Total Pageviews

Monday, March 28, 2016

காமராஜர் - ஜீவா ! அழகிய நட்பு இது தானோ...?

அழகிய நட்பு இதுதானோ...?
 


பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக

இருந்த போது, சென்னை தாம்பரம்


குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்


என்று ஜீவா போராடினார்.

அப்போது, தாம்பரத்தில் ஓர்


ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார்


 காமராஜர்.

போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்


ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்


செல்வது தான் சரியாக இருக்கும்


என்று நினைத்து,


காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்


சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய
 

வீட்டுக்கு காமராஜர்
 

வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
 

என்று கேட்டார்" ஜீவா.
 

"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
 

என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.
 

உடனே ஜீவா,
 

"நான் மட்டுமா..?
 

இங்கே இருக்கிற
 

எல்லோரையும் போலத்தான் நானும்
 

இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை,
 

உட்கார வைக்க,
 

ஒரு நாற்காலி கூட
 

இல்லாததால், இருவரும், நின்று கொண்டே 

பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,
 

பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
 

அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
 

வந்தேன்"
 

என்றார் காமராஜர்.

"காமராஜ்,
 

நீ முதலமைச்சர்,
 

நீ திறந்தா போதும்"
 

என்று ஜீவா மறுக்க,
 

"அட... ஆரம்பிச்ச
 

நீ இல்லாம,
 

நான் எப்படிப் போக,
 

கிளம்பு போகலாம்" என்று அழைத்தார், காமராஜர்,

"அப்படின்னா,
 

நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல 

வந்துடுறேன் "
 

என்று அனுப்பி வைத்தார்.
 

"கண்டிப்பாக வரணும்"
 

என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல்
 

தாமதமாகவே வந்தார் ஜீவா.

 

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? "
 

என்று காமராஜர் உரிமையுடன்
 

கடிந்து கொண்டார்.

 

உடனே ஜீவா, "நல்ல
 

வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
 

அதை உடனே துவைச்சு,
 

காய வைச்சு,
 

கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
 

தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
 

உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
 

ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் 

வாட்டியது.
 

அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது 

கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
 

"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
 

மாட்டான்.
 

காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
 

ஆனா,
 

அவனைப் போல தியாகிகள் எல்லாம்
 

இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன
 

செய்யலாம்"....? என்றார்.
 

கூட்டத்தில் இருந்த ஒருவர்,
 

"ஜீவாவின்
 

மனைவி படித்தவர். அதனால்
 

அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை 

கொடுத்தா, அந்த குடும்பம்
 

நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.

ஆனா,

நான் கொடுத்தா, அவன்
 

பொண்டாட்டியை வேலை செய்ய விட
 

மாட்டான்.

 

அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
 

பேசி,

"வீட்டுக்குப் பக்கத்துல
 

பள்ளிக்கூடத்துல
 

ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு 

போடச் சொல்லுங்க.

உடனே,
 

நான் வேலை
 

போட்டுத் தர்றேன்...

ஆனா,
 

இந்த விஷயம்
 

வேறு யாருக்கும்
 

தெரியக்கூடாது

அவன் முரடன்,
 

உடனே வேலையை
 

விட வைச்சுடுவான்

என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

 

அதன்படியே
 

ஜீவாவுக்குத்
 

தெரியாமல்,
 

அவருடைய
 

மனைவிக்கு
 

அரசு வேலை
 

கொடுத்தார்
 

காமராஜர்.

அதற்குப்
 

பின்னரே
 

ஜீவாவின்
 

வாழ்க்கையில்
 

வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா
 

இருவருடைய நட்பும்

வார்த்தைகளால் 


வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு 


சென்னை அரசு பொது 


மருத்துவமனையில்


சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
 

கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."
 

காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
 

என்பது தான்.

இனி எங்கே
 

காணமுடியம்

இது போன்ற
 

தலைவர்களை.

அடித்தட்டு
 

மக்களோடு மக்களாக,

வறுமையை உணர்ந்த,
 

பகிர்ந்த தலைவர்கள்,

கர்மவீரர்
 
காமராஜர்,
 
ஜீவா,
கக்கன்

போன்ற தலைவர்கள்.

இதை பகிரலாம் 

என்று நினைத்தால்,

செய்யலாமே... !! 

நண்பர்களே....!!
Thanks to C Malathi !
Sunday, March 27, 2016

இன்சுலின் செடி !

இன்சுலின் செடி:-

பொதுவான குணம் இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். 
 
மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். 
 
இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். 
 
ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும்.

மருத்துவக் குணங்கள்:-

சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. 
 
இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study:-

தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.

பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.


Saturday, March 26, 2016

செம்பருத்தி !

செம்பருத்தி :-

செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

அதன் விவரம்:-

உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.

