Total Pageviews

Saturday, June 24, 2023

கடன் என்பது காலை சுற்றிய பாம்பு !

கடன் இல்லை என்றால் மனதில் நிம்மதி அதிகரிக்கும்:

கடன் கொடுக்கும் முன் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால்  சிக்கல் உங்களு க்குத்தான்! .

1. குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெறும் பணம்; கைமாற்று, வட்டியுடனோ வட்டி இல்லாமலோ திருப்பித் தர வேண்டியது.



2.  கடந்த காலத்தில் நீங்கள் எப்போதாவது ஒரு நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ நிதி உதவி அளித்திருக்கிறீர்களா, இப்போது நீங்கள் கொடுத்த பணத்தை உங்களால் மீட்க முடியவில்லையா?உங்கள் பணத்தை திரும்பப் பெற நீங்கள் கடுமையாக முயற்சித்திருக்கலாம், ஆனால் பணத்திற்கு பதிலாக தவறான வாக்குறுதிகளை மட்டுமே பெறுவீர்கள் !

3.       உங்கள் நல்லெண்ணத்தால் நீங்கள் அந்த நபருக்கு கடன் கொடுக்கிறீர்கள்.

 

  1. எனவே கடனாளிகள்  வாக்குறுதியளித்தபடி பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். நன்றியுணர்வு எதிர்பார்க்கப்பட்டால், அது நீட்டிக்கப்பட வேண்டும்.


  1. உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள். ஒருவர் உறவை மட்டும் கெடுத்துக் கொள்வார்.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற அருணாசலக் கவிராயரின் பாடலையொத்து  கடனாளிகள் கலங்குவதில்லை.

கடனாளிகளும் கடனை திருப்பித் தராமல் பல மோசடி உத்திகளைக் கையாண்டனர். 

பழைய பழமொழி சொல்வது போல், கடனை அடைக்க கடன் வாங்குபவர்,  கடன் வாங்கி கடன் கொடுத்தார்   நாசமாகிறார்.

கடனைத் திரும்பித்தரும் வரை கடன் பட்டவரை விட கடனைக் கொடுத்தவருக்கே கடனுக்கு அடகு வைத்த பொருளின் மேல் அதிக உரிமை உள்ளது. உதாரணமாக, ஒருவர் 20 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கி அதில் 19 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு மீதம் ரூபாய் 1 லட்சம் ரூபாய் கட்ட முடியாமல் போனால் கூட வங்கியினால் வீட்டினை ஜப்தி செய்து கடனுக்கான பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

கடன் பட்ட பொருளுக்கு இரண்டு சொந்தக்காரர்கள் உள்ளனர். உதாரணமாக, கடனில் வாங்கிய வாகனம் அல்லது வீடு. பதிவு செய்யப்பட்ட சொந்தக்காரர் (Registered owner) மற்றும் சட்டப்படி சொந்தக்காரர் (Legal owner). சட்டப்படி சொந்தக்காரருக்கே அதில் அதிக உரிமை. கடன் கட்டாத சமயத்தில் சட்டப்படியான சொந்தக்காரர் கடன் பட்ட பொருளை பறிமுதல் செய்ய உரிமை உண்டு .

 எனவே, கடன் கட்டும் வரை கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமையாகவே உள்ளார்.

 கடன் முன்பு சொன்னதைப் போல் கடன் கட்டும் வரை மனதிற்கு உளைச்சலைக் கொடுக்கும். நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடிக்காவிட்டால் கூட கடன் தவணை கட்ட வேண்டுமே என்பதற்காக வேண்டா வெறுப்பாக வேலை செய்ய வைக்கும். உங்களுடைய மேலதிகாரியிடம் வேலை இழக்க கூடாது என்பதற்காக எல்லாவற்றுக்கும் தலை ஆட்டி தன்மானத்தை குலைக்க வைக்கும் மன உளைச்சலை கொடுக்கும். கடன் இல்லாத பட்சத்தில் உங்களுடைய சுதந்திரம் உங்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கும். நிம்மதியாக உறங்க முடியும். உடல் நலம், மன நலம் மேம்படும்.

 தேவையான பொருட்களை மட்டும் வாங்கு வீர்கள் . அதிகமான பொருட்களை வாங்கி குவிக்க மாட்டீர்கள்:

 உங்களிடம் பணம் இருந்தால் ஒரு பொருளை வாங்குவீர்கள். இல்லையென்றால் பணத்தினை சேர்த்து வைத்து வாங்குவீர்கள். கடன் வாங்கி அவசியமில்லாத பொருளையும் சேர்த்து பணக்கார மாயையை உண்டாக்கி கொள்ள மாட்டீர்கள். குழந்தைகளும் வீட்டின் நிதி நிலையை அறிந்து நடந்துக் கொள்வார்கள். கடன் வாங்கி எந்த பொருளும் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனநிலைமையைக் கொள்ளமாட்டார்கள்.

