Total Pageviews

Wednesday, May 16, 2012

சைபர் கிரைம் - தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றம்

 
வீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றம் புரிபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக, சென்னை போலீசின் சைபர் கிரைம் பிரிவு இயங்கிவருகிறது. ஆணையர் திரிபாதி வழிகாட்டு தலின்படி, துணை ஆணையர் ராதிகாவின் கீழ் இந்த பிரிவு செயல் படுகிறது. டாக்டர் எம்.சுதாகர் கூடுதல் துணை ஆணையராக செயல்படுகிறார்.
2003-ல் இந்த பிரிவு தொடங்கப்பட்டபோது 35 புகார்களே பதிவாகின. வருடத்திற்கு வருடம் அதிகரித்து, 2007-ல் 702 ஆகவும், 2008-ல் 852 ஆகவும் உயர்ந்தது. கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை- 1370.
கூடுதல் துணை ஆணையர் டாக்டர் எம்.சுதாகரிடம், `பாதிக்கப்பட்டவர்கள் எங்கே, எப்படி புகார் தரவேண்டும்?` என்று கேட்டபோது அவர் கூறிய பதில்:
“வருடத்திற்கு வருடம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல் தோன்றி னாலும், வேகமாக உயர்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையோடு அதை ஒப்பிட்டால் குற்றங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனா லும் இதையும் கட்டுப்படுத்தவேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக் கிறோம்.
சைபர் கிரைமில் பதிவாகும் குற்றங்களில் மிரட்டுதல், ஆபாச படம் பிடித்தல், அவைகளை வெளியிடுதல் போன்றவை 5 சதவீதம் அளவிற்குதான் இருக்கும். அதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப் படுபவர்களாக இருக்கிறார்கள்.
ஆணும், பெண்ணும் நட்போடு பழகிக்கொண்டிருக்கும்போது தங்களை படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது அந்த படங்களை பயன் படுத்தி இணையதளங்களில் தவறாக சித்தரிக்கிறார்கள். ஆபாச படங்களை வெளியிடு வதும், தவறாக சித்தரிப்பதும் கடுமையான குற்றங்கள். விளையாட்டாக படம் பிடிப்பது, பொழுதுபோக்காக அடுத்தவர்களை படம் பிடிப்பது எல்லாமே எதிர்காலத்தில் பிரச்சினை களை உருவாக்கும்தன்மை கொண்டது என்பதால், எப்போதும் எல்லோரும் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஒருவர் கெட்ட நோக்கமின்றி இன்னொருவரின் தனிப்பட்ட படங்களை எடுத்தாலும், வைத்திருந்தாலும் அது மற்றொருவர் கையில் கிடைக்கும்போது பிரச்சினைக்குரியதாக மாறக்கூடும். அதனால் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களை ஒருபோதும் யாரும் படம்பிடிக்கக்கூடாது.
சைபர் கிரைம் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் உணரவேண்டும் என்பதற் காகவும், இதில் மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காகவும் விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தி வருகிறோம்.
சென்னையில் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறவர்கள் போலீஸ் ஆணையர் அலுவலகத் தில் உள்ள `குறை கேட்பு பிரிவில்’ புகார் செய்யவேண்டும். புகாரின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்”- என்றார்.
நன்றி-தினத்தந்தி

உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம். அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை.

சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான். 


வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது துறவறம் தவறிப் போகும்.
 

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...