திருமணமான புதிதில் கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் உயிரைக் கூட விடத் தயாராக இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள்தாம் இப்படி மாறிவிட்டார்கள். இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.
திருமண் உறவில் இணையும் தம்பதியர் கூட்டுக்குடும்பத்தை அறியாதவர்கள். ஆணும் பெண்ணும் பெரும்பாலும் அவர்கள் பெற்றோர்களுக்கு ஒரே ஓருபிள்ளையாக இருப்பதையும் பார்க்கலாம். ஒரே பிள்ளையாக வளர்க்கப்படும குழந்தைகளுக்கு விட்டுக்கொடுப்பதும் அடுத்தவருடன் ஒத்துப்போவதும அவ்வளவு எளிதில் வருவதில்லை.
அதிகமான விவாகரத்துகளுக்கு வலுவான காரணங்கள் இருக்கிறதா என்பதை ஆராயும் போது அதிர்ச்சிகரமாக சில காரணங்கள் தெரியவருகின்றன.
சில சமயங்களில் கணவன், மனைவியின் தாய், தந்தையாரே விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கின்றனர். சிறு, சிறு பிரச்சனைகளைக் கூடப் பெரிய பிரச்சனைகளாக மாற்றி விவாகரத்துக்கு உட்படுத்துகின்றனர்.
"கணவன் - மனைவிக்கு இடையேயான உரசல்களின் உச்ச கட்டம்தான் விவாகரத்து.
மற்ற தீர்வுகள் எதுவுமே கை கொடுக்காத நிலையில், இது ஒரு தீர்வாக மாறுகிறது.
விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணம், எதிர்பார்ப்பு.
1) அதீதமான எதிர் பார்ப்பு ! கணவனிடம் மனைவிககும், மனைவியிடம் கணவனுக்கும் இருப்பதனால்,
2)கணவன், மனைவியின் ஆசைகளை, தேவைகளைப் புரிந்து கொள்ளமாட்டார். அதுபோல மனைவி, கணவனுடைய ஆசைகளைத் தேவைகளைப் புரிந்து கொள்ள மாட்டார். இதனால் குடும்பத்தில் நிறையப் பிரச்னைகள் வருகின்றன.
3) கணவனும், மனைவியும் திருமணம் ஆவதற்கு முன்பு, பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். கணவன், மனைவி இருவருக்கும் வெவ்வேறான தேவைகள் இருக்கும். ஆனால் என் ஆசைக்கும், தேவைக்கும் ஏற்ற மாதிரி நீ மாற வேண்டும் என்று கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர் எதிர்பார்ப்பார்கள்; கட்டாயப்படுத்துவார்கள். தன்னுடைய ஆசைகளை, தேவைகளைப் பிறர் மீது திணிப்பார்கள்.
4) கணவன் மனைவியை, மனைவி கணவனை அடக்கி ஆழ வேண்டுமென நினைப்பதனாலும், திருமணம் ஆன நாளில் இருந்து ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். இதனால் சுதந்திரம் பறிபோகிறது என்ற எண்ணம் வரும். அவர்கள் யாராக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுகொள்ளாமல் நமக்கு ஏற்ற மாதிரியான ஆளாக மாற்ற முயற்சிப்போம். இந்தப் போராட்டம் நான்கு ஆண்டுகள் தொடரும். இதைத் தாண்டி வருபவர்களுக்கு ஒருவித புரிதல் உண்டாகிறது. ‘ஓ.கே! இது இப்படித்தான் இருக்கும்’ என நினைத்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்கின்றனர்.
5) என்னடா வாழ்க்கை இது? இவளைப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டோமே என்று ஆண்களும் இவரைப் போய் கட்டி வைத்துவிட்டார்களே என்று பெண்களும் புலம்புவார்கள். வீட்டுக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று சொல்வார்கள். அப்பா, அம்மா கட்டி வைத்துவிட்டார்கள், அவர்களுக்காகப் பார்க்கிறேன். இல்லையென்றால் பிரிந்துவிடுவேன் என்பார்கள். குழந்தைகளுக்காகச் சேர்ந்து வாழ்கிறேன் என்பார்கள். இவையெல்லாம் இந்த "கமிட்மென்ட் ஃபோபியா'வின் அறிகுறிகள்.
