Total Pageviews

Thursday, May 24, 2012

காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான வழிமுறைகள்


பெட்ரோல் விலை உயர்வு அதிகரித்தாலும், அலுவலகம், வர்த்தக தேவைகள், சுற்றுலாக்களுக்கு காரை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, காரில் செல்லும்போது சில எளிய நடைமுறைகளை கடைபிடித்தால், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவுமுதல் ஒரேடியாக உயர்த்தப்பட்டுள்ள  நிலையில் இந்த செய்தியை மீண்டும் வழங்கினால் புதிய வாசகர்களுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் சில கூடுதல் தகவல்களுடன் தந்திருக்கிறோம்.


எரிபொருள் சிக்கனத்திற்கான சில டிரைவிங் டிப்ஸ்


1. குறைந்த தூரம் செல்வதற்கு காரை பயன்படுத்துவதை தவிருங்கள். அடுத்த தெருவிற்கு செல்வதற்கும், தேவையில்லாமலும் காரை எடுப்பதை தவிர்ந்துக் கொள்ளுங்கள். நடந்தோ அல்லது சைக்கிளில் செல்ல பழகிக் கொள்ளுங்கள். கொஞ்சம் அதிகம் தூரம் என்றால் மோட்டார்சைக்கிளை பயன்படுத்துங்கள்.

2. சாலையில் உள்ள போக்குவரத்துக்கு தக்கவாறு வேகத்தை கட்டுப்படுத்தி ஓட்டப் பழகுங்கள். அடிக்கடி கியரை மாற்றும்போதும் கூடுதல் எரிபொருள் செலவாகும். கிளட்சையும் தேவையில்லாமல் மிதிப்பதாலும் கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதை நினைவில் கொண்டு டிரைவிங் செய்யவும்.

3. நிறுவனங்கள் கூறியுள்ளபடி, வேகத்திற்கு தக்கவாறு சரியான கியரில் காரை இயக்க பழகிக்கொள்ள வேண்டும். சிலர் கார் ஓட்டுவதில் நான் சூரப்புலி என்பதை காட்டுவதற்காக வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் உடனுக்குடன் கியரை மாற்றி வேகமெடுத்து திறமையை பறைசாற்றுவர். இது தவறான டிரைவிங் என்பது மட்டுமல்ல, எரிபொருள் செலவு கூடுதல் ஆவதற்கு முக்கிய காரணமே இதுவாகத்தான் இருக்கும்.

4.நகரங்களில் டிரைவிங் செய்பவர்கள் சிக்னல்களில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்படுகையில், 25 வினாடிகளுக்கு மேல் தாமதம் ஏற்படும் என்றால் மட்டுமே எஞ்சினை ஆப் செய்யவும். 25வினாடிகளுக்குள் எஞ்சினை ஆப் செய்து, திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது எரிபொருளை மிச்சப்படுத்த முடியாது.

5.புதிய காராக இருந்தால்,தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைத்த கால அளவிலும், பழைய காராக இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சர்வீஸ் செய்து விடுவது புத்திசாலித்தனம். இதேபோன்று, அடிக்கடி எஞ்சின் செக்கப் செய்வதும் 50 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும்.

6.காரை எடுப்பதற்கு முன் டயர்களில் காற்றின் அழுத்தம் சரியான அளவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கிளம்புங்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது, டயர்களில் சரியான அளவில் காற்று பிடிப்பது நல்லது. டயர்களில் காற்றின் அழுத்தம் குறைந்தால், எஞ்சினுக்கு கூடுதல் பளு ஏற்பட்டு 5 சதவீதம் எரிபொருள் கூடுதல் செலவாகும்.

7.சுற்றுலா அல்லது வெளியூர் பயணங்கள் செல்லும்போது, தேவையில்லாத பொருட்களை கேரியர் தலையில் ஏற்றாதீர். கேரியரில் ஏற்றப்படும் பொருட்களின் எடை காரணமாக எஞ்சின் கூடுதல் சிரமத்தை ஏற்பதால் அதிக எரிபொருள் செலவாகும்.

8.நெடுஞ்சாலை பயணங்களின்போது, 60 கி.மீ., வேகத்தில் சென்றால் அதிக எரிபொருள் சிக்கனம் கிடைக்கும். அதற்கு மேல் செல்லும்போது 5 முதல் 10 சதவீதத்திற்கும் கூடுதலான எரிபொருளை எஞ்சின் விழுங்கும்.

9.தேவையில்லாமல் அடிக்கடி பிரேக் பிடிப்பது, காரை நிறுத்துவது போன்றவற்றை தவிர்ப்பதாலும், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். தவிர, அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்ப்பதால், டயர்கள் மற்றும் பிரேக்குளின் ஆயுட்காலமும் நீடிக்கும்.

10.குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசியை ஆப் செய்துவிட்டு செல்லுங்கள்.குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசி ஆன் செய்திருந்தால் எஞ்சின் கூடுதல் எரிபொருளை எடுத்துக்கொள்ளும்.

11. காரின் வேகத்தில்தான் எரிபொருள் சிக்கனத்திற்கான சூட்சுமம் அடங்கியுள்ளது. எனவே, சரியான வேகத்தில் காரை இயக்க பழகிக்கொண்டாலே போதும். அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறமுடியும்.

மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை நினைவில்கொண்டு டிரைவிங் செய்தால்,அடிக்கடி பெட்ரோல் பங்க் கியூவில் நிற்பதை நிச்சயம் தவிர்க்கலாம்.

