Total Pageviews

Monday, July 20, 2026

'ஏகாதசி விரதம்' ஏன்?

"கடவுளுக்குப் போய் ஏன் சாப்பாடு வேணாம்னு சொல்லி உடம்பை வருத்திக்கணும்? ஏகாதசி அன்னைக்கு சாப்பிடாம இருந்தா சாமிக்கு சந்தோஷம் வருமா?" என்று இன்றைய மாடர்ன் தலைமுறை பல நேரங்களில் கிண்டலாகக் கேட்பதுண்டு.


ஆனால், கடவுள் பெயரால் நம் முன்னோர்கள் வகுத்து வைத்த இந்த 'ஏகாதசி விரதத்திற்குப்' பின்னால், சமீபத்தில் மருத்துவ உலகின் உயரிய விருதான நோபல் பரிசையே (Nobel Prize) தட்டிச் சென்ற ஒரு மாபெரும் அறிவியல் ரகசியம் மறைந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம்! 2016-ஆம் ஆண்டு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோஷினோரி ஓசுமி (Yoshinori Ohsumi) என்ற விஞ்ஞானிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த மாபெரும் மருத்துவ உண்மையின் பெயர் "ஆட்டோஃபேஜி" (Autophagy). இதன் அர்த்தம் 'தன்னைத் தானே உண்ணுதல்'.

அதாவது, ஒரு மனிதன் தொடர்ந்து 14 முதல் 16 மணி நேரம் வரை எந்த உணவும் உட்கொள்ளாமல் உடலைப் பட்டினி போடும்போது, மனித உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகிறது. அப்போது, உயிர்வாழ்வதற்கான ஒரு போராட்டமாக, உடலுக்குள் இருக்கும் ஆரோக்கியமான செல்கள், அங்குள்ள கெட்டுப்போன, முதிர்ச்சியடைந்த மற்றும் கேன்சரை (Cancer) உருவாக்கக் கூடிய நச்சு செல்களை உணவாகத் தின்ன ஆரம்பிக்கின்றன! இதனால் மனித உடலுக்குள் இருக்கும் ஒட்டுமொத்த கழிவுகளும் எந்த ஒரு மருத்துவச் செலவும் இல்லாமல் தானாகவே சுத்தமாகி, உடல் முழுமையாகப் புத்துணர்ச்சி அடைகிறது. இது தான் அந்த நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பு.

ஆனால், இதைத் தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் 'ஏகாதசி விரதம்' என்ற பெயரில் நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போனார்கள்!

சரி, எதற்காகச் சரியாக ஏகாதசி அன்று மட்டும் பட்டினி கிடக்க வேண்டும்? வேறு நாளில் இருக்கக் கூடாதா? அங்குதான் இந்து மதத்தின் பிரம்மாண்டமான வானியல் (Astronomy) அறிவு வேலை செய்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து வரும் 11-வது நாளான ஏகாதசி அன்று, பூமியின் வளிமண்டல அழுத்தம் (Atmospheric Pressure) மிக மிகக் குறைவாக இருக்கும். அந்த நாளில் உணவு உட்கொண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்பதையும், மூளையின் செயல்பாட்டைக் கூர்மையாக்க அதுவே சரியான நாள் என்பதையும் துல்லியமாகக் கணித்தார்கள்.

சாதாரண மக்களிடம் போய் 'ஆட்டோஃபேஜி', 'செல் சுழற்சி' என்று விஞ்ஞானம் பேசினால் யாருக்கும் புரியாது என்பதால், அந்த மாபெரும் மருத்துவ அறிவியலை இறைவனோடு இணைத்து 'விரதம்' என்று வாழ்வியலாக மாற்றிக் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள்.

இன்றைக்குக் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கும் விஷயங்களை, நாம் என்றைக்கோ பின்பற்றி விட்டுப் பழசு என்று தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறோம். 

*இனியாவது ஏகாதசி விரதம் இருந்தால் முட்டாள்தனம் என்று சொல்லாதீர்கள்; அது நோபல் பரிசு பெற்ற ஒரு தலைசிறந்த மெடிக்கல் ட்ரீட்மென்ட்!*

Tuesday, July 14, 2026

கணவன் & மனைவி: வாழ்வின் இறுதித் தோழர்கள் !

