Total Pageviews

Tuesday, October 29, 2024

கிட்னியை சுத்தம் செய்வது எப்படி?

ஒரு அரை லிட்டர் நீர் அருந்துங்கள் .அடுத்து சிறுநீர் எப்போது கழிக்கிறீர்கள் என குறியுங்கள் .(அடக்கிவைக்கக்கூடாது.சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்ததும் கழித்துவிட்டு வேண்டும் )

உடனே மறுபடியும் அரை லிட்டர் நீர் அருந்துங்கள். மறுபடியும் சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் கழித்துவிடுங்கள் இப்படியே உங்கள் வேலை கெடாமல் இதனை 3 நாள்கள் தொடர்ந்து செய்யுங்கள்

முதல் முறை நீர் அருந்தி நீர் கழிக்க எவ்வளவு நேரம் ஆனதோ அதில் பாதி இரண்டாம் முறை , இரண்டாம் முறை ஆன நேரத்தில் பாதி மூன்றாம் முறை என இருந்தால் உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமானது.

உதாரணமாக 1 time 60 மினிட்ஸ் 2 time 30 மினிட்ஸ் 3 தடவை 15 minutes என நீர் வெளியேற வேண்டும்.

இதில் தவறு இருந்தால் இயற்கையாகவே சரி செய்யலாம் .

ஆனால் ஒன்று ஒரு சிறுநீரகம் மெல்ல மெல்ல கெட்டுப்போக எத்தனை காலம் அகின்றதோ அதே காலம் அது இயற்கையாகவே சரி செய்ய எடுத்துக்கொள்ளும்.

உங்களது சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டியது அவசியம். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தாலே உங்களது சிறுநீரகம் சரியாக செயல்பட தொடங்கிவிடும்.

உங்களது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய அதிக கவனம் தேவைப்படுகிறது என்றால், நீங்கள் புரோட்டின் குறைவான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். சிக்கன், மீன் போன்றவற்றை உண்ணாமல் இருக்க வேண்டும்.

அதோடு, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் பொருட்களை சாப்பிடுவதை தடுக்க வேண்டியது அவசியம்.

குதிரைவாலியை நாம் நமது அன்றாட உணவு முறையில் அதிகமாக சேர்த்துக்கொள்வதில்லை. இது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது.

வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகியவை சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உகந்த பழங்களாகும்.

மெக்னீசியம் சிறுநீரக கற்களை வளரவிடாமல் தடுக்கிறது. மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்க முடியும். கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் மீல் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.

Friday, October 18, 2024

#"எப்படியெல்லாம் உலகம் மாறிக்கொண்டு வருகிறது ? கவனம் தேவை !

 கவனம் தேவை !  விழிப்புணர்வு பதிவு !

சிவகங்கையை சேர்ந்த ஒருவருக்கு பத்து நாட்களுக்கு முன்பு தபாலில் ஒரு ATM கார்டு வந்திருக்கிறது. பிரித்து பார்த்தால் SBI மேலூர் கிளையில் இருந்து இவரது பெயர் விலாசமிட்ட கார்டு. மேலூரில் SBI பேங்க் எந்தப்பக்கம் இருக்கிறது என்பதுகூட தெரியாதவருக்கு எப்படி இவர் பெயரில் ATM கார்டு வந்தது?

பலவித சிந்தனைகளோடு மேலூர் போகிறார். SBI கிளை மேனேஜரை சந்தித்து நடந்ததை கூறுகிறார். அவரோ அங்கிருந்த ரெக்கார்டுகளை பரிசோதித்தபின் போன மாதம் நீங்க தான் இங்கு வந்து கணக்கு தொடங்கியிருக்கிறீர்கள். இதோ உங்க போட்டோ, கையெழுத்து என்று ரெக்கார்டுகளை காட்டவும் இவருக்கு அதிர்ச்சி. அச்சு அசலாக இவரது கையெழுத்து மற்றும் இவரது போட்டோ. தான் இங்கு வரவேயில்லை, கணக்கும் தொடங்கவில்லை. வேண்டுமானால் உங்கள் CCT கேமிராவை சோதித்து பாருங்கள் என்றபோது... அந்த மேனேஜரின் முகத்தில் சிறு அச்சம் பரவியிருக்கிறது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை அவர் ஊகிக்கிறார். மேலும் இந்த போலியான கணக்கில் ஆயிரம் ரூபாய் கட்டி கணக்கு தொடங்கியிருக்கிறார்கள்.

