்லை எனில், இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் இதர கட்டணங்களுக்கு ஏற்கெனவே முதலீட்டிற்காக ஒதுக்கப்பட்டிருக்கும்  யூனிட்களை விற்று பணம் எடுத்துக் கொள்வார்கள். எனவே, பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பிரீமியம் கட்ட நினைக் கிறவர்கள் மட்டுமே, யூலிப் பாலிசிகளை தேர்வு செய்யலாம்.

இது யூலிப் பாலிசிகளில் ஒன்றான என்.ஏ.வி. உத்தரவாத திட்டங்களுக்கும் பொருந்தும். 
  
வரிச் சலுகை!
வரிச் சலுகைக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறவர்கள்தான் நம்மில் பலர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் வரை பலரும் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்குவது இந்த தவறான புரிதலின் அடிப்படையில்தான்.

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று என அரசாங்கம் நினைப்பதாலேயே தான் அதற்கு வரிச் சலுகை வழங்கி இருக்கிறதே ஒழிய, வரிச் சலுகைக்காக நாம் தேவையில்லாமல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கு வரிச் சலுகை கிடைக்கும். 10% வரியை மிச்சம் பிடிக்க நினைத்து அதற்கு மேல் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள் பலர்..!

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் முன் இந்த விஷயங்களை கவனித்தால் புலம்பவேண்டிய அவசியம் இருக்காது!

Posted by சி.சரவணன் thanks to vikatan.com

 தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது

கம்ப்யூட்டர் முன்னால் எப்படி அமர்வது

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் திறனிலும் அறிவிலும் அகிலத்துக்கே சவால்விடும் ஆட்களாகிவிட்டோம் நாம். புதிய மென்பொருள் எழுதுகிற அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை நாம் திறமையாகக் கையாண்டாலும், பார்வைப் பாதிப்போ, முதுகெலும்புப் பிரச்னையோ வராதபடி கம்ப்யூட்டர் முன்னால் எப்படி அமர்வது என்று நம்மில் பலருக்குத் தெரியாது. 

''கம்ப்யூட்டர் முன்பு நாம் அமரும் முறை சரியாக இருந்தால், கண் வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளை நிச்சயமாகத் தவிர்க்க முடியும்!'' என்கிறார் ஸ்போர்ட்ஸ் மெடிசின் டாக்டர் கண்ணன் புகழேந்தி. செய்தியும் படங்களுமாக கம்ப்யூட்டரைக் கையாளும் பக்குவம் குறித்து இங்கே விளக்குகிறார்...

இருக்கையின் நுனிப் பகுதியில் அமர்வதும் தவறு. இதனால் தொடைப் பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்படும். தொடைப் பகுதியில் உள்ள தசைநார்கள் இறுகி இடுப்பு வலியும் உருவாகும். தொடந்து தசை நார்கள் இறுகிய நிலையில் இருந்தால், ஆக்ஸிஜன் கிடைப்பது தடைப்பட்டு தசை நார்கள் சுருங்கிய நிலையை அடைந்துவிடும்.
பாதம் முழுவதும் தரையில் அழுந்துமாறு உட்கார வேண்டும். கால் விரல்களின் நுனிப்பகுதி மட்டும் தரையைத் தொடும்படி அமர்வது  தவறு. இதனால் காலின் பின் பக்கத்தசை இறுகி ரத்த ஓட்டம் தடைப்படும். இது கால் வலியை உண்டாக்கும். குதிகால் மட்டும் தரையில் படும்படி அமர்வதால் கால் கட்டை விரலிலும் கணுக்காலிலும் வலி ஏற்படும்.
'மடிக்கணினி’ என்றால் அதனை மடியில் வைத்தபடி வேலை செய்யவேண்டும் என்பது இல்லை. எனவே, குனிந்து பார்த்து வேலை செய்யக் கூடாது. இப்படி வேலை செய்வது தலைவலி, கண் வலி, கழுத்து வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

முதுகுத்தண்டு எலும்பு முன்னோக்கி வளையாமலும், பக்கவாட்டில் வளையாமலும் அமர வேண்டும்.

கைப்பகுதியும் மணிக்கட்டும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

கால் மூட்டுகளை அதிகப்படியாக மடக்கியோ நீட்டியோ இருக்காமல், தலைகீழ் 'லி’ வடிவத்தில் இருக்க வேண்டும்.

