Total Pageviews
Thursday, September 24, 2026
கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்..
Wednesday, September 23, 2026
இன்றிலிருந்து 100 நாட்களுக்கு இதைத் தொடர்ந்து செய்தால், நிச்சயம் மாற்றம் ஏற்படும்!
1. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருங்கள் - உங்கள் மனம் தெளிவடையும்.
2. தினமும் 100 ரூபாய் சேமியுங்கள் - உங்களிடம் தன்னம்பிக்கை வளரும்.
3. ஒவ்வொரு முறையும் 50 முறை 'ஸ்க்வாட்' (squats) உடற்பயிற்சி செய்யுங்கள் - உங்கள் உடலின் கீழ்ப்பகுதி வலுப்பெறும்
4. ஒவ்வொரு முறையும் 3 ஆங்கில வாக்கியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள் - சரளமாகப் பேசும் திறன் வளரும்
5. ஒரு லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் குடியுங்கள் - உங்கள் சருமம் பொலிவு பெறும்
6. தினமும் 5000 அடிகள் நடங்கள் - உங்கள் உடல் அமைப்பு மாறும்
7. தினமும் 5 வரிகள் நாட்குறிப்பு எழுதுங்கள் - உங்கள் எழுத்துத் திறன் மேம்படும்
8. ஒவ்வொரு முறையும் நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்கும் 3 விஷயங்களை எழுதுங்கள் - உங்கள் மனம் நிறைவாக உணரும்
9. ஒவ்வொரு முறையும் ஒரு புத்தகத்தின் 10 பக்கங்களைப் படியுங்கள் - அறிவு வளரும்
10. தினமும் 3 மணி நேரம் முழு கவனத்துடன் ஒரு செயலில் ஈடுபடுங்கள் - உங்கள் வாழ்க்கையே மாறும்.
முயற்சி செய்யுங்கள் நண்பர்களே....
அஜய்குமார்
இனி சுபநிகழ்ச்சிகளில் ஒரு மாற்றம் வரட்டும்!
இனி சுபநிகழ்ச்சிகளில் ஒரு மாற்றம் வரட்டும்!
இன்றைக்கு ஒரே முகூர்த்த நாளில் ஏராளமான திருமணங்களும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரே நாளில் பல நிகழ்ச்சிகள் வந்துவிடுகின்றன.
1000 பேருக்கு அழைப்பிதழ் கொடுத்தாலும் 400 பேர் வருவதே பெரிய விஷயமாகிவிட்டது. வந்தவர்களிலும் பலர் உணவருந்துவதில்லை. சாப்பிடுபவர்களிலும் பலர் குறைவாகவே சாப்பிடுகிறார்கள். இறுதியில் அதிக அளவில் தயாரிக்கப்பட்ட உணவு வீணாகிறது.
அதிக அழைப்பு… அதிக செலவு… உணவு வீணாகுதல்… தேவையற்ற எதிர்பார்ப்பு… அதன் பின்னால் மனக்கசப்பு!
இன்னொரு விஷயத்தையும் நாம் சிந்திக்க வேண்டும்.
நமது வீட்டு சுபநிகழ்ச்சிகளுக்கு அரசியல் பிரமுகர்களையோ, பெரிய தொழிலதிபர்களையோ, செல்வாக்கு மிக்கவர்களையோ சந்திக்க மணிக்கணக்கில் காத்திருந்து அழைப்பிதழ் கொடுக்கிறோம்.
அதோடு ஸ்வீட் பாக்ஸ், மிக்சர், சால்வை என நம்மால் முடிந்த மரியாதைகளையும் செய்து அழைக்கிறோம். ஆனால் பல நேரங்களில் அவர்கள் நமது நிகழ்ச்சிக்கு வருவதற்குக்கூட வாய்ப்பிருக்காது; நாம் கொடுத்த அழைப்பிதழ்கூட அவர்களின் நினைவில் இருக்குமா என்பது தெரியாது.
அந்த நேரத்தையும் செலவையும் அன்பையும் நம்முடைய சொந்த உறவுகளுக்குக் கொடுத்தால் எப்படி இருக்கும்?
நம்மைப் பார்த்ததும் முகம் மலர்ந்து பேசும் உறவினரை நேரில் சென்று அழைப்போம். நம்முடைய அழைப்பை உரிமையோடு ஏற்றுக்கொள்ளும் நண்பரை அன்போடு அழைப்போம். நமது குழந்தைகளை மனதார வாழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்போம்.
