Total Pageviews

Thursday, April 25, 2013

மழை நீர் சேமித்தால் மட்டுமே நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க முடிய்ம்.

ஊரணிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றில் மழை நீர் சேமித்தால் மட்டுமே நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க முடிய்ம். நாட்டில் உள்ள அனைவரும் சமூக அக்கறையுடனும், ஓற்றுமை உணர்வுடனும் இதற்க்கான முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டிய தருணம் இதுவே ஆகும்.

மழை நீர் சேமிப்பின் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையே இந்த நிலைக்கு காரணம். பல்வேறு நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மழை நீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். எதிர்கால நீர் தேவை குறித்த சரியான திட்டமிடல் இல்லையெனில் இந்த சமூகம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே மழை நீர் சேமிப்பு திட்டத்தை நிரந்தரமாக செயல்படுத்தவேண்டும்.

போதிய அளவு மழை பெய்ய அதிக அள்வில் மரகன்றுகளை நடவு செய்து  பேணி  பாதுகாதது வளர்ததல் அவசியம்.

1950-1960-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்த ஊரணிகள், குளங்கள், குட்டைகளின் நிலை எப்படி இருந்ததோ, அதனைக் கண்டறிந்து, அவற்றை பழைய நிலைக்கு கொண்டு செல்வதன் மூலம் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூர்ந்து போய் கிடக்கும் இணைப்புக் கால்வாய்கள், வரத்துக் கால்வாய்களை தூர்வாரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

79,394 குக்கிராமங்கள்

செயற்கைக்கோள் உதவியுடன் தயாரிக்கப்பட்ட வரைபடங்களைக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. வருவாய் கிராமங்களின் வரைபடங்களைக் கொண்டு 12,524 கிராம பஞ்சாயத்துகளின் வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 79,394 குக்கிராமங்கள், ஊரணி, குளம், குட்டை போன்ற நீர் ஆதாரங்கள், வரத்துக் கால்வாய் ஆகியவற்றின் தற்போதைய நிலையை கண்டறிய முடியும்.

இதனால் ஒரு குறிப்பிட்ட கிராம பஞ்சாயத்தில் என்னென்ன இருக்கிறது? அங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும்? என்பதைக் கண்டறியவும், கிராமப்புற வளர்ச்சிக்கான தொகுப்பு திட்டங்களை மேற்கொள்ளவும் முடியும்.

மழை நீர்  உயிர் நீர்  என்ற உணர்வு எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்.  தண்ணீரை சிக்கனமாக ப்யன்படுத்தி  நீர் சேமித்தால் மட்டுமே அடுத்த தலை முறை தண்ணீரை விலை கொடுத்து  வாங்க் வேண்டியிருக்காது.


Wednesday, April 24, 2013

வாழ்க்கையில் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி ?

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே எப்பொழுதும் சிந்தியுங்கள்.



* கடந்த காலங்களில் செய்த தவறுகளைப் பற்றி வருத்தப்படாதீர்கள். மற்றும் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்களது கையில் இருக்கும் நிகழ்காலத்தை வெற்றியாக்குவதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

* நீங்கள் உங்களது வாழ்க்கையை பிறருடன் ஒப்பிட்டு கவலைப்படாதீர்கள்.

* உங்களை புரிந்து கொண்டவர்களே உங்களுடைய நண்பர்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களிடமிருந்து விலை எதுவும் பெறாமல் மனோதத்துவ மருத்துவரைப் போன்று உங்களது குறைகளின் பக்கம் உங்களின் கவனத்தைக் கொண்டு செல்கின்றார்கள்.


* உங்களுக்கு துக்கம் கொடுக்கக் கூடியவரை மன்னித்து விடுங்கள், அதனை மறந்தும் விடுங்கள்.

* அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முயற்சித்து குழப்பமடைய வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரே ஒரு பிரச்சனையை மட்டுமே தீர்க்க முற்படுங்கள்.

* முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் உங்களது கவலைகளை மறக்கக்கூடும்.

* வரக்கூடிய பிரச்சனை களைப்பார்க்கக்கூடிய கண்ணோட்டத்தை மாற்றுவதன் மூலம் நீங்கள் துக்கத்தை சுகமாக மாற்றம் செய்ய முடியும்.





மனச்சோர்வை தவிர்ப்பதற்கான சிறந்த வழிகள்.

ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஒருவருக்கு மனச்சோர்வு வந்தால் அவர் எப்படிப்பட்ட வலிமையான மனிதாராக இருந்தாலும் அவரை எளிதில் வீழ்த்திவிடும். ஆனாலும் நமக்கு மனச்சோர்வு ஏற்படும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும்.

மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம்.

இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம். இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவருவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவைகளை பின்பற்றி வந்தால் உங்களுடைய மனசோர்வு படிப்படியாக குறைந்து விடும்.

- வாழ்க்கையின் சுமைகளை தனியாக சுமக்க வேண்டும் என்று யாரும் எதிர்பாப்பது இல்லை. ஆகவே தாய், தந்தை, துணைவர், உடன் பணியாளர் அல்லது நண்பர் இடம் இருந்து உதவி கேட்பது உணர்வுச் சுமையை ஓரளவு குறைக்கும். வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கையாள உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை.

- நல்ல நண்பர்கள் தேவையான ஆறுதலையும், வாழ்க்கையின் சோர்வூட்டும் சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும், தேவையான நேரத்தில், சொல்வதை காதுகொடுத்து கேட்கும் நண்பர் இருந்தால், மனதில் இருக்கும் சந்தேகங்களும், எதிர்மறையான சிந்தனைகளும் முற்றிலும் களைந்துவிடும்,.

- தினசரி உணர்வுகளை எழுத்து மூலமாக பதிவு செய்வது சுயபரிசோதனை செய்வதற்கு சிறந்த வழி ஆகும். இவ்வாறு வாழ்க்கையை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை அனுதினமும் பதிவு செய்தால், மனச்சோர்வில் இருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

- பிறரை குறைத்து பேசுகிறவர்களோடு இருக்க யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து விலகி இருப்பது மன அமைதியையும், சமாதானத்தையும் கொடுக்கும்.

- உங்களுக்கு வரும் பிரச்சனைகளின் வேர் வேலையில் இருந்து தொடங்கினால் அதை விட்டுவிடுவது மன அமைதியை கொடுக்கும். தனிப்பட்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் விட்டுக் கொடுக்காமல், குறிக்கோளை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு வேலை ஒரு தடையாக இருந்தால், அதை விட்டு விடுவதில்லை தவறில்லை.

- மனச்சோர்வோடு இருக்கும் போது, தனிமையில் இருந்தால், மனம் மேலும் சோர்வுடன் தான் இருக்குமே தவிர, அமைதியடையாது. அதற்காக எப்போதுமே கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில்லை.

ஆனால் அவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால், அவை முழுமையான தீர்வை கொடுக்காவிட்டாலும், மனச்சோர்வு தரும் சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப வழி செய்யும்.

வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பதே மனச்சோர்வு கொடுக்கும் சிந்தனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. சிந்தனைகளை நேர்மறையான திசையில் செலுத்துவதன் மூலமாக, மனச்சோர்வின் தாக்கங்களை அகற்றிவிடலாம். 

Thanks to Malaimalar.com
------------------------

Monday, April 22, 2013

சொத்துக்களை பகிர்ந்தளிக்கும் போது தங்கள் பிள்ளைகளிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள்



வாழ்வில் நாம் எதிர்நோக்கும் முக்கியப்பிரச்சினைகளுக்கு குடும்ப நலவிரும்பிகள் என்பவர்களை வைத்து ஒரு கலந்தாய்வு  செய்வதை விட சம்மந்தப்பட்ட நாமே நம் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை மட்டும் வைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டால் எல்லாக் குழப்பமும் தீரும். காரணம் நலவிரும்பிகள் என நாம் நம்பிக்கொண்டிருப்பவர்களில் பலர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலித்தனமானவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். இவர்களை வைத்து ஆலோசனை செய்வதை விட நாமே நமது பிரச்சனைக்ள்  பற்றி. கலந்து ஆலோசனை செய்யலாம்.

எதுவானலும் அதிக எதிர்பார்ப்புகளை குறைத்து, நாம் மதி கொண்டு முயற்ச்சி செய்தாலும் ஆண்டவன் நமக்கு விதித்து நடக்கும் என்ற நம்பிக்கையும் உண்டாக்கி கொண்டால் குழப்பம், ஏமாற்றம், கோபம் ஆகியவற்றை தவிர்க்கலாம்..



சொத்துக்களை பகிர்ந்தளிக்கும் போது பெற்றோர்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதனால் குடும்பத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படும்.

பெற்றோர்கள் தன்னை ஏமாற்றி சதி செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட  குடும்ப உறுப்பினர் என்னுவர்.

பெற்றோர்கள் தமது குடும்பச்சொத்துக்களை தனது குடும்ப உறுப்பினருக்கு அதாவது மகனுக்கோ அல்லது மகளூக்கோ  விற்க்கக்கூடாது.

வாழ் நாளில் மகனோ அல்லது மகளோ குடும்ப  செலவுக்காகவோ, அல்லது ஏதேனும் சொத்துகள் வாங்கவோ, அல்லது வீடு கட்டவோ சிறிய தொகை கொடுத்து  உதவியிருப்பார்  அதற்க்காக  பெற்றோர்கள் தமது குடும்பச்சொத்துத்தில் பெரும் பகுதியை அவருக்கு கொடுத்துவிடுகின்றனர்.