தாடையானது மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ இல்லாமல் படத்தில் இருப்பது மாதிரி நேராக இருக்க வேண்டும்.

posted by * டாக்டர் விகடன்

சிப்பாய் தன் துப்பாக்கியைப் போற்றுவது போலவும் இசைக் கலைஞன் வீணையைப் போற்றுவது போலவும் ஒரு பெண் தன் காதலனைப் போற்றுகிறாள்.

Sunday, February 5, 2012

உங்கள பயணம் இனிமையானதாக அமையஇன்று பயணங்கள் தவிர்க்க முடியதாகிவிட்டது.ஆனால் அந்த பயணம் இனிமையானதாக அமையுமா என்பது நாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதில்தான் இருக்கிறது.

 குறிப்பாக, பயணங்களின்போது வாந்தி, காய்ச்சல், தலைவலி போன்ற தொந்தரவுகள் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும்.

இதற்கான தீர்வுகள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சங்குமணி கூறியதாவது :பயணத்தின்போது, இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுவலி, தலைவலி, தலைசுற்றல், மயக்கம், அடிவயிறு வலி, நீர்க்கடுப்பு ஏற்படும்.

இருமல், சளி, காய்ச்சல்:பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் இருமல், சளி, காய்ச்சல் ஏற்படும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பயணம் செய்வதாலும்,அவர்கள் இருமும்போதும்,ஒரே அறையில் அவர்களுடன் தங்குவதாலும் இந்நோய் பரவலாம். மாஸ்க் அணிவதாலும், நோயாளி பயன்படுத்திய பேனா, பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பதும் இந்நோயை வராமல் தடுக்கும்.

வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுவலி : பயணம் செய்யும் போது மிக அதிகமானவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர். "இ-கோலி' என்ற பாக்டீரியாவாலும், "ரோட்வைரஸ்' என்ற வைரஸாலும், "ஜியார்டைசிஸ்' என்பதாலும் வருகிறது. உணவு, குடிநீர்தான் முக்கிய காரணம். இதை தடுக்க, வேகாத உணவுகளை உண்ணக்கூடாது. பச்சை உணவுகளை உண்ணக்கூடாது.

 தெருவில் விற்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது. கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை மட்டும்தான் பருகவேண்டும்.

ஐஸ்கட்டிகளில் குளிரூட்டப்பட்ட பானங்களை பருகக்கூடாது.

தலைவலி, தலைசுற்றல், மயக்கம், வாந்தி: உயரமான மலைபகுதிகளுக்கு செல்லும்போதும், கார், பஸ் பயணத்தின்போது கட்டாயம் தலைசுற்றல் ஏற்படும். இதை தடுக்க, பயணத்தின்போது நிறைய சாப்பிடக்கூடாது.

எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்துள்ள உணவுகள்,திண்பண்டங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. டாக்டர் ஆலோசனைபடி, மாத்திரைகளை வைத்துக் கொள்ள வேண்டும். பயணத்திற்கு ஒரு மணிநேரம் முன்பே அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

அடிவயிறுவலி, நீர்க்கடுப்பு: பயணம் செய்யும் இடமும், தங்கும் இடமும் புழுக்கமாக இருந்தால் நீர்க்கடுப்பு ஏற்படும். பயணத்தின்போது சரியான அளவு தண்ணீர் குடிக்காததாலும் இந்த பாதிப்பு ஏற்படும். பயணத்தின்போது இரண்டு முதல் மூன்று லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அருந்த வேண்டும்.

பயண முதலுதவி பெட்டி: செல்லும் இடம், தங்கும் நாட்கள், பயணத்தின் தன்மை, தங்கும் இடத்தில் உள்ள மருத்துவ வசதிகள், தங்கும் இடங்களில் உள்ள வியாதிகளை கணக்கிட்டு,முதலுதவி பெட்டியில் வைக்கும் மருந்துகளின் அளவும்,மருந்து தன்மையும் மாறலாம்.

