Total Pageviews

Tuesday, May 8, 2012

கார் ஓட்டும்போது செல்போன் பயன்பாட்டை குறைப்பதற்கான சில எளிய வழிகள்:

கையில் செல்போனை பிடித்தபடி கார், பைக் ஓட்டுவதை பலர் ஸ்டைலாக நினைத்து தங்களது வாழ்க்கையை நொடியில் தொலைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை காட்டிலும், செல்போன் பேசியபடி வந்து விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை தற்போது தாறுமாறாக உயர்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


ஒவ்வொரு நாளும் நான்கில் ஒரு சாலை விபத்து செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் நடப்பதாகவும், இதனால், எதிரே வரும் வாகன ஓட்டிகளும், அவர்களது குடும்பங்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாகவும் அந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செல்போன் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டாதீர்கள் என்று அரசாங்கமும், போலீசாரும் பல இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்திருந்தும், அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

டிரைவிங்கின்போது செல்போன் பயன்பாட்டை குறைப்பதற்கான சில எளிய வழிகள்:

1.கார் அல்லது பைக்கில் புறப்படுவதற்கு முன், செல்போனில் வந்துள்ள அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை ஒரு முறை பார்த்துவிட்டு கிளம்புவது நல்லது. முக்கியமானவர்களிடம் அவசியம் பேச வேண்டியிருந்தால், பேசிவிட்டு அதன்பிறகு புறப்படுங்கள்.

2.காரை ஓட்டிக்கொண்டே எஸ்.எம்.எஸ். எழுதி அனுப்பவதை பலர் குலத்தொழிலாக கொண்டுள்ளனர். இதை முற்றிலும் தவிர்ப்பது உங்களுக்கு மட்டுமல்ல, எதிரில் வருபவருக்கும் நல்லது. 

3.டிரைவிங்கின்போது அழைப்புகள் வந்தால் செய்தியை தெரிந்துகொண்டு சுறுக்கமாக பேசி முடித்துவிடுங்கள். எதிர்முனையில் பேசுபவரிடம் டிரைவிங் செய்வதை தெரிவித்துவிடுங்கள். இதனால், அவர் உங்களை தவறாக நினைத்துக்கொள்வதை தவிர்க்கலாம்.

4.மோசமான வானிலையின்போது, டிரைவிங் செய்தால் கட்டாயம் செல்போன் பேசுவதை தவிர்ப்பது புத்திசாலித்தனம். இதுபோன்ற சூழ்நிலைகளில் கவனம் சிதறினால், நொடியில் மரணம் ஏற்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது.

5.அலுவலகம் மற்றும் வீட்டில் இருப்பவர்களின் நம்பர்களை ஒன்-டச் டயல் ஆப்சனில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். டிரைவிங்கின்போது அவசரமாக பேசும் சூழ்நிலை இருந்தால் உதவிகரமாக இருக்கும்.

6.டிரைவிங்கின்போது செல்போனை எளிதாக எடுக்கும் வகையில், டேஷ்-போர்டில் கண்ணுக்கு எதிரில் படும்படியாகவோ அல்லது பாக்கெட்டிலோ வைத்துக்கொள்ளுங்கள்.

7.வாய்ஸ்-மெயில் மோடில் செல்போன் இருந்தால், அனைத்து அழைப்புகளையும் நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

8.டிரைவிங்கின்போது அவசியம் பேசும் சூழ்நிலை ஏற்பட்டால், சாலையின் ஓரத்தில் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு பேச முற்படுங்கள். இயலாத நேரத்தில் ஹேண்ட்-ப்ரீ மற்றும் ஹேட்போன் ஆகியவற்றை பயன்படுத்தி சுறுக்கமாக பேசிமுடித்துவிடுங்கள்.

9.அழைப்பு ஏதும் வந்தால், நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திக்கொண்டு வழவழ என்று பேசிக்கொண்டு நிற்காதீர்.

விபத்துக்களும், மரணங்களும் எதிர்பாராமல் நடப்பதை ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் அதற்கு முக்கிய காரணம் நாமாகிவிடக்கூடாது என்பதை அனைவரும் முதலில் உணரவேண்டும். மேலும், டிரைவிங்கின்போது செல்போன் பேசுவதற்கு சில வழிமுறைகளை இருந்தாலும், அவை தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்குத்தான். டிரைவிங் செய்யும்போது செல்போன் பேசுவதை முற்றிலும் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...