Thanks to One India


கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு.
 

Friday, May 18, 2012

மரம் வளர்ப்போம்!; ஆனால், கருவேல மரத்தை வேரோடு அழிப்போம்!?


ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தவறாமல் தெரியும் காட்சியில், கருவேல மரங்களுக்கு முதலிடம் உண்டு. கல்லூரிகள், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துமவனைகள், கலெக்டர் அலுவலகம், கண்மாய் நீர் நிலைகள், புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் பாகுபாடின்றி படர்ந்து வளரும் உரிமை கருவேல மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டம் வறட்சி மாவட்டமாக முத்திரை குத்தப்பட்ட நாளிலிருந்து, அதற்கான முக்கிய பங்காக கருவேல மரங்களே இருந்து வருகின்றன. பயனற்ற தாவரமாக கருதப்பட்ட இவற்றை, தற்போது பணம் கொழிக்கும் பொருளாக பாவித்து வளர்க்கத்தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு இங்கு கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு வந்தாகிவிட்டது. இருந்தும் இந்த கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பை ஒருசிலரை தவிர பலரும் உணரவில்லை. இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைக்கும் மூல காரணமாக இருப்பவை இந்த கருவேல மரங்கள் தான். புவிவெப்பமயமாகி வருவதற்கு பேருதவியாக இருப்பவை இந்த கருவேல மரங்களே. அதன் பிடியில் சிக்கி தவித்து வரும் இம்மாவட்டங்கள், எப்படி மீண்டு வரப்போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஐந்தறிவு உயிரினங்களின் புறக்கணிப்பு:
கருவேல மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது, சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே, இதன் மீது எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை. ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் (ஆடு, மாடுகள் தவிர) அனைத்தும், கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன. இதை அறியாமல் மனிதர்கள் தான், தற்போது கருவேல மரங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளும் தங்களை தான் சேரும் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.
ஆமோதித்தது அறிவியல்:
கருவேல மரங்கள் குறித்த கருத்துகளை பாட்டி கதைகள் என நினைப்பவர்களுக்கு, அவற்றின் ஆபத்தை அறிவியலும் உணர்த்தியுள்ளது. கருவேல மரங்கள் ஆக்சிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் சுற்றுப்புற காற்று மண்டலம் மாசுபடுகிறது. மாசுபடுகிறது என்பதை விட நச்சு தன்மைக்கு மாறுகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு காற்றை மாசுபடுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. இவை அனைத்தும் அறிவியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட தகவலாகும். அதன் பிறகும் கருவேல மரங்கள் வளர்ச்சியை வேடிக்கை பார்த்து வருவது, நமது சந்ததிகளுக்கு நாமே தீ வைப்பதற்கும் சமமாகும். இன்றுள்ள நிலைப்படி, ராமநாதபுரத்தின் வறட்சி நிலை, இன்னும் 10 ஆண்டுகளில் இருமடங்காகும் வாய்ப்புள்ளது. இதை அனுபவசாலிகள் மட்டுமல்ல, அறிவியல் ஆய்வாளர்களும் ஆமோதித்து வருகின்றனர். இருந்தும் பொதுமக்கள் தரப்பில் இது குறித்த புரட்சி எப்போது வரப்போகிறது என்பது தான் கேள்வி.
கொடூரமும், கோரமும்:
பட்டா, புறம்போக்கு நிலங்களில் கம்பீரமாய் காட்சி தரும் கருவேல மரங்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆனால் அதன் வேர் செய்யும் வேலைகளை நாம் அறிந்திருப்பதில்லை. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அடுத்தவர் உயிரை உறிஞ்சி வாழ்பவர்களை சுயநலக்காரர்கள் என நாம் அழைக்கிறோம். நமது நீரை உறிஞ்சி வாழ்ந்து, நமக்கே உலை வைக்கும் இந்த கருவேல மரங்களை என்னவென்று அழைப்பது? நிலத்தடி நீரை முடிந்த வரை இவை உறிஞ்சி விடுவதால், பூமி தானாகவே வறண்டு விடுகிறது. இதை அறியாத நாம் வருணபகவான் மீது பழியை போட்டு, பகைத்து வருகிறோம். கருவேல மரத்தின் இந்த கொடூரம், தமிழகத்தில் தென் மாவட்டங்களில்தான் அதிகம் அரங்கேறி வருகிறது.
காற்றையும் விட்டுவைக்கவில்லை:
நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேலமரங்களின் தாகம் அத்துடன் நிறைவடைவதில்லை. தன்னை சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாததாகவும், நிலையானதாகவும் மாறிவிடுகிறது. தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் கருவேல மரங்களால் அபகரிக்கப்படுவது அதிக அளவில் உள்ளது. இதை அறியாமல் கருவேல மரங்களை நாமே வளர்த்து வருகிறோம் என்பது தான் வேதனையிலும், வேதனை. நிலம், நீர் வரிசையில் கருவேல மரங்கள் காற்றையும் விட்டு வைக்கவில்லை. பஞ்சபூதங்களையும் ஏதாவது ஒரு வகையில் பதம் பார்த்து வரும் கருவேல மரங்களுக்கு முடிவு கட்டும் நாள் விரைவில் வரவேண்டும். நம்நாட்டின் மண்ணின் தன்மையை பாதிக்க, வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த கருவேல மரங்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாகவே கருவேல மரங்களின் செயல்பாடுகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் இந்த அளவு கருவேல மரங்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் ராமநாதபுரத்தில் காணப்படுவதை போல வேறு எங்கும், இத்தனை மரங்கள் தென்பாடாது.
"வளர்ப்போம்' கோஷத்தில் மாற்றம்!:
உலகம் ஒட்டுமொத்தமாக வெப்பமயமாகி வரும் நிலையில், அதை தடுக்க மரங்களை வளர்க்க அரசு மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி உலகம் முழுவதும் மரங்களை வளர்க்க கோஷங்கள் எழுப்பபடுகிறது. இந்த நேரத்தில் கருவேல மரங்களை மட்டும் அழியுங்கள் என்று சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்துள்ளது. மரங்களுக்குரிய தன்மையை களங்கப்படுத்தும் இந்த கருவேல மரங்களால், புவியில் ஜீவராசிகள் சந்திக்கப்போகும் பிரச்னைகள் நிறைய உள்ளது. "மரம் நட விருப்பமில்லை,' என, நினைப்பவர்கள், நீங்கள் என்றால், கருவேல மரங்களை அழிப்பதற்காவது முன்வாருங்கள். தென்மாவட்டங்களில் மரம் நடுவது அவசியம் என்றாலும், அதே அளவுக்கு கருவேல மரங்களை அகற்ற வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில் "மரங்களை வளர்ப்போம் கோஷத்தில், "கருவேல மரங்களை அகற்றுவோம் என்ற, கோஷமும் இணைக்கப்பட வேண்டும்!.
