Total Pageviews

Thursday, May 3, 2012

விபத்துக்களை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்



1000சிசி திறன் கொண்ட சூப்பர் பைக்கில் அதிவேகமாக சென்றதால்தான் அசாரூதீன் மகன் அயாஸுதீன்  சாலை விபத்தில் சிக்க நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகமாக பைக் ஓட்டாதே என்று அயாஸுதீன் உடற்கல்வி ஆசிரியர்கள் பல முறை எச்சரித்தும் அவர் காதில் வாங்கி கொள்ளாததால் இதுபோன்ற கோர விபத்தில் சிக்கி மரண மடைந்துவிட்டார்.
 

ஆனால், இளைஞர்கள் நினைத்தால் இதுபோன்ற சாலை விபத்துக்களை நிச்சயம் தவிர்க்க முடியும் என்பதே நமது எண்ணம். சமீபகாலமாக இந்தியாவில் 1,000 சிசி திறன் கொண்ட பைக்குகளை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்கேற்ப, சூப்பர் பைக்குகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கு ஏற்ற சாலை வசதிகளோ, பயிற்சி மையங்களோ நம் நாட்டில் இல்லை என்பது முக்கிய காரணம்.

மேலும், சாதாரண ரக பைக்குகளை ஓட்டுவதற்கும், சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், அதை சூப்பர் பைக் வாங்குபவர்கள் புரிந்துகொள்ளததால்தான் இதுபோன்று விபத்துக்களில் சிக்கி உயிரை விலையாக கொடுத்து விடுகின்றனர்.

இருப்பினும், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

சூப்பர் பைக்குகள் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்வாய்ந்த எஞ்சின்களுடன் வருகின்றன. இந்த பைக்குகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கே முறையான பயிற்சி கண்டிப்பாக தேவை.எனவே, சூப்பர் பைக் வாங்குவதற்கு முன் உரிய பயிற்சி மையத்தில் சூப்பர் பைக் டிரைவிங் செய்வது குறித்த ஆலோசனைகளையும், நேரடி பயிற்சியையும் பெற்ற பின் சூப்பர் பைக் வாங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

பிரத்யேகமாக உருவாக்கப்படும் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையிலேயே சூப்பர் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றை குண்டும குழியும் நிறைந்த நம்மூர் சாலைகளில் ஓட்டும்போது மிக மிக கவனமாக இருக்கவேண்டும்.

முக்கியமாக சூப்பர் பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. சூப்பர் பைக்குகளின் பின் இருக்கைகள் அளவில் சிறியதாகவும், கூடுதல் உயரத்துடன் இருப்பதால் பைக் ஓட்டும்போது முழு பேலன்ஸ் கிடைக்காது.

சூப்பர் பைக் ஓட்டும்போது தரமான ஹெல்மெட்டுகளை அணிந்து செல்வது கூடுதல் பாதுகாப்பு. சாலை ஓரத்தில் விற்கப்படும் ஹெல் மெட்டுகளை வாங்கி அணிந்து செல்ல வேண்டாம்.

பல லட்சம் கொடுத்து வாங்கிய சூப்பர் பைக்கை கட்டை வண்டி மாதிரி ஓட்டுவதற்கா வாங்குகிறோம் என்பது காதில் விழுகிறது. கண்டிப்பாக வேகமாக ஓட்டலாம். அந்த பைக்கின் முழு கட்டுப்பாட்டை தெரிந்து கொண்ட பின்னர் சாலை நிலைமை அனுசரித்து ஓட்டினால் இதுபோன்ற விபத்துக்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

குறிப்பாக, சூப்பர் பைக்கை வேகமாக ஓட்டுவது எளிது, அதை உடனடியாகவும், சரியான இடத்திலும் நிறுத்துவது கடினம் என்பதை பிரபல பைக் ரேஸர் கவுரவ் கில் கூறியிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மேலும், சாதாரண பைக்குகள் மற்றும் வாகனங்களுக்கு லைசென்ஸ் வழங்குவது போல் அல்லாமல் சிறப்பு பயிற்சி பெறுவர்களுக்கு மட்டுமே சூப்பர் வாங்குவதற்கும், ஓட்டுவதற்கும் லைசென்ஸ் வழங்கவேண்டும். இந்த விஷயத்தில் உடனடியாக கட்டுப்பாடுகளை கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட சூப்பர் பைக் ஓட்டும்போது மிகுந்த கவனத்தோடும், மனக்கட்டுப்பாட்டோடும பாதுகாப்பாக ஓட்ட பழகிக்கொள்வது மிக அவசியம். இதனால், பைக் ஓட்டுபவருக்கு மட்டுமல்ல எதிரில் வரும வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. இவற்றை கடைபிடித்தால் விலை மதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்படாது .
பிறர் இன்னல் அடைவதைக் கண்டு நீ சிரிக்காதே. அதில் மகிழ்ச்சியும்
அடையாதே. ஏனென்றால் அவனுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தி இறைவன் உன்னை சோதனைகளில் மூழ்க வைப்பான். 


- நீ மற்றவர்களைத் திட்டினால் இறைவனின் சாபம் உன் மீது உண்டாகும்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...