பெற்றோர்கள் தனது மகள் வழி பேத்தியை தனது மகனுக்கு மணம் முடிக்க என்னுவர் மகன் மறுபதனால் சொத்தில் ஓரு பகுதியை வழங்குவதாக தன்னிச்சையாக மகளிடம் உறுதி  மொழியளிப்பர். இவ்வாறு  செய்யக்கூடாது.

பின் நாளில் நம் குடும்பத்தில் சொத்து  பிரச்சனைகள் வரமலிருக்க, குடும்பத்தில் உள்ள உறுப்பினர் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை மட்டும் வைத்து அனைவரிடமும் தனித்தனியாகவும்  மொத்தமாகவும் எல்லாப்பிரச்சனைகள் பற்றி கலந்து ஆலோசனை  செய்த பிறகே  தனது குடும்பச்சொத்துக்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.



ஓருவர் நல்ல  அரசாங்க வேலையில் இருப்பார், ஒருவர் சுய தொழில் புரிபவராக இருப்பார், ஒருவர் தனியார்  நிறுவனத்தில் ப்ணிபுரிவார், ஓருவர் படிக்காதவராயிருப்பார், சகோதரியின் கணவர் வசதி படைத்தவரர்யிருப்பார் அல்லது வசதி குறைந்தவராய் இருப்ப்பார். இவ்வாறு இருப்பதனால் தேவைக்கு ஏற்றவாறு சொத்துக்களை பகிர்ந்தளிக்க குடும்பத்தில் உள்ள உறுப்பினர் அனைவரிடமும் கலந்து ஆலோசனை  செய்வதனால் ஓருவருக்கு  அதிகமாக கொடுத்தாலும், ஒருவருக்கு குறைவான அள்வு சொத்துக்கள்  கிடைத்தாலும் சம்மத்துடன் பெறுவதனால்  பின்  நாளீல்  பிரச்சனை இன்றி நலமாக வாழ்வர்.

s.sivakumar

கண்ணில் கரு வளையம் நீங்க



நம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை பிரதானமாக்கிப் புனையப்படுகின்றன. முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடியென இருக்கும் முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம். முகம் என்றதும் பொதுவான ஒரு உறுப்பாக கருதாமல் கண், புருவம், மூக்கு, கன்னம், உதடு, தாடை, நெற்றி, காது என்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் முகத்தின் அழகு வெளிப்படுகிறது. இந்த வாரம் கண்ணைப் பற்றி பார்க்கலாம்.

கண்கள்

 நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக
கண் இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.


Eyesபேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.

கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.

கண்: கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்

* கண்ணை மூடியபடி, வெள்ளரிச் சாறால், கண்ணைக் கழுவலாம்; பஞ்சில் தோய்த்தும், 10 நிமிடம் கண் மீது வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

* தக்காளிச் சதை, மஞ்சள் பொடி, எலுமிச்சை சாறு, கடலை மாவு ஆகியவற்றை, பசை போல கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது பரப்பி, இரண்டு மணி நேரம் ஊறலாம். தூங்கும் நேரத்தில் செய்தால், உங்களுக்கு வசதி. வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வர, கரு வளையம் மறையும்
.

Friday, April 19, 2013

மனிதன் கால ஓட்டத்துடன் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்


றியாமை என்னும் எதிர்மறைக்கு ஆட்படுவது:

பெரும்பாலும் ஒன்றில் வெற்றிபெறாமைக்கு என்ன காரணம் என்றால், அதைப்பற்றிய தெளிவான அறிவு இல்லாமையே. தெளிவு இல்லாததால், அதுபற்றிய பயம் நம்மை தொற்றிக்கொண்டு, முயற்சிக்கும் முன்னமே, தோற்று விடுவோமோ என்கின்றஎதிர்மறைக்கு ஆட்பட்டு விடுவோம்.

எடுத்துக்காட்டாக, ஓர் இளம் பெண் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டாள். அவள் கொஞ்சம் நிறம் குறைவாக இருந்ததால், தேர்வு செய்யப்படவில்லை, அதனால் அவள் சொன்னால் நான் மட்டும் கொஞ்சம் சிவப்பாக பிறந்திருந்தேன்னென்றால் அன்றைக்கே உலக அழகியாகி பேரும் புகழுடன் இருந்திருப்பேன். என்போதாத காலம் இப்படி கஷ்டப்படுகின்றேன் என்றும் அதுபோல் ஒரு அங்குலம் உயரம் குறைவாக இருந்தால் ஒருவன் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யாது போனதால், நான் மட்டும் ஓர் அங்குலம் உயரமாக பிறந்து இருந்தேன் என்றால் அன்றைக்கே காவல்துறைஅதிகாரியாகி, பெரியபெரிய பதவியை அடைந்து பேரும் புகழும் பெற்று பெரியவனாகி இருப்பேன். பாலாய்ப் போன இறைவன் என்னை இப்படி குறையாக படைத்து, இந்த இழி நிலைக்குத் தள்ளிவிட்டானே என்றான். இவர்கள் எல்லாம் தன்னிடம் இருப்பதைக் கண்டு கொள்ளாமல், இல்லாததை எண்ணி எண்ணி துன்புறுபவர்கள்.

இவர்களே கொஞ்சம் மாற்றி யோசித்திருந்தால், நான் கொஞ்சம் அழகு குறைவாக இருந்தால் என்ன? அழகைப்பற்றிய அறிவு நிறைய என்னிடம் உள்ளதே அதைவைத்து, உலக அழகியை தேர்ந்தெடுக்கும், உயர்மட்டக்குழுவின் தலைவியாகி, அதே பேரும், பெறலாமே என செயல்பட்டிருக்கலாம் அல்லவா!

நான் உயரம் குறைவாக இருந்தால் எனக்கு போலீஸ் வேலை கிடைக்காவிட்டால் என்ன, அந்தப் போலீஸ் காரர்களை வேலை வாங்கும், அறிவும், ஆற்றலும் என்னிடம் உள்ளதே அதை வைத்து ஒரு மாவட்டத்தின் ஆட்சியாளராகி பேரும் புகழும் பெறலாமே என முயற்சி செய்திருக்கலாம் அல்லவா!

இதனால் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தனது பாடலிலே அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்,



“அறிவுக் கண்ணைச் சரியாத்திறந்தால்
பிறவிக் குருடனும் கண்பெருமான் என்று”!

ஆகையினால் நம் அறிவை மேம்படுத்த மேம்படுத்த நமது வெற்றி எளிதாகும் என்பதில் ஐய்யப்பாட்டிற்கு இடமில்லை.
மாறுதலுக்கு உடன்படாதது

பெரும்பான்மையோர் வாழ்வில் பின்தங்கிப் போவதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

பாரம்பரியமாக, செய்து வந்த தொழிலை நவீனமயமாக்கலுடன் இணைந்து செயல்படாததால் தோல்வியை தழுவிவிடுகின்றனர். எடுத்துக்காட்டுக்காக, எனது பள்ளிப் பருவத் தோழனின் தந்தை பிரபல ஓவியர், அவர் தூரிகையை எடுத்து எழுதினாலும் சரி படம் வரைந்தாலும் சரி அச்சு அசலாகவே கண்ணைக் கவரும் வண்ணம் பிரமாதமாக இருக்கும். அன்றைக்கு விளம்பர போர்டு செய்வதில் நண்பனின் தந்தைதான் மிகவும் பிரபலமானவராக இருந்தார். அவருக்கு வெளிமாநிலங்களில் இருந்துகூட விளம்பர போர்டு செய்ய தேடி வருவார்கள். அவர் 1990ம் ஆண்டிலேயே அதிகபட்சமாக ஒரு விளம்பர போர்டுக்கு ஒரு லட்சம் வரை வாங்கி உள்ளார் என்றால் பாருங்களேன்.
  என் நண்பன் படிப்பு முடிந்ததும், அப்பாவுடன் சேர்ந்து அதே வேலையைச் செய்யத் தொடங்கினான், ஆனால் அவன் தொழிலுக்கு வந்த காலம் நவீன டிஜிட்டல் ஃப்ளக்ஸ் போர்ட்டுகளின் ஆதிக்கம் மிகுதியாக இருந்ததால், அவன் தொழில் நசியத் தொடங்கியது. உடனே அவன் நவீன தொழில் நுட்பத்தைச் சென்னை சென்று கற்று வந்து தனது தொழிலை அந்த நிலைக்குத் தக்க, டிஜிட்டல், ஃப்ளக்ஸ் போர்டுகளை செய்யத் தொடங்கினான். இப்போது அவன் தயாரிக்கும் விளம்பர போர்டுகள், நாடுமுழுவதும் விற்பனையாகிறது. அவனும், அவன் தந்தையைப்போல் இன்று மிகப்பிரபலமான விளம்பரப் போர்டு தயாரிப்பாளராக வளர்ந்துள்ளான். இன்று அவன் தூரிகையை (க்ஷழ்ன்ள்ட்) கையிலெடுப்பதில்லை, இருந்த போதும் இன்று மும்பை விமான நிலையத்தின் அருகில் இருக்கும் பிரமாண்டமான விளம்பர போர்டு அவனுடைய நிறுவனம் தயாரித்ததாக உள்ளது. ஆனால் அவனைவிட திறமையான ஓவியர்கள், நாங்கள் தூரிகையைத்தான் பயன்டுத்தி எழுதுவோம் என்றபிடிவாதத்தால், சிலர் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டு, சுவர்விளம்பரங்களை எழுதி வயிற்றுப்பிழைப்பை நடத்தி வருகின்றனர். இவர்களைப் பார்த்து சமூகம் என்ன சொல்கிறது என்றால் இவனெல்லாம் திருந்தவே மாட்டான் பெரிய பருப்பு என்று நினைப்பு என்கிறது.