உன் வீட்டில் உப்பு இல்லை என்றால், கடையில் வாங்க பணவசதி இல்லாவிட்டால், உப்பில்லாமல் சாப்பிட கற்றுக்கொள். அடுத்த வீட்டில் கடன் கேட்காதே என்பது அந்த அறிவுரை.

நம் வாழ்க்கையில் வரும் இன்பம் , துன்பம் அனைத்திற்கும் காரணம் நாம் தான்ஏனெனில் எதை பற்றி அதிகம் நினைக்கின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும் .. நம் எண்ணத்திற்கு சக்தி அதிகம் .. இப்போது நாம் அதிகம் நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் . அதிகம் கெட்டதே நினைத்தால் கெட்டதுதான் நடக்கும்நம் எண்ணம் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் ! விதி இல்லை !

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும் !

சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு!

 
இன்றோடு போகட்டும் திருந்தி விடு
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு
நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்

இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்!

 


Thursday, June 22, 2023

நெஞ்சு வலி ! ஹார்ட்விட் ஜூஸ் அருந்துவதால் இதய அடைப்புகள் குணமாகும்!

நெஞ்சு வலி   :

   


சமீபத்தில்,  ஒருவர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள பிரபலமான  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக  சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் ஆஞ்சியோகிராஃபி பரிந்துரைத்தனர்.
 
      இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராஃபிக்குப் பிறகு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு முன் hv  பல அடைப்புகள் இருப்பதை  மருத்துவர்கள் கண்டறிந்தனர், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு  பதிலாக, 'பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

      🫀அவரது இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவுரித்தினர்,அன்று மாலை அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார், 10 - 15 நாட்களுக்குப் பிறகு, அதிக ஆபத்துடன் தான் பைபாஸ் செய்ய முடியும் என எச்சரித்தனர்.
 
     இதற்கிடையில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்த பிறகு, ஒரு குடும்ப நண்பரிடமிருந்து புதிய தகவல் வந்தது. ஹார்ட்விட். 9597700877 விழுப்புரம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய ஜூஸ் அறிகமுகப்படுத்தப்பட்டுள்ளது.


      இப்போது அது *T.N GOVT ஆல் அங்கீகரிக்கப்பட்டது *

     🫀 இதை அருந்துவதால்


பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் மற்றும் ஸ்டெட்கள் இல்லாமல் இதய அடைப்புகள் குணமாகும்,
 
      இந்த ஹெர்பல் ஜூஸ்..அறுந்துவதால்  பைபாஸ் செய்ய வேண்டிய ஒரு நோயாளி அவ்வாறு செய்யத் தேவையில்லை.
(இது இயற்கை பைபாஸ் என்று அழைக்கப்படுகிறது)

      அதற்கு பதிலாக, நோயாளிக்கு சுமார் 7 பாட்டில்கள் ஹார்ட்விட்  ஜூஸ் அருந்துவதால்
      இந்த மருந்து  இதயத்தில் உள்ள  இரத்த குழாய்களிலுள்ள அனைத்து அடைப்புகளையும் நீக்குகிறது.  மருந்து  பாட்டில்களின்  விலை ரூ .1,200 வரை  இருக்கலாம்.

      தற்போது, ​​இந்தியாவில் சில மருத்து கடைகளில் மட்டுமே  கிடைக்கின்றது உதாரணத்திற்கு விழுப்புரம் நேஷனல் மெடிக்கல் ,🫀🫀🫀

       முக்கிய மருத்துவமனைகளில் ஹார்ட் விட் அருந்திய நோயாளிகளின் பட்டியல் அவரிடம் உள்ளது. இதய நோயாளிகள் இந்த புதிய சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் முற்றிலும் நன்றாக இருக்கிறார்கள் மற்றும் குறைந்தபட்ச மருந்துகள் கூட  இல்லாமல் சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
 
இந்த பானமானது கிடைக்கும் இடம் விழுப்புரம் 9789995100 .. 9597700877

மேலும் தகவலுக்கு
 
9789995100....9597700877  

      தயவுசெய்து இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் அது பலருக்கு உதவக்கூடும்.

தயவுசெய்து, இதை பகிராமல் நீக்க வேண்டாம்.

என்னால் முடிந்தவரை அதை அனுப்புகிறேன்.

அது 130 கோடி இந்தியர்களையும், மீதமுள்ளவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத் தட்டும்!

