Total Pageviews

Friday, March 29, 2019

கொய்யாப்பழத்தின் மருத்துவ பயன்கள் !



✦கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன.

✦ கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன.

இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது.


✦ பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், உறுதியாகும்.



கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டைகளில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன.

✦ குடல், வயிற்று பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது. கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.



கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.


✦ கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

✦ கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.

✦ கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

✦கொய்யா மரத்தின் கிளை களிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது

அரிசி, பருப்புகளில் வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்வது?

வெயில் காலங்களில் அவ்வளவாக பிரச்னைகள் இருக்காது. மழை மற்றும் குளிர் காலங்களில் தான் தானியங்களில் அதிக அளவில் வண்டுகள் வர ஆரம்பிக்கும். அப்படி நாம் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் மாவு மற்றும் அரிசி, பருப்பு ஆகியவற்றில் வண்டு வராமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?


உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டியபிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.

பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து நிழலில் உலர்த்தி பிறகு டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும் வசம்புத்துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

அரிசியில் மிளகாய்வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.

புளியை வாங்கி வந்ததுமே அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காய வைத்து சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் போட்டு வைத்தால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.

தனியா டப்பாவில் நாலைந்து துண்டுகள் அடுப்புக்கரியை போட்டுவைத்தால் வண்டுகள் அண்டாமல் இருக்கும்.

சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் பூச்சிகள் வராது.

எந்த பொருளாக இருந்தாலும் அப்படியே வை‌த்தா‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌த்து‌விடு‌ம். அவ்வ‌ப்போது சூ‌ரிய ஒளியில் வை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம்.

குளிக்கும் முன் நினைவில் கொள்ள வேண்டியவைகள்

குளிக்கும் முன் நினைவில்  கொள்ள வேண்டியவைகள்:


உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா.....!  நிச்சயம் கிடையாது.....!

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது.

எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி?

காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வருவோம்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??

உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... !

நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவை




திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவைகள்


1. முதல் விதி

திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி

இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி

புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி 


துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி 

முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி

அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி

திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி

திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.

மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி

கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்  குறியுங்கள்.

 

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...