கால ஓட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு, இயங்குகின்றவர்களே, முன்னேறிக் கொண்டே இருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது.


மனம் போல் வாழ்வு


மனம்போல் வாழ்வு என்பது பெரியோர் வாக்கு. அதாவது – “நமது மனதில் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப்போலவே நமது வாழ்க்கை அமையும்” என்பது பெரியோர் அனுபவித்து நமக்கு அருளிய கருத்தாகும். நமது மனம் நல்லதாக இருந்தால் நமக்கு நிகழ்பவையெல்லாம் நல்லவையாகவே இருக்கும். அதே நேரத்தில் நமது மனதில் கெட்ட எண்ணங்கள் நிறைந்து காணப்பட்டால் நமது செயல்பாடுகளும் கெட்டதாகவே உருவெடுக்கும் என்பதை தெளிவாக முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் – சமீபகாலமாக “மனம்போல் வாழ்வு” என்னும் அமுத வாக்கை சில இளம் வயதினர் குறிப்பாக “டீன்ஏஜ்” பருவத்தினர் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். “மனதில் நினைத்ததையெல்லாம் உடனே செயல்படுத்த வேண்டும்” என்று எண்ணி களம் இறங்குகிறார்கள். 

மனதில் நினைத்த செயல்களை நடைமுறைப்படுத்தும்போது அவர்கள் திருப்தியடைகிறார்கள். ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். அதேவேளையில் தாங்கள் நினைத்த செயல்கள் நிறைவேறவில்லையென்றால் சோகத்தில் தள்ளாடுகிறார்கள். இந்த உலகமே தனக்கு எதிராக இருப்பதுபோல அவர்கள் உணருகிறார்கள். அந்தச் செயல் நிகழாவிட்டால் தங்களுக்குப் பெரிய அவமானம் நிகழ்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்குக்கூட அவர்கள் தானாக முன்வந்து விடுகிறார்கள்.

“நாம் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும்” என்றஎண்ணம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த எண்ணம் நிறைவேறுவதற்குச் சுற்றுச்சூழல் (Environment) தடையாகவும் இருக்கலாம் என்பதை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த (ஆகஸ்ட்) மாதம் நடந்த இரண்டு நிகழ்வுகள் இன்றைய மாணவ – மாணவிகளின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

“எனக்கு தலைவலிதான் பெரிய நோயாக இருக்கிறது” என்று ஒரு நோயாளி டாக்டரிடம் போனார். அவரைப் பரிசோதித்த டாக்டர் “உங்களுக்கு ‘பிளட் பிரஷர்’ இருக்கிறது. அதுதான் தலைவலிக்கு காரணம்” என்றார். இங்கு நோயாளி தனக்கு தலைவலித்தவுடன் தனது நோய் “தலைவலி” என்று முடிவுக்கு வந்துவிட்டார். தனக்கு தோன்றிய “அறிகுறி”(Symptom)யைப்பார்த்து அதுதான் தனது நோய் எனத் தவறாக முடிவு செய்தார். பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என பல்வேறு பரிசோதனைகளை நடத்தி அந்த நோயாளியின் உண்மையான நோய் “பிளட் பிரஷர்” என்று முடிவுக்கு வந்தார் டாக்டர்.

நோயைக் கண்டுபிடிக்க நோயாளியும் முயற்சி செய்தார். டாக்டரும் முயற்சி செய்தார். உடல் பிரச்சனைகளைப்பற்றி தெளிவாகத் தெரிந்த டாக்டரின் பார்வை இங்கு வித்தியாசமானது. ‘தலைவலி’ என்னும் அறிகுறிக்கு அடிப்படை காரணமாக அமைந்த ‘பிளட் பிரஷர்’ நோயைச் சரிசெய்துவிட்டால் நிரந்தரமாக தலைவலியைப் போக்க முடியும்.

இதைப்போலத்தான் உண்மையான பிரச்சனையை ஒழுங்காகப் புரிந்துகொண்டால் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிடலாம்.

பிளஸ் – 2 படிக்கும் மாணவிகள் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தினால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பது வகுப்பு ஆசிரியையின் நம்பிக்கை. படிக்கும்போது கவனம் சிதறினால் எதிர்காலம் சிறப்பாக அமையாது என்பதை உணர்ந்த அனுபவமிக்க ஆசிரியைகள் மாணவிகளைப் படிப்பில் கவனம் செலுத்தசொல் கண்டிப்புடன் நடந்துகொள்வது இயற்கைதான். ஆனால் அதற்காக ஒரு மாணவி விஷம் குடித்து தனது உயிரை போக்கிக்கொள்ள முயன்றது எந்த விதத்தில் நியாயம்? ஆகும். கண்டிப்புடன் இருக்கும் ஆசிரியைதான் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுப்பதும், அதற்கு மற்றவர்கள் உதவியாக அமைவதும் புனிதமான ஆசிரியர் தொழிலுக்கே அவமானம் அல்லவா!.

“மனம்போல நான் நினைத்ததெல்லாம் நடக்கவேண்டும்” என்று இப்போது டீன் ஏஜ் பருவத்தினரில் சிலர் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். தனது மகிழ்ச்சிக்குத் தடையாய் இருக்கும் எவரையும் அவர்கள் மதிப்பதில்லை. பத்து மாதம் சுமந்துபெற்றதனது தாயையும், வாழ்நாள் எல்லாம் சிறப்பாக வாழ பயன்படும் கல்வியை வழங்கிய தந்தையையும்கூட இவர்கள் சிலநேரங்களில் மனம் வருந்தச் செய்துவிடுகிறார்கள். தங்கள் மகிழ்ச்சிக்குத் தடையாய் இருக்கும் தனது பெற்றோரையும் நண்பர்களையும், உறவினர்களையும் இவர்கள் ஒதுக்கவும் தயாராக இருக்கிறார்கள். “ஏன்?” என்று தன்னை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

பெற்றோரும், நண்பர்களும், ஊர்க்காரர்களும் வேண்டுமென்றால் இவர்கள் சொல்வதற்கெல்லாம் “ஆமாம்சாமி” போட்டு அத்தனையையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆசிரியர் தொழில் ஈடுபடுவர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை. பெற்றோருக்கு ஒரு மாணவி ஒரே பிள்ளையாக இருக்கலாம். ஆனால் ஒரு வகுப்பில் சுமார் 40 மாணவிகள் இருப்பதால் அவர்களுக்கு 40 பிள்ளைகள் இருப்பதாகவே அர்த்தம். அவர்கள் எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும். சாதி, மதம், பணம் – ஆகிய ஏற்றத்தாழ்வுகள் பாராமல் எல்லோரையும்  வழிநடத்த வேண்டிய பொறுப்பு (Responsibility) ஆசிரியர்களுக்கு இருக்கிறது. மற்றமாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்கும் மாணவ – மாணவிகளை நல்ல ஆசிரியர்கள் சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை மாணவ – மாணவிகள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தது தவறான செயலாகும். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண எத்தனையோ வழிகள் உள்ளது. அதனை விட்டுவிட்டு இப்படி விபரீத முடிவை எடுப்பதற்குக் காரணம் “என் மனம்போல் வாழ்வேன் என்று இளம் வயதிலேயே தீர்மானிப்பதுதான்.

“தான் நினைத்தது நடக்கவில்லை யென்றால் எந்த முடிவும் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்பதை மற்றவர்களுக்கு உணர்;த்துவதற்காகத்த்தான் இப்படி செயல்படுகிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்?

இன்னொரு சம்பவம்…

எந்தவொரு செயலையும் எப்படியாவது எதிர்ப்பேன். நான் தவறு செய்தாலும் அதை நியாயம் என்று மற்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்வதுதான் அடிப்படைக் காரணமாக அமைகிறது.

பொதுவாக எதிர்பாராதவைகள் நிகழும்போது வெறுப்பு, அவமானம், எரிச்சல், கோபம் போன்றவைகள் உள்ளத்தில் உருவாகும். இந்த உணர்ச்சிகளையெல்லாம் சிலர் முறையாக வௌல்ப்படுத்தத் தெரியாமல் உள்ளத்திற்குள் அடக்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஒரு பிரஷர் குக்கரில் தேவைக்கு அதிகமான அழுத்தம் தோன்றும்போது அதனை வௌல்ப்படுத்த வால்வு பயன்படுகிறது. இதைப்போலவே அளவுக்கு அதிகமான மன அழுத்தங்கள் உருவாகும்போது அதனை வௌல்ப்படுத்துவதற்கு நல்ல நண்பர்களையும், தோழிகளையும் தேர்ந்தெடுத்து பழக வேண்டும். அதனைத் தவிர்த்துவிட்டு உணர்ச்சிகளை அடக்கி வைத்துக்கொண்டால் இதுபோன்றதற்கொலை முயற்சிகள் தானாகத் தோன்றிவிடும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் இதுபோன்றஎதிர்மறை உணர்வுகளுக்குத் தகுந்த வடிகால்களைத் தேடிக்கொள்வது அவசியம்.

“கட்டுப்பாடு இல்லாத -ழல் வேண்டும். மனம்போல வாழ வேண்டும்” என எண்ணுவது தவறல்ல. ஆனால் படிக்கின்றகாலத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளெல்லாம் நம்மை நெறிப்படுத்த உதவும் “விதிகள்” என எண்ணவேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் நம்மை வீழ்த்தும்”சதிகள்” என எண்ணினால் வேதனைதான் வௌல்ப்படும்.

