Total Pageviews

Saturday, December 8, 2018

பேரீச்சம் பழத்தின் மகத்துவங்கள் !

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் குறைந்தது 10 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

* பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிரறந்துள்ளது.

* பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

* பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

* பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

* ஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.

* பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

* பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.

* மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

* பேரிச்சம் பழம் தாம்பத்யத்தில் நீண்ட சிறப்பாக செயல்பட உதவும். அதற்கு இரவில் படுக்கும் போது ஆட்டுப் பாலில் ஒரு கையளவு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பாலுடன் சேர்த்து அரைத்து, தேன் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும்.

* ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.

பேரீச்சைப் பழத்தின் நன்மைகள்:

கண்பார்வை தெளிவடைய:

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

சளி இருமலுக்கு:

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரிச்சம் பழங்களையும் தேங்காயும் காலை உணவாகத் தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எல்லாவிதமான எலும்பு வலிகளையும் குறைக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள்கூட தேங்காயுடன் பேரிச்சம்பழங்களைக் கலந்து உண்டு வந்தால் விரைவில் குணமடையும்.
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

அருந்தமிழ் மருத்துவம் 500 !

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

மூளைக்கு வல்லாரை !
முடிவளர நீலிநெல்லி !
ஈளைக்கு முசுமுசுக்கை !
எலும்பிற்கு இளம்பிரண்டை !

பல்லுக்கு வேலாலன் !
பசிக்குசீ ரகமிஞ்சி !
கல்லீரலுக்கு கரிசாலை!
காமாலைக்கு கீழாநெல்லி!

கண்ணுக்கு நந்தியாவட்டை!
காதுக்கு சுக்குமருள் !
தொண்டைக்கு அக்கரகாரம்!
தோலுக்கு அருகுவேம்பு !

நரம்பிற்கு அமுக்குரான் !
நாசிக்கு நொச்சிதும்பை!
உரத்திற்கு முருங்கைப்பூ!
ஊதலுக்கு நீர்முள்ளி!

முகத்திற்கு சந்தனநெய்!
மூட்டுக்கு முடக்கறுத்தான்!
அகத்திற்கு மருதம்பட்டை!
அம்மைக்கு வேம்புமஞ்சள்!

உடலுக்கு எள்ளெண்ணை!
உணர்ச்சிக்கு நிலப்பனை!
குடலுக்கு ஆமணக்கு!
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே!

கருப்பைக்கு அசோகுபட்டை!
களைப்பிற்கு சீந்திலுப்பு!
குருதிக்கு அத்திப்பழம்!
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை!
வெள்ளைக்கு கற்றாழை!
சிந்தைக்கு தாமரைப்பூ!
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை!

கக்குவானுக்கு வசம்புத்தூள்!
காய்ச்சலுக்கு நிலவேம்பு!
விக்கலுக்கு மயிலிறகு!
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி!

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்!
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்!
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ!
வெட்டைக்கு சிறுசெருப்படையே!

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை!
சீழ்காதுக்கு நிலவேம்பு!
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்!
நஞ்செதிர்க்க அவரிஎட்டி!

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்!
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்!
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்!
பெருவயிறுக்கு மூக்கிரட்டை!

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்!
கழிச்சலுக்கு தயிர்சுண்டை!
அக்கிக்கு வெண்பூசனை!
ஆண்மைக்கு பூனைக்காலி!

வெண்படைக்கு பூவரசு கார்போகி!
விதைநோயா கழற்சிவிதை!
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி!
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு!

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்!
கரும்படை வெட்பாலைசிரட்டை!
கால்சொறிக்குவெங்காரபனிநீர்!
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே!

உடல்பெருக்க உளுந்துஎள்ளு!
உளம்மயக்க கஞ்சாகள்ளு!
உடல்இளைக்க தேன்கொள்ளு!
உடல் மறக்க இலங்கநெய்யே!

அருந்தமிழர் வாழ்வியலில்!
அன்றாடம்சிறுபிணிக்கு!
அருமருந்தாய் வழங்கியதை!
அறிந்தவரை உரைத்தேனே!!

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...