Total Pageviews

Friday, May 31, 2024

வாழ்க்கை என்பது !

 

வாழ்க்கை என்பது !

 

 
தன்னிடம் உள்ள திறமையைச் சரியாகக்  கண்டு பிடித்து , தனக்கும் ,தன் குடும்பத்துக்கும் ,தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்கும் உபயோகமாக வாழ்வது தான் வாழ்க்கை!

 ற்றற்ற வாழ்க்கை!

⭐இருப்பது போதும் !

⭐வருவது வரட்டும் !

⭐போவது போகட்டும் !;

⭐மிஞ்சுவது மிஞ்சட்டும் !

என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

பற்றை துறக்க சந்நியாசம் போக வேண்டு மென்பதில்லை. இந்த நாலுவரியை கடைபிடித்தாலே கரையேறிவிடலாம்!

இன்பம் வந்தாலும் சிரி; துன்பம் வந்தாலும் சிரி!

இன்பங்களும் துன்பங்களும் கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது இன்பம் மற்றும் துன்பமா?

• சிலர் இங்கு பாசத்துக்காக ஏங்குகின்றனர்

• சிலர் பணத்திற்காக ஏங்குகின்றனர்.

• சிலர் பதவி, பொன், பொருள் ஆகியவதிற்காக ஏங்குகின்றனர்.

• சிலர் உடுத்த உடை இன்றி ஏங்குகின்றனர்.

• சிலர் உண்ண உணவின்றி ஏங்குகின்றனர்.

இப்படி ஏங்கி ஏங்கியே சிலரின் வாழ்கை முடிந்து விடுகின்றது. வாழ்கை என்பது ஏக்கமா?

• பணக்காரனோ பணம் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுகிறான்.

• ஏழையோ பணமே தம்மிடம் இல்லை என்று பணத்தை தேடி ஓடுகிறான்…

வாழ்கை என்பது பணமா?

• சிலர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்கவேண்டும் என்று ஓடுகின்றனர்.  

வாழ்க்கை என்பது சாதனை செய்வதா?

• சிலர் வாழ்க்கைக்கு நல்ல கல்வி, அறிவு வேண்டும்(அவசியம் ) என்கின்றனர்.  

வாழ்க்கை என்பது கல்வியும் அறிவும் மட்டும் தான?

• சிலர் மீது நம்பிக்கை வைத்தே ஏமாந்து போகின்றோம் நம்மில் சிலர். வாழ்கை என்பது ஏமாற்றமா?

• சென்றவர்களை எண்ணியே மனமுடைந்து கண்ணீர் விடுகின்றோம்.  

வாழ்க்கை என்பது கண்ணீர் வடிப்பது மட்டும்தானா?

• இங்கு நாம் சந்திக்கும் ஒவ்வருவரும் நமக்கு ஒரு பாடத்தினை காப்பிக்கின்றனர். வாழ்க்கை என்பது பாடம் கற்பதா?

• சிலர் கனவுகளை துரத்தி செல்ல இயலாமல் இருக்கின்றனர். வாழ்க்கை என்பது கனவு மட்டும் தான?

ஓடி ஆடி முடித்த பின்பு இங்கு ஓய்வெடுக்க மிஞ்சுவது கல்லறையே !!

• இருபதிலும் வாழ்க்கையை தொலைத்தவர் இங்கு உண்டு, அறுபதிலும் இங்கு வாழ்க்கையை பெற்றவரும் உண்டு…

கல்லறையிலும் இங்கு புதைந்த வாழ்க்கையை தேடுபவர் யாரோ !!

வெற்றி பெற ஒருவருக்கு என்ன மனநிலை வேண்டும்?

 

1.முதலில் இலக்கைச் சரியாக முடிவு செய்ய வேண்டும்.

2.அது குறித்த அனைத்துத் தகவல்களையும் திரட்டி ஒரு தீர்க்கமான.. சரியான முடிவுக்கு வர வேண்டும்.

3.கால நிர்ணயம் (time limit) செய்து கொள்ள வேண்டும்.

4.அதற்கு உரிய நிதி தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்து கொள்ள வேண்டும்.

5.கண் துஞ்சாமல்.. பசி நோக்காமல் அதை அடைய இடைவிடாது உழைக்க வேண்டும்.(smart work)

6.எந்தத் தடைகளையும் தாண்டும் மனப் பக்குவம் கட்டாயம் வேண்டும்.

அப்புறம் என்ன ?

வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.. அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்கள் அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பைச் சேரும் !

வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்.. அன்றாட வாழ்க்கையில் தினமும் ஒரு மணி நேரமாவது உங்கள் உடலுக்கென ஒதுக்கி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்று உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய செயலில் ஈடுபடுங்கள். அவை உங்கள் உடலை சீராய் வைப்பதோடு மட்டுமல்லாமல் மனதையும் புத்துணர்ச்சியாய் வைக்க உதவும்.

 நல்வாழ்த்துகள் அன்பு நண்பரே !

மனிதன் உடம்பில் கடைசியாக என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன ?

 


மனிதன் உடம்பில் கடைசியாக என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன ?

1.பசி உணர்வு நின்றுவிடுவது.

2.நீர் குடிப்பதை நிறுத்திவிடுவது. முடியாதது.

3.நீண்டநேர உறக்கம். நினைவின்மை.

4. உடம்பு செயல்பாடு முடியாமை.

5. பேசவிருப்பமின்மை. இயலாமை.

6. சிறுநீர், மலம் வெளியேற முடியாமை.

இது போக சில மனிதர்கள் கடைசி காலங்களில் மனக்கோளாறு புத்திகோளாறு ஆகி விடுவதும் உண்டு.

அபரீத சப்தங்கள், பேய் பிசாசு போன்ற பயங்கர உருவங்கள் தோன்றுவதாக அலறுவார்கள்.

Wednesday, May 29, 2024

எந்த ஒரு பொருத்தத்தையும் பார்க்காமல் திருமணம் செய்யக் கூடிய சிறப்பு வாய்ந்த 4 நட்சத்திரங்கள் உள்ளன.

எந்த ஒரு பொருத்தத்தையும் பார்க்காமல் திருமணம் செய்யக் கூடிய சிறப்பு வாய்ந்த 4 நட்சத்திரங்கள் உள்ளன.


1) மிருகசீரிடம்,

2) மகம்,

3) சுவாதி, 

4) அனுஷம்

ஆகிய நான்கு நட்சத்திரங்கள் திருமண பொருத்தம் பார்க்கப்படும் பெண் அல்லது ஆண் நட்சத்திரமாக இருந்தால் விவாஹம் செய்யலாம். எந்த தோஷமும் இல்லை.

பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரம்

 பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரம்

 


பெண் நட்சத்திரத்திரத்திற்கான ஆண் நட்சத்திரங்கள் எவை பொருந்தும் என இங்கு பார்ப்போம்...

1. 
அசுவனி - பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், சுவாதி, பூராடம், சதயம், உத்திரட்டாதி.


2. 
பரணி - அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், மகம், சித்திரை 3, 4, விசாகம், மூலம், உத்திராடம், ரேவதி.


3. 
கிருத்திகை 1 - பரணி, திருவாதிரை, பூசம், மகம், பூரம், சுவாதி, மூலம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி.


4. 
கிருத்திகை 2,3,4 - ரோகிணி, திருவாதிரை, பூசம், அனுஷம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி.


5. 
ரோகிணி - பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம் 2, 3, 4, கேட்டை, அவிட்டம், ரேவதி



6. 
மிருகசீரிஷம் 1,2 - கிருத்திகை, ரோகிணி, பூசம், மகம், உத்திரம், அஸ்தம், அனுஷம், திருவோணம் சதயம், பூரட்டாதி, ரேவதி


7. 
மிருகசீரிஷம் 3,4 - கிருத்திகை, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3. பூசம், உத்திரம், அஸ்தம், சதயம், பூரட்டாதி, ரேவதி



8. 
திருவாதிரை - அசுவனி, பரணி, மிருகசீரிடம், திருவாதிரை பூரம், மூலம், பூராடம், அவிட்டம் 3, 4 பூரட்டாதி, உத்திரட்டாதி.


9. 
புனர்பூசம் 1,2,3 - பரணி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், உத்திரம், சித்திரை, சுவாதி

Tuesday, May 28, 2024

வங்கியில் செக் பவுன்ஸ் ஆகிவிட்டதா? கவலையை விடுங்க! கொடுத்த கடனை திரும்ப பெற ஈஸி வழி இருக்கு!

 

செக் பவுன்ஸ் ஆகிவிட்டால் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 chennai bank cheque
கடன் அன்பை முறிக்கும் என பல இடங்களில் எழுதி வைத்திருப்பார்கள். தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள். அது போல் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கினால் பிறகு பாசமும் நட்பும் போய்விடும் என்பார்கள். 
 