ஒரு பூந்தோட்டம் செழிப்பாக இருக்கவேண்டுமென்றால் அதற்கு முறையாக நிலம் கொத்தி, தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து, வே அமைத்து கண்காணிக்க வேண்டியது தோட்டக்காரரின் பொறுப்பு அல்லவா! பூந்தோட்டக் காவல் காரர்களாக செயல்படும் ஆசிரியர்கள் சில நேரங்களில் கண்டிப்புடன் கடமைகளை ஆற்றலாம். ஆனால் – அந்தக் கண்டிப்பு பள்ளி, கல்லூரி மாணவிகளை நெறிப்படுத்தவும் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும் செயல் என்பதை மாணவ – மாணவிகள் உணர்ந்துகொண்டால் அவர்கள் வாழ்க்கை சிறக்கும்.நல்ல மனம் கொண்டவர்களுக்கு நாளும் சிறப்பு உண்டாகும்.

எந்தப் பறவையும் பிச்சை எடுப்பதில்லை

பறவைகள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை!!

உணவு தானியங்களை விளைவிக்க வேண்டிய மனிதனே, இலவசங்களால் திக்குமுக்காடிப் போய், விதைப்பதை (உழைப்பதை) மறந்துவரும் காலகட்டத்தில் பறவைகளாவது விதைப்பதாவது? என்று என் நண்பர் ஒருவர் கேட்டார்.

எல்லா உயிரினங்களையும் படைத்த இறைநிலை, அவைகளுக்கான அனைத்து வசதிகளையும், வாழ்வாதாரங்களையும் உண்டாக்கிய பின்பேதான் படைத்துள்ளது.

“எந்தப் பறவையும் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை” என்ற இந்தச் சொற்கள் பைபிளில் உள்ளவை. இதன்பொருளை நாம் விரிவாய் காண்போம்.

பறவைகளை முட்டையிடும் மிருகம் என்று தான் உலகம் முழுதும் கூறுகின்றனர். இவற்றுக்கு ஐந்தறிவு உள்ளது. தொடு உணர்வு, சுவையுணர்வு, முகரும் திறமை, பார்க்கும் திறன், கேட்கும் சக்தி ஆகியனதான் இந்த ஐந்தறிவு. ஆனால், மிருகங்களுக்கு நான்கு கால்கள் உள்ள நிலையில், பறவைகட்கு முன் கால்கள் இரண்டும் இறக்கைகளாக மாற்றி அமைக்கப்பட்டுவிட்டன.


பரிணாம வளர்ச்சியில், உணவு தேடுதல், பாதுகாப்பு, இடமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னங்கால்கள் மறைந்து இறக்கைகள் உண்டாக்கப்பட்டன. இருகால்களிலும், ஒற்றைக்காலில் நின்றுகொண்டு, மற்றொரு காலை மடக்கி, இறகுகளுக்குள் வைத்துக்கொள்ளும் பழக்கமும் கொண்டவை இப்பறவையினம்.

சுமார் 10,000 வகையான பறவைகள் இந்தப் பூமியில் உள்ளன. ஆர்க்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா வரை எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் உயிர் வாழ்கின்றன. சுமார் 2” முதல் 9′ என்ற அளவு வரையிலான பறவைகள் உள்ளன. பறப்பதால் தான் பறவை என்ற பெயர் பெற்றன.


ஆனால், பறக்காத ஒரு பறவையும் உள்ளது. நியூசிலாந்தில் மோ (Moa) என்ற பெயருள்ள பறவைக்கு இறக்கைகள் இல்லை; பறக்க முடியாது. இறக்கைகள் உள்ள பெங்குயின் போன்றபறவைகளும் பறப்பதில்லை. இந்தப் பெங்குயின் இனத்தில் பெண் பறவை முட்டையிட, ஆண் பறவை அடைகாக்கும் விசித்திரம் நிகழ்கிறது.

பறவைகளில் புத்திசாலிப்பறவை கிளிகள். நாம் சொல்வதை கவனமாகக் கேட்டு, அதேபோல் சொல்லும் திறமை உள்ளவை. தற்போது கோவை அருகில் சோமனூரில் மைனா ஒன்று மிக அருமையாகப் பேசுவதாய் நாளிதழில் செய்தி வந்துள்ளது. புறாக்கள் முன்பு செய்திகளை எடுத்துச் சென்றன எனப் படித்துள்ளது நினைவுக்கு வரும். நிலத்தில் நடந்தால் பாதை உண்டாகும்; தெரியும். ஆனால், வானத்தில் பறந்தால், வழியே தெரியாதே.

சரியான திசையில் பறந்து, இலக்கை அடையும் திறமையுள்ளவைதான் புறாக்கள். பல தலைமுறைகளாக இப்பறவையினங்கள் தமது வாழ்க்கை முறையை, அப்படியே தம் சந்ததியினருக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் கொடுத்துவருகின்றன. இதை ஆங்கிலத்தில் “Cultural Transmission of Knowledge”என்று கூறுகின்றனர்.

இவைகளின் மொழி சப்தம். சிறிது இழுத்து சப்தம் போட்டால், அது பாட்டு. உணவுக்காகவும், முட்டையிடுவதற்காகவும் சில பறவைகள் தம் இடத்தை மாற்றிக்கொள்கின்றன. வருடம் ஒன்றுக்கு சுமார் 64,000 கி.மீ. தூரம் பறந்துசெல்லும் கடல் பறவைகள், நிறுத்தாமல் சுமார் 2500 கி.மீ. தூரம் பறந்து செல்லும் நிலப்பறைவகள், சுமார் 4000 கி.மீ. தூரம் பறந்து செல்லும் கடற்கரைப் பறவைகள் எனப் பல உள்ளன.

கழுத்தை 1800 பின்புறம் திருப்பி முகத்தை முதுகுப்பக்கம் கொண்டு செல்லும் தன்மை படைத்தவை பறவைகள். வௌவால் உட்பட பல பறவைகள் தலைகீழாகத் தொங்கும் சாதுர்யம் மிக்கவை. மனிதன் தோன்றிய காலம் முதலே மனிதனுக்கு பறவை இனத்துடனான உறவு இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.

முயற்சி திருவினையாக்கும்

“Early Bird Catch the Worm”,அதிகாலை எழுந்து பணிகளைத் துவக்கினால் வெற்றி நம்மைத் தேடிவரும். நேர நிர்வாகம் பறவைகளின் சிறப்புத்தன்மை. ஒவ்வொரு நாளையும் பிரித்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள” - குறள் 527

தனக்குக் கிடைத்த உணவை மறைத்து வைத்துத்தானே உண்ணாமல், தன் சுற்றத்தைக் கூவி அழைத்து, பகிர்ந்து உண்ணும். செல்வம் பெற்றவர்களும் இத்தகைய பண்புடையவர்களாகத் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்தனர். நாளைக்கு வேண்டும் என மறைக்காததால் பறவைகள் கவலையில்லாமல் வாழ்கின்றன.

பிச்சை எடுப்பதில்லை

எந்தப் பறவையும் உடல் ஊனம், மனநிலை சரியில்லை, இயற்கை பொய்த்துவிட்டது எனப் பிச்சை எடுப்பதில்லை. உடல் ஊனமுற்ற சில பறவைகள் கூடத் தம் உணவைத்தேடி பல இடங்களுக்குச் செல்வதைப் பார்க்கிறோம்.

சிறுகுஞ்சுகள் தமக்குத் தேவையான உணவைத் தேடிச்செல்லும் வரை, தாய்ப்பறவை, தன் அலகினுள் அவற்றுக்கு உணவை எடுத்துவந்து அன்புடன் அக்கறையாய் கொடுக்கிறது.



உன் நண்பனே உன் எதிரி

உன்னுள்ளே அல்லது வெளியே இருக்கும் எதிரிகளை இனங்கண்ட பின்னரும் சும்மாயிருக்கலாமா? உடனே செயல்படுங்கள்.

உன் நண்பனே உன் எதிரி

உன் வகுப்பில் உன்னோடு படிக்கும் சில நண்பர்கள் – உன்னைப் புகைக்க அழைப்பார்கள். இப்போது சொல் அவர்கள் உன் எதிரிகள் தானே?


இவர்களில் சிலர் மனதளவில் ஆர்வத்தைக் குலைப்பார்கள். இரண்டு மடங்கு ஆர்வத்தோடு படிப்பது தான் நீ இவர்களுக்குக் கொடுக்கும் பதிலடியாகும்.
 
சிலர் வகுப்புக்கு அல்லது பள்ளிக்கு வெளியே சண்டைக்கு இழுப்பார்கள். இவரோடு நேரடியாக மோதாதே. பழிக்குப் பழி என்றபோக்குத் தவறானது. என் கண்ணைக் குத்தினான். எனவே அவன் கண்ணைக் குத்தினேன் என்று இருவரும் குருடாகலாமா?
 
தாக்க வந்தால் பொறுமையாயிரு. உடனே தலைமையாசிரியரிடம் சொல். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒருபோதும் சட்டத்தை நீ கையில் எடுக்காதே.
 
கழுத்தைப் பிடித்து நெருக்கினால் பொறுமையாய் இருக்காதே. திருப்பித்தாக்கு. நமது உயிரை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான உரிமை (Right of Private Defense) நமக்குள்ளளது.
 
