Total Pageviews

Wednesday, April 24, 2013

வாழ்க்கையில் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி ?

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே எப்பொழுதும் சிந்தியுங்கள்.



* கடந்த காலங்களில் செய்த தவறுகளைப் பற்றி வருத்தப்படாதீர்கள். மற்றும் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்களது கையில் இருக்கும் நிகழ்காலத்தை வெற்றியாக்குவதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

* நீங்கள் உங்களது வாழ்க்கையை பிறருடன் ஒப்பிட்டு கவலைப்படாதீர்கள்.

* உங்களை புரிந்து கொண்டவர்களே உங்களுடைய நண்பர்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களிடமிருந்து விலை எதுவும் பெறாமல் மனோதத்துவ மருத்துவரைப் போன்று உங்களது குறைகளின் பக்கம் உங்களின் கவனத்தைக் கொண்டு செல்கின்றார்கள்.


* உங்களுக்கு துக்கம் கொடுக்கக் கூடியவரை மன்னித்து விடுங்கள், அதனை மறந்தும் விடுங்கள்.

* அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முயற்சித்து குழப்பமடைய வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரே ஒரு பிரச்சனையை மட்டுமே தீர்க்க முற்படுங்கள்.

* முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் உங்களது கவலைகளை மறக்கக்கூடும்.

* வரக்கூடிய பிரச்சனை களைப்பார்க்கக்கூடிய கண்ணோட்டத்தை மாற்றுவதன் மூலம் நீங்கள் துக்கத்தை சுகமாக மாற்றம் செய்ய முடியும்.





No comments:

Post a Comment

2 சதவீதம் மட்டுமே வாடகை டாக்சி விபத்துகள், மீதம் 98 சதவீதம் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் தான் விபத்தில் சிக்குகின்றனர்

பணம் செலவாகும் என நினைக்காமல் வாடகை டாக்சி எடுத்து செல்லுங்கள்... வயிற்று பிழைப்புக்காக ஓட்டும் அந்த டாக்சி டிரைவர்கள் விழிப்புணர்வும் காரை ...