Total Pageviews

Tuesday, July 28, 2026

அதிக வெயில் அடிப்பதற்கான முக்கிய காரணங்கள் காலநிலை மாற்றம், கோடை மழை குறைவது மற்றும் எல்-நினோ நிகழ்வு ஆகும்

 


வெயில் மற்றும் வெப்பம் அதிகரிக்கக் காரணங்கள்
  • காலநிலை மாற்றம்: புவி வெப்பமயமாதல் காரணமாக பூமியின் சராசரி வெப்பநிலை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.
  • மழை குறைவு: கோடை காலத்தில்வழக்கமாகப் பெய்ய வேண்டிய கோடை மழை பொய்த்துப் போவதால் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் அதிகரிக்கிறது.
  • எல்-நினோ தாக்கம்: வளிமண்டலத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் காற்று மற்றும் மேகமூட்டங்கள் குறைந்து சூரியனின் நேரடி கதிர்வீச்சு பூமியை அதிகமாகத் தாக்குகிறது
  • மரங்கள் அழிப்பு மற்றும் மாசுபாடு: காடழிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக மரங்கள் வெட்டப்பட்டு, கார்பன் மாசுபாடு அதிகரிப்பதால் வெப்பம் தங்கு தடையின்றி கூடுகிறது.
  •  ஆடிமாசக் காத்துல அம்மியே பறக்கும்' என்பது கிராமங்களில் சொல்லப்படும் பழமொழி. ஆனால், 'அடிக்கும் அனல் காற்றில் சாலைகளில் வெப்ப அனல் பறந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. வழக்கமாகக் கோடையிலும், அக்னி வெயில் நடக்கும் காலநிலையிலும் தமிழ்நாட்டில் வெப்பம் அதிகமாக இருக்கும். தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்கும் நாள்களிலும், வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்கும் நாள்களிலும் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டு வரை இப்படித்தான் இருந்து வந்தது. இதற்கு மாறாக இந்த வருடம் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதான் போகிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலான இடங்களில் பெய்த மழையின் காரணமாக வெப்பம் சற்று குறைவாகவே இருந்து வந்தது. தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க, கடந்த சில நாள்களாக கேரளாவில் தென்மேற்குப் பருவமழை விகிதம் குறைந்து காணப்படுவதும் ஒரு காரணியாக இருக்கலாம். சாதாரணமாகவே நகரங்களில் வெயில் கொளுத்தும். இதில் தலைநகர் சென்னையைப் பற்றி கேட்கவே வேண்டாம். அதிக மழை பெய்தாலும், நீர் மேலாண்மை முறையாக இல்லாததால் பாதிக்கப்படும், அதிக வெயில் அடித்தாலும், மரங்கள் அதிகமாக இல்லாமல் பாதிக்கப்படும். வெப்பநிலையைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம்.
  •  

    "கடலில் இருந்து குளிர்ந்த காற்றானது தரைப் பகுதிக்கு வராததே வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். இன்னும் மூன்று நாள்களுக்கு வெப்பம் அதிகரித்துக் காணப்படும். 28-ம் தேதிக்கு மேல் காற்று அதிகரித்து மழை பெய்ய வய்ப்பு இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாள்களாக வீசும் கடல் காற்றும் தாமதமாக வீசுகிறது. உள் தமிழகத்தில் குறைவான மேகமூட்டம் காணப்படுகிறது. இன்னும் இரண்டு நாள்களுக்கு 3 அல்லது 4 டிகிரி வெப்பம் வெளியாகலாம்" என்றார்.சித்திரையில் கத்தரி வெயில் முடிந்து ஆங்காங்கே மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. தற்போது நிலவும் வெப்பநிலை கோடை வெயிலைத்தான் ஞாபகப்படுத்துகிறது.


No comments:

Post a Comment

பந்திகளில்தான் பின்னால் வரிசைக்கட்டி நிற்கும் அவலம் இருக்கிறது!

  அசைவ உணவுகள் இலைகளில் வரிசைக்கட்டும் பந்திகளில்தான் பின்னால் வரிசைக்கட்டி நிற்கும் அவலம் இருக்கிறது. சைவபந்திகளில் முந்திக்கொள்வார்களேத் ...