ஊரில் தெரிந்தவர்கள் அனைவருக்கும் பத்திரிக்கை வைக்க வேண்டும் என்ற கட்டாயமும் வேண்டாம்.
“நாம் அவர்களுக்கு மொய் செய்தோம்; அவர்கள் நமக்குச் செய்யவில்லை” என்ற கணக்கும் வேண்டாம்.
அதனால் ஏற்படும் தேவையற்ற மனவருத்தமும் வேண்டாம்.
1000 பேரின் சம்பிரதாய வருகையைவிட,
100 பேரின் மனப்பூர்வமான வாழ்த்து உயர்ந்தது! ❤️
நமது இல்ல சுபநிகழ்ச்சி என்பது நமது செல்வாக்கைக் காட்டும் மேடை அல்ல.
நம்மை நேசிப்பவர்களோடு நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் அழகான தருணம்.
பதவியைப் பார்த்து அழைக்க வேண்டாம்…
பணத்தைப் பார்த்து அழைக்க வேண்டாம்…
செல்வாக்கைப் பார்த்து அழைக்க வேண்டாம்…
நம்மீது அன்பு வைத்திருப்பவர்களைத் தேடி அழைப்போம்! ❤️
எண்ணிக்கையைக் குறைப்போம்…
ஆடம்பரத்தைக் குறைப்போம்…
உணவு வீணாவதைத் தடுப்போம்…
உண்மையான உறவுகளின் மதிப்பை உயர்த்துவோம்! 💐
பணிவுடன் உங்கள் அருண்
Friday, September 11, 2026
புளியோதரை மிக்ஸ் விற்று கோடிகள்ல சம்பாதிக்க முடியுமா?
'புளியோதரை மிக்ஸ் விற்று கோடிகள்ல சம்பாதிக்க முடியுமா?’னு கேட்டா பலர் சிரிப்பாங்க. ஆனா, அதே புளியோதரை மிக்ஸை பிராண்டா மாற்றினா என்ன நடக்கும் தெரியுமா?
வீட்டில் ஒரு தூக்குவாளியில் ஆரம்பிச்ச விற்பனை இன்று ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்யும் நிறுவனமா வளர்ந்திருக்கு. பிசினஸ்ங்கிறது நாம என்ன பொருளை விற்கிறோம்கிறதுல மட்டுமல்ல. எப்படி விற்கிறோம், யாரிடம் விற்கிறோம்ங்கிறதுலேயும் இருக்கு. எந்தப் பொருளாக இருந்தாலும் தரமான பொருளாக இருந்தால் மக்கள் நிச்சயம் நம்மைத் தேடி வருவாங்க. இதற்கு நாங்க உதாரணம்” என்று மகிழ்ச்சிப் பொங்க பேச ஆரம்பிக்கிறார்கள் ‘புளிக்காய்ச்சல் டாட் காம்’ நிறுவனத்தின் நிறுவனர்கள் வினோத் மற்றும் சுபா.
வினோத் மற்றும் சுபா இருவரும் ஐடி நிறுவன ஊழியர்கள். வினோத்தின் அப்பா உணவு பிசினஸ் செய்து வந்தவர். தந்தை மறைவுக்குப் பின் அவர் நினைவாக உணவு சார்ந்து இயங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை, நங்கநல்லூரில் வீட்டில் ஒரு தூக்குவாளியில் வைத்து புளிக்காய்ச்சல் விற்கும் பயணத்தை தன் மனைவியுடன் சேர்ந்து தொடங்கினார். தற்போது, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஸ்நாக்ஸ் வகைகள், ரெடி மிக்ஸ் பொடி வகைகள், ஸ்வீட் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய முயற்சியை இன்று ஆண்டுக்கு 8 கோடி டர்ன்ஓவர் செய்யும் நிறுவனமாக வளர்ந்திருக் கிறார்கள். பிசினஸில் தங்களின் ஆரம்பம் முதல் முன்னேற்றம் வரை அனைத்தையும் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.
“எங்களுக்கு சொந்த ஊர் பாலக்காடு. ஆனா, பொறந்ததுல இருந்தே சென்னையிலதான் இருக்கோம். எங்க அப்பா கேட்டரிங் பிசினஸ் பண்ணிட்டு இருந்தார். கேட்டரிங்க்கு அம்மாவும் அப்பாவும் சேர்ந்து சமைப்பாங்க. சமையல் பிசினஸை பொறுத்தவரை உழைப்பைக் கொட்டிக் கொடுக்கணும். 24 மணி நேரமும் வேலை இருந்துட்டே இருக்கும்.