வெளிநாட்டில் கெட் அவுட்:
உலக ஆட்சி, அரசியலில் முத்திரை பதித்து வரும் அமெரிக்காவில், கருவேல மரங்களை வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவிரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டிருக்கும், அதில் முதலிடம் நம்ம ஊர் கருவேல மரங்களுக்கு என்பதை நாம் இந்த நேரத்தில் அறிய வேண்டும். அமெரிக்கர்களை போல வாழ நினைப்பது மட்டும் போதாது, அவர்களின் செயலையும் கடைபிடிக்கலாமே. இங்கோ ரோட்டின் இருபுறத்திலும் கருவேல மரங்கள், வீட்டின் வேலிகளாக கருவேல மரங்கள், என, முழு புழக்கத்தில் உள்ளனர். வெளிநாடுகளில் "கெட் அவுட்' சொல்லப்பட்ட, கருவேல மரங்களுக்கு இங்கு "வெல்கம்' கூறி, நமக்கு நாமே வேட்டு வைக்கிறோம்.
கேரள குளுமைக்கு காரணம் என்ன?:
ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டவாசிகள்; கோடை சுற்றுலாவுக்கு கொடைக்கானல், ஊட்டி அல்லது கேரளாவுக்கு செல்வது வழக்கம். காரணம் அவையெல்லாம் இங்குள்ளவர்கள் பார்க்க முடியாத குளிர்ந்த பிரதேசங்கள். கேரளாவை எடுத்துக்கொண்டால், கருவேல மரங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் முழுமையாக பரப்பிய மாநிலமாகும். இதனால் அங்கு கருவேல மரங்களை காணமுடியாது. அதேபோல் தமிழகத்திலுள்ள கருவேல மரங்களை அகற்றினால், நமது மாநிலமும் கேரளவின் பொலிவுக்கு திரும்பும். கடலோர மாவட்டமாக ராமநாதபுரம் இருந்தும், போதிய மழைப்பொழிவு இல்லை என்றால், அதற்கு காரணம் கருவேல மரங்களின் தலையீடே ஆகும்.
காசு செய்யும் வேலை:
உதாசீணப்படுத்தப்பட்ட கருவேல மரங்களின் விறகுகள், விற்பனையில் நல்ல லாபத்தை தருகின்றன. இதை கருத்தில் கொண்டு பலரும் கருவேல மரங்களை வளர்க்க தொடங்கிவிட்டனர். அதற்கு ஏற்ப சூழல் இங்கு தாமாகவே அமைந்துவிட்டதால், விவசாயிகள் பலரும் கருவேல மரங்களை விரும்புகின்றனர். எந்த செலவும் இல்லாமல், எளிதில் லாபம் கிடைக்கும் வியாபாரமாக கருவேல மரங்கள் மாறிவிட்டன. லாபத்தை கணக்கிடுபவர்களுக்கு அதன் பின்னணியில் உள்ள சோகத்தை அறிவதில்லை. கரி மூட்டம் போட்டு மேலும் புகையை கிளப்பி, காற்றை மாசுபடுத்துகின்றனர். இருந்தும் கெடுத்தது போதா தென்று, இறந்தும் காற்றை மாசுபடுத்தும் வேலையை கருவேல மரம் தெளிவாக செய்கிறது. பணத்தின் மீதுள்ள மோகத்தில் நம்மவர்களும், கருவேல மரங்களை நம்பி விவசாயத்தை கைவிட்டனர். இன்று பல விளைநிலங்களில் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆண்டு கணக்கில் வளரச்செய்து, அறுவடைக்கு காத்திருக்கும் பக்குவத்திற்கு இங்குள்ளவர்கள் பழகிவிட்டனர். ­­­
வளம் காண அணுகுங்கள் வனத்துறையை...:
தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் கிடைக்கும் இந்த மரக்கன்றுகளை, அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வளர்த்தால் நிச்சயம் இப்பகுதி பசுமையாக மாறும். ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வகையில் வளரும் தன்மையுடைய மரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்டோர், தங்கள் பகுதியின் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தேவையான மரக்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம். பிற மாவட்டங்களில் எத்தனையோ பேர் இத்திட்டத்தை பின்பற்றி, மரங்களை வளர்த்து வருகின்றனர். நம்மாவட்டத்தில் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது. இனியாவது பிரயோஜனம் உள்ள மரங்களை தேர்வு செய்து நட, மாவட்டவாசிகளும், விவசாயிகளும் முன்வர வேண்டும்.
கருவேல மரங்கள் சார்ந்த தொழிலுக்கு தேவை தடை:
தென் மாவட்டங்களில் கருவேல மரங்கள் சார்ந்த பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. இவை நாம் பெருமைப்பட வேண்டிய விசயம் அல்ல. விறகு கரி, விறகு, வேர் கட்டை, தூர் கட்டை, வேலி கம்புகள் என கருவேல மரங்களின் பாகங்களை பிரித்து விற்பணை செய்கின்றனர். தனிநபர் லாபத்திற்காக ஒட்டு மொத்த மாவட்டமே பழியாவதை தடுக்க வேண்டும். அதற்காக இது போன்ற கருவேல மரங்களை சார்ந்த தொழிலுக்கு மாவட்டத்தில் அனுமதி மறுக்க வேண்டும். உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் இது போன்ற தொழிலை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து வந்து, இங்கு முகாமிட்டு, மாவட்டத்தின் வறட்சிக்கு வழிகாட்டும் விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். வெப்பமயமாவதால் குறிப்பிட்ட ஆண்டுகளில் உலகம் பெரிய இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ராமநாதபுரத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போது, முன்கூட்டியே இங்கு பாதிப்புகள் வரலாம், என்பதால், இங்கு இது போன்ற கெடுபிடிகள் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் குரல் இல்லை...: வறட்சி, பின்தங்கிய மாவட்டம் என தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், எதனால் இந்நிலையில் உள்ளது என்பதை அரசுக்கு தெரிவிப்பதில்லை. முழுக்க கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள தம்மாவட்டத்தை, சீரமைக்க எந்த குரலும் தரவில்லை. மாறாக கண்மாய்களில் விளைந்த கருவேல மரங்களை ஏலம் எடுப்பது, மற்றும் விற்பதில் தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு நாட்டம் செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் மாவட்டத்தில் கருவேல மரங்கள் வளர்வதை தான் மக்கள் பிரதிநிதிகள் விரும்புகின்றனர். நம்மை நாமே காக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பொதுமக்களே இவற்றை ஒழிக்க முன்வர வேண்டும்.
ஆளுக்கு ஒரு கருவேல மரத்தை வெட்டி அழிப்போம்!,
பயனுள்ள இதர பல நல்ல மரக்க்கன்றுகளை  நடுவோம்!.
நன்றி: கருவேல மரம் தொடர்பான இந்த ஆச்சரியமான தகவலை அறிய உதவிய செய்தித்தாள்கள், புத்தகங்கள், இ-மெயில் மற்றும் இணைய தளங்களுக்கு நன்றி.
. சரவணன்
கல்பாக்கம்
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்