      இது யாருக்காவது  உதவலாம். உங்களால் முடிந்தவரை இதை அனைவருக்கும் பகிருங்கள்.  ஹார்ட் விட் விழுப்புரம் மாவட்டம்

 

Thursday, June 15, 2023

அப்பா உங்களுக்கு எந்த சொத்தும் சேர்த்து வைக்கல! படிக்க வச்சிட்டேன் !

 

 "இந்தா அம்மா.. என் முதல் மாத சம்பளம்..               30 ஆயிரம் ரூபாய்.. 

அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பது ஆயிரம் சம்பாதித்து இருக்கிறாரா.. 

எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும்..!"
 
இதுவரை மகன் இப்படிப் பேசி அந்த தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான் .


அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே இல்லை. 

அப்படிப்பட்டவன் வாயில் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள்...? மனம் துணுக்குற்றாள் அம்மா .
 

"என்னடா.. வார்த்தை எல்லாம் தடிப்பா வருது..? அதுவும் அப்பாவை பற்றி ரொம்ப ஏளனமாக பேசுற..!"

 "அவர் மட்டும் என்னை ஏளனமாக நடத்தலையா.. 

காலேஜ் போன புதுசுல ஒரு போன் வாங்கி தாங்கன்னு கேட்டதற்கு இழுத்தடிச்சு ஒரு வருஷம் கழிச்சுத் தானே வாங்கி தந்தாரு..!

"அப்பாவோட வருமானம் அவ்வளவுதான்டா இருந்துச்சு..!

" அதெல்லாம் இல்ல.. போன் வாங்கி தந்தா பிள்ளை படிப்பு கெட்டுடுமோன்னு நினைச்சிருப்பார்..!"

"அது  சரிதானே.. நீயும் மூன்றாவது செமஸ்டர் மார்க் குறைவாகத்தானே எடுத்தே..!

" மார்க் குறைவாக எடுத்தால் பொறுமையா சொல்லலாம் இல்ல..? எதுக்கு போனை பிடுங்கி உன் கையிலே கொடுத்து, "பத்திரமா வச்சிரு.. அவன் காலேஜ் முடிச்ச அப்புறம் கொடுத்தா போதும்.. என்று சொன்னாராம்..?"

"அப்பவாச்சும் நீ படிப்பில கவனம் செலுத்துவாய் என்றுதானேடா.. மகனே..!

" நான் தான் இனிமே ஒழுங்கா படிக்கிறேன் என்று சொன்னேன்ல.. அப்புறம் எதுக்கு காலேஜ் வந்து என் கிளாஸ் டீச்சர் கிட்ட விசாரிச்சாரு.. எனக்கு எவ்வளவு கேவலமா இருந்துச்சு தெரியுமா..?"

" எப்பவும் நான் உன்னை கவனிச்சுக்கிட்டே இருக்கேன் என்ற பயத்தை உனக்கு ஏற்படுத்துவதற்காகத் தான் அப்பப்போ காலேஜ் வந்து போறேன்னு அவரே சொல்லி இருக்காரு..!"

" அதெல்லாம் கூட பரவாயில்லம்மா.. மூணாவது செமஸ்டெர்ல பெயிலா கூட ஆகல.. பர்சன்டேஜ் குறைஞ்சிடுச்சுன்னு நீ, தங்கச்சி, உன் அண்ணன் பசங்க எல்லாரும் வீட்ல இருக்கும்போதே சேர்ல உட்கார்ந்து இருந்த என்னை இழுத்துப் போட்டு நங்குன்னு மிதிச்சாரு.. எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும்..? அன்னைக்கு எடுத்தேன் சபதம்..இவர் முன்னாலே ஒரு கவுரவமான மனுசனா வாழ்ந்து காட்டணும்னு. காலேஜ்ல நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் பாஸ் பண்ணிய இரண்டு பேரில் நானும் ஒருத்தன். இப்பொழுது வேலைக்குச் சேர்ந்து இது முதல் மாசம் சம்பளம் வாங்கிட்டு வந்துட்டேன்.. இந்த பணத்தை கொண்டு போய் அவர்கிட்ட காட்டி இனிமேலாவது யாரையும் ஏளனமாக நினைக்காதீங்க.. என்று சொல்லு..போ..!"

"ஏம்பா..இப்போ நீ பேசும்போது இடையில் ஏதோ சொன்னியே சபதம் எடுத்தேன் என்று.. அந்த வைராக்கியத்தை உனக்குள்ள ஏற்படுத்தணும்னு தான்டா அவர் தன்னுடைய பாசத்தை எல்லாம் மறைத்து கண்டிப்பாக நடந்து கொண்டார்..! 

அம்மாக்கள் கூட பிள்ளைகள் நம்மை நாளைக்குக் காப்பாத்தணும் என்ற எதிர்பார்ப்போடு தான்டா இருப்பாங்க.. 