எனக்கும் இப்படிப் பட்ட நண்பர்கள் இருந்தார்கள். கொஞ்சம் சண்டையும் போட்டேன். பிறகு ஞானோதயம் வந்தது. அவர்களை ஒதுக்கி விட்டு, படிப்பில் இரண்டு மடங்குஆர்வம் காட்டினேன். அவர்கள் இன்றும் சிட்டுக் குருவிகளாக – ஆட்டோ ஓட்டுநராக, ஆட்டோ பழுதுநீக்குபவர்களாக இருக்கிறார்கள். நான் மேகங்களின் மேலே பறக்கும் பருந்தாக – காவல்துறை உயர் அதிகாரியாக வலம் வருகிறேன். இப்போது அவர்கள் என்னிடம் உதவி கேட்டு வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது நான்தான் அவர்களுடைய சிறந்த நண்பன் என இப்போது சொல்கிறார்கள்.
 
எனவே தீய நண்பர்களோடு சேராதே. அவர்களுடைய சொல்லுக்கு செவி சாய்க்க வேண்டாம். அவர்களைப் பழிதீர்த்துக் கொள்ள ஒரே வழி – இரு மடங்கு வெறித்தனத்தோடு படிப்பது தான். இதுதான் நான் சென்றவழி, உனக்கு சொல்லும் வழி; எதிரிகளை வெல்லும் வழி.
உனக்குள்ளே எத்தனை எதிரிகள்

உனக்குள்ளேயே இருக்கும் எதிரியைச் சமாளிப்பது சற்று கடினம்தான். அதற்கு அதீத துணிச்சலும், மிகுந்த கட்டுப்பாடும் வேண்டும். கூடுதலாக நிறைய சுயபரிசோதனை செய்ய வேண்டும்.


உன் நண்பன் உன்னை புகைப்பிடிக்கச் சொல்கிறான். சரி எனத் தலையாட்டும் முன் – கை நீட்டும் முன், ஒரு கேள்வி கேள்.

நான் புகைப்பதை என் தாய் விரும்புவாளா? நான் புகைப்பதைப் பார்த்தால் ஏற்றுக் கொள்வாளா?

தாய் விரும்பாத ஒன்றை, நீயும் விரும்பாதே, விட்டொழி. ஒரு எதிரியை வீழ்த்தியாயிற்று.
 
முதல் மதிப்பெண் பெறுகிறான் உன் நண்பன். அவனைப் பார்த்து உனக்கேன் பொறாமை? அவன் முதல் மதிப்பெண் பெற விலையாகக் கொடுத்தது அவனது வியர்வை. அதை உணராமல், பொறாமைப்படுவது, அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது காலவிரயம். அவனைப் போல் நானும் உழைப்பேன். மதிப்பெண் பெறுவேன் என்று எண்ணி பொறாமை என்னும் எதிரியை வீழ்த்து.

உன் செயல்பாட்டுக்கு உன் உடலே தடையாக இருக்கலாமா? கூடுதல் எடையா? கூடுதல் விழிப்புணர்வு தேவை.

‘ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கு’ என்று கூறினர் நம் முன்னோர். உண்பதைக் குறை ஆனால் மனதில் உறுதி வேண்டும். வருத்த வேர்க் கடலையைக் கைநிறைய கொடுத்தாலும் ஒன்றை மட்டும் கொரித்து விட்டுப் போதும் எனச் சொல்லும்
மன உறுதி வேண்டும்.

பீசா, பர்கர் போன்றவற்றை உண்பதை நீக்கி, காய்களையும் கனிகளையும் உண்டால், பாரதியார் விரும்பியவாறு வாள் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடல் கிடைக்குமே.

தினமும் உடற்பயிற்சி செய்க. அல்லது வாரத்தில் மூன்று நாள்களாவது ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் என்பதை வழக்கப்படுத்திக் கொள். எடை குறைந்து, நடையில் மிடுக்கு ஏற்படும். தோற்றப் பொலிவு உண்டாகும். உனக்குள் நம்பிக்கையும் உற்சாகமும் ஒருசேர ஊற்றெடுக்கும். மிதமான உணவும் முறையான உடற்பயிற்சியும் மருத்துவ செலவைப் பாதியாய் குறைக்கும். ஆம். உடற்பயிற்சி ஒரு தவம். அதன் பயன் உடல் நலம் என்னும் வரம்.

இந்த நல்ல செய்தியை உன் பெற்றோருக்கும் சொல்.
 
நம் அக எதிரிகள் மற்றும் புற எதிரிகளுக்கான போரை நிறுத்தவே கூடாது. வாழும் வரை இப்போரைத் தொடருவோம்.

 நன்றி: சைலேந்திர பாபு செ



Wednesday, April 17, 2013

கல்விக் கடன் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?


கல்விக் கடன் வாங்க முடிவெடுத்திருக்கிறீர்களா? என்னென்ன ஆவணங்களை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நீங்கள் மாத வருமானம் பெறுபவராக இருந்தால்

1. அடையாளச் சான்றிதழ்

நீங்கள் மாத மருமானம் பெறுபவராக இருந்தால், உங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, அரசு வழங்கும் ஏதாவது அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

2. வருமான சான்றிதழ்

நீங்கள் சம்பளம் வாங்குவதற்கான வருமான சான்றிதழ், அல்லது படிவம் 16 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

3. இருப்பிடச் சான்று

நீங்கள் குடியிருப்பதற்கான சான்றைத் தரும் வங்கி கணக்கு அறிக்கை, இறுதியாக மின் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, மொபைல் கட்டணத்தைச் செலுத்தியற்கான ரசீது, தொலைபேசிக் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, கிரெடிட் கார்டு அறிக்கை, இருக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். எந்த வங்கியில் உங்கள் சம்பளம் கிரெடிட் செய்யப்படுகிறதோ, அந்த வங்கியின் அறிக்கை மிகவும் முக்கியம்.

மற்ற பணிகளில் ஈடுபடுபவராக இருந்தால்

1. அடையாளச் சான்றிதழ்

பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

2. வருமான சான்று

நீங்கள் ஈட்டும் வருமானத்திற்கு 2 ஆண்டுகளுக்கான ஐடி ரிட்டர்ன்ஸ் மற்றும் 2 ஆண்டுகளுக்கான வருமான சான்று மற்றும் அதற்காக அரசு தணிக்கையாளர் அளித்த சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

3. இருப்பிடச் சான்று

வங்கிக் கணக்கு அறிக்கை, இறுதியாக செலுத்திய மின் கட்டண ரசீது, மொபைல் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, கிரெடிட் கார்டின் இறுதி அறிக்கை, குடியிறுக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த ரசீது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Thanks to One india.com

காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்



காற்று இல்லாமலே, காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரித்து செயல் வடிவம் காட்டியுள்ளார், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து வாலிபர்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, கண்டுபிடித்துள்ளார்.



இதற்கான முயற்சியில், மூன்று ஆண்டுகளாக ஈடுபட்ட அவர் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என, கண்டுபிடித்துள்ளேன். காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும்; மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின், இரு பக்கமும் உள்ள, இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது. ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்ட வேண்டும் என்பதால், என் சக்திக்கு தகுந்தவாறு காற்றாலை அமைத்து, அதில் சிறிய அளவில் மின்சாரமும் கிடைக்க செய்துள்ளேன். போதிய பணவசதி இல்லாததால், ஆராய்ச்சியை தொடர தடை ஏற்பட்டுள்ளது.நான் செய்த செயல் வடிவத்தை, மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில் ஒப்படைக்க உள்ளேன். ஐந்து பேர் சேர்ந்து பவர் விஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் ஆரம்பித்துள்ளோம். டிரஸ்ட்டுக்கு பணம் செலுத்த விரும்புவோர், 99944-97959 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to Dinamalar


Tuesday, April 16, 2013

சர்க்கரை நோய் உண்டாக்கும் சிக்கல்கள்

சர்க்கரை நோய் வந்தால் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  சர்க்கரை நோய்  வந்துவிட்டால் பயப்பட தேவையில்லை. அதே சமயம் பல சிக்கல்களுக்கு சர்க்கரை நோயே  காரணம் என்பதை தெரிந்து கொண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் உண்டாக்கும் சிக்கல்களை சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான விளக்கங்களை அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.

1. தாழ் நிலை சர்க்கரை

2.கேடோ அசிடோஸிஸ்

3. கண்கள் பாதிப்பு (Diabetic Retinopathy)

4. சிறுநீரக பாதிப்பு (Diabetic Nephropathy)

5. நரம்புகள் பாதிப்பு (Diabetic Neuropathy)

6. இதயம் மற்றும் ரத்த நாள பாதிப்புகள்

7. கால் பாதிப்புகள்

8. சர்ம நோய் பாதிப்பு இதர தொற்று நோய்கள்

9. பாலியல் கோளாறுகள்

10. வயிற்றுக் கோளாறுகள்

11. மூட்டுவலி

12. மனச்சோர்வு


அமெரிக்க டாக்டர் ஃபிரடெரி அல்லன் (Dr. Frederick Allen) சொல்வது. டயாபடீஸ் ஒரு குறைபாடுள்ள வளர்சிதை மாற்றம் (Faulty metabolism) மட்டுமல்ல; உடலின் உள் இருக்கும் வியாதிகள், கோளாறுகள் இவற்றின் மொத்த பிரதிபலிப்பு. டயாபடீஸ் உடலின் உள்ள எல்லா உறுப்புக்களையும் பாதிக்கும்.

இந்த பாதிப்புகள் டயாபடீஸ் வந்த சில மாதங்களில் கூட ஏற்படலாம் இல்லை சில வருடங்களிலும் உண்டாகலாம். பல சிக்கல்கள் மெதுவாக முன்னேறுபவை. ரத்த சர்க்கரை அளவை மருத்துவம் மூலம் ‘கன்ட்ரோல்’ செய்து கொண்டே வந்தால் இந்த பாதிப்புகளை தவிர்க்கலாம். அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு சுமார் 50,000 சர்க்கரை நோயாளிகள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இந்தியாவில் 1,00,000 என்று கருதப்படுகிறது.