Wednesday, May 16, 2012

நற்பண்புகள் வாழ்க்கையின் அஸ்திவாரம்.


நான் மிகவும் நேர்மையாகவும், நாணயமாகவும் வேலை செய்வேன். அதுதான் எனக்கு பிடிக்கும். அது தான் என் கொள்கை’ என்று சிலர் சொல்வார்கள்.
அவர்களே சில நாட்களில், `நான் அப்படி எல்லாம் நீதி, நியாயம் மாறாமல் வேலை பார்த்து என்ன லாபம்? மற்றவர்கள் எல்லாம் எப்படி எப்படியோ இருக்கிறார்கள். பொய் சொல்கி றார்கள்… ஏமாற்றுகிறார்கள்.. அரைகுறையாகத்தான் வேலைபார்க்கிறார்கள். உண்மையாக உழைத்து என்ன கிடைக்கப் போகிறது. அதை யாரேனும் பாராட்டவா போகிறார்கள்? நாண யத்திற்கும், நேர்மைக்கும் இந்த காலத்தில் மதிப்போ, மரியாதையோ இல்லவேஇல்லை. நான் மட்டும் யோக்கியமாக இருந்து பலனில்லை. ஊர் எப்படி போகிறதோ அப்படியே நானும் போய்விடலாம் என்று நினைக்கிறேன்’ என்று நீண்ட விளக்கம் கொடுப்பார்கள்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள். நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள். நாணயமாக இருக்கிறீர்கள். உண்மையாக இருக்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
நேர்மை, நாணயம், உண்மையின் மதிப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். அதனால் அப்படி வாழ்கிறீர்கள். விலை மதிப்பற்ற அந்த நற்குணங்கள் உங்களுக்கு சுயமரியாதையையும், சுய கவுரவத்தையும் கொடுக்கும். மிகச் சிறந்த ஆத்ம திருப்தியையும் அது தரும்.
உங்களுக்கு இத்தனையும் கிடைக்கும்போது மற்றவர்கள் பாராட்டினால் என்ன.. தூற்றி னால் என்ன! அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்.
“நற்பண்புகள் என் வாழ்க்கையின் அஸ்திவாரம். அதை நான் எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன். அதன் மூலம் என் மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. அந்த நற்குணங்கள் இன்னமும் இந்த உலகத்தில் மறைந்துவிடாமல் என்னால் காப்பாற்ற முடிகிறது என்ற திருப்தியும் ஏற்படுகிறது.
ஒரு சிலர் 500, 1,000 ரூபாய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாணயமாகவும், நேர்மை யாகவும் இருப்பார்கள். அதுவே ஒரு சில லட்சங்கள் என்றாகும்போது அந்த நாணயத்தை யும், நேர்மையையும் விட்டு கொடுத்து விடுவார்கள். “நேர்மைக்கும், நாணயத்திற்கும் என்னால் விலை நிர்ணயிக்க முடியாது. நான் நானாக வாழ விரும்புகிறேன்” என்று உங்களுக்குள்ளே தினமும் கூறிக்கொள்ளுங்கள். அதன்படி வாழ்ந்து பாருங்கள். எல்லை யற்ற இன்பத்தோடு உங்களால் வாழ முடியும். அதற்குரிய பலனும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.

உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
 

நுகர்வோர் புகார் நிவாரணம் பெறுவது எப்படி?

  பொதுமக்கள், தாங்கள் வாங்கும் பொருட்களில், தரம் மற்றும் சேவை குறைபாடு இருந்தால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவாரணம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட சில வியாபாரிகளின் முறையற்ற செயல்களுக்கு முடிவு கட்டும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
புகார் பதிவு முறை : புகார் மனுவில், புகார் தாரரின் பெயர், முழு முகவரி, எதிர் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி, பொருள் அல்லது சேவையை பயன்படுத்திய விவரங்கள், புகாரின் தன்மை, ரசீதின் நகல் மற்றும் விவரம், நஷ்ட ஈட்டின் விவரம் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

* பாதிப்பு ஏற்பட்ட இரண்டு வருடங்களுக்குள், புகாரை பதிவு செய்ய வேண்டும். புகார் பதிவிற்கான கட்டணத்தை, டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும். மேல்முறையீட்டு மனுவுக்கு, கட்டணம் செலுத்த தேவை இல்லை.

* நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மற்றும் சான்று அளிக்கப்பட்ட நபர் மூலமாகவோ புகாரை பதியலாம்.
யாரை அணுகனும்? : நுகர்வோர் வாங்கிய பொருள் அல்லது சேவையின் மதிப்பு, 20 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருப்பின், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 20 லட்சம் முதல், 1 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால், மாநில நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 1 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளவர்கள், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும் அணுக வேண்டும். அந்தியோதயா, அன்னயோஜனா குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், ஒரு லட்ச ரூபாய் வரை, புகார் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஏனைய புகார்தாரர்கள், தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவை மதிப்பின் அடிப்படையில், புகார் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
நுகர்வோருக்கு, எந்த நிலையிலும் நீதி கிடைக்காத பட்சத்தில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகி, நிவாரணம் பெறலாம்.
புகார் பதிவு கட்டண விவரம்:
பொருட்களின் மதிப்பு கட்டணம்
(ரூபாயில்) (ரூபாயில்)
1 லட்சம் வரை 100
1 – 5 லட்சம் 200
5 – 10 லட்சம் 400
10 – 20 லட்சம் 500
20 – 50 லட்சம் 2,000
50 – 1 கோடி 4,000
1 கோடிக்கு மேல் 5,000


 எவன், எந்தெந்த அளவு பாத்திரத்தை என்னென்ன முறையில் வைத்திருக்கிறானோ... அந்தந்த அளவு அவனுக்குகடவுளின் கருணை கிடைக்கிறது.

சைபர் கிரைம் - தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றம்

 
வீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றம் புரிபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக, சென்னை போலீசின் சைபர் கிரைம் பிரிவு இயங்கிவருகிறது. ஆணையர் திரிபாதி வழிகாட்டு தலின்படி, துணை ஆணையர் ராதிகாவின் கீழ் இந்த பிரிவு செயல் படுகிறது. டாக்டர் எம்.சுதாகர் கூடுதல் துணை ஆணையராக செயல்படுகிறார்.
2003-ல் இந்த பிரிவு தொடங்கப்பட்டபோது 35 புகார்களே பதிவாகின. வருடத்திற்கு வருடம் அதிகரித்து, 2007-ல் 702 ஆகவும், 2008-ல் 852 ஆகவும் உயர்ந்தது. கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை- 1370.
கூடுதல் துணை ஆணையர் டாக்டர் எம்.சுதாகரிடம், `பாதிக்கப்பட்டவர்கள் எங்கே, எப்படி புகார் தரவேண்டும்?` என்று கேட்டபோது அவர் கூறிய பதில்:
“வருடத்திற்கு வருடம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல் தோன்றி னாலும், வேகமாக உயர்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையோடு அதை ஒப்பிட்டால் குற்றங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனா லும் இதையும் கட்டுப்படுத்தவேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக் கிறோம்.
சைபர் கிரைமில் பதிவாகும் குற்றங்களில் மிரட்டுதல், ஆபாச படம் பிடித்தல், அவைகளை வெளியிடுதல் போன்றவை 5 சதவீதம் அளவிற்குதான் இருக்கும். அதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப் படுபவர்களாக இருக்கிறார்கள்.
ஆணும், பெண்ணும் நட்போடு பழகிக்கொண்டிருக்கும்போது தங்களை படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது அந்த படங்களை பயன் படுத்தி இணையதளங்களில் தவறாக சித்தரிக்கிறார்கள். ஆபாச படங்களை வெளியிடு வதும், தவறாக சித்தரிப்பதும் கடுமையான குற்றங்கள். விளையாட்டாக படம் பிடிப்பது, பொழுதுபோக்காக அடுத்தவர்களை படம் பிடிப்பது எல்லாமே எதிர்காலத்தில் பிரச்சினை களை உருவாக்கும்தன்மை கொண்டது என்பதால், எப்போதும் எல்லோரும் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஒருவர் கெட்ட நோக்கமின்றி இன்னொருவரின் தனிப்பட்ட படங்களை எடுத்தாலும், வைத்திருந்தாலும் அது மற்றொருவர் கையில் கிடைக்கும்போது பிரச்சினைக்குரியதாக மாறக்கூடும். அதனால் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களை ஒருபோதும் யாரும் படம்பிடிக்கக்கூடாது.
சைபர் கிரைம் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் உணரவேண்டும் என்பதற் காகவும், இதில் மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காகவும் விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தி வருகிறோம்.
சென்னையில் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறவர்கள் போலீஸ் ஆணையர் அலுவலகத் தில் உள்ள `குறை கேட்பு பிரிவில்’ புகார் செய்யவேண்டும். புகாரின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்”- என்றார்.
நன்றி-தினத்தந்தி

உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம். அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை.

சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான். 


வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது துறவறம் தவறிப் போகும்.
 

ஆசை!



மனிதனுடைய ஆயுள், குறைந்த காலமே. இதை உணர்வதில்லை மனிதன்; ஆனால், மகான்கள் உணர்ந்திருக்கின்றனர். உலக சுகத்தில் ஆசை வைப்பதில்லை மகான்கள். மனிதனுக்கு மட்டும் ஆசை குறைவதில்லை. இதன் காரணமாக, குடும்பம், மனைவி, மக்கள் மீது ஆசை வைக்கிறான்.
 மனைவியின் மீதுள்ள ஆசையால், எத்தனையோ துன்பங்களை ஏற்றுக் கொள்கிறான்; எத்தனையோ செலவு செய்கிறான். மனைவிக்கு பத்தாயிரம் ரூபாயில் ஒரு புடவை வாங்கும் அவன், தனக்கு நூறு ரூபாயில் வேஷ்டி வாங்கிக் கொள்கிறான். தனக்கென்று பெரிதாக எதுவும் செய்து கொள்வதுஇல்லை. மனைவிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயார். காரணம், அவள் மீதுள்ள ஆசை!

அதேபோல், தன் குழந்தைகள் மீதும் ஆசை வைக்கிறான். அவர்களுக்காக நிறைய செலவும் செய்கிறான்; இதற்கும் ஆசைதான் காரணம். நிறைய ஆபரணங்கள் அணிந்து, பட்டுப் புடவை உடுத்தி, நாலு பேர் முன், தன் மனைவி போக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். தன் பிள்ளைகள் நன்றாக படித்து, பெரிய உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறான். அதற்காக கடன் வாங்கியாவது நிறைய செலவு செய்கிறான். இப்படியாக, தன் ஆசையை நிறைவேற்றி சந்தோஷப்படுகிறான்.

இவர்களுடைய வாழ்நாள் எண்ணப்பட்டு வருகிறது என்பதை, அவன் உணர்வதே இல்லை.

பிறந்தால், இறக்க வேண்டும் என்பது நியதி. அற்ப சந்தோஷத்திலேயே மூழ்கியிருந்தால், தன் நற்கதியை பற்றியும் சிந்திக்க வேண்டாமா? அதற்கு தான் பூஜை, தெய்வ வழிபாடு, தெய்வ தரிசனம், மகான்களின் தரிசனம் என்று எத்தனையோ வழிகள் உள்ளனவே! இதிலும் சிரத்தை எடுத்துக் கொண்டால், மறு பிறவிக்கு உதவுமே! சும்மா உலக இன்பங்களில் ஆசை வைத்து, பேரின்பத்தை இழக்கலாமா? யோசியுங்கள்.