உடனே நம்மவர் இந்த கணக்கை உடனடியாக முடிக்கும்படி கூறவும், அந்த மேனேஜரும் சட்டு புட்டென அதற்கான நடவடிக்கை எடுத்து கணக்கை குளோஸ் செய்து ரூ. 600 ஐ மட்டும் கொடுத்து அவசர அவசரமாக அனுப்பி வைத்திருக்கிறார்.


(கணக்கு தொடங்கி மூன்று மாதம் முடிந்தால் தான் முழுப்பணமும் கொடுப்பார்களாம்.)

இதை யார் இவ்வளவு மெனக்கெட்டு செய்திருப்பார்கள்?. இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?.  இதுபோன்ற சந்தேகங்களுடன் பிரபல வக்கீலுடன் கலந்து பேசியபோது பல அதிர்ச்சியான செய்திகளை அறிய முடிந்தது!.

வழக்கறிஞர் கூறியதாவது.


இவரது ஆதார் காப்பியையும், அதிலிருந்த கையெழுத்தையும்  போர்ஜரி நபர் கைப்பற்றியதோடுஇவரது புகைப்படத்தையும் சேகரித்திருக்கிறார். பின் அந்த வங்கியில் இருக்கும் யாரோ ஒரு அதிகாரியின் கூட்டு முயற்சியோடு இந்த கணக்கு தொடங்கப் பட்டிருக்க வேண்டும். வங்கியில் இருக்கும் அந்த கருப்பு ஆடுதான் இங்கே மிக முக்கியமான குற்றவாளி. இந்த கணக்கின் மூலம் சிவில் 100% சரியாக இருந்தால், பிராப்பர்ட்டி செக்யூரிட்டி இல்லாமல் குறைந்தது ரூ. ஐந்து  லட்சம் வரை கடன் பெறமுடியும். அப்படி வாங்கிய கடனை ஒரு தவணை கூட கட்ட மாட்டார்கள். பின் இவருக்கு தகவல் வரும்போதுதான் இந்த விவரங்களே தெரியவரும்.

இப்போது இவர் இந்த வங்கி கணக்கை முடிக்காமல் இருந்திருந்தால் இந்த வங்கியின் மீது மூன்று வகையான வழக்கு தொடர்ந்திருக்க முடியும். மிகப்பெரிய தொகையை நஷ்டஈடாக பெற்றிருக்க முடியும். இதையெல்லாம் தெரிந்ததால்தான் இவரது வங்கி கணக்கை உடனடியாக முடித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது போன்ற தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்ள நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நமது ஆதார் ஜெராக்ஸ் காப்பி , பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவற்றை எங்கும் விட்டு வைக்காதீர்கள். ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்கும் போது கவனமாக இருப்பதோடு, போட்டோ ஸ்டூடியோவில் கனிணியில் சேகரிக்கும்போது டெலிட் செய்யும்படி வலியுறுத்தல் அவசியம். குறிப்பாக உங்கள் கையொப்பம் இட்ட பேப்பர்களை வெளியிடங்களில் தவற விட்டுவிடாதீர்கள் என்றார்.

"எப்படியெல்லாம் உலகம் மாறிக்கொண்டு வருகிறது பாருங்கள். எதில்தான் கவனம் வைப்பது? யாரைத்தான் நம்புவது?. இறைவா மக்களை காப்பாற்று."!

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

 மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:


1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.

முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659

சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36

 மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை🌹.
அவை:

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும்
மதுரையில் வாழ்ந்தாலும்
மதுரையில் இறந்தாலும்
மதுரையில் வழிபட்டாலும்
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.
சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.👇👇👇

சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி

#madurai #மதுரை


Wednesday, October 16, 2024

பிளாஸ்டிக் கப்பில் சூடான டீ, காபி போன்றவற்றை குடிக்க வேண்டாம்! அதுவே உங்கள் உடலில் புற்றுநோயை உருவாக்குகிறது


36 வயதான ஒருவருக்கு புற்றுநோய் இருந்தது, அது கடைசி கட்டத்தில் இருந்தது. அவரது வயதில், அவர் இதுவரை குட்கா, சிகரெட், பான் அல்லது மது அருந்தியதில்லை. சரியான நேரத்தில் வேலைக்குச் செல்வது, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது, இதுதான் அவரது வாழ்க்கை, எந்த நோயும் இல்லை, கவலையும் இல்லை.
      கடந்த 2/3 நாட்களாக வயிற்றுவலி தொடங்கியதால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையைத் தொடங்கினார், ஆனால் பலன் இல்லாததால், மூத்த மருத்துவரை அணுகினார். அங்குள்ள மருத்துவர் அவரது அனைத்து அறிக்கைகளையும் பெற்று, அவருக்கு குடலில் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தார்.
   

 டாக்டர். அவர் சிகிச்சையைத் தொடங்கினார், சிகிச்சையின் போது அவர் தனது முழு சேமிப்பையும் தனது வீட்டோடு விற்றார், ஆனால் அதன் விளைவாக அவர் இறந்தார். மனித குலத்தின் நலனுக்காக உடலை தகனம் செய்வதற்குப் பதிலாக ஆராய்ச்சிக்காக மருத்துவமனைக்கு தானம் செய்யுமாறு மருத்துவர் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினார். குடும்பத்தில் பரஸ்பர விவாதத்திற்குப் பிறகு, உடலை ஆராய்ச்சிக்காக மருத்துவமனைக்கு தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது.


     பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து வெளியாகும் ரசாயனப் பொருட்களாலும், பிளாஸ்டிக்கில் சூடான உணவை உண்பதாலும், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடித்ததாலும் அவருக்கு புற்றுநோய் இருப்பது ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு அவரது உணவு பழக்கம் குறித்து விசாரணை நடத்தியதில் அவருக்கு டீ குடிக்கும் பழக்கம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு கப் தேநீர் அருந்துவது வழக்கம். மேலும், எங்கு தேநீர் அருந்தினாலும், பிளாஸ்டிக் பைகளில் வந்து, பிளாஸ்டிக் கோப்பைகளில் வழங்கப்படுவதும் தெரியவந்தது.


அடிக்கடி மக்கள் சூடான தேநீர், சூடான காய்கறிகள் அல்லது பிற பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் ஆர்டர் செய்து அதையே சாப்பிடுவது அல்லது குடிப்பது அடிக்கடி பார்க்கப்படுகிறது. அதுவே மெதுவாக உங்கள் உடலில் புற்றுநோயை உருவாக்குகிறது.
     

அப்போது மருத்துவரும் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவரது சக ஊழியர்கள் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்போது அவருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
     ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தான இதுபோன்ற மோசமான பொருளை தயாரிக்க அரசு எப்படி அனுமதி அளிக்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம். 


     பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து நம்மை நம்ப வைக்கிறது, ஆனால் எப்படி புரிந்து கொள்வது? நம்மையும், நம் அன்புக்குரியவர்களையும் மரணத்தை நோக்கித் தள்ளும் வேலையை நாமே அச்சமின்றிச் செய்கிறோம், நம்மைப் பற்றியோ, நம் குடும்பத்தைப் பற்றியோ கவலைப்படாமல், மரணத்தைத் தழுவும் நாகரீகத்தின் குருட்டுப் பந்தயத்தில் ஓடுகிறோம்.


     எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று மீண்டும் உங்கள் அனைவருக்கும் தாழ்மையான வேண்டுகோள், முடிந்தவரை பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை சாப்பிட வேண்டாம், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக பிளாஸ்டிக் கப்பில் சூடான டீ, காபி போன்றவற்றை குடிக்கக் கூடாது.