சுவையை சரியாக மெயின்டெயின் பண்ணணும், பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருளையும் தரமானதாகப் பார்த்துத் தேர்வு செய்யணும். கூடுதலா போட்டி அதிகம். இத்தனைக்கும் நடுவுல எங்க அப்பா, என்னையும், தம்பியையும் படிக்க வெச்சாரு.
‘சமையல் தொழில்ல இருக்கும் கஷ்டம் என்னோட போகட்டும். இந்தத் தொழில் பக்கமே வரக்கூடாது’னு சொல்லி வளர்த்தாரு. ஆனா, அவரு உயிரோடு இருக்கும்போது திறமையை எப்படி பிசினஸாக்குறதுனு எங்களுக்குத் தெரியல. அவர் பட்ட கஷ்டமெல்லாம் நினைச்சா வருத்தமா இருக்கு.
அப்பாவின் இழப்பும்... வாழ்க்கையை மாற்றிய முடிவும்!
நானும் மனைவியும் ஐடி நிறுவனத்துல வேலை பார்த்துட்டு இருந்தாங்க. எல்லாம் நல்லபடியா போயிட்டு இருந்த நேரத்துல அப்பாவோட மரணம் எங்களுக்கு பெரிய இழப்பா இருந்துச்சு. அப்பா இறந்ததுக்கு அப்புறம்கூட, அவருடைய வாடிக்கையாளர்கள்கிட்ட இருந்து ரெகுலரா போன் வந்துட்டே இருந்துச்சு. அதனால, அப்பாவோட பிசினஸை தம்பி கையில எடுத்தான்.
அப்பாவின் இழப்புல இருந்து மீண்டு வர்றதுக்குள்ள என் மனைவிக்கு, உடல்நலப் பிரச்னை ஏற்பட்டுச்சு. அதனால வேலையை விட்டுட்டு வீட்ல இருந்தாங்க. உடல் ரீதியான வலி ஒரு பக்கம், வேலையை விட்டது ஒரு பக்கம்னு அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸா இருந்தாங்க. அவங்களோட கவனத்தை திசை திருப்ப ஏதாவது பிசினஸ் ஆரம்பிச்சுக் கொடுக்கலாம்னு தோணுச்சு.
சமையல் சார்ந்த விஷயங்களில் ஏற்கெனவே அனுபவம் இருந்ததால, அந்த ஐடியாக்களை யோசிச்சோம். இப்போ இருக்கும் அவசர உலகத்துக்கு ஏற்ற மாதிரி ரெடி மிக்ஸ் ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு.
10,000 ரூபாய் முதலீடு... ஒரு தூக்குவாளியில் தொடங்கிய பிசினஸ்!
அம்மா புளிக்காய்ச்சல் விற்கலாம்னு ஐடியா கொடுத்தாங்க. அம்மாகிட்ட ரெசிப்பி கேட்டு வாங்கினோம். 10,000 முதலீடு பண்ணி, தம்பியோட கிச்சன்லேயே புளிக்காய்ச்சல் தயார் பண்ணினோம் அதை தூக்கு வாளியில வெச்சு என் மனைவி வீட்டிலேயே விற்பனை பண்ண ஆரம்பிச்சாங்க” என்று பிசினஸ் தொடங்கியது பற்றி வினோத் பகிர, நிறுவனம் தொடங்கியது பற்றி பேச ஆரம்பித்தார் சுபா.
வீட்டு வாசலில் தொடங்கிய விற்பனை... இணையம் வரை விரிந்த சந்தை!
“நாள்கள் நகர நகர, கணவன் - மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போகும் வீடுகளில் இருந்து ரெடிமிக்ஸ் ஐயிட்டங்கள் கேட்க ஆரம்பிச்சாங்க. அக்கம்பக்கம் வீடுகள் தாண்டி வெளியூர்களில் இருந்தும் ஆர்டர் வர ஆரம்பிச்சது. அதனால பேக்கிங்கும் தேவைப்பட்டுச்சு. பாக்ஸ்ல போட்டு விற்பனை பண்ண ஆரம்பிச்சோம்.