ஊருக்குப் போகிறீர்களா? திருடர்கள் ஜாக்கிரதை



கோடை விடுமுறைக்காலம்  சுற்றுலாத் திட்டம் போட்டு வைத்திருப்பார்கள்.
வீட்டு பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் என்பதை திட்டமிட்டீர்களா?
அது தான் பெரிய பூட்டாகப் போட்டு பூட்டி விட்டுத் தானே போவோம் என்பீர்கள். அது மட்டும் போதுமா? இன்னும் சில ஜாக்கிரதைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த திருட்டும் திட்டமிடாமல் நடத்தப்படுவதில்லை. வீடு கட்டுபவர்கள் பந்தாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதுகாப்புக்கு கொடுப்பதில்லை. ஐம்பது லட்ச ரூபாயை கொட்டி தாம்தூம் என்று பகட்டாக வீடு கட்டுபவர்கள், பெரிய ஜன்னல், பெரிய கதவு, வென்டிலேட்டர், ஏ.சி..க்காக பெயர்த்தெடுத்த ஜன்னல் என்று ஆரம்பத்திலேயே திருடர்கள் விசிட்டுக்கு வசதி பண்ணிக் கொடுத்து விடுகிறார்கள். அதோடு வீட்டு பாதுகாப்புக்கு காயலான் கடையில் கால்வாசி விலைக்கு வாங்கிய பூட்டு வாசலில் தொங்கும். இம்மாதிரி பூட்டுக்கள் திருடர்களை பார்த்த மாத்திரத்தில் அதுவாகவே திறந்து கொள்ளும்.
வெளியூர் போவதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் தம்பட்டம் அடித்து விட்டுப் போவது நல்லதல்ல. அதுமாதிரி பயண தினத்தில் ஆட்டோ, அல்லது டாக்சியை வீட்டுக்கு வரவழைத்து ஒட்டுமொத்த குடும்பமும் ஏறிச்செல்வதும் சரியல்ல. ஆளில்லா வீடு என்பது அப்போதே உறுதிப்படுத்தப் பட, திருடர்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது. குறைந்த பட்சம் தெருமுனை வரை வந்தாவது ஆட்டோ பிடிக்கலாம்.
நீங்கள் வெளியூரில் எத்தனை நாட்கள் தங்கப் போகிறீர்கள் என்பதையும் அதுவரை பாதுகாப்பு அவசியம் என்பதையும் ஒரு மனுவாக குறிப்பிட்டு அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுக்கலாம். நள்ளிரவு ரவுண்ட்ஸ் வரும் நேரங்களில் உங்கள் வீட்டீன் மீது போலீசாரின் விசேஷப் பார்வை படும். இதுவே வசதியானவர்கள் என்றால் தனியார் செக்யூரிட்டி உதவியையும் நாடலாம்.
ஊருக்குப் போகும்போது நகைகளையோ பெரிய தொகையையோ வீட்டில் வைத்து விட்டுப் போவது சரியல்ல. ஊரில் இருந்தாலும் உங்கள் கவனம் முழுக்க அவற்றின் மீதே இருக்கும். அதிக நகைகள் இருந்தால் வங்கியில் உங்கள் பெயரில் ஒரு சேப்டி லாக்கர் வாங்கி அதில் வைக்கலாம்.
நீங்கள் பிளாட்டுகளில் வசிப்பவர்களாக இருந்தால், ஒன்று அல்லது இரண்டு செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆனால் அது போதாது. உங்கள் அருகாமை வீடுகளில் உள்ள பிளாட்டில் இருப்பவர்களிடம் அவர்கள் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஊருக்குப் போனதும் நட்பு ரீதியில் தினமும் ஒருமுறையாவது அவர்களுடன் பேசி விடுங்கள். அப்போது வீட்டுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என்பதை அவர்கள் இயல்பாக பேசுவதில் இருந்தே உணர்ந்து கொள்வீர்கள்.
சிலர் வீடுகளுக்கு பேப்பர் பையன்கள் பால் போடுபவர்கள் அனுதினமும் வருவார்கள். இவர்களிடம் ஊருக்குப் போகும் ஒரு வாரத்துக்கு முன்பே இத்தனை நாட்களுக்கு பால், பேப்பர் வேண்டாம் என்பதை தெளிவுபடுத்தி விடுங்கள். இவர்களில் யார் ஒருவரிடம் சொல்ல மறந்தாலும் வீட்டுவாசலில் நீங்கள் கட்டி வைத்திருக்கிற பை நிரம்பி நீங்கள் வீட்டில் இல்லை ஊருக்கே உரக்கச் சொல்லி விடும்.
இதையெல்லாம் சரியாக செய்து விட்டீர்களானால் உங்கள் டூர் நிச்சயம் கொண்டாட்டம் நிறைந்ததாய் அமையும்.

இந்திய ஜனாதிபதி ஆவதற்கான தகுதி


* இந்தியக் குடிமகனாக, 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

* ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு பணி வகிப்பவராக இருக்கக் கூடாது.

* லோக்சபா எம்.பி., ஆவதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

* துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இத்தேர்தலில் போட்டியிடலாம். அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், முந்தைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.

* டெபாசிட் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய்.

ஜனாதிபதியின் அதிகாரம்

* லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியை, ஆட்சியமைக்க (பிரதமராக பதவியேற்க) அழைப்பது,

* பிரதமரின் ஆலோசனைப்படி, மத்திய அமைச்சர்களை நியமிப்பது, பார்லிமென்ட் கூட்டத் தொடரைக் கூட்டுவது, அதில் உரையாற்றுவது இவரது பணிகள்.

* பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாகும்.

* பிரதமரின் அறிவுரைப்படி, மாநில கவர்னர்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் தலைமை நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமைத் தேர்தல் ஆணையர், வெளிநாட்டு தூதர்கள் ஆகியவற்றை நியமித்தல்.

* அரசியல் சட்டப் பிரிவு 352ன் படி நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய , லோக்சபாவை கலைக்க, பிரிவு 356ன் படி மாநில அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

* சுப்ரீம் கோர்ட்டின் தண்டனைக் காலத்தை குறைப்பதற்கும்; மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவும் இவருக்கு அதிகாரம் உள்ளது.

மொத்த ஓட்டு எவ்வளவு: ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த ஓட்டு மதிப்பு = (எம்.எல்.ஏ.,க்கள் + எம்.பி.,க்களின் ஓட்டு) மொத்த ஓட்டுகள் = 10,98,882 (5,49,474 + 5,49,408). இதில் “மெஜாரிட்டி’ பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுகிறார்.