பிற மருத்துவக் குணங்கள்:-

வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)

மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும்.

(செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.

வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.)

செம்பருத்திபூ தங்கபஸ்பம்:-

இதன் பூக்களில் தங்கச்சத்து நிறைந்துள்ளதால் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு சாப்பிடலாம். சர்க்கரை வியாதிக்கும் சிறந்த மருந்து. மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன.
இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்..

இருதய பலம்:-

இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயம் பலம் பெறும்.
250 கிராம் செம்பருத்திபூவை துண்டாக நறுக்கி ஒரு காண்ணாடி பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, அதை காலையில் வெயிலில் வைக்கவும் பின்னர் மாலையில் எடுத்து பிசையவும் சிவப்பான சாறுவரும் அந்த சாறை ஒரு பாத்திரத்தில் உற்றி அதற்கு தேவையான சர்க்க்ரை சேர்த்து காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் உற்றி வைத்துகொள்ளவும். இதில் இருந்து 2ஸ்புன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருகவும்,இது போல தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சிரான முறையில் பரவும் இருதயம் பலம்பெறும்.

உடல் உஷ்ணம் குறைய:-

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும்.

இந்தப் பூவினை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் குணமாகும்.

பேன், பொடுகு தொல்லை நீக்கும்:-

இரவு படுக்கும் போது செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள், தவிர, பொடுகு, சுண்டுகளும் நீங்கிவிடும்.

பலகீனமான குழந்தைகளுக்கு:-

சில குழந்தைகள் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.

தலையில் பேன், பொடுகு நீங்க:-

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.
இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்தி டீ போடும் முறை :-

செம்பருத்தி இதழ் (காய்ந்தது )-5 இதழ்
தண்ணீர் 1 கப் -150 ml
சக்கரை -1 ஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீர் வைத்து கொதிக்க விடவும் .பின் செம்பருத்தி இதழை போட்டு 5 mins கொதித்தபின் அடுப்பை அனைத்து வடிக்கட்டி சக்கரை போட்டு குடிக்கவும் .

ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம் .காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது .

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா??

உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்படலாம்....

அனைவரும் அனைவருக்கும் பகிரவும்....

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா??

நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டுவருகிறது.
ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாதநோய்களே இல்லை.

நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன்நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது.

கடிகளைக் கண்டறிதல்:
 

இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். 

இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்,

*இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்..

*புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்…

*வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, 


நீர் பிரட்டை போன்றவை என்றும்…

*கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்…

> தேள் கடி மருந்துகள்:

*எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.

*கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.

*கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.

*சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.

*கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.

*பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.

*குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத்தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர். 


நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.

> பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

> வெறி நாய் கடித்து விட்டால்.
நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

> பாம்பு கடித்து விட்டால்.


உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழியவேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில்படுக்க வைத்தவன் பல் கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.

> எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க.
நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும்.இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.

உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம்வெளியேறிவிடும்.வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும்.

சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது.

நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு.....

Monday, March 21, 2016

25 வருடங்களுக்கு முன் !

25 வருடங்களுக்கு முன்

செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்..

ஆணியில் மாட்டி கிழிந்த துணியை டானிங்க் செய்தது உடுத்தி கொண்டோம்.

முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுருண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்.

ரயில் பயணத்திற்கு புளியன்சாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.

பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.

பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.

இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.

பாடல்களின் வரிகள் புரிந்தன.

காதலிப்பதற்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.

ரஜினி கமல் பொங்கல் தீபாவளி க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.

காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம்.

திருடனை பிடிக்க ஊரே ஓடியது.

பாம்படிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.

பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.

கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.

எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,

சுவாசிக்கவும் யோசிக்கவும்.

- சாம் மகேந்திரன்

வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள் :

வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள் :

பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது.

வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம்.

இரத்தம் சுத்தமாகும்

வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துமாம்.

பாக்டீரியாக்களை அழிக்கும்

வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.

இதய ஆரோக்கியம்

வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.

கழுத்து வலி, காது வலி

நீங்கும் பாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், இதுவரை மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்குமாம்.

வயிற்று பிரச்சனைகள்

முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடுமாம்.

குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள்

உங்களுக்கு குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும். எப்படியெனில் வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் போது உடலினுள் ஒருவித வெப்பம் உருவாகி, அதனால் பல்வேறு பிரச்சனைகள் நீங்குமாம்.

துர்நாற்றமிக்க பாதம்

உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுமாயின், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடுமாம்.

சளி, காய்ச்சல்

சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுமாம்.

