Total Pageviews

Tuesday, February 28, 2017

சிறுநீர் மட்டுமல்லாமல் இயற்கை உபாதைகள் (மலம், தும்மல், இருமல், தாகம், பசி, விக்கல், அபான வாயு...) எதையும் அடக்க கூடாது."

மிக அவசியமான விழிப்புணர்வு பதிவு
****************************************


ஒரு உண்மை சம்பவம்...

15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அன்று தான் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை மருத்துவரும் அச்சிறுமியின் பெற்றோரும் அறிய வந்தனர்.

என்னவெனில் அச்சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது என்பது.

அச்சிறுமியின் பெற்றோர் கலங்கி விட்டனர்.

எவ்வாறு இந்த பெரிய சங்கடம் உருவானது என்று மருத்துவர் அறிய அச்சிறுமியிடம் விசாரித்தபோது தான் தெரிந்தது அச்சிறுமி பள்ளி செல்லும் பொதெல்லாம் சிறுநீரை கழிக்கவே மாட்டாராம்.

ஏனெனில் சிறுநீர் கழிக்க அச்சிறுமிக்கு இருந்த தயக்கமும் அப்பள்ளியில் அதற்கான வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்ததுமே இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

சிறுநீரை அடக்கும் இந்த பழக்கத்தால் அச்சிறுமியின் சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டு இறுதியில் சிறுநீரகமே செயலிழந்து போனது தான் கொடூரத்தின் உச்சம்.

அதைவிட கொடூரம் என்னவெனில் நான் சந்தித்த இரண்டாவது நாள் அச்சிறுமி மரணத்தையும் தழுவி விட்டாள் என்பது மிகுந்த மன வேதனைக்குள்ளாக்கி விட்டது.

பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கழிவறைகளை கண்டீர்களானால் நம் வயிற்றுக்குள் உணவு செல்லாது.

அவ்வளவு கொடூரமாக இருக்கிறது கழிவறைகள்.

அது மட்டுமில்லாமல் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சிறுநீர் கழிக்கும் இடைவெளியை வெறும் 10 நிமிடத்திற்கு ஒதுக்கி 400 மாணவர்களை அங்கு தள்ளுகின்றனர்.

இதனால் பல மாணவர்கள் கூச்சப்பட்டுக் கொண்டு இயற்கை உபாதைகளை கழிக்காமலே அடக்கிக் கொள்கின்றனர்.

இதனால் குழந்தைகள் சிறுநீர் தொற்றிற்கு உள்ளாகி உயிரை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

"சிறுநீர் மட்டுமல்லாமல் இயற்கை உபாதைகள் (மலம், தும்மல், இருமல், தாகம், பசி, விக்கல், அபான வாயு...) எதையும் அடக்க கூடாது."

தயவுசெய்து நண்பர்களே இப்பதிவை சாதாரண பதிவாக எண்ணிவிடாமல் அனைவரும் முக்கியத்துவத்துடன் பகிருமாறும் நம் குழந்தைகளையும் தீர கவனிக்குமாறும் பெற்றோர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்ப்பபடுத்தவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏🏻

Tuesday, February 21, 2017

மனிதரை மதிக்க வேண்டும் !
இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.

உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...

இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவனை கட்டி தழுவிக்கொண்டார்.

அவனிடம் "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டார்.

"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர்.

இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை.உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றான்

ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.

பாம்பு புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! ஏன் ?

புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு என்று யாரவாது யோசித்துள்ளீர்களா??


உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.

பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.

அதனாலேயே புற்றுக்குள் பால் ஊற்றி முட்டை வைக்கப்படுகிறது. பாருங்களேன்

 நம்ம முன்னோர்கள் எவ்வளவு கிரிமினலா யோசிச்சிருக்காங்கனு......

Sunday, February 19, 2017

உடலில் ரத்ததை எப்படி சுத்தப்படுத்திக் கொள்ள முடியும்?

உடலில் ரத்ததை நாமே சுத்தப்படுத்திக் கொள்ள முடியும்...எப்படி தெரியுமா?

 

நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறு சுறுப்பாக இயங்க வைக்கும் ஒன்று தான் ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது தான் ரொம்ப முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. செம்பருத்தி பூ

செம்பருத்திப் பூவின் இதழ்களை நன்றாக சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் செம்பருத்தி பூவின் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடலின் சோர்வை குறைந்து ரத்தத்தை தூய்மை அடையச் செய்யும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.