ஒரு சில மாசத்துல பிசினஸ் பிக்அப் ஆக ஆரம்பிச்சது. அதனால மாமனார் பேர்ல ‘நங்கநல்லூர் நாராயணன் ஸ்டோர்ஸ்’னு வீட்டு பக்கத்துல ஒரு சின்ன கடையை ஆரம்பிச்சோம். குழம்பு தாண்டி ரெடி மிக்ஸ் பொடிகள், குழம்பு பேஸ்ட் வகைகளை விற்பனை பண்ண ஆரம்பிச்சோம். கடை ஆரம்பிச்ச பிறகு செலவுகள் அதிகமாச்சு. ஆனா, நங்கநல்லூர் தாண்டி எங்க பொருளை விற்க முடியல. தீர்வு தேடினோம்...ஆன்லைன் பிசினஸை ஆரம்பிச்சோம்” என்ற சுபாவைத் தொடர்ந்து தங்களுடைய பிசினஸை ஆன்லைன் பிளாட்ஃபார்மில் நகர்த்தியது பற்றிச் சொன்னார் வினோத்.
ஒரு ரெசிப்பி... ஒரு பிராண்டாக மாறிய கதை!
“ஆன்லைன் பிசினஸ் ஆரம்பிக்கும்போதே மக்களை ஈர்க்கும் விதமா பேர் இருக்கணும்னு நினைச்சோம். எங்களோட பிரதான ரெசிப்பி புளிகாய்ச்சல்ங்கிறதால அதையே பிராண்ட் பெயரா வெச்சு ட்டோம். உணவுக்கான தரச்சான்றிதழ், ஜி.எஸ்.டி எண் எல்லாத்தையும் வாங்கி முறைப்படி பிராண்டாக இயங்க ஆரம்பிச்சோம். பிசினஸை வளர்க்க அரசாங்க லோன்களை வாங்கினோம்” என்றவர் தங்களின் மார்க்கெட் டெக்னிக் பற்றி பேச ஆரம்பித்தார்.
75 வயது மாமாதான் எங்களுடைய முதல் இன்ஃப்ளூயன்ஸர்!
“இது பாரம்பர்ய உணவோட சம்பந்தப்பட்ட பிராண்ட்ங்கிறதால பெரியவங்க யாராவது வீடியோல பேசுனா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனால, எங்க மாமாவை வெச்சு வீடியோஸ் பண்ண ஆரம்பிச்சோம். அவருக்கு 75 வயசு. அவர் பொறுமையா பேசுற வீடியோக்கள் மக்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சுது. நல்ல ரீச் கிடைச்சுது. நாங்களே வீடியோ எடுத்து, எங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு பண்ண ஆரம்பிச்சோம். அப்புறம் இணைய தளம் மூலமாகவும் விற்பனையைத் தொடங்கினோம். இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங்கையும் கையில எடுத்தோம். நல்ல ரீச் இருந்ததால் அடுத்தடுத்து ஸ்நாக்ஸ் வகைகளை அறிமுகம் பண்ணிணோம். இப்போ ஊறுகாய், வத்தல் பொடி வகைகள், இனிப்புகள், சாத பேஸ்ட்கள், ரெடிமிக்ஸ் பொடி வகைகள்னு 100-க்கும் அதிகமான பொருள்கள் இருக்கு.
இப்போ பிசினஸ் ஆரம்பிச்சு மூணு வருஷங்கள் ஆகுது. முதல் வருஷமே தீபாவளி ஆர்டர்கள் எடுத்தோம். அளவுக்கு அதிகமா ஆர்டர்கள் வந்தப்போ சமாளிக்க முடியாம திணறினோம். ஆனா, இப்போ எவ்வளவு ஆர்டர்கள் வரும் என்பதை கணிச்சு பொருள்கள் தயாரிக்க ஆரம்பிச்சுட்டோம். 30 பேர் வேலைக்கு இருக்காங்க. சின்ன கிச்சன்ல ஆரம்பிச்ச பிசினஸ் இப்போ 2000 சதுரடி இடத்துல இயங்குது.
ரெசிப்பிகளுக்கு ஒரு நிலைத்ததன்மை கொண்டு வந்துட்டோம். இப்போ வரை இயந்திர பயன்பாடுகள் இல்லாமல் கைகளில்தான் உருவாக்குறோம். தேங்காய் எண்ணெய் உணவுகள்தான் எங்களுடைய யுஎஸ்பி” என்ற வினோத்தை தொடர்ந்து, தாங்கல் சந்தித்த சவால்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார் சுபா.
