Total Pageviews

Thursday, June 30, 2016

மலச்சிக்கல், மூல வியாதி, உடல் சூடு தணிய :

மலச்சிக்கல், மூல வியாதி தீர துத்திக் கீரை,துத்தி இலை :

துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

துத்திக் கீரை இது சிறுநீரைப் பெருக்கும், மலத்தை இளக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும். இக் கீரை குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடலுக்கு ஊட்டமளிப்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்கிப் பல நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

மூலநோய், கட்டிகள், புண்கள், முழுமையாக நிவாரணம் பெறுகின்றன. எலும்பு முறிவுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. துத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.


மலச்சிக்கல் தீர :

மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும். மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.
 
மூல வியாதி குணமாக :

காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.
 
உடல் சூடு தணிய :
 
துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.
 
வெப்பக்கட்டி குணமாக :
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

பல் ஈறு நோய் குணமாக :

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

குடல் புண் ஆற :

துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

சிறுநீர் பெருக்கி :

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

மற்ற கீரைகளைக் கடைவது போல துத்திக் கீரையையும் பாசிப் பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து, கடைந்து சாப்பிடலாம். துத்திக் கீரையைத் தினமும் ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் எந்தப் பிணியும் அணுகாது. தேவையான சக்தியும் கிடைத்து விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள், உடல் சூடு உள்ளவர்கள், ஆசனத்தில் கடுப்பு உள்ளவர்கள், மேகச் சூடு உள்ளவர்கள் துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதால் மேற்கண்ட பிணிகளில் இருந்து நிவாரணம் அடையலாம்.

துத்திக் கீரையை மருந்தாகத் தயாரித்துச் சாப்பிட்டால் முழுமையான நிவாரணம் பெறலாம்.
துத்தி இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து கஷாயம் தயாரித்து, இதில் பாலும் சர்க்கரையும் சேர்த்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு தணியும்.

துத்தி இலை, வெங்காயம், பச்சைப் பயறு சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவு சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூடு தணியும்.

துத்தி இலையை அரைத்து முகப்பருக்களின் மேல் போட்டாலும், துத்தி இலையைக் காய விட்டு அரைத்துப் போட்டாலும் சில தினங்கள் உபயோகத்தில் பருக்கள் மறைந்துவிடும். துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி ஆசனவாயில் வைத்துக் கட்டினால் மூலக் கட்டிகள் உடைந்து மூல ரணங்கள் ஆறிவிடும். மூல நோய் அகன்று விடும். பால்துத்தியை தண்ணீர் விடாமல் அரைத்து வெட்டுக் காயத்திலும் அடிபட்ட காயத்திலும் வைத்துக் கட்டினால் காயங்கள் விரைவில் ஆறிவிடும். பால்துத்தியின் அடையாளம் காண பால்துத்திக்காயின் மேல் தண்ணீர் தெளித்தால் வெடிக்கும்.


Thanks to Viswanathan 

Wednesday, June 29, 2016

தயிரின் நன்மைகள்.


தயிரின் நன்மைகளும்,அதனை கையாலும் முறைகளும்... 
தயிர் உங்களுக்கு கிடைத்தால் என்ன வெல்லாம் செய்யலாம்..?

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.

ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.

12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது
.
18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

Saturday, June 25, 2016

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்.

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்.

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

2. இரண்டு முதல் மூன்று வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றும், வருங்காலத்தில் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ குறிப்பிடுவது, மனதில் பதிய வைப்பது தவறு.

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.

8. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.

9. மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

10. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

11. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

நன்றி: மாலை மலர்

Friday, June 24, 2016

பழைய சோறு..... !

பழைய சோறு..... !

மறுநாள் சாப்பிடும் பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறது அமெரிக்க மருத்துவம். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ஷட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

♣ கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவம் :

♣ காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

♣ இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

♣ மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

♣ அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

♣ மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

♣ அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

♣ அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

♣ எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

♣ பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரௌன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

♣ ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.

♣ மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க ′ஜில்′லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.
 Thanks to Rani Krishna !

Wednesday, June 22, 2016

நல்ல‍ காரியத்தின் புண்ணியம் எத்த‍னை தலைமுறைக்கு ?

 நம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் எத்த‍னை தலைமுறைக்கு சென்று சேரும் சேரும் என்பது குறித்து பெரியவர்கள் சொல்லி கேட்ட வரையில் :

பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் ……..                  5  தலைமுறைக்கு.

புனித‌நதிகளில் நீராடுதல்===> 3 தலைமுறைக்கு

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல்==> 5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் =====> 3 தலைமுறைக்கு.

ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் =====>                              5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது =====> 6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் =====> 7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல்=====> 9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது =====> 14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் =====> 21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை நல்ல‍ காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம்

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்.

நல்ல‍ காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணியம் எப்ப‍டி நமது தலை முறையினருக்கு சென்று சேருகிறதோ அதேபோல் நாம்செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறக்காதீர்.