*கணவன் & மனைவி: வாழ்வின் இறுதித் தோழர்கள் - ஜி.வெங்கடேஷ்.*


திருமணம் என்பது புகைப்படங்களில் புன்னகைக்கும் இரண்டு முகங்களின் கதை அல்ல. அது, ஒரே வீட்டிற்குள் ஆயிரம் முறை உடைந்தாலும், உலகிற்குத் தெரியாமல் அமைதியாகத் தங்களைத் தாங்களே மீண்டும் இணைத்துக் கொள்ளும் இரண்டு வாழ்க்கைகளின் கதை.

கணவன்-மனைவிக்கு இடையில், அன்பு மட்டும் இல்லை. கோபம் இருக்கிறது. அகங்காரம் இருக்கிறது. வலி இருக்கிறது. யாரும் பேசாத மௌன நாட்கள் இருக்கின்றன. "அவன் ஒருபோதும் மாறமாட்டான்" என்று சொல்லும் மனைவியின் வலி இருக்கிறது. "அவள் என்னை ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை" என்று சொல்லும் கணவனின் வேதனை இருக்கிறது.

ஆனாலும், இதில் உள்ள முரண்பாட்டைப் பாருங்கள்... அதே மனைவி, தன் கணவன் தாமதமாக வீட்டிற்கு வரும்போது, கதவு திறக்கும் சத்தத்தில் கண் விழிக்கிறாள். அதே கணவன், கோபமாக இருக்கும்போதும், அவள் சாப்பிடவில்லை என்று தெரிந்தால், அவள் முன் ஒரு தட்டை வைக்கிறான்.

இதற்குத்தான் திருமணம் என்று பெயர்.

குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது, வீடு நிறைந்து கிடக்கிறது. பெற்றோர்கள் தங்கள் படிப்பு, திருமணங்கள், வேலைகள், பேரக்குழந்தைகள் ஆகியவற்றில் தங்களைக் கரைத்துக் கொள்கிறார்கள்.  ஆனால் ஒரு நாள், பிள்ளைகள் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். மெதுவாக, வீடு காலியாகிறது.

பிறகு, இருவர் மட்டுமே எஞ்சி நிற்கிறார்கள்.

ஒரு காலத்தில் உங்களை எரிச்சலூட்டிய அதே குறட்டைச் சத்தம் ஒரு நாள் கேட்காமல் போனால், கண்ணீர் பெருகுகிறது. "அதிகமாகப் பேசாதே" என்று நீங்கள் திட்டிய அதே குரல் ஒரு நாள் என்றென்றைக்குமாக அமைதியாகிவிட்டால், வீட்டின் சுவர்களே வெறுமையாகத் தோன்றும்.

அவர்கள் மறைந்த பிறகு, ஆறுதல் கூற யாராவது வருவார்கள். ஆனால் இரவில் படுக்கையில் உள்ள அந்தக் காலி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. உங்களுக்கு மருந்து கொடுத்த கையை, "சாப்பிட்டாயா?" என்று கேட்ட குரலை, கோபத்தின் பின்னால் அக்கறையை மறைத்த கண்களை யாராலும் திரும்பக் கொண்டுவர முடியாது.

ஆகவே நினைவில் கொள்ளுங்கள்... சிறந்த தம்பதியர் என்பவர்கள் ஒருபோதும் சண்டையிடாதவர்கள் அல்ல.

சண்டைக்குப் பிறகும் விலகிச் செல்லாதவர்களே சிறந்த தம்பதியர்.

திருமணத்தில், அன்பை விட அனுசரித்துச் செல்வது பெரியது.

அனுசரித்துச் செல்வதை விட பொறுமை பெரியது.

மேலும் பொறுமையை விட பெரியது... இறுதிவரை ஒன்றாக இருக்கும் இதயம்.

 குறும்பு, கூச்சம், சண்டைகள், மௌனம், கஷ்டம், மகிழ்ச்சி, கண்ணீர், சிரிப்பு, விட்டுக்கொடுத்தல் இவை அனைத்தும் சேர்ந்து திருமணத்தைப் புனிதமாக்குகின்றன.

உங்கள் துணைவர் உயிருடன் இருக்கும்போதே அவர்களின் மதிப்பை உணருங்கள். ஏனெனில், மரணத்திற்குப் பிறகு சிந்தப்படும் கண்ணீரை விட, உயிருடன் இருக்கும்போது கொடுக்கப்படும் மரியாதை மிகவும் புனிதமானது.

நினைவில் கொள்ளுங்கள்... வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு முழுமையான துணைவர் கிடைப்பதே இல்லை. ஆனால், குறைகளை ஏற்றுக்கொண்டு இறுதிவரை உங்களுடன் இருக்கும் ஒரு துணைவரை விடப் பெரிய ஆசீர்வாதம் வேறு எதுவும் இல்லை.