2. பீட்ரூட்

அதேப்போன்று, தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

3.பிளம்ஸ்..

பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

4.முட்டைகோஸ்

வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டை கோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள ரத்தமானது சுத்தமாகும்.
 
5.காலிஃப்ளவர்:

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே, இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


6.பாகற்காய்:

கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.

7.வேப்பிலை:

வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.

8.பூண்டு:
 
பூண்டு ஒரு சிறந்த நோய்த்தடுப்பு (ஆன்டிபயாடிக்) மட்டுமின்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புகளையும் கரைத்து விடும்.

9.கேரட்:
 
கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால்தான். ஆகவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.

10.எலுமிச்சை:
 
எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

Thanks to Manithan.com

விரைவில் பிஎஃப் பணத்தைப் பயன்படுத்தி வீடு வாங்கலாம்..!

விரைவில் பிஎஃப் பணத்தைப் பயன்படுத்தி வீடு வாங்கலாம்..! 

Updated: Tuesday, August 16, 2016, 15:11 [IST] Subscribe to GoodReturns Tamil
 ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்பைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வர இருக்கிறது. பணிகள் துவங்கிவிட்டன பணிகள் துவங்கிவிட்டன தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சங்கர் அகர்வால் இதுகுறித்து கூறும்போது நாங்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்களின் கணக்கை பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளைத் துவங்கி உள்ளோம். இதைப் பயன்படுத்தி எளிதாக வீடு வாங்குவது மட்டும் இல்லாமல் பிஎஃப் பணத்தை மாத தவணையாகும் செலுத்தலாம் என்று கூறியுள்ளார். திட்டம் சமர்ப்பிப்பு திட்டம் சமர்ப்பிப்பு அடுத்த மாதம் மத்திய அறங்காவலர்கள் வாரியத்துடன் நடக்க இருக்கும் ஓய்வூதிய நிதிய தொடர்பான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கூட்டத்திற்கு முன்பு இதற்கான திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளோம் என்றும் கூறினார். 
 
 மத்திய அறங்காவலர்கள் வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன் பிஎஃப் சந்தாதார்கள் இதைப் பயன்படுத்த இயலும். எவ்வளவு கடன் எவ்வளவு கடன் இத்திட்டத்தின் கீழ் எல்லா சந்தாதார்களும் கடன் பெற இயலுமா, எவ்வளவு கடன் பெற இயலும் என்ற எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நிர்பந்தமும் ஏதும் இல்லை நிர்பந்தமும் ஏதும் இல்லை சந்தாதார்கள் மீது கண்டிப்பாக வீடு வாங்க வேண்டும் என்றோ இவர்களிடம் தான் வாங்க வேண்டும், இங்கு தான் வாங்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் நாங்கள் விதிக்கவில்லை, வெளி சந்தையில் எங்கு வேண்டும் என்றாலும் வீடாகவோ, இடமாகவோ வாங்கிக் கொள்ளலாம் என்றும் அகர்வால் கூறினார். 

மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம் மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம் இத்திட்டத்தில் வீடு வாங்க விரும்பும் சந்தாதார்களுடன் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மனைக் கட்டும் நிறுவனங்கள், ஊழியர்கள் வைப்பு நிதி அமைப்பு என மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். தவனை முறை தவனை முறை இதுமட்டும் இல்லாமல் தங்களது எதிர்கால பிஎஃப் தொகையில் இருந்து வீட்டுக் கடனை தவனை முறையிலும் செலுத்திக்கொள்ளவும் இத்திட்டம் பரிந்துரை செய்கிறது. 

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாரி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாரி சென்ற மே மாதம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா லோக்சபாவில் கேட்கப்பட கேள்விக்கு ‘குறைந்த விலையில் வீடு வாங்குவதற்கான சத்தியக் கூறுகளைப் பற்றி மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக' கூறியிருந்தார். 

2015 திட்ட நிரல் 2015 திட்ட நிரல் கடந்த வருடம் செப்டம்பர் 16-ம் தேதி மத்திய அறங்காவல் வாரியம் வெளியிட்ட திட்ட நிரலில் பிஎஃப் சந்தாதார்களுக்கான குறைந்த விலை வீட்டு மனை திட்டம் பட்டியலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..?

பிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..? 
Written by: Tamilarasu Published: Tuesday, September 27, 2016, 15:44 [IST] Subscribe to GoodReturns Tamil

 நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் உங்களது சம்பளத்தின் ஒரு பங்காக ஒவ்வொரு மாதமும் பிஎப் பிடித்தம் செய்கிறார்களா? 
இந்த பணத்திற்கு வரி இல்லை ஆனால் வட்டி உண்டு என்று எல்லோருக்கும் தெரியும், ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..? ஆம், உங்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஆயுள் காப்பீடும் உள்ளது. பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு இது பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) என்று அழைக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்குப் உரிமையாளர் இறக்கும் பொது பிஎப் சந்தாதாரின் வாரிசுகள் இதைப் பெறலாம்.
 யாருக்கெல்லாம் இது பொருந்தும்? யாருக்கெல்லாம் இது பொருந்தும்? 
 இந்தத் திட்டம் யாரெல்லாம் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் சம்பளத்தில் இருந்து பிஎப் திட்டத்தில் பங்களிக்கிறீர்களோ அவர்கள் எல்லாம் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் ஊழியர் சேமலாப நிதியம் (EPFO)மூலம் கட்டமைக்கப்பட்டது. 
கவனத்தில் கொள்ள வேண்டியவை கவனத்தில் கொள்ள வேண்டியவை சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்கின்றது என்றால் அது EPFO இல்லாமல் தனியாக அளிக்கிறார்களா என்பதை உறுதி செய்வது நல்லது. இந்தக் காப்பீடு திட்டத்திற்கு ஊழியர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவைல் இல்லை. காப்பீடு தொகை காப்பீடு தொகை இந்தக் காப்பீட்டிற்கான தொகை செப்டம்பர் 2015 ஆம் முதல் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி சந்தாதார்களின் பரிந்துறைப்பாளர்கள் 6 லட்சம் வரை பெறலாம். எவ்வாறு கணக்கிடப்படுகிறது? எவ்வாறு கணக்கிடப்படுகிறது? 
 இந்த காப்பீடு 12 மாத சம்பளம் பெறுவதைப் பொருத்து கணக்கிடப்படுகிறது. அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை இந்தச் சம்பளம் வாங்குபவர்கள் இதில் பயன்பெறலாம். இங்குச் சம்பளம் என்றால் அடிப்படை ஊதியம் மற்றும் கிராக்கிப்படி இரண்டும் ஆகும். எவ்வளவு தொகை பெற இயலும் எவ்வளவு தொகை பெற இயலும் குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பெற இயலும். இது சராசரியாக தங்களது சராசரி சம்பளத்தில் இருந்து 30 முறைகளுக்கான பணமாக கணக்கிடப்பட்டு அளிக்கப்படும். 
 இது ஊழியர்களின் வயது மற்றும் வேலை செய்த நாட்களைப் பொருத்து மாறும். உரிமைகோரல் செயல்முறை உரிமைகோரல் செயல்முறை ஒரு வேலை ஊழியர் காலமானால் இறப்பு சான்றிதழ், குடும்ப சான்றிதழ், மற்றும் வங்கி விவரங்கள் போன்றவற்றை அளித்து பரிந்துறைப்பாளர்கள் உரிமைகோரலாம். வருங்கால வைப்பு நிதி கணக்கில் பரிந்துறைப்பாளர்கள் யாரும் இல்லை என்றால் சட்ட பூர்வமான வாரிசுகள் இதைப் பெற இயலும். 
இந்த உரிமைகோரல் ஊழியர் இறந்தால் மட்டுமே தவிர வேறு எந்த காரணத்தைக் கொண்டும் பெற இயலாது.

Thanks to Oneindia.com

பிஎப் [ஓய்வு காலச் சேமிப்பு திட்டம்] பணத்தை திரும்பப் பெறுதல் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள்..!

பிஎப் விதிகளின் படி 12 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும், மேலும் இதே அளவிற்கான தொகையை நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும்.


Written by: Tamilarasu Published: Saturday, February 18, 2017, 18:46 [IST] Subscribe to GoodReturns Tamil 

பிஎப் என்றாலே ஊழியர்களுக்கான ஓய்வு காலச் சேமிப்பு திட்டம் என்று கூறலாம். நிதி வல்லுநர்கள் எப்போதும் இடையில் பிஎப் பணத்தை எடுக்க பரிந்துரைக்க மாட்டார்கள்.

