Total Pageviews

Friday, September 12, 2025

நான்தான் இறந்துவிட்டேனே ! பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!

 

நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please🙏May be an image of text that says 'ShareChat @anbalagan இழந்த காலத்தை மறுபடியும் அடைய முடியாது எதிர்காலம் என்னவென்று நம்மால் யூகிக்கவும் முடியாது கையில் இருப்பது நிகழ்காலம் மட்டுமே அதை நம் வாழ்க்கைக்கு ஏற்றவாறு பயன்ப்படுத்தி கொள்வோம் நற்காலை வணக்கம்'
 

காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எடுத்துப்பார்க்கிறேன், கண்ணீர்அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
May be an image of 3 people and text that says 'நல்ல பதிவுகள் சுயநலமற்ற மனிதர்களைத் தேடாதே தாய் தந்தையைத் தவிர வேறு யாரும் தென்படமாட்டார்ள்..!' 
 அய்யோ....
 
என்ன ஆயிற்று எனக்கு?
 
நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?
 
ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....
 
நேற்றுஇரவு படுக்கைக்கு செல்லும்போது ,
 
என்இடது மார்பில் கடுமையான வலி
 
ஏற்பட்டது. ஆனால்,அதன்பிறகு எனக்கு
 
எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல
 
தூக்கம் என்று நினைக்கிறேன்.
 
காபிவேண்டுமே, என் மனைவி எங்கே?
 
மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில்
 
படுத்திருந்த யாரையும் காணோம்.
 
அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி?
 
அய்யோ நானேதான்.அப்படியானால் நான்
 
இறந்துவிட்டேனா? கதறினேன்....
 
என்அறைக்கு வெளியே கூட்டம்,
 
உறவுக்காரர்களும், நண்பர்களும்
 
கூடியிருந்தார்கள்.
 
பெண்கள் எல்லோரும்
 
அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள்,
 
 சோககப்பிய முகத்துடன்
 
இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெருஜனங்கள்
 
உள்ளே வந்து என்உடலைப் பார்த்துவிட்டுப்
 
போகிறார்கள்.
 
என்மனைவிக்கு சிலர் ஆறுதல்
 
சொல்கிறார்கள். குழந்தைகளைக்
 
கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.
 
நான் இறக்கவில்லை.,
 
இங்கே இருக்கிறேன், என்று கத்தினேன்.
 
ஆனால், என்குரல் யாருக்கும் கேட்கவில்லை.
 
என்உடல் அருகே நான் நிற்பதுகூட
 
யாருக்கும் தெரியவில்லை.
 
அய்யோ என்ன செய்வேன் நான்?
 
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?
 
நான் மீண்டும் என்படுக்கை அறைக்கு
 
சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான்
 
என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான்
 
இருக்குமா?
 
என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த
 
அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என்
 
மகனுக்கு என்ன நடக்கிறது என்பது
 
விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால்,
 
அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
 
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன்.
 
அவனை பிரிந்து என்னால் இருக்கவே
 
முடியாது. என்மனைவி, பாசமும், பரிவும்
 
கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட
 
அவள் அழுவாள். ஆனால் நான் அவளை இதுவரை 
 
கண்டு கொண்டதே இல்லை.. இதுவரை எனது மொத்த கோவங்களையும் அவளிடம் தான்  கொட்டுவேன்..
 
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்..நான் சம்பாதிக்க தொடங்கியதும் அம்மா அப்பா இருவரின் தியாகங்களையும் மறந்தேன்..
 May be an image of 1 person and text that says 'ஒருமுறைதான் கல் கோயிலுக்குள் சென்றது, அது கடவுளாகிவிட்டது. ஆனால், மனிதன் ஆயிரம்முறை கோயிலுக்குச் சென்றாலும் மனிதனாக ஆவதில்லை.'
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான என்புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என்குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். ஆம்..
 
நான்தான் இறந்துவிட்டேனே. 
 
சுற்று முற்றும் பார்த்தேன்.. நான் ஓரளவுக்கு பணம் சம்பாதித்தவுடன் எந்த உறவுகளை எல்லாம் மதிக்கவில்லையோ, எவர் வீட்டுக்கெல்லாம் நான் முன்னாடி செல்லவில்லையோ, அவர்கள் எல்லாம்தான் முன்னாடி அமர்ந்திருந்தார்கள்.. 
 
வசதி படைத்த யார் வீட்டிற்கெல்லாம் முன்னால் ஓடினேனோ, அவர்கள் எல்லாம் வரவே இல்லை..அவர்களுக்கு நேரமில்லை போல..
 
நான் செய்த தவறை உணர்ந்து கண்களில் நீர் வந்தபடி, அவர்களின் காலை பிடித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது..ஆனால் முடியவில்லை நான்தான் இறந்துவிட்டேனே..
 
நான் எந்த பணத்திற்காக ஓடினேனோ அந்த பணம் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை..
 
அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப்
பார்க்கிறேன். "ஓ கடவுளே! எனக்கு இன்னும்
சில நாட்கள் கொடுங்கள். நான் என்மனைவி,
பெற்றோர்கள், நண்பர்களிடம்,உறவுகளிடம்,
எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த " என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று அழுதபடி நான் கத்தினேன்... அவளால் என்
வார்த்தைகளைக் கேட்கமுடியவில்லை.
 
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை. "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவுசெய்து இன்னும் ஒருவாய்ப்பு, என் குழந்தையை கட்டிஅணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்கவைக்க , என்அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க,உறவுகளிடம் அரவணைத்துப் போக, இப்பொழுது நான் அழுதேன்!
 
திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
 
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..
 
என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் 
 
கேட்க முடியும் இது என் வாழ்க்கையில்
 
மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி
 
அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ
 
மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி,
 
உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்"
 
என்றேன் முதன் முறையாக.
 
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர்,
 
என்அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். 
 
அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இந்த
இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி..
 
நான் புதிதாக பிறந்ததுபோல் உணர்ந்து மாறினேன்.. கண்களில் நீர் தழும்பிய படி.. பாடம் கற்றுக்கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி புதிய மனிதனாக எழுந்து நடந்தேன்..
நண்பர்களே..
 
இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது.உங்களது ஈகோவை புறம் தள்ளிவிட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம்
வெளி படுத்துங்கள். ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல்
போகலாம்!!May be an image of text that says 'எதிரிகள் எதிரில் தான் இருப்பார்கள் நாம் எச்சரிக்கையாக இருக்கலாம் ஆனால் துரோகிகள் நம் பக்கத்திலேயே இருப்பார்கள். எச்சரிக்கையாய் இருக்க முடியாது'

No comments:

Post a Comment

நான்தான் இறந்துவிட்டேனே ! பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!

  நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please   காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...