நீரிழிவு நோயால் வரும் அபாயங்கள்

1. இறப்பு விகிதம் 2 – 3 மடங்கு அதிகரிக்கும்

2. இதய நோய், மூளைத்தாக்குதல் – 2- 3 மடங்கு அதிகரிக்கும்

3. கண்பார்வை இழப்பு, மற்றவர்களை விட, நீரிழிவு நோயாளிகளுக்கு 10 மடங்கு அதிகம்.

4. கால்கள் பாதிப்பு மற்றும் இழப்பு, மற்றவர்களை விட, நீரிழிவு நோயாளிகளுக்கு 20 மடங்கு அதிகம்.




Friday, April 12, 2013

எங்கே செல்கிறது மதுரை நிலத்தடி நீர்மட்டம் ?

மதுரையில் இதுவரை காணாத வகையில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவமழை பொய்த்து வருவதால் நீர்நிலைகள் வறண்டு விட்டன. விவசாயத்திற்கு வழியின்றி வயல்களில் புல், பூண்டு கூட கருகி விட்டன.

கால்நடைகளுக்கு தீவனம் இல்லை. நிலத்தடி நீர் அதல, பாதாளத்திற்கு செல்வதால் கிணறுகள் வறண்டு வருகின்றன. எனவே, கிணற்றுப்பாசனம் மூலமும் விவசாயப்பணிகள் நடக்க வாய்ப்பில்லை. மழை வரும்

என நம்பி, மானாவாரியாக விதைக்கப்பட்ட நெல் மற்றும் பயிறு வகைககள் "சாவி'யாகிப்போனது. 2012ல் மழை பெய்திருந்தால் தான் 2013ல் விவசாயம் செய்ய முடியும். 2012ல் மழை இல்லாததால் 2013ல் விவசாயம் செய்ய இயலாது. இதனால், உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயரும் ஆபத்து உள்ளது. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் இரண்டு ஆண்டாக மழை பெய்யாததால், அணை வறண்டு வருகிறது. வருஷநாடு பகுதியில் மழை பெய்யாததால் வைகை அணைக்கு நீர் வரத்து இல்லாமல் அணை குட்டை போல் காட்சியளிக்கிறது.
 குடிநீர் தேவைக்கு மட்டும் 48.79 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்

பட்டுள்ளது. இதில், 25 அடி வரை அணையில் சகதி இருக்கிறது. இதன்படி, தண்ணீர் அளவு வெறும் 22.79 அடி மட்டுமே. இந்த குறைந்த தண்ணீரை வைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.நீர்நிலைகள் வற்றியதால் மின் உற்பத்திக்கு வழியில்லை. விவசாயத்திற்கு மின்சாரம் வழங்க முடியவில்லை. நிலத்தடிநீரை அதிகபட்சமாக உறிஞ்சிய மாவட்டங்களை "கருப்புக்கோடு' என பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிய மாவட்டங்களில், மதுரை வாடிப்பட்டி ஒன்றியம் முதலிடத்தில் உள்ளது. குளிர்பான கம்பெனிகள், மினரல் வாட்டர் கம்பெனிகள்

காரணமாக, நிலத்தடி நீர் தரையில் இருந்து 1000 அடி ஆழத்திற்கும் மேல் சென்று விட்டதாகவும், இதனால் குடிநீருக்கு பயங்கர தட்டுப்பாடு ஏற்படும், என பொதுப்பணித்துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.

எங்கே செல்கிறது நிலத்தடி நீர்மட்டம்

முன்பு எப்போதும் இல்லாத அளவு, மதுரை மாவட்டத்தில் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. தண்ணீர் வளம் மிக்க, மதுரை விரிவாக்க
பகுதிகளில் வீடுகளில், 20 நிமிடங்களில், 500 லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி நிரம்பி விடும். தற்போது 45 நிமிடத்திற்கும் மேலாகிறது. மழை காலங்களில் நிரம்பும் கண்மாய், குளங்களில் அடுத்த கோடைவரை தண்ணீர் இருக்கும்.

  பருவமழை பொய்த்ததால், அவை வறண்டு கிடக்கின்றன. சில கண்மாய், குளங்களில் இருந்த தண்ணீரை மீன்பிடி ஏலம் எடுத்தவர்கள், வெளியேற்றியதால் வீடுகளில் போர்வெல் நீர்  மட்டமும் பல அடி ஆழத்திற்கு கீழ் சென்று விட்டது.பொதுப்பணித் துறையில் நிலத்தடி நீர் மட்டம், ஆண்டுதோறும் போர்வெல் மூலம் கணக்கிடப்படுகிறது. 2012 ஜனவரியில் மதுரையில் 69 போர்வெல்களில்  நிலத்தடி நீர் 3.5 மீட்டருக்குள் (ஒரு மீட்டர் 3 அடி, 20 செ.மீ.,) இருந்தது. இந்த ஜனவரியில் 9.2 மீட்டருக்கு சென்று விட்டது. சுமார் 6 மீட்டர் வரை நிலத்தடி நீர் இறங்கியுள்ளது. கோடை மழை இல்லாத பட்சத்தில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் அதல பாதாளத்திற்கு செல்லும் என பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. கண்மாய், குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களை காக்க தவறியதன் விளைவு, இந்த வறட்சியை சந்திக்க வேண்டியுள்ளது.

வைகை ஆற்றுப்படுகையில் குடிநீர் தட்டுப்பாடு

பெரியாறு அணை கட்டுவதற்கு முன் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் வானம் பார்த்த பூமியாக இருந்தன. பெரியாறு அணை வருகைக்கு பின், இரு போகம் விளையும் பூமியானது. மழை இல்லாததால் இம்மாவட்டங்களில் விவசாய பணிகள் முற்றிலும் நடக்கவில்லை.




மதுரை,: நிலத்தடி நீர் பாதாளத்தில் இறங்கி மாசு அதிகரித்து வருகிறது



நிலத்தடி நீர் பாதாளத்தில் இறங்கி மாசு அதிகரித்து வருவதாக ஆய்வு நடத்திய நிபுணர் குழு மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை நகரிலும் சுற்றுப்பகுதியிலும் நிலத்தடி நீரின் தன்மை குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்தி மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளனர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் விவரம் வருமாறு: மதுரை நகரில் நிலத்தடி நீர் 300 முதல் 700 அடி வரை இறங்கி உள்ளது.

பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 59 நிலத்தடி நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 48 மாதிரிகள் குடிக்க உகந்ததாக இல்லை. நிலத்தடி நீரின் தன்மை மாறி மாசுபாடு அதிகரித்து கொண்டே போகிறது. சுமாரான நிலையில் இருந்து உப்புத் தன்மைக்கு மாறி உள்ளது. நகரின் மத்திய பகுதியில் வைகை ஆறு சென்றாலும், ஆற்றுக்குள் ஊரும் ஊற்று நீரும் மாசுபட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆற்றில் பாதாள சாக்கடை நீர் கலக்கிறது
.
பாதாள சாக்கடை முழுமையாக நிறைவேறிய பகுதிகளில் நிலத்தடி நீரில் நோய் தாக்கும் நுண்ணுயிர் கிருமிகள் குறைவாக உள்ளன. பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகம் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை இயங்க வேண்டும். பாதாள சாக்கடை நீர் ஆற்றில் கலக்காமல் தடுக்கப்படுவது முக்கியமாகும். நீர் நிலைகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

மதுரை நகரிலும் சுற்றிலும் 38 கண்மாய்கள் இருந்துள்ளன. இதில் பல கண்மாய்கள் அழிக்கப்பட்டு அரசு அலுவலகம், மாநகராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நீதிமன்ற கட்டிடங்களாக மாறி விட்டன. பல்வேறு கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி சீரழிந்துள்ளன.

வண்டியூர், மாடக்குளம், செல்லூர், கொடிக்குளம், தென்பரங்குன்றம் உள்ளிட்ட சில கண்மாய்கள் தப்பி உள்ளன. அதுவும் மண்மேடாகி நீர் கொள்ளளவு குறைந்துள்ளது. இதை சீரமைத்து மழை காலங்களில் கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களை காக்க தவறினால் நிலத்தடி நீர் அதல பாதாளத்தில் இறங்கி, மக்கள் அனைத்து தேவைகளுக்கும் குடிநீரை பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதன் மூலம் குடிநீர் தேவை அதிகரித்து தட்டுப்பாடு கூடுதலாகும். அதை சமாளிக்க முடியாமல் மாநகராட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்படும். இந்த ஆபத்தை தடுக்க முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். .




Thanks to Dinakaran

உயில் எழுதுவது எப்படி?

உங்கள் உயிலை நீங்களே எழுதுங்கள்.

முந்தைய நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ததன் மூலம் உங்கள் உயிலை நீங்கள் திட்டமிட்ட பிறகு, 1925ஆம் வருட இந்திய வாரிசுச் சட்டத்தின் 74ஆம் பிரிவின்படி, “எளிய, உறுதியான, சந்தேகத்திற்க்கு இடமில்லாத மொழியில் உங்கள் உயிலை” எழுதுங்கள்.