காய்சல், தலைவலிக்கு Paracetamol மாத்திரை, வாந்திக்கு Domperidone, Metaclopromide மாத்திரை,வயிறு எரிச்சல், வயிறு வலிக்கு  மாத்திரை, வயிற்றுபோக்கிற்கு Pantaprazole, Rabiprazole, Ranitidine மாத்திரை, தலைசுற்றுக்கு Lopramide, codiene sulphate, metronidazole மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இம்மாத்திரைகளை டாக்டர் மருந்துச்சீட்டுடன், மருந்து அளவு மற்றும் மருந்து சாப்பிட வேண்டிய நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பயணத்தின்போது காயம் ஏற்பட்டால், களிம்பு, மருந்துகள், பிளாஸ்டர் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் கவனத்திற்கு: அதிகநேர பயணம், மோசமான ரோடு, கடும் வெயிலில் பயணத்தை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் 36வது வாரம் வரை உள்நாட்டு சிறிய பயணங்கள் மேற்கொள்ளலாம். 32 வாரங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது.

மாரடைப்பு நோயாளிகளா நீங்கள்?விமானம் பயணம் மேற் கொள்ளும் போது,உங்களது உடல்நிலை குறித்த தகவல்களை டாக்டர் கைப்பட எழுதிய சான்றிதழ் டெலிபோன் எண்ணுடன் இருக்க வேண்டும். நீங்கள் "பேஸ்மேக்கர்' வைத்து இருந்தால் முன்பே தெரிவிக்க வேண்டும். ஜன்னல் இருக்கைகளை தவிர்க்க வேண்டும்.தொடர்ந்து உட்கார்ந்து இருப்பதை தவிர்த்து,ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை விமானத்துக்குள்ளேயே நடக்கலாம்
.
நுரையீரல் நோயாளிகள் கவனிக்க வேண்டியவை : அதிக சளி, மூச்சு முற்றல், நுரையீரல் தமனி அழுத்தம், நெஞ்சக அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், மூன்று மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் "இன்ஹேலர்' வைத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டியவை : அதிக நேரம் விமான பயணம் மேற்கொள்ளும்போது, சர்வதேச நேர மாற்றங்களை குறிந்து உணவு உட்கொள்ள வேண்டும். தவறினால், சர்க்கரை குறைநிலை ஏற்படலாம்.

 இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் இன்சுலின் ஊசி, குளூகோஸ் மானிட்டர், சாக்லெட் தயாராக வைத்துக் கொள்ளவேண்டும்.

நீங்கள் ரத்தஅழுத்தம் உள்ளவரா? பயணத்தின்போது ரத்தஅழுத்தத்திற்குரிய மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். பயணத்திற்கு முன்பு டாக்டரிடம் ரத்தஅழுத்தம் சரியான அளவு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். பயணத்தின்போது உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Source: Dinamalar

சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும்  நாடு சீர்குலைந்து அழிந்துவிடும்.

Wednesday, February 1, 2012

எடையை குறைக்க எட்டே வழிகள்!காபி,டீ அருந்தும் பழக்கமுடையவர்கள்,அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எழுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3-4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது.

 முடிந்த வரை சாக்கரையைத் தவிர்ப்பது நல்லது.

நம் அன்றாட வேலைகளை செய்யவும், உடல் உறுப்புகள் இயங்கவும், நமக்கு சக்தி தேவைப்படுகிறது.

இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு,உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும்போது, உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.
இவ்வாறு, இந்த சேமிப்பு, ஆண்டுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போது, உடல் எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே, உடல் எடை கூடுவதன் முதல் காரணம்.

மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும், பருமனும் அதிகரிக்கின்றன.

கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி.தினசரி

1.காலை எழுந்தவுடன், 1 - 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

2.குறைந்தது, 35 நிமிடம் உடற் பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்.

3.அப்போத தயாரித்த வெண் பூசணிச் சாறு அல்லது வாழைத்தண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.காபி,டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்)

4. காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை,3-4முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது.முடிந்த வரை சர்ககரையைத் தவிர்ப்பது நல்லது.

5.காலை சிற்றுண்டி (8.00 - 9.00 மணிக்குள்): வெண்ணெய எடுத்த மோர் - 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டடி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு.

6.மதிய உணவு (12.00 - 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.

7. இரவு உணவு (7.00 - 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு.

8. பகலில் உறங்குவதை தவிர்ததல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ககவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க செல்லவும்.
'இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.

- நன்றி: 'தினமலர்' நாளிதழ்

நூறு விதமாக கூறினாலும், விவாதித்தாலும், விளக்கினாலும் மதம் ஒன்றுதான்.
 

பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பைக் கொடுப்பது முக்கியம் !

எனது மன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன, அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்படவைத்தது" முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து...