Total Pageviews

Wednesday, July 13, 2022

பயமாக இருக்கிறது.... இன்றைய தலைமுறையினரின் போக்கு.....!!!

பயமாக இருக்கிறது.... இன்றைய தலை            முறையினரின் போக்கு.....!!!

பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்

படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.

கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...

யாருக்குமே மரியாதை தரக்கூடாது..

தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...

எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்..

காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...

சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..

பெண்கள் மீது மரியாதையே இல்லை..

ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...

வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌..

ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..

ஒரு வரி கூட வாசிப்பதில்லை..

தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...

ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..

வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போட வேண்டும்..

பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌..

சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌..

எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..

எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..

ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....

இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..

பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..

பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..

தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...

அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....

இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜோம்பியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..

பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை..

இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..

மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இது இருபாலருக்கும் பொருந்தும்.

காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்

கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை.

எதிர்கால வரலாறு.....

மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை..

பயமாக இருக்கிறது......இன்றைய தலைமுறையின் போக்கு....

பெ.திருநாவுக்கரசு.Sub Inspector of Police.

Monday, July 11, 2022

உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!

உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!

 உணவின் சுவையை அதிகரிக்க நாம் சேர்க்கும் ஓர் பொருள் தான் உப்பு. ஆனால் நிபுணர்கள், அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்து உட்கொண்டால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்று கூறுகின்றனர்.

 உடலில் உள்ள திரவ அளவை கட்டுப்படுத்த, சிறிய அளவில் உப்பை சேர்த்தால் போதும். அளவுக்கு அதிகமாக உப்பை சேர்த்தால், இரத்த நாளங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, அதனால் தமனிகளில் இரத்தத்தின் அழுத்தம் அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு வந்தால், அதனால் இதய நோய், உடல் பருமன், அதிகப்படியான டென்சன், பக்கவாதம் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.

 எனவே தான் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களை, உணவில் உப்பை சேர்க்க வேண்டாம் என்று சொல்கின்றனர்.

இங்கு உடலில் உள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தாலேயே உடலில் உள்ள உப்பை வெளியேற்றிவிடலாம்.

பீன்ஸ் !

பீன்ஸ் புரோட்டீன் உணவுகளை அதிகம் சேர்த்து வந்தால், உடலில் இருந்து உப்புச்சத்தின் அளவு குறையும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களின் உணவில் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள உணவுகளைச் சேர்ப்பது நல்லது.

  தயிர்! தயிர்!

  தயிரை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும், உடலில் இருந்து அதிகப்படியான உப்பை வெளியேற்றலாம். ஏனெனில் தயிரிலும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது.

 மீன்! மீன்!

 


மீனை உட்கொண்டு வந்தால், அதில் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய பொட்டாசியம் உள்ளது. இதனால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பும் குறையும். எனவே சால்மன் மற்றும் சூரை மீனை மட்டும் உட்கொள்ளுங்கள்.

 வேக வைத்த உருளைக்கிழங்கு

  வேக வைத்த உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் தோலில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அதனை வேக வைத்து உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான உப்பு குறையும்.

  உலர் திராட்சை

 உலர் திராட்சை உலர் திராட்சையிலும் பொட்டாசியம் வளமாக உள்ளதால், இதனை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால், உடலில் உப்பு அதிகம் சேர்வதைத் தடுக்கலாம். உலர்ந்த ஆப்ரிக்காட் உலர்ந்த ஆப்ரிக்காட் உலர்ந்த ஆப்ரிக்காட்டிலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் ஒரு உலர்ந்த ஆப்ரிக்காட்டை உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.

 வாழைப்பழம்

 


வாழைப்பழம் வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வருவது நல்லது. நார்ச்சத்துள்ள உணவுகள் நார்ச்சத்துள்ள உணவுகள் ஓட்ஸ், நார்ச்சத்துள்ள காய்கறிகள், கோதுமை பிரட் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், அதிகப்படியான உப்பை உடலில் இருந்து வெளியேற்றலாம்.

 மேலும் இந்த உணவுப் பொருட்கள் உடலின் மெட்டபாலிச அளவை அதிகமாக பராமரிக்கும். உப்பை சேர்க்க வேண்டாம் உப்பை சேர்க்க வேண்டாம் முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களின் உணவில் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இரத்த அழுத்தம் வரக்கூடாதெனில் உப்பை அதிகமாக உணவில் சேர்க்காதீர்கள்.

 

Sunday, July 10, 2022

சர்க்கரை வியாதிக்கு தேன் காய் !!! சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், தேன் காய் !

சர்க்கரை வியாதிக்கு தேன் காய் !!!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் 'தேன்காய்': சேலத்தில் கிலோ ரூ.1,500க்கு விற்பனை'தேன் காய்' என்ற ஒரு காய் உள்ளது. அது புங்கன் மர விதை போன்ற தோற்றத்தில் இருக்கும். கிராமங்களில் இது ஒருவேளை கிடைக்கலாம். காய் என்று சொல்லப்படும் நிலையில், அதன் முழு தோற்றம், காய்ந்த நெத்தமாக இருக்கிறது. இதன் மேல் பகுதியை பிரித்து விட்டு, உள்ளே இருக்கும் சிறிய விதையை, 48 நாள், வெறும் வயிற்றில் விழுங்கினால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வருகிறது என்பதால், இந்த காய்க்கு,மவுசு அதிகரித்துள்ளது. அந்த தேன் காய் - யை எடுத்து, அதை மெதுவாக உடைத்து, உள்ளே இருக்கும் வெள்ளை நிற மெலிதான விதையை எடுத்து தினமும் காலை ஒன்று வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். முழுமையான பயன் உண்டு. பத்தியம் கிடையாது. பக்கவிளைவுகளும் கிடையாது.

வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு, அரைமணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

ஒரு பாக்கெட்டில் 50 காய்கள் இருக்கும். விலை ரூ.100 .
நாள்பட்ட காயங்கள் ஆற... தேன் காயின் இலைகளை அரைத்து பற்று போட - சீக்கிரம் குணமாகும்.

தேன் காய் மூலிகை மருந்து கடைகளில், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒருவேளை இது கிடைக்கப் பெறாதவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

கே.நாகராஜ், மூலிகை கடை, அழகர் கோவில் (போஸ்ட்) மதுரை - 625301 . செல்: 9965805751 , 9787817573 .

(நாக்கில் படாமல் விதையை விழுங்க வேண்டும். பட்டால் பயங்கர கசப்பாக இருக்கும்)


https://www.youtube.com/watch?v=PVRMOsAqEN0

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...