 

அப்பாக்கள் அப்படி இல்லையடா..மகனே.." நம்மை விட நம்ம பிள்ளை நல்லா இருந்தா போதும்னு" தான் நினைப்பாங்க..! அம்மா உன் உடம்பை தான் வளர்ப்பா.. அப்பா தான் உன் வாழ்க்கையைப் பற்றி நினைப்பார்..!"

" நீ சரியான ஜால்ரா.. எப்ப பாரு அவருக்கு சப்போரட்டாத்தான் வருவ..!"

" இந்த வார்த்தையை ஒரு 15 வருடம் கழித்து சொல்கிறாயா என்று பார்ப்போம்..!"

" ஏன்.. சொல்வேனே..!  உன் வீட்டுக்காரரை நீதான் மெச்சுக்கணும்..!"

"உன்னால சொல்ல முடியாது.. ஏன்னா அப்போ நீயும் சில பிள்ளைகளுக்கு அப்பா ஆகி இருப்பே..!

பிள்ளைகள் குறித்தான அப்பாக்களின் எண்ணங்கள் உனக்கு புரிந்து போயிருக்கும்..!"

 அப்போது அப்பா வீட்டிற்குள் நுழைகிறார்.
" பாரு அப்பாவே வந்துட்டாரு ..


அந்தப் பணத்தை அவர்கிட்ட நீயே கொடு என்ன சொல்கிறார் என்று பாரு..!"

"என்ன சொல்லப் போறாரு.. "மாசாமாசம் இதே மாதிரி நிறைய சம்பாதிச்சு பைசா குறையாமல் கொண்டு வந்து கொடுக்கணும்னு.." கட்டளை போடப் போறாரு ..!

 அப்பாஅருகில் வந்து இருந்தார்..!

" அப்பா..! "

"இவனா அழைக்கிறான் என்னைய..?" அதிசயமாக ஏறிட்டுப் பார்த்தார் மகனை. அவர் கண்களில் சிறு மின்னல் கீற்று.. முகத்தில் சில வினாடி பிரகாசம்..!

 "இந்தாங்க முதல் மாத சம்பளம்..!"

"எவ்வளவு..?"

 "முப்பதாயிரம்.. ட்ரெய்னிங் பீரியட் இரண்டு வருஷம் முடிஞ்சா லட்சத்துக்கு மேலே வரும்..!"

"நல்லது.. அதை நீயே வச்சுக்கோ ..!"

"ஏன் அப்படி சொல்றீங்க..?"

" ஆமா தம்பி.. நான் கூட சின்னச் சின்ன அனாவசிய செலவு செய்வேன்.. நீ ரொம்ப சிக்கனமாக இருக்கிறத கவனிச்சிருக்கேன்..!


அப்பா உங்களுக்கு எந்த சொத்
தும் சேர்த்து வைக்கல.. படிக்க வச்சிட்டேன்.. அதுதான் நான் உனக்கு தர சொத்து. உன் பணத்தை நீயே வச்சுக்கிட்டு நீ என்னென்ன ஆசைப்பட்டாயோ அதற்கு செலவு பண்ணிக்கோ.. என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் கஞ்சி ஊத்துவேன்.. அதுக்கப்புறம் நீ அவங்களை பொறுப்பா பாத்துக்கப்பா..!"

"நான் பார்த்துப்பேன் பா! நீங்க கண் கலங்காதிங்கப்பா..!"

" நான் அதற்கு கண் கலங்கவில்லை.. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் நீ என்னை "அப்பா" ன்னு கூப்பிட்டுப் பேசினல்ல..!"

மகன் கண்கள் கலங்க அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டான்..!

"அப்பா..  இத்தனை நாளா உங்களை தப்பாப்  புரிஞ்சிட்டேம்பா..!

  மகன் பற்றி இருந்த அப்பாவின் கைகளில் வயோதிகத்தின் சிறு நடுக்கம்.. 


மகனின் கைகளிலோ குற்றம் இழைத்தப் பெரு நடுக்கம் ...!

அப்பாவின் விழிகளில் கசிந்த கண்ணீர் ஆனந்தக் கரையாடிக்கொண்டிருந்தது... 


மகனின் கண்களில் வழிந்த கண்ணீர் குற்ற உணர்வைக் கரைத்தோடிக் கொண்டிருந்தது...!


சம்பாதித்து முடித்த அப்பாக்களும் வேலையிலிருந்து ஓய்வு பெறப் போகும் அப்பாக்களும் இதனைக் கண்ணீரோடு (என்னைப்போலவே) படிப்பார்கள் என்று எண்ணுகின்றேன் !

ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் பு...