Total Pageviews

Sunday, September 25, 2016

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

இந்த காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொளிகின்றன. இளைஞர்களின் உடல் உழைப்பில்லா, பரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப்போனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!

high-blood-pressure-and-life-insurance

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை ரத்த அழுத்த நோய அல்லது ரத்தக் கொதிப்பு என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப்பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தஹி ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை சைலன்ட் கில்லர் என்றும் கூறுவர்.

இந்நோய் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

1732ல் ஸ்டீபன் ஹேல்ஸ் என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண மானோ மீட்டர் என்ற கருவியை வைத்து அளந்தார். 1896ல் சிவரோசி என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் ஸ்பிக்மோ மானோ மீட்டரி கண்டுபிடித்தார். 1905ல் தான் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்பதையும் ஒரு ஆயுள் காப்பீட்டு கழகம் தான் கண்டுபிடித்தது. அதன் பின் அனைவரது கவனமும் இதன் மீது திரும்பியது.

உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?

மருத்துவம் பயின்ற இவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை ரத்த நோயாளி எனக் கூறலாம்.

ரத்த அழுத்த நோயை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

1) கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105வரை.

2) 106 முதல் 115 வரை.

3) 115க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

எதனால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது?

1) காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90சதம் பேரை பாதிக்கிறது. இதற்கான காரணம் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.

2) மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்கங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்த கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.

இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பேரை முழுமையாக குணப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணத்தைக் கண்டுபிடித்து அதை அகற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற்பரிசோதனை மற்றும் ரத்த சோதனைகளை செய்வதன் மூலம் இந்நோய்க்கான காரணங்களைக் கண்டறியலாம். இதனால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறைதல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமை சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை ஏற்படும்.

ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும். இதில் சீருநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதாக ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். ‘ஈ.சி.ஜி’ என்பது இதயம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் பலவீனமாக உள்ளதா என்பதை அறிய எக்ஸ்ரே பரிசோதனை உதவும். ‘எக்கோ’, ‘ஆஞ்சியோகிராம்’ போன்ற பரிசொதனைக்ளைக்கூட செய்து பார்க்கலாம்.

கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை ரத்த அழுத்த நோய் ‘பிரி-எக்லாம்சியா’ என்பதாகும். இது முதன்முறையாக கர்ப்பமடைபவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட முதல் முறையாக கர்ப்பமடைந்த பெண்களுக்கு 6 முதல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக கால்வீக்கம், ரத்தகொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளியேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருத்துவத்தின் மூலம் சரி செய்யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்துவிடும். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தம் என்கிறார்கள்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறிவுரை:

நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயைக் கடுபடுத்தாவிட்டால் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.உப்பு, உடலில் நீரைத் தங்கச் சுத்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகளை வீங்க வைக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண்ணெய் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடாதீர்கள்.

கொழுப்பு சத்து ரத்த குழாய்களை அடைத்துக்கொண்டு மேற்சொன்ன வியாதிகளை உண்டு பண்ணக்கூடும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உடலில் கொழுப்பு சத்து சேர்வதை தவிர்த்து விடுவதுடன் அழுத்தத்தையும் குறைக்கும். புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்துங்கள்.

புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுவதோடு மாரடைப்பு நோயினால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும். மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிசு செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ, அதிகரிக்கவோ கூடாது. உடல் எடையை குறையுங்கள்.

உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவை முறையாக பரிசோதித்து கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு முறை எழுதிக்கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுதும் உபயோகிக்கக்கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

Friday, September 23, 2016

காவிரி நீர்:

காவிரி நீர்:

பத்து வருடம் முன்பு பெங்களூருவில் குருமூர் வேலை பார்த்த நிறுவனத்தில்,
 
27 ஊழியர்களுக்கு  குருமூர் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.

7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.

ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.
 
அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்.
 
"கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)
 
"சார், கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?: என்று கேட்டார்.
 
""அதாவது KRS அணை பற்றிக் கேட்கிறீர்கள் இல்லையா" ? என்றேன்.
 
"அதுவும்தான்" என்றார். எனக்கு புரை ஏறிவிட்டது.
 
"காவிரியை விச்வேஸ்வரய்யா கட்டினாரா?" என்றேன்.
அவர் குழப்பத்துடன் "பின்னே" என்றார்.
 
அவரிடம் இருந்த குழப்பமே, மீதி இருந்த ஆறு MBAக்களிடமும் இருந்தது.
 
நான் உடனே சொன்னேன், "நந்து, இதற்குப் பதில் பின்னால் சொல்கிறேன். முதலில் உங்களுக்கு அரை நாள் விடுமுறை தருகிறேன். உங்கள் வேலையை நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கூகிள் இல் உட்காருங்கள். நான் இப்போது எழுதிக்கொடுக்கும் பத்து வார்த்தைகளைத் தேடி, விக்கிபீடியாவில் அவை எல்லாம் முழுதாகப் படித்து விட்டு, மாலை என்னிடம் வரவேண்டும்" என்றேன்.
 
"சரி சார்" என்றார். நான் எழுதிக் கொடுத்தேன்.
 
Cauvery River, Chola Kingdom, Kallanai, Karikaal Chola, Raja Raja Chola, Tanjore, Coorg, Upper Riparian State, Lower Riparian State, KRS Dam
மாலை தொங்கிப் போன முகத்தோடு வந்தார். "எல்லாம் படித்து விட்டேன். நீங்கள் சொல்ல ஏதும் இல்லை சார். சாரி" என்று சென்று விட்டார்.
 