“பொருள்களை நீண்ட நாள் கெடாமல் இருக்கத்தான் நிறைய மெனக்கிட வேண்டி இருந்துச்சு. நாங்க பிசினஸ் ஆரம்பிச்ச சில மாதங் களிலேயே வெளிநாட்டு ஆர்டர்கள் எல்லாம் வந்துச்சு. ஆனா, இங்க இருந்து கொரியர் அனுப்பி பொருள் அவங்க கைக்கு கிடைக்கிறதுக்குள்ள அது கெட்டுப்போயிடும். இல்ல அடுத்த ஒரு சில நாள்ல கெட்டுப் போயிடும். இதுதான் எங்களுடைய பெரிய சவாலாக இருந்துச்சு. எண்ணெய் பயன்பாடு அதிகமா இருந்தா பொருள் சீக்கிரமா கெட்டுப்போகாதுனு, அதிக எண்ணெய் பயன்படுத்த ஆரம்பிச்சோம். பிறகு, ஆக்ஸிஜன் இல்லாத நவீன பேக்கிங் முறையைக் கொண்டு வந்து ஒரு மாசம் வரை எங்களுடைய உணவுப் பொருள் கெடாமல் இருக்கும் டெக்னிக்கைக் கண்டு பிடிச்சுருக்கோம். தினம் தினம் எங்க பிசினஸ் சார்ந்து புதுப்புது தகவல்களை நாங்க தெரிஞ்சுக்கிட்டு அதை பிசினஸ்ல நடைமுறைப்படுத்தவும் செய்றோம்.
தினமும் ரூ.3 லட்சம் விற்பனை!
ரெசிப்பி உருவாக்குறது, சமையல் மேற்பார்வையெல்லாம் எங்க மாமியார் பொறுப்பு. பேக்கிங், கணக்கு வழக்குகளை என் கணவர் பார்த்துக்குறாங்க, மார்க்கெட்டிங்கை நான் கவனிச்சுக்கிறேன்.
இப்போ நங்கநல்லூர், மடிப்பாக்கம், பெங்களூரில் கடை இருக்கு. எட்டுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்புறோம். கிளைகளும் கேட்டுட்டு இருக்காங்க. ஆரம்பத்துல ஒரு நாளைக்கு 2,000 ரூபாய்க்கு விற்பனை ஆனாலே பெரிய விஷயமாக இருந்துச்சு. இப்போ ஒரு நாளைக்கு மூணு லட்சம் ரூபாய் வரை விற்பனை பண்றோம்.
பொருள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை... தரத்தையும் நம்பிக்கையையும் விற்கத் தெரிஞ்சா, சந்தை நம்மைத் தேடி வரும் என்பதை மெய்பித்து உள்ளோம்” என்று விடைபெறுகிறார்கள் புளிகாய்ச்சல் நிறுவனத்தின் நிறுவனர்கள்.
இந்தப் புளியில், லாபத்தின் தித்திப்பு!
Thursday, September 3, 2026
எது நிம்மதியான வாழ்க்கை !
"நிம்மதி" என்பது கவலை, குழப்பம் அல்லது பயம் இல்லாத மன நிலையைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது.
நிம்மதி என்றால் என்ன?
·மன அமைதி: தேவையற்ற எண்ண ங்களையும், அதிகப்படியான எதிர் பார்ப்புகளையும் தவிர்க்கும் போது மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
· திருப்தி உள்ளதை கொண்டு திருப்தி அடைவது உண்மையான நிம்மதி யைத் தரும்.
·ஒவ்வொரு வாழ்க்கை பிரச்சி னைகள் தனித்தனி.
·எனவே பலருக்கு அவர்கள் பிரச்சினை தீர்ந்தாலே நிம்மதி தான்.
·பசியால் தவித்தவனுக்கு மூன்று வேளை சாப்பாடு கிடைத்தால் மன நிம்மதி.
·நோயால் பீடிக்கப்பட்டவனுக்கு அது குணமானால் நிம்மதி.
·சுற்றத்தினரால் மனவேதனைப் பட்டவர்களுக்கு பந்த பாசமற்ற வாழ்க்கை நிம்மதியானது.
·பணக்காரனுக்கு காலையில் எழுந்த உடன், சொத்துகள் தங்கி ருந்தால் நிம்மதி.