உங்களுக்குச் சந்தேகம் இருந்தாலோ, ஆலோசனை தேவைப்பட்டாலோ, இறுதிப் பத்திரத்தை எழுத ஒரு தகுதி வாய்ந்த, ஒரு வழக்கறிஞரை அணுகலாம். ஒரு வழக்கறிஞரை பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய உயில் சட்ட ரீதியாகச் செல்லுபடியாகக்கூடியதாகவும் எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும். ஆரம்ப கட்ட உயிலை ஒழுங்காக எழுதிவிட்டால், வழக்கறிஞகளோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்காது. இதனால், அவர்களது கட்டணம் குறையும். ஒரு உயிலை எழுத வழக்கறிஞரையோ, ஹெல்ப் ஏஜ் இந்தியாவையோ பயன்படுத்தும் செலவு என்பது, நீங்கள் உயில் எழுதாமல் இறந்தால் எழும் சட்டச் சிக்கல்களைச் சமாளிக்க ஆகும் செலவைவிட மிகக் குறைவு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உயிலில் கையெழுத்திடுங்கள். சாட்சிகளின் கையெழுத்துகளையும் பெறுங்கள்

18 வயதுக்கு மேற்பட்ட இருவர் உங்கள் உயிலுக்கு சாட்சியமளிக்க வேண்டும். இந்த இரு சாட்சிகளில் ஒருவர், அது உண்மையான உயில்தான் என்று சான்றளிக்கும் விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும். தவிர, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அந்த உயிலில் நீங்கள் கையெழுத்திட்டதாக உறுதியளிக்க வேண்டும். ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நீங்களும் உங்கள் இரண்டு சாட்சிகளும் இருந்து அந்த உயிலில் கையெழுத்திட வேண்டும். இது உங்கள் கையெழுத்தைச் சான்றளிப்பது என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உயிலில் கையெழுத்திட்ட பிறகு ஒவ்வொருவரும் அந்த உயிலில் கையெழுத்திடலாம். ஒவ்வொரு சாட்சியின் கையெழுத்தின் கீழேயும் அவர்களது பெயர், வயது, தற்போதைய முகவரி, தொழில் ஆகியவை தெளிவாக எழுதப்பட வேண்டும். 

அந்த உயிலின் மூலம் பலன் பெறுபவர்களோ, அவர்களது கணவனோ, மனைவியோ உயிலுக்குச் சாட்சிக் கையெழுத்திட முடியாது. அப்படிச் செய்தால், இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 67இன் படி அந்த உயிலின் பிற அம்சங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் என்றாலும் கையெழுத்திட்ட நபருக்கோ, அவரது கணவன்/மனைவிக்கோ நீங்கள் எழுதிவைத்த சொத்து சேராது.


உயிலைப் பதிவு செய்தல்

ஒரு பதிவாளர் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் உயிலைப் பதிவு செய்வது கட்டாயமல்ல. ஆனால், அப்படிச் செய்வது நல்லது. உயிலைப் பதிவு செய்வதன் மூலம் அதன் உண்மைத் தன்மை அதிகரிக்கும். வங்ககளும் அதிகாரிகளும் பதிவு செய்யப்பட்ட உயிலையே பல சமயங்களில் கேட்பார்கள். நீங்களும் உங்கள் உயிலில் சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இரண்டு அசல், கையெழுத்திட்ட உயில் பத்திரங்களுடன் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். உங்களுடைய புகைப்படத்டின் இரண்டு பிரதிகளையும் அடையாளச் சான்றையும் கொண்டு செல்ல வேண்டும். குறைந்த கட்டணத்தில் உயிலைப் பதிவு செய்துவிடலாம். இதற்கு நீண்ட நேரம் ஆகாது. பெரும்பாலும் காலையிலேயே முடித்துவிடலாம்.

உயில் பத்திரத்தை பாதுகாப்பாக வையுங்கள்

உங்கள் உயிலைப் பத்திரமாக வைப்பது மிக முக்கியம். உங்களது நம்பிக்கைக்குரிய உறவினர், நண்பர், உயிலைச் செயல்படுத்துபவர்களுக்கு வங்கி, பதிவாளர், சார் பதிவாளர், முக்கியமான ஆவணங்களைத் தெரியப்படுத்துவது நல்லது. 

உயிலைப் பத்திரப்படுத்துவதற்கு முன்பாக, உங்களுக்காகவோ, உங்களுடைய உறவினருக்காகவோ அந்த உயிலைப் பிரதி எடுத்து வைக்கலாம்.

Wednesday, April 10, 2013

வீட்டுக் கடன் மீது ஏன் காப்பீடு செய்ய வேண்டும்?



உங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் நீங்கள் ஒருவர் மட்டுமாக இருந்து, நீங்கள் வீட்டுக் கடன் எடுத்திருக்கும் பட்சத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நீங்கள் உங்கள் வீட்டை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் வீட்டுக் கடன் தந்த நிதி நிறுவனம் உங்கள் வாரிசுதாரரிடம் கடன் தொகையை திருப்பிச் செலுத்தச் சொல்லி கேட்கலாம்.

எனவே உங்கள் வீட்டுக் கடன் மீது காப்பீடு செய்து கொள்வது சிறந்தது. இதன் மூலம் காப்பீட்டு நிறுவனம் கடனைத் திருப்பி செலுத்துகிறது. இதனால் உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும், உங்களது வீட்டுக்கும் பிரச்சினை ஏதும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.

வீட்டுக் கடன் மீதான காப்பீடு, கடன வாங்கியவர் இறக்கும் பட்சத்தில் மீதமிருக்கும் வீட்டுக் கடன் தொகையை அடைக்க வழி செய்கிறது. வீட்டுக் கடன் தரும் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வாங்குபவரை இது போன்ற காப்பீடு எடுக்குமாறு அறிவுறுத்துகின்றன. ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு கடன் நிச்சயமாக திரும்பக் கிடைக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. இந்தக் காப்பீட்டுக்கான தொகையைக் கடனுடன் இணைக்க முடியும்.

ஆனால் இந்தக் காப்பீடு உங்கள் வீட்டுக் கடனுக்கான பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே உங்கள் குடும்பம் வீட்டைத் திரும்பப் பெற்றாலும் கஷ்டப்பட வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் டர்ம்(term)இன்சூரன்ஸ் ஒன்று எடுத்துக் கொள்வது நல்லது.

ஆனால் சில வல்லுனர்கள், வீட்டின் மீது காப்பீடு செய்வதை விட அதிக அளவுக்கான டர்ம் இன்சூரன்ஸ் செய்து கொண்டால் வீடு, குடும்பம் இரண்டிற்கான பாதுகாப்பும் ஒரு சேர கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதுவும் சரியான வாதமாகவே படுகிறது.

 Thanks to One india.com



2013-2014 நிதியாண்டுக்கான வருமான வரி விதிப்புப் பிரிவுகள்



மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2013-2014-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரையளவுகள் சென்ற வருடத்தின் அளவுகளிலிருந்து எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இடம்பெற்றுள்ளன. 2013-2014ம் நிதியாண்டில் உங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படலாம் என்று தோராயமாக நீங்கள் கணக்கிட உதவும் வகையில் வருமான வரி விதிப்புப் பிரிவுகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.
 
நிதியாண்டு Financial Year (எஃப்ஒய்) - நிதி தொடர்பான அனைத்து தகவல்களும் அறிவிக்கப்படும், ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான ஒரு வருட காலமே, நிதியாண்டு என்று வழங்கப்படுகிறது.

வரி விதிப்பு ஆண்டு [Assessment Year] (ஏஒய்) - ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் வருமானம் கணக்கிடப்படும், அந்நிதியாண்டை தொடர்ந்து வரும் ஆண்டை, வரி விதிப்பு ஆண்டு என்று கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டுக்குரிய வரி விதிப்பு ஆண்டு 2014-2015 ஆகும்.

பெண்கள் மற்றும் வரி செலுத்தும் பொதுப் பிரிவினருக்கான வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 2,00,000 வரை - வரி கிடையாது
 
ரூ. 2,00,001-லிருந்து ரூ. 5,00,000 வரை - 10% (2000 ரூபாய் தள்ளுபடி தற்போது அனுமதிக்கப்படுகிறது)
 
ரூ. 5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
 
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30% (ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் இருப்பின் 10 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படும்)

மூத்த குடிமக்களுக்கான (60 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 80 வயதுக்குட்பட்ட வயதினர்) வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 2,50,000 வரை - வரி கிடையாது
 
ரூ. 2,50,001-லிருந்து ரூ. 5,00,000 வரை - 10%
 
ரூ.5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
 
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30%

மிக மூத்த குடிமக்களுக்கான (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 5,00,000 வரை - வரி கிடையாது
 
ரூ. 5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
 
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30%

மேலும், ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு, சுமார் 2000 ரூபாய் வரை தள்ளுபடி அமலில் உள்ளது. வருடத்திற்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படுகிறது. இவ்விதிமுறை, இதே அளவு வரி விதிப்புடைய தனி நபர்கள், ஹெச்யூஎஃப்-கள், நிறுவனங்கள் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும்.

குறிப்பு: மேல்வரி 2%,  1%கல்வித் தீர்வைகள், மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வித் தீர்வைகள் ஆகியவை வட்டி விகிதங்களில் சேர்க்கப்படவில்லை.

வருமான வரியை சேமிக்க

வருமான வரியை எப்படியெல்லாம் சேமிக்கலாம்? 

