Total Pageviews

Tuesday, August 28, 2012

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வகைகள்



உணவுப்பழக்கம் மாறியதாலேயே உடலில் புதிது புதிதாய் நோய்கள் தோன்றுகின்றன. சரிவிகித சத்துணவு சாப்பிடதா காரணத்தினால்தான் இன்றைக்கு பெரும்பாலோனோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

பாகற்காய்

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெந்தையம்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும். ஊறவைத்த விதைகளை களியாக செய்து சாப்பிடலாம்.

இயற்கை ஜூஸ்

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை ஜூஸ் பருகுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு எற்றது. ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பிய காய்கறிகளை ஜூஸ் ஆக எடுத்து பருகலாம். பாகற்காய் ஜூஸ், திராட்சை ஜூஸ் குடிக்கலாம். மா மரத்தின் இலைகளை பறித்து வேகவைத்து அதனை வடிகட்டி அந்த சாறினை ஜூஸ் ஆக பருகலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

கற்றாழை ஜெல்

நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை மிகச்சிறந்த நிவாரணி. பிரிஞ்சி இலையை பொடி செய்து அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள், இரண்டு டீஸ்பூன் சோற்றுக் கற்றாழை ஜெல் கலந்து சாப்பிடலாம். தினசரி மதிய உணவுக்குப் பின்னரும், இரவு உணவருந்துவிட்டும் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு கட்டுப்படும்.

சப்பாத்தி சாப்பிடுங்க

நீரிழிவு நோயாளிகள் தினசரி சப்பாத்தி சாப்பிடவேண்டும். இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள். கோதுமை மட்டும் இல்லாமல், கொண்டைக்கடலை, சேயா போன்றவைகளை சேர்த்து அரைத்துவைத்துக்கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

மூலிகை கசாயம்

வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும் மூலிகைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.

சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி வரகு, பனிவரகு, என்பன சிறு தானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. 

Thanks to One india tamil.com
இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பில்லாத படகு போன்றது.

அந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருவ்து எப்படி? - எச்சரிக்கை



இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும்

புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல.

சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம் எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை .

ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின் நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது ?

மேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம் புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன்.



எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

சரி இதை எப்படி தவிர்க்கிறது?

டிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் :

1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.


3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.

முதலில் கீழ்படிவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்குத் தானாக வந்து சேரும்.

Monday, August 27, 2012

விவாகரத்து அதிகரிக்கக் காரணங்கள்



திருமணமான புதிதில் கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் உயிரைக் கூட விடத் தயாராக இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள்தாம் இப்படி மாறிவிட்டார்கள். இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.

திருமண் உறவில் இணையும் தம்பதியர் கூட்டுக்குடும்பத்தை அறியாதவர்கள். ஆணும் பெண்ணும் பெரும்பாலும் அவர்கள் பெற்றோர்களுக்கு ஒரே ஓருபிள்ளையாக இருப்பதையும் பார்க்கலாம். ஒரே பிள்ளையாக வளர்க்கப்படும குழந்தைகளுக்கு விட்டுக்கொடுப்பதும் அடுத்தவருடன் ஒத்துப்போவதும அவ்வளவு எளிதில் வருவதில்லை. 

அதிகமான விவாகரத்துகளுக்கு வலுவான காரணங்கள் இருக்கிறதா என்பதை ஆராயும் போது அதிர்ச்சிகரமாக சில காரணங்கள் தெரியவருகின்றன.

சில சமயங்களில் கணவன், மனைவியின்  தாய், தந்தையாரே விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கின்றனர். சிறு, சிறு பிரச்சனைகளைக் கூடப் பெரிய  பிரச்சனைகளாக  மாற்றி விவாகரத்துக்கு உட்படுத்துகின்றனர்.

"கணவன் - மனைவிக்கு இடையேயான உரசல்களின் உச்ச கட்டம்தான் விவாகரத்து.

 மற்ற தீர்வுகள் எதுவுமே கை கொடுக்காத நிலையில், இது ஒரு தீர்வாக மாறுகிறது.

 விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணம், எதிர்பார்ப்பு.

1)  அதீதமான எதிர் பார்ப்பு ! கணவனிடம் மனைவிககும்,  மனைவியிடம் கணவனுக்கும் இருப்பதனால்,

2)கணவன், மனைவியின் ஆசைகளை, தேவைகளைப் புரிந்து கொள்ளமாட்டார். அதுபோல மனைவி, கணவனுடைய ஆசைகளைத் தேவைகளைப் புரிந்து கொள்ள மாட்டார். இதனால் குடும்பத்தில் நிறையப் பிரச்னைகள் வருகின்றன.