·எல்லா தாயாருக்கும் வெளியே சென்ற கணவன், குழந்தைகள் வீடு திரும்பியதும் நிம்மதி.
நிம்மதியான வாழ்க்கை!
1.எதிர்ப்பார்ப்பு இல்லாத வாழ்க்கை!
2.அன்பான உறவுகள் அமைந்துள்ள வாழ்க்கை!!
3.ஆரோக்கியமான உணவும்! ஆரோக்கியமான உடலும் அமைந் துள்ள வாழ்க்கை!!
4.கடன் இல்லாத வாழ்க்கை!!
5.அடுத்தவரின் உதவியை எதிர்ப் பார்க்காத வாழ்க்கை!!
6.இறைவனை அனுதினமும் நன்றியுடன் வாழ்கின்ற வாழ்க்கை!!
இவையே நிம்மதியான வாழ்க்கை!!
நிம்மதியான வாழ்க்கை தருவது பணமா இல்லை உறவா?
இரண்டுமே இல்லை.
எதிர்பார்ப்பு இல்லாத மனமே நிம்மதியை நிறைவாக தரும்!!
எனவே எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையே நிம்மதியாக வாழும் வாழ்க்கை!!
பணமும் உறவும் நிரந்தரம் இல்லாதது. சுயநலம் சார்ந்தது.
பணம் செலவு செய்தால் உறவு இருக்கும். பணம் இருந்தாலும் செலவுகள் செய்ய வில்லை என்றால் உறவுகள் அருகில் இருந்தாலும் பாசம் இருக்காது. பணமே இல்லை என்றால் உறவுகள் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.
கண்டிப்பாக ஒரு நாள் அனுபவம் கற்றுக் கொடுக்கும்!!
பணம், நிச்சயமாக, வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கருவியாக இருக்கிறது.
உணவு, உடைகள், வீடு—இவை அனைத்தும் பணத்தின் மூலம் கிடைக்கின்றன. ஆனால், பணம் மட்டுமே தாராளமான ஆனந்தத்தை தராது. கொஞ்சம் பணம் இருந்தாலும், நாம் ஒரு நிலையை அடைந்து விடுவோம். ஆனால் அடுத்து என்ன செய்வது? பணத்தைச் சேமிக்க வேண்டும், அதிகரிக்க வேண்டும், அல்லது வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்று நினைப்போம். இதோ, இது மனிதனை எப்போதும் ஓர் அடைக்கலத்தில் சிக்க வைக்கும்.
ஆனால், நிம்மதி என்பது மிகவும் முக்கியமானது.
பணம் இருந்தாலும், மனதில் அமைதி இல்லையென்றால், அது எந்த பயனும் தராது. நிம்மதியில் வாழ்வது, உள்ளார்ந்த அமைதி யோடு, மற்றவரோடு அன்புடன், நேர்மையுடன் பழகும் முறையோடு வாழ்க்கையை அனுபவிப்பதை உணர்த்துகிறது. நிம்மதி பணத்திற்கு அடிப்படையாக இருக்காது; அது உள்ளார்ந்த அமைதியில் இருந்து எழுகின்றது.
நாம் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்று தேர்வு செய்யும்போது, பணம் மட்டுமே முக்கியம் அல்ல. பணம் எவ்வளவு தேவை என்பதை நாம் உணர்ந்தாலும், அந்த பணத்தை சம்பாதிக்கும் பயணத்தில் ஏற்படும் மன அமைதி, உடல்நலம், உறவுகளின் நிலை—இவை அனைத்தும் முக்கியமானவை.
முடிவாக, பணமும், நிம்மதியும் சமநிலையாக இருந்தால் தான், நமக்கு முழுமையான வாழ்க்கை கிடைக்கும்.
பணமும் இல்லை, உறவும் இல்லை. இரண்டுமே நிலையானதில்லை.
சுய ஒழுக்கமும், மனித நேயமும் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை யை கொடுக்கும்.
வாழ்க்கைக்கு தேவை பணம் என்றாலும் நிம்மதி இல்லாமல் பணத்தை மட்டும் வைத்து வாழ்வது பயனில்லை.
இந்த இரண்டுக்கும் மேலாக வாழ்க்கைக்கு தேவையானது உடல் ஆரோக்கியம். அது இல்லாமல் இந்த இரண்டுமே பயன்படாது.
குறையை குறையாக பார்க்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலை இருந்தால் எல்லாம் வசப்படும்…வாழ்க்கையில் !