 

ஒரு நிதியாண்டின் முடிவில் உங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைப்பதற்கான வழிமுறைகளை முன்கூட்டியே செயல்படுத்திக் கொள்வது நன்று. வரி குறைப்பிற்கான திட்டமிடுதலை நீங்கள் தள்ளிப் போடப் போட, உங்கள் நிகர வருமானத்தைக் கூட்டிக் கொண்டே போய், வருடக் கடைசியில் அதிகமான வரியைக் கட்டும் நிலைக்கு ஆளாவீர்கள். நடப்பு நிதியாண்டான 2013-2014ல் உங்கள் வரி விதிப்பை குறைக்க பின்வருமம் யோசனைகளை உடனே செயல்படுத்துங்கள்.
உங்கள் வருமானத்தை பலவாறு பிரித்து வட்டியைக் குறைக்கலாம்:

ஏற்கனவே உங்கள் வருமானம், வருமான வரி விதிப்பிற்குட்பட்டதாக இருப்பின் உங்களுக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் குறைத்தால் மட்டுமே, உங்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க இயலும். வைப்புத் தொகை, மற்றும் இதர வட்டி வழங்கும் திட்டங்களை உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரில் வாங்குவதன் மூலம் இதனை செயல்படுத்தலாம்.

உங்கள் பெற்றோர் பெயரில் முதலீடு செய்யுங்கள்:

உங்கள் பெற்றோருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வருமானம் ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்களை உங்களுக்காக முதலீடு செய்து அதனால் கிடைக்கும் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளலாம். மூத்த குடிமக்களுக்கான அடிப்படை வரி விலக்கு வரையறை, ரூபாய் 2.5 லட்சம் என்பதையும், வைப்புத் தொகை போன்ற நிலையான சேமிப்புத் திட்டங்கள் பலவற்றில், அவர்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகின்றது என்பதையும் நினைவில் கொள்க.
உங்கள் பெற்றோரின் வீட்டில் தங்கியிருப்பின் அவர்களுக்கு நீங்கள் வாடகை கொடுக்கலாம்:

உங்கள் பெற்றோரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வீட்டில் நீங்கள் தங்கியிருந்தீர்களானால் அவர்களுக்கு நீங்கள் வாடகை செலுத்தி, அதன் மூலம் வீட்டு அகவிலைப்படியைக் கோரலாம்.

வரியற்ற கடன் பத்திரங்கள்:

நீங்கள் 33 சதவிகித வரி செலுத்த வேண்டிய நிலையில் இருக்கும் பட்சத்தில் பட்டியலிடப்பட்ட சில வரியற்ற கடன் பத்திரங்களைப் பற்றி யோசிக்கலாம். இக்கடன் பத்திரங்களால் கிடைக்கும் வட்டித் தொகை வரி விலக்கு பெற்றுள்ளதால் இது உங்கள் வருமானத்தின் பகுதியாக கருதப்பட மாட்டாது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை, ஆர்இசி, இந்திய ரயில்வேயின் நிதி ஸ்தாபனம் ஆகியவற்றின் கடன் பத்திரங்கள், தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள சில கடன் பத்திரங்கள் ஆகும்.

உங்களை பணியில் அமர்த்தியவரிடம் கலந்தாலோசியுங்கள்:

சில சலுகைகளுக்கு வரி விலக்கு அமலில் உள்ளது. நீங்கள் உணவுப் படிவங்கள் மற்றும் பயணப்படி ஆகியவற்றை உபயோகித்து உங்கள் வரி விதிப்பைக் குறைக்கலாம். நீங்கள் எந்தெந்த வழிகளில் உங்கள் சம்பளத்தைப் பிரிக்கலாம் என்று உங்களை பணியில் அமர்த்தியவரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளை ஒரு வருட காலத்திற்கு வைத்திருந்து பின் விற்கலாம்:
நீங்கள் பங்குகள் மூலம் கை நிறைய லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தீர்களானால் ஒரு வருடத்திற்குப் பிறகு அப்பங்குகளை விற்பது நலம். ஒரு வருட காலத்திற்கு முன் இப்பங்குகளை விற்றால் நீங்கள் விற்பனை லாபம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும், அது உங்கள் வரி விதிப்பை உயர்த்தும் என்பதையும் மறக்காதீர்கள்.

உங்கள் ஃபோர்ட்போலியோக்களை பலவகைப்படுத்துங்கள்:

உங்கள் ஃபோர்ட்போலியோக்களை பலவகைப்படுத்துவதன் மூலம் உங்களுக்கான வரி விதிப்பைக் குறைக்கலாம். உதாரணமாக, உங்களுக்கு வாடகை மற்றும் வட்டி ஆகியவற்றின் மூலம் பணம் வருகிறது என்றால், நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யலாம். பங்கு லாபத் தொகைக்கு வரி கிடையாது. மேலும் இப்பங்குகளை ஒரு வருடத்திற்குப் பிறகு விற்றால் அவற்றின் விற்பனை லாபத்திற்கு நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் நீங்கள் வைப்புத் தொகை திட்டங்களில் முதலீடு செய்தால், அதில் கிடைக்கும் வட்டி வருமான வரிக்குட்பட்டதாகும்.

Thanks to One India.com

Saturday, April 6, 2013

தண்ணீர் பற்றாக்குறை

ண்ணீர் பற்றாக்குறையில் இந்தியாவின் தார் பாலைவனத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது நமது தமிழ்நாடுதான்" என்று இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.

பூமிக்கு தேவையான நீர் மேலேயிருந்து மழையாக, பனியாக வரவேண்டும். ஆனால், நாமோ பூமியை துளை போட்டு பூமிக்கு நடுவில் இருக்கிற நெருப்புக் குழம்பை நோக்கி போகிறோம்.

பாலையிலும் வளரும் பனைமரம் என்று சொல்வார்கள். ஆனால், வறட்சியால் தமிழகத்தில் பனைமரம் கூட செத்து போய் விட்டது.

தண்ணீர் பற்றாக்குறையில் இந்தியாவின் தார் பாலைவனத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது நமது மாநிலம் தான்.

தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் நீர் ஆதாரம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.

மலை மேல் மழை பெய்தால் தான் ஆறுகளில் தண்ணீர் கிடைக்கும். இதை அறிந்து தான் நீர் மேலாண்மையை கையாண்ட நம் முன்னோர், நம்மை ஆண்ட மன்னர்கள், வீணாகும் மழை நீரை சேமிக்க நாடு முழுவதும் 39 ஆயிரம் ஏரிகளை உருவாக்கினர்.

இன்று அந்த ஏரிகள் பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், கலெக்டர் அலுவலகங்களாக காட்சி தருகின்றன.

ஆலை புகை, வாகனப்புகை போன்றவற்றால் பூமிக்கு மேல் 15 முதல் 20 கிமீ உயரத்தில் கரிவளையம் உருவாகியுள்ளது.

கரி வளையத்தால் பூமியை விட்டு வெளியேற முடியாத வெப்ப சக்தியால், துருவ பனிமலைகள் உருகுகின்றன.

அதனால், கடல் மட்டம் உயர்ந்து கடலோர பட்டினங்கள் அழிவை எதிர் நோக்கியுள்ளன.

பூமி பந்தில் நிலப்பரப்பின் அளவு குறையும்போது இட நெருக்கடி, உணவு பஞ்சம், 'ஜெனடிக் டைவர்சிட்டி' எனும் மரபணு மாறுதல், வித்தியாசமான உணவு பழக்கம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

இதே நிலையில் பூமியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் இந்தியாவில் உள்ள வட மாநிலங்களின் நீர் ஆதாரமான கங்கை நதி 20 ஆண்டுகளில் வற்றிப் போகும்.

இந்தியாவின் 141 மாவட்டங்களில் கடுமையான வறட்சி, வெள்ளம் போனறவை ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மேம்படுத்த இயற்கையின் சக்தியோடு இணைந்து செயல்பட்டால் பலன் கிடைக்கும்.

அடிப்பகுதி காட்டுக்கு, நடுப்பகுதி மாட்டுக்கு, நுனிப்பகுதி வீட்டுக்கு என்ற முறையில் உணவு சுழற்சி முறையை பின்பற்றி வந்தது வரைக்கும், உணவு சங்கிலி அறுந்து போகாமல் இருந்தது.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் புவி வெப்பமடைவதை வரும் காலத்தில் தடுக்க முடியும்" என்றார் நம்மாழ்வார்.





Thursday, April 4, 2013

ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் அலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?




இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* பெண்கள் நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால்தான் ஆள் பாதி ஆடைபாதி என்றார்கள். மாடர்ன் ஆக உடுத்தினாலும்கூட, நேர்த்தியாக உடுத்துங்கள்.

*  பெண்கள் முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சினைகள்.

*  பெண்கள்  சொந்த குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் கருத்துக்களைக் கேட்காதீர்கள். 

*   ஆண்களுடன் வேலை செய்தாலும் பெண்கள் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.

* சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

* உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங்கும் படலம் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால் முடிந்தவரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.

* ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது.

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.




* அலுவலகம் என்பது பணிபுரியம் இடம் மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமாக நினைக்கிறது. 

* ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று நேராக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்.

* யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.

* அரட்டையில், ஜோக்ஸ் என்ற பெயரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.

* எந்த ஆணாவது உங்களிடம் தவறாக நடந்து கொண்டால், முதலில் நீங்களே இரண்டொரு முறை எடுத்துச் சொல்லி கண்டித்துப் பாருங்கள். அப்படியும் தொடர்ந்தால் உங்கள் மேலதிகாரியிடம் புகார் செய்யுங்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.

* விழா, விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆண்களை தேவையில்லாமல் உங்கள் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் செல்லாதீர்கள்.

* ஆண்கள், தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகௌரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதுவே நிலைக்கும்!

நன்றி:ஆதிரை வேணுகோபால்



ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் பு...