எம்.எல்.ஏ., ஓட்டுகள்: ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு எத்தனை ஓட்டு என்பது கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
மாநிலத்தின் மக்கள்தொகை

= ——————————————-
எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை * 1000

விதி 52 (2)ன் படி, “1971 சென்செஸ்’ மக்கள்தொகை தான், ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் கொள்ளப்படுகிறது. (உதாரணமாக) தமிழகத்தின் மக்கள் தொகை 4,11,99,168 பேர். எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 234. இதன் படி 4,11,99,168/ (234*1000)= 176. ஒரு எம்.எல்.ஏ., வுக்கு 176 ஓட்டு. அதன்படி தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மொத்த ஓட்டு மதிப்பு (234 * 176) 41,184. இதன்படி அனைத்து மாநிலங்களையும் சேர்த்து எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு 5,49,474.
எம்.பி., ஓட்டுகள்

அனைத்து மாநில எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு
————————————————-

மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை

இதன் படி 5,49,474/776 = 708. இதன் மூலம் ஒரு எம்.பி.,யின் ஓட்டு 
மதிப்பு 708. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த எம்.பி.,க்களின் ஓட்டுமதிப்பு (776*708) 5,49, 408


எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை.

 

தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி.



 

அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.

Tuesday, May 8, 2012

வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல !

 
மனிதர்களகிய  நாம் நமக்கு என்ன உணவு  வேண்டும், எவ்வளவு உணவு உன்ன வேண்டும் என்று  ஒரு வரைய்றை வகுத்து கொள்ள வேண்டும்.  நமது உடம்புக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய உணவு வகைகளை மட்டுமே உண்ண வேண்டும்.  

தேவைக்கு அதிகமான உணவு கிடைக்கின்றதே என்பதற்க்காக  அளவுக்கு அதிகமாக விலங்குகளை போல் உண்ணக்கூடாது.

கெட்டுப்போன, மற்றும் காலாவதியான உணவுகளை உண்ணக்கூடாது.

Food Position எனப்படும் வியாதிக்கு ஆட்படாமல் வாழ கற்றுக்கொள்ளவேண்டும். 

உணவு வகைகள் வீண்கின்றதே என்பதற்க்காக உணவுகளை உண்ணக்கூடாது.

வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல!  

தரமான உணவுகளை மட்டும்,  தேவைக்கு எற்ப நன்றாக கூளூ போல் மென்று உண்ண வேண்டும்

தவறான் உணவு உண்ணும் முறையினால்தான் வ்யிற்றுப்போககு மற்றும் அஜீரண கோளாறு போன்ற்  வியாதிகளுக்கு  உட்படுகின்றோம்.

செரிமானமின்மை ஒரு வயிறு பிரச்சனை என்றும் அஜீரணம் அமிலம் ரிஃப்ளக்ஸ் வயிறு காரணமாக நெஞ்செரிச்சல் உண்டாக்க கூடும். இது உணவுக்குழாய் கஷ்டப்படுத்துகிறது. அஜீரணம் வாயில் ஒரு கசப்பான அல்லது புளிப்பு சுவை விட்டுச்செல்கிறது. 

அஜீரணதிற்க்கான் காரணங்கள் 

1.வேகமாக உணவுகளை உண்ணுவதால்,
 சரியாக மெல்லாமல் உணவுகளை உண்ணுவதால்
2.  செரிமான சக்திக்கு மிகப்பட்ட / கன உணவுகளை உண்ணுவதால்
3. நுகர்வு அதிகமாக இருப்பதனால் / மது அருந்துவதனால்
4. புகைப்பதனால்,
5. சரியான   துக்கமின்மை காரணமாகவும்,
6. மன அழுத்தம் மற்றும் கவலை எதிர்ப்பு அழற்சி மருந்துகள்
7. வாழ்க்கை முறை மாற்றங்கள்

அஜீரணத்தால் பாதிக்கும் நோய்கள்

1. வயிற்றில் வலி
2. வயிறு குமட்டல், வீக்கம்
3. கட்டுப்பாடற்ற உளறுகிறாய்
4. ஹார்ட்பர்ன்
5. குசு [ Gas Trouble ]

K.P.Sithayan Sivakumar

லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான்.

மக்கள் புரட்சி செய்தால், அது எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும்.

உறுதி... உறுதி... இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பதுகூட கடினம்.

உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…?

வெகு சுலபமாக தட்கல் ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்ய மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இந்த பக்கத்தில் பயணிப்போரின் பெயர், வயது போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். தட்கல் புக்கிங் செய்யும்போது இவ்வாறு நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.
தட்கல் முன்பதிவின்போது நேரம் விரயமாவதை தவிர்க்கும் வகையில் ஓர் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. இந்த வசதியில் ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் இருப்பது போன்றே பெயர் உள்ளிட்ட விபரங்களையும் முன்னதாகவே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.( இந்த ஆட்டோஃபில் பக்கத்தினை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்).http://ctrlq.org/irctc/
இதன் பிறகு ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால், புக்மார்க்கில் உள்ள இந்த  பக்கத்தினை பூர்த்தி செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும்.
இந்த மேஜிக் ஆட்டோ ஃபில் பட்டனை அப்படியே டிராக் செய்து, ஐஆர்சிடிசி முன்பதிவு பக்கத்தில் க்ளிக் செய்தால், பயணியின் விவர பட்டியல் தானாகவே அடுத்த நொடியில் நிரம்பி விடும்.
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த வசதி வரப்பிரசாதமாக இருக்கும். இந்த வசதியின் மூலம் எளிதாக தட்கல் டிக்கெட்டை புக் செய்யலாம்.

 

 உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்!

குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை.

 

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...