          டாக்டர் ஏ கே பாண்டே, எம்எஸ், புற்றுநோய் மற்றும் இதய பராமரிப்பு சங்கம்.
 
தொடர்ந்து முன்னேறுங்கள், இதுவும் ஒரு புண்ணிய செயல்.*

IT வேலையை நோக்கி ஏன் ஓடுகின்றனர்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.  இது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது.  நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நண்பரின் மகள் 12வது மிகச்சிறந்த மதிப்பெண் பெற்றாள்.  அவளுக்கு IT படிக்க வேண்டும் என்பது ஆசை.  ஆனால் நண்பர் அவளை அமரவைத்து பேசி, வேறு துறைக்கு தயார் படுத்தி விட்டார்.  பல வருடங்கள் குடும்ப உறவு என்பதால், எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அவரிடம் இது குறித்து பேசியது சுருக்கமாக.

 IT துறையில் தற்போது லட்சக் கணக்கில் சம்பளம் கிடைப்பதன் பின்னால் ஒரு மிகப்பெரிய ஜியோபொலிடிகல் ஸ்ட்ராடஜி உள்ளது.  ஒன்று நமது பாரத வளர்ச்சியை தடுப்பது இன்னொன்று நமது கலாசாரத்தை குடும்ப உறவுகளை சிதைப்பது.

சமீப காலங்களில் பொறியியல் படித்த மாணவர்கள் கூட ஏதோ ஒரு  IT வேலையை நோக்கி ஓடுகின்றனர்.  ஏனெனில் மற்ற துறைகளில் சம்பளம் குறைவு (விதிவிலக்குகள் தவிர்த்து), உற்பத்தி பணி இடங்களில், இயந்திரங்களுக்கு நடுவே கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  இதனை இன்றைய தலைமுறை விரும்பாத அளவிற்கு மனதை மாற்றி விட்டனர்.  

இதனால் மற்ற துறைகளில் வளர்ச்சி என்பது 2000ஆம் ஆண்டுக்கு பிறகு குறைந்து, சீனாவில் இருந்து சிறு பொருட்களை கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது.  பாரதம் காலங்காலமாக சுயதொழிலில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த நாடு.  

ஆனால் இதனை பிரிட்டிஷார் மாற்றி முதலில் அரசு வேலை என்ற மாயை உருவாக்கி, (அதிகபட்சம் ஒரு 5-8% பேர் இருக்கலாம்) அவர்களுக்கு எல்லா சலுகைகள் அதிகம் உடல் உழைப்பு தேவையில்லை, நல்ல வருமானம், அதையும் தாண்டி தங்கள் கடமையை செய்யவும் செய்யாமல் இருக்கவும் வருமானம், பென்ஷன் என எல்லோரையும் அதன் பின்னால் ஓடவிட்டு, தொழில்வளராமல் ஒரு சூழ்நிலையை உருவாக்கினர்.

ஒரு கால கட்டத்தில் இது முடியாத போது பிரிண்ட் செய்யப்பட்ட டாலர்களை கொடுத்து,  IT துறையை வளர்த்து விட்டனர்.  இதன் மூலம் ஆராய்ச்சி, புதிய தொழில் நுட்பங்கள் அனைத்தும் இந்த 70-80 ஆண்டுகளில் முடங்கி, உடல் உழைப்பும் குறைந்து, தொழில் வளர்ச்சியே மந்தமாகும் நிலை திட்டமிட்டு உருவாக்கப் பட்டது.

இன்று எந்த இளைய தலைமுறையினரையும் கேளுங்கள், ஒரு ஏசி அறையில் நாள் முழுவதும் உட்கார்ந்து, வேலை செய்வதை 90% பேர் விரும்புகின்றனர்.  வேறு வழியில்லாமல் வேறு வேலைகளுக்கு சென்றவர்களும், எந்த திறனையும் வளர்த்துக் கொள்ளாமல் விதியே என வாழுகின்றனர்.