 பணத்திற்காக எத்தனையோ வீடுகளில் சண்டை நடந்துள்ளது. கொடுக்கல் வாங்கல் தகராறில் எத்தனையோ கொலைகளும் அடிதடிகளும் நட்பில் கலக்கமும் ஏற்பட்டுள்ளது. அது போல் பணம் பத்தும் செய்யும் என்பார்கள். 
 
பணத்தை பார்த்தால் பிணமும் வாயை பிளக்கும் என்பார்கள். எனவே கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சரியாக இருந்தால் மட்டுமே நட்போ குடும்ப உறவோ மேலும் தழைக்கும். இல்லாவிட்டால் சிக்கல்தான்
 
நண்பர் ஒருவர் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறதாம். இதற்காக அந்த நபர் செக் எனப்படும் காசோலையாக கொடுத்தாராம். அந்த செக்கை வங்கியில் கொடுத்து பணத்தை எடுக்க முயன்ற போது வங்கியில் பணம் இல்லை என கூறி அந்த செக் மீண்டும் தனக்கே வந்துவிட்டது. அதாவது செக் பவுன்ஸாகிவிட்டது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்
 
நீங்கள் கொடுக்கும் செக் பவுன்ஸ் ஆகிவிட்டால், அதை திருப்பி கொடுக்கும் போது அதனுடன் ஒரு மெமோவை அனுப்பியிருப்பார்கள். அந்த மெமோவையும் அந்த நபர் கொடுத்த செக்கையும் வைத்து வக்கீல் நோட்டீஸை அனுப்பலாம். அந்த நோட்டீஸை பார்த்துவிட்டு 15 நாட்களுக்குள் பணம் கொடுத்துவிட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் வக்கீல் நோட்டீஸை அனுப்பியும் அந்த நபர் பணத்தை செட்டில் செய்யவில்லை என்றால் அந்த செக், அந்த மெமோ, ஸ்பீட் போஸ்ட் செய்த ரசீது, வக்கீல் நோட்டீஸ் ஆகிய நான்கையும் வைத்துக் கொண்டு கோர்ட்டில் கேஸ் போடலாம். அப்படி கேஸை பதிவு செய்தால் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நபர் கொடுக்க வேண்டிய பணத்தை விட ஒரு மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். செக் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
ஒரு சிலர் பணத்தை கடனாக வாங்கிவிட்டு பத்திரமாக திருப்பி கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். பட்டை நாமத்தை குழைத்து போடுபவர்களும் இருக்கிறார்கள்.
 
கொடுத்த கடனை கேட்டு நடையாய் நடப்பதால் அந்த நேரத்தில் அவர்களின் வாயை அடைக்க வங்கிக் கணக்கில் பணமே இல்லாத அக்கவுன்ட்டில் இருந்து செக்கை கொடுப்பார்கள். அதை நாம் வாங்கிக் கொண்டு வங்கியில் கொடுத்தால் பணம் இல்லை என கூறி பவுன்ஸ் ஆகிவிடும். இது போன்ற நேரங்களில்தான் நாம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Thanks to One india tamil !

Tuesday, May 21, 2024

மாரடைப்பை (HEART ATTACK ) மூன்றுமணி நேரம் முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது மூளையாகும்!

 மாரடைப்புக்கு   மூன்றுமணி நேரம்   முன்  தோன்றும்   அறிகுறிகள்.  - பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் . ♥️


♥️ *விழிபுணர்வு_பதிவு . ♥️
                     ♥️  **பிரபல இதயநோய் மருத்துவர்  பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவலின்படி:-     
                     ♥️  அவருக்கு   மாரடைப்பு  (HEART    ATTACK )   இருக்கக்கூடும்   என்ற  சந்தேகம்  ஏற்பட்டால்,  அவர்  நடக்க  அனுமதிக்கக்கூடாது;  மாடி  படிக்கட்டில்  ஏறவோ அல்லது  இறங்கவோ  அனுமதிக்கக்கூடாது;  மருத்துவமனைக்கு   ஆட்டோவில்  கொண்டுசெல்லக்கூடாது.   இந்த  தவறில்   ஏதேனும்  ஒன்றை  செய்தாலும்  அந்த  நோயாளி  உயிர்  பிழைப்பது  கடினம்.