3) கணவனும், மனைவியும் திருமணம் ஆவதற்கு முன்பு, பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். கணவன், மனைவி இருவருக்கும் வெவ்வேறான தேவைகள் இருக்கும். ஆனால் என் ஆசைக்கும், தேவைக்கும் ஏற்ற மாதிரி நீ மாற வேண்டும் என்று கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர் எதிர்பார்ப்பார்கள்; கட்டாயப்படுத்துவார்கள். தன்னுடைய ஆசைகளை, தேவைகளைப் பிறர் மீது திணிப்பார்கள்.

4) கணவன் மனைவியை, மனைவி கணவனை  அடக்கி ஆழ வேண்டுமென நினைப்பதனாலும், திருமணம் ஆன நாளில் இருந்து ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். இதனால் சுதந்திரம் பறிபோகிறது என்ற எண்ணம் வரும். அவர்கள் யாராக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுகொள்ளாமல் நமக்கு ஏற்ற மாதிரியான ஆளாக மாற்ற முயற்சிப்போம். இந்தப் போராட்டம் நான்கு ஆண்டுகள் தொடரும். இதைத் தாண்டி வருபவர்களுக்கு ஒருவித புரிதல் உண்டாகிறது. ‘ஓ.கே! இது இப்படித்தான் இருக்கும்’ என நினைத்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்கின்றனர்.

5)  என்னடா வாழ்க்கை இது? இவளைப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டோமே என்று ஆண்களும் இவரைப் போய் கட்டி வைத்துவிட்டார்களே என்று பெண்களும் புலம்புவார்கள். வீட்டுக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று சொல்வார்கள். அப்பா, அம்மா கட்டி வைத்துவிட்டார்கள், அவர்களுக்காகப் பார்க்கிறேன். இல்லையென்றால் பிரிந்துவிடுவேன் என்பார்கள். குழந்தைகளுக்காகச் சேர்ந்து வாழ்கிறேன் என்பார்கள். இவையெல்லாம் இந்த "கமிட்மென்ட் ஃபோபியா'வின் அறிகுறிகள்.

6) புரிந்து நடந்து  கொள்ளும் தன்மை இன்மை:

ஒருவருடைய மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம், உலகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால் அவருக்கு அது பெரிது.   இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பிடித்த ஒரு விஷயத்தை இகழக் கூடாது.

7)கணவனும், மனைவியும் நேர் எதிரான எண்ணங்கள், பழக்க, வழக்கங்கள் உடையவர்களாக இருப்பார்கள். 

எடுத்துக்காட்டாக, கணவன் மிகவும் கஞ்சனாக இருப்பார்.மனைவி தாராளமாகச் செலவு செய்வார்.

வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பார். மனைவி வீட்டைச் சுத்தம் செய்யமாட்டார். போட்டது போட்டபடியே கிடக்கும்.

கணவன் குழந்தைகளுக்கு மிகவும் செல்லம் கொடுப்பார். அவர்களை அடிக்கக் கூடாது என்று நினைப்பார். மனைவி குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கமாட்டார். அடித்து, கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்.

மனைவி எப்போது பார்த்தாலும் கோயில், குளம் என்று வெளியே சுற்றி வருவதில் ஆர்வமுடையவராக இருப்பார். கணவனோ அலுவலகம், வீடு தவிர வேறு எங்கும் போக விரும்பமாட்டார்.

மாமனார் வீட்டில் தான் விரும்பிய அளவுக்கு மரியாதை தரவில்லை என்று கணவனுக்கு மனக்குறை இருக்கும். அதனால் மனைவியை அவருடைய அம்மா வீட்டுக்குப் போக கணவன் அனுமதிக்க மாட்டார். மனைவிக்கோ தனது அப்பா, அம்மாவைப் பார்க்க அதிக விருப்பம் இருக்கும்.

இப்படி நேர் எதிரான எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் பல குடும்பங்களில் இருக்கின்றன.

இதனால் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன. பின்னர் அவை வெறுப்பாக வளர்கின்றன. பிரிந்துவிடும் அளவுக்கு இட்டுச் செல்கின்றன.

விவாகரத்து நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு நிலை. அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு போன்றவற்றை புரிந்து நடக்க வேண்டும். 

இரு பாலரும் ஒருவருக்கொருவர்,  விட்டுக் கொடுத்தால் விவாகரத்து தேவையில்லை!

முதலில் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் வேறு.      ஆணுக்கு பெண்ணின் உடல் பெரிதாகத் தோன்றும். பெண்ணுக்கு ஆணின் அன்புதான் பெரிதாகத் தோன்றும்.     இந்த இயல்பை இருவரும் புரிந்து கொண்டு நடந்தால் நிறையப் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

தன் கருத்தைப் பிறர் மீது திணிக்க எப்போதும் முயற்சிக்கக் கூடாது. அடுத்தவரின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் அடிக்கடி அன்பாகப் பேசிக் கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

 காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே மண விலக்கு கேட்கும் அளவுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம், காதலிக்கும்போது ஆண், பெண் இருவருக்கும் ஈர்ப்பும், அன்பும்தான் இருக்கும். புரிதல் இருக்காது. நல்ல திருமண வாழ்க்கைக்குப் புரிதல் அவசியம்.