"ஒரு நிமிடம்.... நந்து, நீங்கள் படித்ததையெல்லாம் உங்கள் மீதி நண்பர்களுக்கும் சொல்லுங்கள்" என்றேன்.
 
நான் மேலே சொன்னதை நம்புபவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள், கர்நாடகாவில் யாரிடமாவது காவிரி பற்றிப் பேசிப் பாருங்கள்.

நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.
 
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.
 
அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.
 
ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது.
 
அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.
 
ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.
 
KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.

அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
(KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)
 
நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.
 
அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.
 
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.
 
புவியியல் வல்லுநர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.
 
சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது.
 
அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.
 
கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.
 
அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.
 
நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.
 
அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.
 
கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.
ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.
 
இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.
சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.
 
ஆம். கேள்வி சரிதான்.
 
கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.
 
காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.
 
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
 
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.
 
ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.
 
டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.
 
உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.
 
இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.
 
சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.
 
நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!
 
முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?
-
நன்றி
குருமூர் என்பவரது பதிவு..

Tuesday, September 20, 2016

வெற்றி :

சுழன்றிடும் வெற்றி :

4 வயதில், உறங்கும் போது அறியாமல் உடையில் சிறுநீரை கழிக்காமல் இருந்தால், அது வெற்றி !

8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

80 வயதில், மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

85 வயதில், உறங்கும் போது அறியாமல் உடையில் சிறுநீரை கழிக்காமல் இருந்தால், அது வெற்றி !

இப்படி சுழன்றுகொண்டேயிருக்கும் நிலையற்ற தன்மையுடைய வெற்றியை மட்டுமே துரத்திக்கொண்டு அறியாமையில் வாழ்தலைக்காட்டிலும், எல்லோருக்கும் நன்மையே நினைத்து, அனைவரும் சமமென எண்ணி, அந்தந்த வயதில் செய்ய வேண்டிய கடமைகளை யாருக்கும் துன்பமளிக்காமல் செய்து, மகிழ்ந்து கடந்து வாழ்தலே அர்த்தம் நிறைந்த வாழ்க்கை !!!

Friday, September 16, 2016

அஜீரணம்


1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.


27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்


வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்


புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
Thanks to Rani Krishna

Thursday, September 15, 2016

எந்த கணக்கு விவரங்களையும் கொடுத்துவிடாதீர்கள்...

வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை....

நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா?

உஷார்...

உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்.....
நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது...

ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கைமாறுகிறது.....

அடுத்து....

உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும்....

எதிர் முனையில் பேசும் அந்த மர்ம ஆசாமி (ஹைடெக் கொள்ளையன்).... ஒரு வங்கி அதிகாரி போல
மிகவும் பணிவான குரலில் பேசுவான்....
உங்கள் வங்கி கணக்கு எண்னை தெளிவாக சொல்லுவான்....
உங்கள் ஏடிஎம் கார்டின் வேலிடிட்டி முடியப் போவதாகவும்....
அதை தான் ஆன்லைனிலேயே சரிசெய்து தரப்போவதாகவும் பேசி உங்களை சுலபமாக நம்ப வைப்பான்....

அல்லது....

உங்கள் எல்ஐசி பாலிசியை புதுப்பித்துத் தரப்போவதாகவோ....

அல்லது உங்களை எளிதில் நம்ப வைக்கக்கூடிய ஏதாவது ஒன்றைக் கூறி அடுத்த விஷயத்திற்கு வருவான்...

அது என்னவென்றால்....

அவனுக்கு தேவை உங்கள் செல்போனுக்கு கடைசியாக வந்திருக்கும் ஒன் டைம் பாஸ்வேர்ட்,
அல்லது உங்கள் ஏடிஎம் கார்டில் இருக்கும் பதிமூன்று இலக்க எண்கள்...
அல்லது கடைசி நான்கு எண்கள்...

அல்லது உங்கள் பிறந்த தேதி...

இப்படி ஏதாவது ஒன்றை உங்களிடமிருந்து அவன் எதிரபார்ப்பான்.....

கொஞ்சம் ஏமாந்து நீங்கள் அவனுக்கு அதை சொல்லிவிட்டீர்கள் என்றால்....
உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப் பணமும் அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்.

பிறகு நீங்கள் போலீஸில் புகார் கொடுத்தாலும், நீங்கள் இதுவரை ஏமாந்த முப்பதாயிரம் பேர்களில் ஒருவராகவே எண்ணப்படுவீர்கள்...

ஏனென்றால், இந்த ஹைடெக் கொள்ளையர்களை சைபர் க்ரைம் மூலமாக கூட கண்டுபிடிப்பது கடினம்...

சிம்கார்டு முதல் மெயில் ஐடி வரை எல்லாம் போலியாகவே வைத்திருப்பார்கள்...

நீங்கள் மறுபடியும் தொடர்பு கொண்டால், சுவிச்ட்ஆப் செய்யப்பட்டிருக்கும்

மாத சம்பளத்தை வங்கி மூலம் பெறுபவர்களே அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள்...
ல  பேருடைய பணம் இதே தொலைபேசி உரையாடல் மூலம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது

உங்களால் முடிந்தது ஒன்று தான்.....

இது போன்றவர்கள் கேட்கும் எந்த கணக்கு விவரங்களையும் கொடுத்துவிடாதீர்கள்...

எந்த வங்கியும் இதுபோன்ற விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை....

நன்றி
பொதுநலன் கருதி.....

ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் பு...