Friday, June 17, 2016

வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

வெள்ளை சர்க்கரை  ஒரு பகீர் எச்சரிக்கை !!!

யாரும் உண்ண வேண்டாம்
 

நாய்க்கு கூட கொடுக்க வேண்டாம்...
 

Sugar disease is a Slow Poison

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்
.
நிச்சயமாகப் போகும்.
ஆக,
சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம்.
இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்?

காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு
படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை
சீனி ஒரு ஊடு பொருளாக நமக்குள் செல்கிறது.... 😈😈😈😈

பதார்த்தத்தில் தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்
😬.

இந்த
வெள்ளை சீனியை
எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால்.....
இனி அதைத் தொடக் கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன என்று பாப்போம்...
.
1.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன் படுத்துகிறார்கள்.

2.
பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடு படுத்தப்படுகிறது.

இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3.
இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4.
102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது
.
5.
அடுத்து,
பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது
.
6.
சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது
.
7.
மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது.

சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8.
இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே
.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக் கூடாது.
.
காரணம்

அதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது
.
குடலில்
மட்டுமல்ல,
பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரியவியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது
.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்தி விட்டு,

வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
.
இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
This is true so Can we avoid
டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
.
“சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11
.
இந்த சர்க்கரையில்
12 கார்பன் அணு (atom)
22 ஹைட்ரோஜன் அணு,
1 ஆக்ஸீஜன் அணு உள்ளது
.
இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது
.
கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4
.
இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது
.
சர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு
.
நண்பர்களே இன்றய ஊடகங்களால் மறைக்கப் பட்ட சதி எனவும் கூறலாம். பணத்திற்காக நம் பாமர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!

நண்பர்களே படித்து விட்டு அவசியம் பகிருங்கள்.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

இயற்கையை போற்றுவோம்.

நோயற்று வாழ்வோம்.🌻

Tuesday, June 14, 2016

வாழ்க்கை !

 
வாழ்க்கை 
 

ஒரு கிராமத்தில் வசித்து வந்த
ஒரு மனிதன்
திடீரென இறந்து போனான்.,
அவன் அதை உணரும் போது,
கையில் ஒரு பெட்டியுடன்
கடவுள் அவன் அருகில் வந்தார்.. ]

#கடவுள் :
"வா மகனே....
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது.."

#மனிதன் :
"இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது?"

#கடவுள் :
"மன்னித்துவிடு மகனே....
உன்னைக் கொண்டு
செல்வதற்கான நேரம் இது.."

#மனிதன் :
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

#கடவுள் :
"உன்னுடைய உடைமைகள்....."

#மனிதன் :
"என்னுடைய உடைமைகளா!!!
என்னுடைய பொருட்கள்,
உடைகள், பணம்,....
எல்லாமே இதில் தான்
இருக்கின்றனவா?"

#கடவுள் :
"நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது.."

#மனிதன் :
அப்படியானால்,
"என்னுடைய நினைவுகளா?"

#கடவுள் :
"அவை காலத்தின் கோலம்...."

#மனிதன் :
"என்னுடைய திறமைகளா?"

#கடவுள் :
"அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது...."

#மனிதன் :
"அப்படியென்றால் என்னுடைய
குடும்பமும் நண்பர்களுமா?"

#கடவுள் :
"மன்னிக்கவும்.......
குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்...."

#மனிதன் :
"அப்படி என்றால்
என் மனைவி மற்றும் மக்களா?"

#கடவுள் :
"உன் மனைவியும் மக்களும்
உனக்கு சொந்தமானவர்கள் அல்ல,
அவர்கள் உன் இதயத்துடன்
சம்பந்தப்பட்டவர்கள்...."

#மனிதன் :
"என் உடலா?"

#கடவுள் :
"அதுவும் உனக்கு
சொந்தமானதல்ல....
உடலும் குப்பையும் ஒன்று...."

#மனிதன் :
"என் ஆன்மா?"

#கடவுள் :
"அதுவும் உன்னுடையது அல்ல...,
அது என்னுடையது......."

●மிகுந்த பயத்துடன்
கடவுளிடமிருந்து
அந்தப் பெட்டியை வாங்கி
திறந்தவன்,
காலி பெட்டியைக் கண்டு
அதிர்ச்சியடைகிறான்..

கண்ணில் நீர் வழிய
கடவுளிடம்,
"என்னுடையது என்று
எதுவும் இல்லையா?"
எனக் கேட்க,

#கடவுள் சொல்கிறார்,

"அதுதான் உண்மை..
நீ வாழும்
ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது..

வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்..

ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்வதுடன்
நல்ல செயல்களை மட்டும் செய்..

எல்லாமே உன்னுடையது என்று
நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ்

அது மட்டுமே நிரந்தரம்..

-- உன் இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது●

♡வாழுகின்ற
ஒவ்வொரு நொடியையும் ஒழுக்கத்துடன்🙏
சந்தோஷமாக வாழ்வோம்.

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...