அந்த காலத்திலேயே திருவள்ளுவர் கூறிவிட்டார். "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை " அப்புறம் என்ன? நாம் இந்த உலகில் கௌரவமாக வாழ வேண்டும் என்றால் பணம் தான் உங்களை முன்னிருத்தும். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்குமாம். அப்புறம் நாம் மட்டும் என்னவாம்?
கோடி இல்லை இல்லை ஒரு நூறு கோடி இல்லை ஆயிரம் கோடி இருந்தாலும் இன்னும் கோடிகளை தேடி அலைவார்களைப் பாருங்கள். அவர்கள் ஏழு தலைமுறைகளுக்கு சம்பாதிக்க? அலைகிறார்கள்.
நாம் அன்றாட பிழைப்புக்கு அல்லது நமது உடன் immediate தலைமுறைக்காவது சேர்க்க வேண்டாமா??
இந்த மனிதன் இருக்கிறான் பாருங்கள் என்ன அறிவு. குழந்தையில் இருந்து 17அலலது 18 வரை தனது தாய் தந்தை உழைப்பில் உண்கிறார்கள். அப்புறம் அவனுக்கு ஒரு வாழ்க்கை தன் குடும்பம் பிள்ளை என ஓடி ஓடி அவர்களுக்கும் சம்பாதிக்கிறார்கள்.
ஒருசிலர் நியாயமான முறையில் பணத்தை தேடி தனக்கான வாழக்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு சிலர் தர்மம்,நியாயம் என்ற அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று அலை கிறார்கள்.என்னமோ ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து போல்.
ஈட்டி எட்டும் வரை பாயும் பணம் பாதாளம் வரை பாயும் என்பர். அந்த பாதாளம் எது என்பது யாருக்கும் தெரியாது.
கூட்டை விட்டு பறக்காத பறவை இறந்து விடும்.
வில்லை விட்டு புறப்பட்டாத அம்பு ஒன்றும் செய்யாது.
தேங்கிக் கிடக்கும் தண்ணீர் நாற்றம் எடுத்து விடும்
எந்த ஒரு விலங்கு அல்லது பறவை இனமாயினும் தனது குட்டி/ குஞாசுக்கு வளரும் வரை தான் இறை தேடி வந்து ஊட்டும். பின்னர் அவைகள் தனக்கான இரையை தாங்களே தேடிக் கொள்ளும்.அப்படி போகவில்லை என்றால் அவைகள் இறக்க நேரிடும்.
எந்த ஒரு நபருக்கும் தனது வாழ்க்கையை பற்றிய தெளிவான சிந்தனை/ அறிவு வேண்டும். தன் இலக்கு என்ன ? அதற்கான முயற்சி இவைகளை பற்றிய ஒரு புரிதல் வேண்டும்.
எதுவும் இன்றி நானும் சம்பாதிக்கிறேன் பேர்வழி என்பது போல் காற்று வீசும் காலத்தில் மாவு விற்கவும் மழை பெய்யும் காலத்தில் உப்பு விற்க போவதைப் போல்.
எந்த தொழில்களில் உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கிறதோ அதை தேடிப் போய் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீர் மருத்துவம்:-
நீர் மருத்துவம்:-
தினமும் அதிகாலை எழுந்தவுடன் வாயை கொப்பளித்து விட்டு ஒன்னேகால் லிட்டர் மண்பானை தண்ணீரை குடித்து வந்தால் உடல் பிணிகள் அனைத்தும் நாற்பது நாட்களில் நம்மை விட்டு நீங்கிவிடும்.
(கொஞ்சம் கொஞ்சமாக குடிங்க
ஒரே கல்ப்பில் குடிக்க வோணாம்)
ஆச்சரியமாக இருக்கலாம்.
ஆனால் உண்மை இதுதான்;
தினந்தோறும் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக சுத்தமான நல்ல தண்ணீரை குடிப்பதை பழக்கப்படுத்தி வந்தால்;
உடல் குளிர்ந்து இரத்தம் சுத்தமாகி மலச்சிக்கல் விலகி வாதம் பித்தம் சிலேத்துமம் இவைகளின்
மாறுபாடுகள் சமநிலை பட்டு உடல் பிணிகள் அனைத்தும் விலகிவிடும்.
காலை எழுந்தவுடன் குடி நீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்களில் சில;
தீராத தலைவலி தீரும்.