சிறுநீரக கற்களை கரைக்கும் கற்பூரவல்லி

அழகுக்காக வளர்க்கப்படும் செடி கற்பூரவல்லி. நறுமணத்தை தரக்கூடிய இதற்கு ஓமவல்லி என்ற பெயரும் உண்டு. தொட்டால் மணம் தரக்கூடியது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை கரைத்து வெளிதள்ள கூடியது. உள் உறுப்புகளை தூண்ட கூடியது. காக்கா வலிப்புக்கு மருந்தாகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. ஒரு கிளையை மட்டும் எடுத்து தொட்டியில் நட்டு வைத்தால் அது நன்றாக வளரும்.
Karpuravalli grown for the beauty of the plant. This is also known as beneficial aroma omavalli. Lavender brings touched. Has the capacity to dissolve kidney stones
கற்பூரவல்லியை பயன்படுத்தி சைனஸ், நெஞ்சக சளியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். கற்பூரவல்லி இலை சாறு எடுத்துக்கொள்ளவும். பெரியவர்கள் என்றால் 2 ஸ்பூன், குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர சளி குணமாகும். குழந்தைகளுக்கு மாந்தத்தை போக்கும். இருமல் இல்லாமல் போகும். பசியை தூண்ட கூடியது. மூக்கடைப்பு, தலைவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், அரை ஸ்பூன் கற்பூரவல்லி இலை பசை, சிறிது சர்க்கரை சேர்த்து லேசாக சூடு செய்தபின் மூக்கு, நெற்றியில் பத்தாக போடும் போது மூக்கடைப்பு, தலைவலி சரியாகும். தலைபாரம், சைனஸ் குணமாகும். இதயம், உணவுப்பாதை, சிறுநீரக பாதைக்கு பலம் கொடுக்கும். அக்கி, அம்மை கொப்புளங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். கற்பூரவல்லி இலை சாறு அல்லது பசையை  கொப்புளங்களுக்கு மேல் பூசினால் அவைகள் சரியாகும்.

கற்பூரவல்லி இலையை பயன்படுத்தி வெள்ளைபோக்கு, சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒருவேளைக்கான தேனீர் தயாரிக்க 3 இலைகளை எடுத்து துண்டுகளாக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீர் பையில் தங்கியிருக்கும் கற்களை கரைத்து வெளித்தள்ளும்.

வெள்ளைப்படுதல் சரியாகும். கற்பூரவல்லியை பயன்படுத்தி குளிர் காய்ச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 3 கற்பூரவல்லி இலைகள், அரை ஸ்பூன் சீரகத்துடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி காலை, மாலை குடித்துவர குளிர் காய்ச்சல், மலேரியா காய்ச்சல் குணமாகும். கல்லீரல், மண்ணீரல் பலப்படுவதுடன் அவைகளின் செயல்பாடுகள் சீராகும். கற்பூரவல்லி வீட்டில் இருக்க வேண்டிய உன்னதமான மூலிகை.

இதன் மணம் கொசுக்கள், பூச்சிகளை விரட்ட கூடியது. கடலை மாவுடன் கற்பூரவல்லியை பஜ்ஜியாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது இருமல், சளி, காய்ச்சல் குணமாகும்.கற்பூரவல்லி செரிமானத்தை தூண்டக் கூடியது. வலியை குறைக்கும். புண்களை ஆற்றும். மருக்களை கரைக்கும் தன்மை கொண்டது. ஆண்கள் ஓரிரு இலைகளை சாப்பிடுவதால் கற்கள் கரைந்து போகும். கற்பூரவல்லி சாற்றை மேலே பூசுவதால் அக்கி கொப்புளங்கள் வற்றும்.

Thanks to Dinakaran.com

இன்ப துன்பம்

மனிதர்களாகிய நமக்கு - தற்சமயம் தங்களுக்கு  எந்த எந்த நிகழ்வுகள் அதிக சந்தோசத்தை தருகின்றனவோ அந்த நிகழ்வுகள் தங்களுக்கு பின் நாளில் அதிக துன்பத்தை தருகின்றன.

தங்கள் இந்நாளில் கஷ்டம்முற்று செய்கின்ற அனைத்து விசயங்களும்/ நிகழ்வுகளும் பின் நாளில் தங்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த நிகழ்வை எதிலும் பொருத்தி பார்க்கலாம்.

 
Sithayan Sivakumar, Madurai

Friday, March 18, 2016

யார் யார் இரத்த தானம் செய்யலாம்?
🌺நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண் , பெண்.

🌷18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.

🌷குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.

👍👍இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?💥

ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும்,
பெண்கள்
நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.🌷🌷

இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

10 நிமிடம்.👍

இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?🌺🌺

20 நிமிடம்.👍👍

இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது?🌸🌸

350 மில்லி.👍👍

(நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது)
எடுக்கப்படுகிற
இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.🌺

இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்?🔥🔥

10 லிருந்து 21 நாட்களில்.🌷

இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?🍁🍁

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும்.

பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல்.
ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து
உயிர் காப்பது
நல்லதுதானே?🌺🌺

இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?🔥

நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது.
தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.
சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?🌷

உதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட லிஸ்ட்டை பயன்படுத்துங்கள்.

💢சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.

💢 ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.

💢ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.

💢குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.

💢 அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.
🌹குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.

🌹பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

🌹 சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்

🌹பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்

🌷 பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

🌷 இதய நோய்கள் _ வேண்டாம்.

🌷 இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.

🌺வலிப்பு நோய் _ மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம்.
மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.

🌺தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

🌺 நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

🍁மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.

🍁மலேரியா _ 3 மாதங்களுக்குப் பிறகு.

🍁 காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.
மாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

🔥 சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

🔥 ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

🔥 நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம்.

💦இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

💦ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

💦இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

இரத்ததானம்👍👍👍 கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?

💥 நல்ல திரவ உணவை அருந்துங்கள்.
ஹெவி உணவு வேண்டாம்.

💥 ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.
36 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.

💥 இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம். 

நன்றி.

Thursday, March 17, 2016

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா?

இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.

எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.
கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.

திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.

படித்தேன் பகிர்ந்தேன்.... பயனென்று நினைத்தால் பகிருங்கள்.....

Wednesday, March 16, 2016

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள் !!

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள் !!

நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்க விருப்பதை முன் கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள்.

பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!

1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]

2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். [பாகவத புராணம் 12.2.2]

3. சில ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். பூணூல் அணிந்திருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான். [பாகவத புராணம் 12.2.3]

*கணவன் மனைவி உறவு என்பது வெறும் உடலுறவுக்காக மட்டுமின்றி, அது ஒரு மிக உன்னதமான பந்தம். ஆணும் பெண்ணும் சமம், இருவரும் தங்களின் குடும்பத்தை முறையாக வழிநடத்தவேண்டும். பெண்ணை மதிப்பதால் தான் ஒருவன் ஆணாகிறான்; ஆணை மதிப்பதால் தான் ஒருவள் பெண் ஆகிறாள். பிராமணன் என்பவன் நற்குணங்களாலும் தர்மசெயல்களாலும் உருவாகிறானே தவிர பூணூல் அணிவதால் அல்ல. சமூகத்தில் வேண்டுமென்றால் பூணூல் அணிந்துகொண்டு தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளலாம். ஆனால், பகவானின் முன்னிலையில் எல்லாவுயிர்களும் சம்மே! (சர்வபூதேஷு சமஹ்-கீதை)

4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். [பாகவத புராணம் 12.2.4]

5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]

6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். [பாகவத புராணம் 12.2.6]

7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]

8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். (அரசின் அலட்சியப் போக்கினால்) கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.9]

9. கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.10]

10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். [பாகவத புராணம் 12.2.11]

11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். [பாகவத புராணம் 12.3.42]

12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]

13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]


14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]

15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். [பாகவத புராணம் 12.3.32]

கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழையினில் குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும். மனத்தை உறுதியாக வைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும். கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.

கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது. இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும். அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்! மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும். ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.


Thanks to G.Mohan ! Tamil ! Tamil !

பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”


மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”

“ஆமாண்ணே.. எப்படிண்ணே..”

“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது. எண்ணெய்னால வரக்கூடியது…?”

“என்னாண்ணே சொல்றீங்க…?”

“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”

“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”

“ நீ மட்டும் இல்லை முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”

“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”

“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”

“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”

“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?

“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?”

“ம்… குரூட் ஆயிலிலிருந்து…”(அது பேரு மினரல் ஆயில்)

“ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”

“கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க… அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.”

“எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே முருகா… நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”

“இல்லைண்ணே..”

“பாரு… உண்மை புரியும்…”

“ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”

“ லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”

“என்னா தெரியும்…”

“ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்… அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”

“ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.”

“முருகா… சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”

”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”

“ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”

“எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”

“யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு… ஆரோக்கியம் தானா வரும்..”

“ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”

“ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும். இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”

“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”

“கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது… கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு…

“ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..”

“டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்… கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது… போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…”

“இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை”

“ நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம் இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோ?


Thanks to Thillai !

பென்ஷன்! பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் ,,

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் ,,

நாமினி!

"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.

பென்ஷன்!

பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.

மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.

இடையில் பணம் எடுத்தல்!

பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.

பிஎஃப் கணக்கை முடிப்பது!

பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)

பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.

அனைத்தும் ஆன்லைன்!

பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

எதற்கு எந்தப் படிவம்?

பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

புகார் தெரிவிக்க!

பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும். http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx?csession=2b4n9lQYhr1& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.

டிடிஎஸ்!

பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ் (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில் உள்ளது.

நிரந்தரக் கணக்கு எண்!

பிஎஃப் அமைப்பு UAN(Universal Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.

இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே வாங்க முடியும். இந்த எண்ணை http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.

இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”

"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"


"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...

நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.  வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.  அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.  எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!

"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

Tuesday, March 15, 2016

தசைப்பிடிப்பு தடுப்பது எப்படி?


நா
ம் எல்லோருமே வாழ்வில் ஒருமுறையாவது தசைப் பிடிப்பால் அவதிப்பட்டிருப்போம். கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கும் போது,  விளையாடும் போது திடீரென உடலில் எங்கேயாவது தசை பிடித்துக் கொண்டு பாடாகப் படுத்திவிடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியப் பிரச்னை, தசைப்பிடிப்பு!

தசைப்பிடிப்பு என்றால் என்ன? 

மனிதனின் இயக்கத்துக்கு தசைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் தசைகள் சுருங்கி, தளரும் தன்மை கொண்டவை.  இவை,  இயற்கைக்கு மாறாக சுருங்கி வலியை ஏற்படுத்துவதைத் தசைப்பிடிப்பு என்கிறோம்.


தசைப்பிடிப்பு ஏன்?

உடலில் அதிக வறட்சியின் காரணமாக, திடீரென தசைகளில் நீர்க்குறைவு ஏற்படுவதாலும், மிகவும் சோர்வு அடையும்போது தாதுஉப்புகளின் அளவு குறைவதாலும் தசைப்பிடிப்பு ஏற்படும்.


கை, கால் போன்ற இடங்களில் அடிபடுவதாலும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.


உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் செய்யாவிடில், உடலில் ஏற்படும் திடீர் வெப்ப இழப்பைத் தாங்காமல் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது.


அதிகத் தூரம் பயணம் மேற்கொள்ளும்போது ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்துஇருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும்.


உடலில் உள்ள ஒரே உறுப்பை அதிக நேரம் பயன்படுத்தும்போது, தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.அடிகுழாயில் தொடர்ந்து தண்ணீர் அடிக்கும்போது, கையில் தசைப்பிடிப்பு ஏற்படலாம். 

வாழைக்காய், உருளை போன்ற வாயு நிறைந்த உணவுப் பொருட்கள், உடலில் வாயுவை அதிகரிக்கும். இதன் காரணமாகவும் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.


நெஞ்சு எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய அதிகக் காரம், மசாலா வகைகளை தொடர்ந்து உண்பதால், நாளடைவில் தசைப்பிடிப்பு எளிதில் ஏற்படும்.


தசைப்பிடிப்பு ஏற்படும்போது செய்யக் கூடாதவை 


நாமே கை, கால்களை முறுக்கி, தசைப்பிடிப்பை சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது.


தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில், அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்க்கக் கூடாது. அந்த இடத்தில் தசை, பலவீனம் அடைந்து இருக்கும். எனவே, அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்ப்பதால், உள் காயம் ஏற்படும்.


குளிர்ந்த நீரையோ அல்லது குளிர்பானங்களையோ அருந்தக் கூடாது.


தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது.தசைப்பிடிப்பு ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? 


தசைப்பிடிப்பு ஏற்பட்டால் முதலில் ஓய்வு எடுக்க வேண்டும்.


சூடாக சுக்கு மல்லி காபி குடிக்கலாம். சுக்கு, வலியைப் போக்கும் தன்மை உடையது.


வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.


நல்லெண்ணெயில் உப்பு கலந்து தேய்த்து, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியை வேர்க்கச் செய்ய வேண்டும். குணமாகும் வரை இப்படி ஒரு நாளைக்கு இருமுறை  செய்யலாம்.


அடிபட்டு, தசைப்பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் தசை பலவீனமாகி, ரத்த ஓட்டம் நடைபெறாமல் தடைப்பட்டு இருக்கும். எனவே, அடிபட்ட இடத்தில் எண்ணெயை ஊற்றி, மிதமாக அல்லது மெதுவாகத் தேய்துவிட வேண்டும்.


முழுமையான குணம் பெற…


கற்பூராதித் தைலம், முறிவு எண்ணெய், காயத்ரி மேனித் தைலம், நாரயணத் தைலம்  ஆகியவற்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.


தசைப்பிடிப்புக்கான ஆயுர்வேத சிகிச்சைகள் 


‘கிழிச்சல்’முறைப்படி மருத்துவக் குணமுள்ள எண்ணெயை மிதமான சூட்டில் மிதமான வேகத்தில் ஊற்ற வேண்டும். ‘வத்தி’ முறைப்படி மருத்துவக்குணமுள்ள எண்ணெயை மிதமான சூட்டில் பாத்தி போல் கட்டி, குறிப்பிட்ட நேரம் தேக்கிவைக்கும் சிகிச்சை நல்ல பலன் கொடுக்கும்.