இதில் பெண்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு நடக்கிறது.  இதனால் பல பெண்கள் குறைந்தபட்சம்              28


வயது - 30 வயது வரை திருமணம் என்பதையே ஏற்பதில்லை.  அப்படியே வரன் தேடினாலும் அவர்களுக்கு இணையாக அல்லது அதிக சம்பளம் வாங்கும் மற்றதுறை இளைஞர்கள் கிடைப்பதில்லை.

பெண்கள் தங்கள் குழந்தை பிறப்பு காலத்தை தள்ளி போடுவதால் மக்கள் தொகை இளைஞர்கள் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது.   இதே நிலை ஏற்கனவே ஐரோப்பா, அமெரிக்கா, சீனாவிலும் பெரும் பிரச்சினையாகி உள்ளது.

மொத்தத்தில் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள்


- தொழில் வளர்ச்சி இன்றும் பெரும் பிரச்சினை


-அடிப்படை மனவளர்ச்சி, திறன், ஆராய்ச்சி, குறைந்து கொண்டே வருகிறது.


-குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டே வருகின்றன.


- பெண்களின் உடல் நிலை பாதிப்புகள் குறித்து சொல்லவே வேண்டாம்.


-பல குழந்தைகள் ஒற்றை குழந்தைகளாக மனஆரோக்கியமின்றி, தனிமைப் பட்டு போகின்றனர்.
 

- இந்த கவர்ச்சிகரமான வேலைகளில் 40 வயதுக்கு பிறகு இவர்கள் ஒதுக்கப்படும் போது ஏற்படும் மன அழுத்தம் ஏராளம்.


- நகரங்களில் மட்டுமே மக்கள் தொகை கூடுவதால், பல பிரச்சினைகள்.


-வயதானவர்கள் தனித்து விடப்படுதல், குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறைக்கு சூழல் அதிகரிக்கிறது.


- மருத்துவ மாஃபியா இதனை பெரிய அளவில் கொண்டாடி பணம் பார்க்கின்றனர்.


- பாரம்பரிய உணவுகள் மறந்து, வீடுகளில் உணவு தயாரிப்பது குறைந்து, ஆரோக்கியம் பாதிக்கப் படுகிறது.


-ஸ்விக்கி ஜொமாட்டோ நல்ல காசு பார்க்கின்றனர்.  அதே சமயம் கலப்பட உணவுகள், தரமற்ற ஆரோக்கியமற்ற ரெடி உணவுகள் மூலம் பெரும் பணம் பார்க்கின்றனர்.

இப்படி பலவற்றை சொல்லிய அவர், எங்கள் குடும்பத்தில் ஆண்கள் அதிக அளவு சம்பாதிப்பதும், பெண்கள் (திறமையானவர்கள், ஸ்பெஷலிஸ்ட்டுகள், விதி விலக்குகள் தவிர்த்து) மற்றவர்கள் குடும்பத்தை பாதிக்காத அளவு வேலை பார்த்தால் அல்லது வேரு சிறு தொழில்களில் ஈடுபட்டால் போதும் என்று முடிவெடுத்துள்ளோம்.

பெண்கள் ஃப்ரீயாக இருப்பதால் எல்லா குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றனர், மத, இன, கலாச்சார் சம்மந்தமான விழாக்களை முன்னெடுத்து செய்வது, உறவினர் வீடுகளுக்கு எந்த நேரமும் சென்று வருவது, சுற்றுலா அல்லது பில்கிரிமேஜ் செல்வது என மனநலத்துடன் உள்ளனர்.  குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தை இழப்பதில்லை.

சரியான நேரத்தில், சரியான ஆட்களுடன் திருமணங்கள், நல்ல குடும்ப உறவுகள் என சந்தோஷமாக இருக்கிறோம்.  தேவையான அளவு சம்பாதிக்கிறோம்.  நன்றாக போகும் வாழ்க்கையை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறார்.

அவர் சொன்னதை அவர் மகள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்.  

நான் இன்னமும் யோசித்துக் கொண்டு உள்ளேன்.

நீங்கள்?

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்மகன்கள் ! 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும்பெண்கள்!

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்.. 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 20க்கு...