6) புரிந்து நடந்து கொள்ளும் தன்மை இன்மை:
ஒருவருடைய மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம், உலகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால் அவருக்கு அது பெரிது. இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பிடித்த ஒரு விஷயத்தை இகழக் கூடாது.
7)கணவனும், மனைவியும் நேர் எதிரான எண்ணங்கள், பழக்க, வழக்கங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.
எடுத்துக்காட்டாக, கணவன் மிகவும் கஞ்சனாக இருப்பார்.மனைவி தாராளமாகச் செலவு செய்வார்.
வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பார். மனைவி வீட்டைச் சுத்தம் செய்யமாட்டார். போட்டது போட்டபடியே கிடக்கும்.
கணவன் குழந்தைகளுக்கு மிகவும் செல்லம் கொடுப்பார். அவர்களை அடிக்கக் கூடாது என்று நினைப்பார். மனைவி குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கமாட்டார். அடித்து, கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்.
மனைவி எப்போது பார்த்தாலும் கோயில், குளம் என்று வெளியே சுற்றி வருவதில் ஆர்வமுடையவராக இருப்பார். கணவனோ அலுவலகம், வீடு தவிர வேறு எங்கும் போக விரும்பமாட்டார்.
மாமனார் வீட்டில் தான் விரும்பிய அளவுக்கு மரியாதை தரவில்லை என்று கணவனுக்கு மனக்குறை இருக்கும். அதனால் மனைவியை அவருடைய அம்மா வீட்டுக்குப் போக கணவன் அனுமதிக்க மாட்டார். மனைவிக்கோ தனது அப்பா, அம்மாவைப் பார்க்க அதிக விருப்பம் இருக்கும்.
இப்படி நேர் எதிரான எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் பல குடும்பங்களில் இருக்கின்றன.
இதனால் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன. பின்னர் அவை வெறுப்பாக வளர்கின்றன. பிரிந்துவிடும் அளவுக்கு இட்டுச் செல்கின்றன.
விவாகரத்து நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு நிலை. அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு போன்றவற்றை புரிந்து நடக்க வேண்டும்.
இரு பாலரும் ஒருவருக்கொருவர், விட்டுக் கொடுத்தால் விவாகரத்து தேவையில்லை!
முதலில் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் வேறு. ஆணுக்கு பெண்ணின் உடல் பெரிதாகத் தோன்றும். பெண்ணுக்கு ஆணின் அன்புதான் பெரிதாகத் தோன்றும். இந்த இயல்பை இருவரும் புரிந்து கொண்டு நடந்தால் நிறையப் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.
தன் கருத்தைப் பிறர் மீது திணிக்க எப்போதும் முயற்சிக்கக் கூடாது. அடுத்தவரின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் அடிக்கடி அன்பாகப் பேசிக் கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே மண விலக்கு கேட்கும் அளவுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம், காதலிக்கும்போது ஆண், பெண் இருவருக்கும் ஈர்ப்பும், அன்பும்தான் இருக்கும். புரிதல் இருக்காது. நல்ல திருமண வாழ்க்கைக்குப் புரிதல் அவசியம்.
இவற்றை இல்வாழ்க்கையில் சிக்கல் உள்ளவர்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். மாற்றிக் கொள்ளவும் அவர்களால் முடியாது. இதற்குக் காரணம், விருப்போ, வெறுப்போ, ஒருவிஷயம் பிடிப்பதோ, பிடிக்காமல் இருப்பதோ இவை எல்லாமும் அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போய் இருக்கும்.
திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்காக வருகிறவர்களுக்கு, அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போயிருக்கும எண்ணங்களை மாற்றினால். அதற்குப் பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். .
நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று, நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.
No comments:
Post a Comment