உயர் ரத்தம் சமமாகும்.
ரத்த சோகை விலகும்.
கீல்வாதம் மூட்டுவலி உடல் பருமன்
உடல் வலி பக்கவாதம் இவை அனைத்தும் விலகும்.
சளி இருமல் காது இரைச்சல் காசநோய் மற்றும் ஆஸ்துமா தொந்தரவு விலகும்.
சளியால் ஏற்படுகின்ற தொண்டைக்கட்டு நீங்கி சுவாசம் சீராக நடைபெறும்.
மூளை காய்ச்சல் இதய பலவீனம் நீங்கும் கல்லீரல் நோய் சிறுநீரக நோய்கள் உடலில் தோன்றாத வண்ணம் உயிரை காக்கும்.
நோய்கள் தோன்றுவதற்கு காரணமான அதிக பித்தத்தை அறவே நீக்கும்.
வயிற்றுப் பொருமல் ரத்தக் கடுப்பு மூலநோய் மற்றும் மலச்சிக்கலை நீக்கும்.
பெண்களுக்கு ஏற்படுகின்ற அதிக உதிரப் போக்கை குணப்படுத்தும் முறையாக மாதவிடாய் நடைபெறும்
கர்ப்பப்பை புற்று மார்பகப் புற்று மேலும் தோலில் ஏற்படுகின்ற படை நோய்கள் அனைத்தும் நீங்கும்
ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாற்பது நாட்கள் இந்த குடிநீர் மருத்துவ முறையை பயன்படுத்தி வந்தால் உடலில் ஏற்படுகின்ற அனைத்து நோய்களும் படிப்படியாக குறைந்துவிடும
இதன் மூலம் மருந்து மாத்திரைகள் எதுவும் இன்றி நாம் ஆரோக்கியமாக ஆயுள் முழுவதும் வாழ முடியும்
நீர் அருந்தும் முறைகள்
ரசாயனப் பொருட்களின் மூலம் சுத்திகரிப்பு செய்த பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கின்ற நீரைபயன்படுத்தக்கூடாது
இயற்கையான முறையில் கிடைக்கின்ற ஆழ்குழாய் கிணறு நீரை மட்டுமே குடிப்பதற்காக பயன்படுத்தவேண்டும்
அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிட்டு இந்த நீர் மருத்துவத்தை கடைப்பிடித்தால் பூரண நன்மைகள் உண்டாகும்
நீர் மருத்துவத்தை பயன்படுத்தும் பொழுது உடல் சோர்வாக இருப்பதாய் உணர்ந்தால் பயம் வேண்டாம்
வழக்கத்திற்கு மாறாக அதிகமான தண்ணீரை அருந்துவதால் இதன் மூலம் உடலில் தேங்கி இருக்கின்ற மலம் முழுவதும் வெளியேறி விடுவதால் இப்படி ஒரு பிரமை நமக்கு ஏற்படும் அவ்வளவே
மற்றபடி எந்த பக்க விளைவுகளும் இல்லை பாதுகாப்பான வைத்திய முறையே இது
தெரிந்து கொள்ள வேண்டிய
ஒரு சிறுகுறிப்பு
கிணற்று நீர் அல்லது ஆள் குழாய் நீர் எதுவாக இருந்தாலும் இரவே சூடேற்றி இதில் ஐந்தில் ஒரு பங்கை சுண்ட காய்ச்சி இதை ஆறவைத்து ஒரு மண் பானையில் ஊற்றி இந்த நீரையே காலை வேளையில் பயன்படுத்த வேண்டும்
இதுவே தண்ணீரை அறிந்து அதன் மூலம் நோய்களை நீக்கி கொள்வதற்கான சரியான முறையாகும்
காலை எழுந்தவுடன் எப்படி ஒன்னேகால் லிட்டர் தண்ணீரை குடிப்பது என்று யோசிக்கலாம்
ஆனால்
ஒரு வாரகாலம் இதை பழகி வந்தால் இது ஒரு சாதாரண செயல் என்று உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்
நீரின் பெருமையை உணர்த்தும் முன்னோர்களின் பழமொழி இது
நீரின்றி அமையாது உலகு!
கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்..
பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்து, பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள்; கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வ...
-
Old Age Homes Madurai Christian Seva Sangam Trust kennet garden, Alagapan nagar, Paandiyan nagar Madurai Cell :098430 52242 ...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...