                     ♥️  மாரடைப்பை (HEART   ATTACK )  மூன்றுமணி நேரம்  முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது  மூளையாகும்.   மூளை உடனே    நமது  உடலில்,  செயலில்  சிறு   தடுமாற்றம்   ஏற்படுத்தி  நம்மை  முன்னெச்சரிக்கை  செய்யும்.   இந்த  முன்னெச்சரிக்கையை  சக்கரை  நோயாளிகள்  உணர்வது  கடினம். 


                     ♥️  ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.


                     ♥️  ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடக்கூடாது.*


                     ♥️  மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையை   பார்த்தவுடன்    அவர்  உடல்நிலையை  தெளிவாக  அறிந்துகொள்ள நாம்  அவரை
S T R அதாவது,
SMILE (சிரிக்க சொல்வது 😄),
TALK (பேச சொல்வது😲),
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)
இது போன்ற செயல்களை செய்யச் சொல்லவேண்டும்.  


 இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இதில்  ஏதேனும்  ஒன்றை    அவர் சரியாகச் செய்ய வில்லை  என்றாலும்  பிரச்சனை பெரிதுதான்!  உடனடியாக, மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.


                     ♥️  இந்த அறிகுறி  தெரிந்த , 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால்  பெரும்பாலும்  உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று மருத்துவர்கள்  கூறுகிறார்கள்.


                     ♥️  இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.


                     ♥️   அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,
அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
                     ♥️  இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.


                     ♥️  மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்!! 


                     ♥️  நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....

மானுடம் காப்போம் மனிதம் வெல்லும்

அன்புடன் உங்கள் ஆஸ்கார் முத்து-தங்கம் ஸ்ரீதர் மாநில கெளரவ ஆலோசகர் தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு

Thursday, May 2, 2024

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !
 



நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களின் கனிவான கவனத்திற்கு சிறு பதிவு !
            

தமிழ் நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள்:- 37.                                                  

நகராட்சிகள்:-148.                   

பஞ்சாயத்து யூனியன்கள்:-385.                      

டவுன் பஞ்சாயத்துகள்:- 528.                                                

கிராம பஞ்சாயத்துகள்:- 12,618.         

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் குறைந்தது 5 குக்கிராமங்கள் இருக்கும்.

அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும்
  "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம்" 


நடைமுறையில் உள்ளது.       
 
இந்த 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிவோர் மூலம்,  மாதம் ஒரு செடி மட்டுமே நட்டு பராமரித்து வந்தால் போதும் !

நம் கிராமங்கள் பசுமையான கிராமங்களாக மாறிவிடும். !

     For example :-
 12,618 கிராம பஞ்சாயத்துகளில்,100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் 50 பேர் பணிபுரிகிறார்கள் எனில்:-12,618×50= 6,30,900 நபர்கள் மாதம் ஒரு செடி நடவு எனில் 6,30,900 எனில் 12 மாதங்களுக்கு 6,30,900×12= 75,70,800.  செடிகள்.

    கற்பனை செய்ய முடியாத எண்ணிக்கை !

      தமிழ்நாட்டை பொறுத்த வரை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள்  மழைக்காலங்கள் !

இந்த காலங்களில் செடி நடவு செய்து ஒரு வருட காலம் பராமரித்தால் போதும் !
 
பின்னால் மரங்கள் வேர்களில் சேமித்து வைத்துள்ள ஈரத்தன்மையால் தானாக வளர்ந்து விடும்.   

 இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து, நமக்கும்,கால்நடைகளுக்கும் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம்.                  

100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தில் செடிகள் நடவு செய்ய தேவைப்படும் செடிகள், வனத்துறை, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியோர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.         

இந்த பதிவை காணும் மேற்குறிப்பிட்ட மூன்று துறை அலுவலர்கள், கிராமங்களில் நடைபெறும் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணியாளர்களை பயன்படுத்தி,(ஒரு பஞ்சாயத்திற்கு, வருடத்திற்கு  500 செடிகள் எனக் கணக்கிட்டு)

கிராமங்களில் மரம் வளர்ப்பு குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்து, உண்மை நிலையை தெரிவித்து, ஒப்புதல் பெற்றால்...

 இத்திட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெற்று, நம் நாட்டை வறட்சியிலிருந்து காப்பாற்றலாம் !
 

 இந்தப் பதிவினை படிக்கும் ஊடக நண்பர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் இவற்றை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.                       

VSSubramaniyan, JUNGLE -NGO, Sathyamangalam, Erode Dist.
***

ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் பு...