ஆமணக்கு, நொச்சி, கல்யாண முருங்கை, முருங்கை இலை, புங்கன் இலை, புளி இலை, எருக்கம் இலை, ஊமத்தம் இலை இதனுடன் வாதநாரயண இலை ஆகியவற்றைச் சேர்த்து, வதக்கி ஒரு துணியில் கட்டி, தினமும் இருமுறை ஒத்தடம் கொடுத்தால், தசைப்பிடிப்பு குணம் அடையும். இந்த முறைக்கு ‘பத்திரப் போட்டலி அல்லது இலைக் கிழி’ என்று பெயர்.

Thanks to Seythivayal.com


பற்களில் மஞ்சள் கறை நீக்க வழி !


ஒருவரின் அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்புதான். இப்படி சிரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், நமது தன்சுத்தம் கேள்விக்குறியாகி விடும். பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிகளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகைப்பிடிப்பது ஆகியவற்றை கூறலாம். 

இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக காட்ட, பல் மருத்துவமனைக்கு சென்று பற்களை அடிக்கடி பிளீச்சிங் செய்து வெண்மையாக்கி கொள்கிறார்கள். இப்படி செய்வதால், பற்கள் வெண்மையாகும். ஆனால், பற்களின் ஆரோக்கியம் கெட்டுவிடும். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க, சில எளிய ஆரோக்கியமான இயற்கை வழிகள் உள்ளன. 

பற்களை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து தேய்ந்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும். எலுமிச்சை பழத்தை கொண்டு பற்களை துலக்கி, பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், கறைகள் நீங்கி பிரகாசமாக தெரியும். 

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், அதில் உள்ள அசிட்டிங் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்குகிறது. கடைகளில் கிடைக்கும் சாதாரண உப்பைக் கொண்டு, பற்களை துலக்கினால் பற்களில் உள்ள கறைகள் அகன்று, பற்கள் பிரகாசமாக இருக்கும். 

உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், ஈறுகளையும், எனாமலையும் பாதிக்கும். சாதாரண சாம்பலை, பேஸ்ட்டுடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்குவதால், பற்களில் உள்ள கறை நீங்கி, வெண்மையாக காட்சியளிக்கும். இரவு உறங்கும் முன், ஆரஞ்சு தோலில் பற்களை துலக்கி விட்டு, வாயை கழுவாமல் படுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி சத்து, பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும்.

பணம் ஈட்டும் சுலப வழிகள் !
நம்  ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. ஆனால் அவை  நமக்கே தெரிவதில்லை என்பது தான் உண்மை. கீழ்க்கண்ட விஷயங்களில் நமக்கு ஆர்வமும், திறமையும் இருந்தால் உட்கார்ந்த இடத்திலேயே கை நிறைய சம்பாதிக்கலாம்.

* உங்களுக்கு தையல் வேலையோ, எம்பிராய்டரிங்கோ தெரியுமா? பொம்மை செய்வது, ஓவியங்கள் வரைவது, கைவினைப் பொருட்கள் செய்வது என்று ஏதேனும் தெரியுமா? அதையே மூலதனமாக வைத்து நீங்கள் ஏதேனும் சம்பாதிக்கலாம். உங்களுக்குத் தெரிந்த வர்களிடம் உங்கள் கைவினைத் திறமை களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் செய்தவற்றை அவர்களுக்கு மாதிரிக்குக் காட்டுங்கள். கொஞ்ச நாட் களில் அவற்றை மலிவு விலைக்கு விற்றுப் பாருங்கள். பிறகு அப்படியே வியாபாரத்தைப் பெருக்கலாம்.

* உங்களுக்கு டைப் ரைட்டிங் தெரியுமா? கம்ப்யூட்டர் ஆபரேட் செய்யத் தெரியுமா? அப்படியானால் உங்களுக்குத் தெரிந்த அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு டைப் ரைட்டிங் வேலைகளைச் செய்து கொடுங்கள்.

* நீங்கள் வீட்டு விலங்குப் பிரியரா? அப்படியானால் கொஞ்சம் இட வசதிக்கு ஏற்பாடு செய்து விட்டு வளர்ப்புப் பிராணிகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்தலாம். அதில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுச் செல்லப் பிராணிகளை, அவர்கள் ஊருக்குச் செல்லும்போதும், மற்ற தேவையான சந்தர்ப்பங்களிலும் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கலாம்.