 இவற்றை இல்வாழ்க்கையில் சிக்கல் உள்ளவர்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். மாற்றிக் கொள்ளவும் அவர்களால் முடியாது. இதற்குக் காரணம், விருப்போ, வெறுப்போ, ஒருவிஷயம் பிடிப்பதோ, பிடிக்காமல் இருப்பதோ இவை எல்லாமும் அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போய் இருக்கும்.

திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்காக வருகிறவர்களுக்கு, அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போயிருக்கும  எண்ணங்களை மாற்றினால். அதற்குப் பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். .

நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று,     நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.

Friday, August 24, 2012

நான் நிரந்தரமானவன் - கண்ணதாசன்


காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்... 


கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.


சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். 

கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.


எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.


மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ். 

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!.

கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.

காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!. 

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

 பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா, அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!. 

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!. 

கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!.

தன்னுடைய பலம்  மற்றும் பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார். 

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே!

ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன். 

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார். 

குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!.

அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்.

இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்... `ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு!'

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.


 

பச்ச மிளகாய், பூண்டு, கடுகு எண்ணெய், மோர் மற்றும் கறிவேப்பிலை தினமும் தவறாமல் உண்டாலே, உடல் எடை குறைந்துவிடும்


இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது சாப்ட்வேரில் வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.

ஆகவே இதற்காக அவர்கள் தினமும் கஷ்டப்பட்டு, ஜிம் சென்று உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை தினமும் தவறாமல் உண்டாலே, உடல் எடை குறைந்துவிடும். இப்போது அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று பாருங்களேன்.

பச்ச மிளகாய்

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.

மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.

 பூண்டு

இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர். ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.

ஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின் (allicin) உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும். ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கடுகு எண்ணெய்

சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்.

அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம். இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.

மோர்

பொதுவாக பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.

மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலும் வறட்சியடையாமல் இருக்கும்.

கறிவேப்பிலை

அனைத்து சமையலிலும் தாளிக்க பயன்படும் கறிவேப்பிலை, மிகவும் சிறந்த மருத்துவகுணம் வாய்ந்த உடல் பருமனை குறைக்கும் ஒரு மூலிகை எனலாம். ஆனால் இந்த இலையை உண்ணும் போது மட்டும் அனைவரும், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆனால் அந்த இலை உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலை நன்கு சுத்தம் செய்யும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் அகன்றுவிடும்.

வேண்டுமென்றால் இதனை மோருடன் கிள்ளிப் போட்டு குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆகவே இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள கறிவேப்பிலையை இனிமேல் தூக்கிப்போடாமல், சாப்பிடத் தொடங்குங்கள், உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.

Posted by: Maha
Thanks to One india.com

எந்த ஒரு மனிதனுடைய செயலிலும் தவறுகள், குறைகள் ஏற்படலாம். அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மனிதத்தன்மையும் அதுவேதான்!

Thursday, August 16, 2012

இரவில் படுக்கும் முன் வாழைப்பழம், சூடான பால் உட்கொண்டால், தூக்கம் நன்கு வரும்


இன்றைய காலத்தில் அதிக வேலைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் இருப்பதால், பெரும்பாலானோர் தூக்கமின்மையால் நிறையவே அவதிபடுகிறார்கள். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மனநலமும் பாதிக்கப்படுகிறது. இதற்காக இரவில் தூங்குவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், தூங்கியதும் உடனே விடிந்தது போல் உணர்வு தோன்றும். அத்தகைய முயற்சியில் ஒன்றாக ஒரு சில உணவுகளை இரவில் படுக்கும் முன் உட்கொண்டாலும், தூக்கம் நன்கு வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம் : கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள பழமான வாழைப்பழத்தை தினமும் உறங்கும் முன் சாப்பிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். மேலும் இதில் தூக்கமூட்டும் பொருளான செரோட்டீன் மற்றும் மெலடோனின் இருக்கிறது. உடலில் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் மெக்னீசியம் இருக்கிறது. ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பழத்தை மில்க் ஷேக் செய்து குடித்தால், நன்கு தூங்கலாம்.

சூடான பால் : நமது தாத்தா பாட்டி காலங்களில் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலை குடித்து விட்டு தூங்குவர். இவ்வாறு குடித்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் பாலில் தூக்கத்தை மூட்டும் பொருளான ட்ரிப்டோஃபேன் இருக்கிறது. ஆகவே இந்த சூடான பாலை குடிக்க உடலில் ஒருவித சோம்பேறித்தனம் ஏற்பட்டு, நன்கு தூக்கம் வரும்.