🙏🏻👏👌🏼👍✌️👍👌🏼👏

Monday, July 6, 2026

உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் துடி துடித்துப் போக மாட்டேன்.


 
மங்களூரு: இந்திய திரையுலகின் உச்ச நடிகரான ஷாருக்கான் சமீபத்தில் மங்களூருவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அதில் அவர் பிரபலமான சில பாடல்களுக்கு நடனமாடியதுடன் பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பெண் ரசிகை ஒருவர் ஷாருக்கானிடம், ‘என் கணவரைவிட உங்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும், ஐ லவ் யூ’ என்று கூறினார். இதை கேட்ட ஷாருக்கான் புன்னகைத்தபடி, ‘இது பேச்சுரிமை சம்பந்தப்பட்ட விஷயம். உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். உங்கள் கணவரும் அவ்வாறே உணர்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னை நீங்கள் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். அருகில் பார்க்க முடியாது. உங்களுக்கு நான் வீடு வாங்கித்தர மாட்டேன். வீட்டிற்கு வாடகை தர மாட்டேன். உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளை நான் கவனிக்கவோ அவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று, மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விடவோ மாட்டேன்.

உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் துடித்துப் போக மாட்டேன். உங்கள் கஷ்டத்தில் பங்குபெற மாட்டேன், உங்களோடு சண்டையிடமாட்டேன், உங்களை சந்தோஷமாக வைத்திருக்க போவதில்லை. இது எதையும் செய்யாத என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருந்தால் அவை அனைத்தையும் செய்யும் உங்கள் கணவரை நீங்கள் எந்தளவு காதலிக்க வேண்டும். நீங்கள் என்னை ரசித்தால் மட்டும் போதும்’ என்று அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அனைவர் முன்னிலையிலும் அந்த பெண்ணை அவரது கணவருக்கு ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல வைத்தார் ஷாருக்கான்! 

Thursday, July 2, 2026

இந்த வாழ்க்கையும் இனிதே ! தேவை அறிந்த - புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் ஒருவர்` இருக்கும் வரை !

 

 
 
பசியறிந்து சோறு போட 
`ஒருவர்` இருக்கும் வரை...

 _சாப்பிட்டாயா_ எனக் கேட்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

தாமதமாகும் இரவுகளில் 
 _எங்கிருக்கிறாய்_ என விசாரிக்க
`ஒருவர்` இருக்கும் வரை...

நோய் வந்தால் இரவுகளில் 
கண் விழித்துப் பார்த்துக் கொள்ள 
`ஒருவர்` இருக்கும் வரை...

குரல் மாறுபாட்டில் மன 
நிலையைக் கணிக்க
`ஒருவர்` இருக்கும் வரை...

 _போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு_ என வழியனுப்ப 
`ஒருவர்` இருக்கும் வரை...

 எத்தனை மணி ஆனாலும் வீட்டில் கதவைத் திறந்து விட `ஒருவர்` இருக்கும் வரை...

தோற்றுப் போய் திரும்புகையில் 
தோள் சாய்த்துக்கொள்ள 
`ஒருவர்` இருக்கும் வரை...

 _போ_ என்றாலும் விட்டுப் போகாது
சண்டை போட்டுக் கொண்டேனும் உடனிருக்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள  `ஒருவர்` இருக்கும் வரை...

நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

எதற்காகவும் எவரிடமும் 
நம்மை விட்டுக் கொடுக்காத
`ஒருவர்` இருக்கும் வரை...

கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி 
நானிருக்கிறேனென உணர்த்த
`ஒருவர்` இருக்கும் வரை...

தவறுகளைத் தவறென 
சுட்டிக் காட்டித் திருத்தும் 
`ஒருவர்` இருக்கும் வரை...

துயர் அழுத்தும் கணங்களில் 
அருகிருந்து கண்ணீர்த் துடைக்க
`ஒருவர்` இருக்கும் வரை...

மனக் குறைகளைப் புலம்பித் 
தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

 *வாழ்தல் இனிதே* ...!

 ```இந்த வாழ்க்கையும் இனிதே``` ... ```!``` ```!!``` 

💖💖💖 💕 💖💖💖

'ஏகாதசி விரதம்' ஏன்?

"கடவுளுக்குப் போய் ஏன் சாப்பாடு வேணாம்னு சொல்லி உடம்பை வருத்திக்கணும்? ஏகாதசி அன்னைக்கு சாப்பிடாம இருந்தா சாமிக்கு சந்தோஷம் வருமா?...