* மெஹந்தி வரைவதில் நீங்கள் கில்லாடியா? உங்கள் வீட்டு வாசலில் ஒரு போர்டு வைத்து விடுங்கள். கல்யாணம் மற்றும் விசேஷங்களுக்கு மெஹந்தி டிசைன் போட்டு விடலாம். வீட்டிலேயே அதற்கான வகுப்பையும் எடுக்கலாம்.

* சாக்லேட், கேக், பிஸ்கட் போன்ற வற்றைத் தயாரிப்பதில் நீங்கள் நிபுணியா? பண்டிகை நாட்களுக்கு, பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு என ஆர்டர் எடுத்து அவற்றைச் செய்து விற்கலாம். அருகிலுள்ள பேக்கரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுக்கலாம்.

* குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பு வைத்திருப்பவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இட வசதி இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தலாம். உதவிக்கு ஒன்றிரண்டு ஆட்களை வைத்துக் கொள்ளலாம்.

* உங்கள் வீட்டில் தோட்டம் போடுகிற அளவுக்கு இட வசதி உண்டா? மொட்டை மாடியாக இருந்தாலும் பரவாயில்லை. காய்கறித் தோட்டம் போடுங்கள். தினசரி சில மணி நேரத்தை அதைப் பராமரிப்பதில் செலவிடுங்கள். உங்கள் வீட்டுக்கான காய்கறிச் செலவை மிச்சப்படுத்தலாம். நீங்களே பயிரிட்ட காய்களை சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.

* உங்களுடையது பெரிய வீடா? உபயோகிக்க ஆளில்லையா? அப்படியானால் உங்கள் வீட்டை சினிமா மற்றும் டி.வி படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடலாம். தினசரி வாடகை கிடைக்கும்.

* நல்ல குரல் வளம் உள்ளவரா நீங்கள்? பாடகியாகும் அளவுக்கு உங்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை. படங்களுக்கு, விளம்பரங்களுக்கு, டி.வி தொடர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கலாம். விளம்பர நிறுவனங்களுடன், டி.வி தொடர் தயாரிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

* எழுத்துத் துறையில் ஆர்வமுள்ள வராக இருந்தால் உங்களைக் கவர்கின்ற செய்திகளை, சுவாரசியமாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்.

* படித்த படிப்பு வீணாகிறதே என்று கவலைப்படுகிறீர்களா? உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கலாமே? உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப குறிப்பிட்ட வகுப்புகள் வரை கற்றுத் தரலாம்.

* டெய்லரிங் தெரிந்திருந்தால் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டாருக்குத் துணிகள் தைத்துக் கொடுக்கலாம். பெரியளவில் தைக்கத் தெரியாவிட்டாலும் கூட மேல் தையல் போட்டுக் கொடுப்பது, ஓரம் அடித்துக் கொடுப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளை செய்து தரலாம்.

பணம் ஈட்டும் தொழில்கள் - உடனடி சப்பாத்தி!

உணவுப் பொருட்கள் தயாரிப்பு எப்போதுமே லாபகரமான தொழில். குறிப்பாக, உடனடி உணவுகளுக்கான சந்தை அதிகரித்து வருவதால், வாய்ப்புகளைப் பயன்படுத்தி உணவுத் துறை சார்ந்த தொழிலை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிற தொழில், உடனடி சப்பாத்தி தயாரிப்பு.


நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் சப்பாத்தி இடம் பெற்றுவிட்டது. உடல்நலம் சார்ந்து மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள் என்பதால், மார்க்கெட்டிங் செய்வதில் பெரிய சிரமங்கள் கிடையாது. நினைத்த நேரத்தில் தயார் செய்து சாப்பிட முடியும்; இதனால் நேரமும் வேலையும் மிச்சம் என்பதால், இதற்கு நல்ல வரவேற்பும் இருக்கும்.  

தவிர, நீங்கள் வசிக்கும் ஏரியாவில் இருக்கும் ஹோட்டல்கள், ஹாஸ்டல்களை குறிவைத்து இறங்கினாலே போதும் நல்ல வருமானம் பார்க்கலாம். உணவு பொருட்களைப் பொறுத்தவரை, தரமாகவும், சுவையாகவும் கொடுத்தால் எந்த ஏரியாவிலும் ஜோராக விற்கலாம்! 


தயாரிப்பு முறை! 

கோதுமை மாவை மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட அளவு மாவை, மாவு பிசையும் இயந்திரத்தில் கொட்டி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெய்விட்டு பிசைந்துகொள்ள வேண்டும். 

பிசையப்பட்ட இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டும் இயந்திரத்தில் விட்டு உருட்டிக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை சப்பாத்தி சுடும் இயந்திரத்தில் இட்டு சப்பாத்தியாகச் செய்துகொள்ள வேண்டும். தயாரித்த சப்பாத்திகளைக் குளிரவைத்து பாக்கெட்களாக அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். பேக்கிங் கவரில் தயாரித்த தேதி மற்றும் பயன்படுத்தும் காலம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

தேவையான இயந்திரங்கள்! 