உருளைக்கிழங்கு : வாழைப்பழத்தை போன்றே உருளைக்கிழங்கிலும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். இதை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடல் குண்டாவதோடு, ஒரு சோம்பேறித்தனமும் உண்டாகும். ஒரு தட்டு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை இரவில் சாப்பிடலாம். சொல்லப்போனால், இது ஒரு சிறந்த இரவு நேர ஸ்நாக்ஸ்.

தயிர் : உணவுப் பொருட்களில் நிறைய உணவுகள் தூக்கத்தை மட்டும் தூண்டாமல், உடல் எடையையும் அதிகரிக்கின்றன. அதில் தயிர் மிகவும் சிறந்த தூக்கமூட்டும் உணவுப்பொருள் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்தும் உணவுப் பொருளும் கூட. பாலில் என்னென்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தான் தயிரிலும் இருக்கிறது. ஒரு வித்தியாசம் மட்டும் பாலுக்கும், தயிருக்கும் இருக்கிறது. பாலில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. ஆனால் தயிரில் இல்லை. ஆகவே இதனை தினமும் இரவில் சாப்பிட்டு தூங்கலாம்.

ஓட்ஸ் : படுப்பதற்கு முன் சாப்பிட ஒரு சிறந்த உணவுப்பொருள் ஓட்ஸ். ஏனென்றால் இதில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் கால்சியம் உடலுக்கு தேவையான அளவு மட்டும் தூக்கத்தை தரும். மக்னீசியமோ தசைகளை ரிலாக்ஸ் செய்வதற்கான ஒரு சிறந்த நிவாரணி.

இறைச்சி : இறைச்சிகளில் அதிகமான அளவு ட்ரிப்டோஃபேனுடன் அமினோ ஆசிட் இருப்பதால், தூக்கம் நன்கு வரும். சிலசமயங்களில் இறைச்சியை உண்டப்பின் தூக்கம் வருவது போல் இருக்கும், அதற்கு காரணம் இது தான். ஆகவே இந்த இறைச்சியை இரவில் சாப்பிட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.


எனவே நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமென்பவர்கள், மேற்கூறிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் நிம்மதியாக தூங்குவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்


Thanks to One India.com

பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய். பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்.!
 

Saturday, August 11, 2012

வாழ்க்கை தத்துவங்கள்



ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு. 

ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு. 


புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம். 


விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும் 


தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். 


மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும். 


நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது
 

வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே. 

வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல! 


கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ மற்றவரை நம்புகின்றன 


துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான்.
 

நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள்
நம்மை மெளனமாக்குகின்றன

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது - ஓர் அனுபவசாலி 


நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
 

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- காந்தியடிகள்
 

வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். – அரவிந்தர்

மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே


கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக்
கொண்டிருக்கும் கலதத்தையே  பெரிதும் நாசப்படுத்தி விடும் 

]
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
 

என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல,
கல்வி கற்பதற்காகவும் இருக்கும்
 

எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட
அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்
 

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்;
 ஆனால் எப்போதுமே வாழ்வதில்லை.
 

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ
 

தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது – பில் கேட்ஸ்
 

நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்

அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும்  இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்

உதவும் கரங்கள், ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது – அன்னை தெரஸா

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.

ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம்  வந்துதானே தீர வேண்டும்


தோல்வியின் அடையாளம் தயக்கம்!
 

வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
 

துணிந்தவர் தோற்றதில்லை! தயங்கியவர் வென்றதில்லை!
 

வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
 

 தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
 

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
 

அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால்  அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!

காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரை காப்பதும் இல்லை !

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
 

பிரச்சினைகள் வரும்போது அல்ல; பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது – பாரதியார்

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்!

 நீ துயரத்தில் இருக்கும் போது, உன்னை யார் விரும்புகிறாரோ அவரை
 நினைத்துக் கொள்வாய்!

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன்  மனித வடிவில் தெய்வம்.. 




மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வதே மேல்.

Wednesday, August 8, 2012

உணவில் இஞ்சி சேர்த்தால் நீரிழிவு கட்டுப்படும்


உணவில் இஞ்சி சேர்த்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இஞ்சி மிக சிறந்த மருத்துவ பொருள். இந்தியாவில் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை சமையலில் சேர்த்து சாப்பிடுகின்றனர். இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீரமைக்கப்பட்டு நீரிழிவு நோய் வராமல் கட்டுப்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் இஞ்சியின் பயன்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை போதுமான அளவு மட்டும் இன்சுலின் சுரக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, இஞ்சி சாப்பிட்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர் பாசில் கூறியுள்ளார்.

Thanks to Malaimalar 

ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.
 

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...