மாவு பிசையும் இயந்திரம், உருண்டை இயந்திரம், சப்பாத்தி செய்யும் இயந்திரம், குளிரூட்டும் கன்வேயர்கள், ஏர் கம்ப்ரஸர், தொடர் சீலிங் இயந்திரம். இந்த இயந்திரங்கள் மொத்தமும் ரூ.7 லட்சத்துக்குள் கிடைக்கும்.
திட்ட மதிப்பீடு! (ரூ.)
இடம் :     கட்டடம் வாடகை
இயந்திரங்கள் :            7 லட்சம்
மின்சாரம் :               1 லட்சம்
பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அல்லது நீட்ஸ் திட்டத்தின் மூலம் உற்பத்தி தொழில் மானியம் பெற முடியும்.
நமது மூலதனம் (5%):  ரூ. 40,000
மானியம் 25%     : ரூ.2,00,000
வங்கிக் கடன் 70%  :ரூ.5,60,000
நடைமுறை மூலதனம்: 2 லட்சம் (இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்)
உற்பத்தி!
ஓர் இயந்திரத்தின் மூலம் தினசரி 10 ஆயிரம் சப்பாத்திகள் வரை உற்பத்தி செய்ய முடியும். நாம் 8,000 சப்பாத்திகள் எனக் கணக்கு வைத்துக்கொள்வோம். இதை 800 பாக்கெட்களாக அடைத்துக் கொள்கிறோம். ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.22 முதல் ரூ.25 வரை கிடைக்கிறது. நாம் 25 என்கிற வகையில் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். இதனோடு தண்ணீர், உப்பு, எண்ணெய் சேர்க்கும்போது 1,700 கிராம் எடையும், கூடுதலாக ரூ.6 செலவாகும். ஒரு சப்பாத்தி சுமார் 45 கிராம் எடை என்கிற அளவில் தயாரிக்க வேண்டும்.  இதன்படி கணக்கிட்டால், நமக்கு 38 சப்பாத்திகள் கிடைக்கும். நாம் 35 சப்பாத்திகள் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இதன்படி, ஒரு சப்பாத்தியின் உற்பத்தி செலவு 88 பைசா. 10 சப்பாத்திகள் வீதம் பேக்கிங் செய்ய ஒரு பாக்கெட்டுக்கு ரூ.2.50 செலவாகும்.  

ஒருநாள் மூலப்பொருள்: ரூ.8,000X0.88 = 7,040
பேக்கிங் செலவு : 800X2.5 = 2,000

தினசரி உற்பத்தி செலவு ரூ.9,040 என்கிறபோது மாதம் 25 வேலைநாட்கள் எனக் கொண்டால், மாதத்துக்கு ரூ.2.26 லட்சம் உற்பத்தி செலவாகும்.

பணியாளர்கள்: (ரூ.)
மேற்பார்வையாளர் 1: 12,000
பணியாளர்கள் 3X8: 24,000   
விற்பனையாளர்கள்: 2 X 8000 : 16,000
மொத்தம்: 52,000

விற்பனை! 

10 சப்பாத்திகள் கொண்ட ஒரு பாக்கெட் ரூ.25-க்கு விற்பனை செய்யலாம். (இதை அதிகபட்சமாக ரூ.40 வரை  கடைக்காரர்கள் விற்பனை செய்ய முடியும்) தினசரி 800 பாக்கெட்கள் மூலம் கிடைக்கும் விற்பனை வரவு ரூ.20,000. மாதம் 25 வேலைநாட்கள் என்கிறபோது
மாத வருமானம் ரூ.5 லட்சம்.

மொத்த செலவுகள்! (ரூ.)
வாடகை :     10,000
மூலப்பொருட்கள் :   2,26,000
மின்சாரம் :     10,000
வேலையாட்கள் :     52,000
மூலதனக் கடன் வட்டி (12.5%) : 5,900
கடன் தவணை 60 மாதங்கள்:     9,500
நடைமுறை மூலதன வட்டி(12.5%) : 2,100
இயந்திர பராமரிப்பு :     10,000
மேலாண்மை செலவுகள் :      10,000
தேய்மானம் :      8,800
போக்குவரத்து :     20,000
விற்பனை ஊக்க செலவுகள் :     50,000
மொத்தம் :    4,14,300
மொத்த வரவு :    5,00,000
மொத்த செலவு :    4,14,300
லாபம் :     85,700

நன்றி-நாணயம் விகடன்

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

கவலை , அச்சம் , பதற்றம் ... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது !   “ நாங்கெல்லாம் பயத்துக்கே பயங்காட்றவங்க , தெரியுமா ” என்று ச...