 பிஎப் விதிகளின் படி 12 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும், மேலும் இதே அளவிற்கான தொகையை நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும். 

ஒவ்வொரு வருடமும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். ஒருவர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்த இரண்டு மாதத்தில் பிஎப் பணத்தை திரும்பப் பெற இயலும். இதற்கான படிவங்களை பிஎப் அலுவலகம் அல்லது தான் பணிபுரிந்த நிறுவனத்தில் பூர்த்தி செய்து அளிப்பதன் மூலம் பெற இயலும். எனவே பிஎப் பணத்தை திரும்பப்பெறும் போது தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம். வரி விலக்கு வரி விலக்கு நீண்ட கால சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல சேமிப்பு திட்டங்களில் வரி விலக்கை அளிக்கின்றது அரசு. 

பிஎப் பணத்தை 5 வருடங்களுக்கும் அதிகமாக எடுக்காமல் இருந்தால் மொத்த பிஎப் தொகைக்கும் வரி செலுத்த தேவையில்லை. இரண்டு மூன்று நிறுவனங்களில் மாற்றம் செய்து பணி புரிந்து வந்தாலும் புதிய நிறுவனத்திற்கு மாறும் போது பழைய பிஎப் கணக்கையே தொடரவும் முடியும். இதற்கு புதிய நிறுவனத்திற்கு நீங்கள் பணி புரிந்த பழைய நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே போன்று ஊழியர் ஏதேனும் காரணங்களுக்கு வேலையில் இருந்து நீக்கப்பட்டாலும் வரி செலுத்த தேவையில்லை. 5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..? 5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..? ஐந்து வருடத்திற்கு முன்பு பிஎப் பணத்தை திரும்பப் பெறும் போது அந்த ஆண்டு வருமானத்தில் பிஎப் பணத்தை கணக்கு காண்பித்து வரி செலுத்த வேண்டும். நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி பிஎப் பணத்தில் தங்களது பங்கீடு மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பங்கிடு மற்றும் அதன் வட்டிக்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டி வரும். பிரிவு 80 சி பிரிவு 80 சி பிஎப் பணத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கும் போது அது உங்களது வருமானமாகத் தான் காண்பிக்கப்படும். இதனைப் பிரிவு 80சி-ன் கீழும் காண்பித்து அதன் மூலம் பெறும் வட்டிக்கும் வரி விலக்கு பெற இயலாது. 

 
பிஎப் மூலம் பெறும் வட்டி பணம் கூட உங்களுக்குக் கிடைத்த பிற வருவாயாகத் தான் கணக்கிடப்படும். டிடிஎஸ்(TDS) டிடிஎஸ்(TDS) தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடம் பணி புரிந்த பிறகு பிஎப் பணத்திற்கு எந்த வரியும் கிடையாது. 

இதுவே ஐந்து வருடத்திற்குள் பணத்தை திரும்பப் பெறும் போது பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் 30 சதவீதம் வரை டிடிஎஸ் செலுத்த வேண்டி வரும். இதுவே பான் எண்ணை 15ஜி/15எச் உடன் சமர்ப்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. இதுவே படிவம் 15ஜி/15எச் சமர்ப்பிக்காமல் பான் எண்ணை மற்றும் சமர்ப்பித்தால் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். படிவம் 15ஜி/15எச் யாருடைய வருமான எல்லாம் வருமான வரி விளம்பிற்குக் குறைவாக இருந்தும் வரி பிடித்தம் செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு அதில் இருந்து விலக்குப் பெற பயன்படுவதாகும்.

Thanks to Oneindia.com

Friday, February 17, 2017

தோல்வி என்றால்...என்ன ?

தோல்வி என்றால்...என்ன ?வெற்றியின் படிக்கட்டு !

தோல்வி
என்றால் நீங்கள் தோற்றவர் என்று
பொருள் அல்ல. நீங்கள் இன்னும்
வெற்றி பெறவில்லை என்று
பொருள்!

தோல்வி
என்றால் நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல! சில 

 பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று
பொருள் !

தோல்வி
என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாக பொருள் இல்லை !
முயன்று பார்க்கும் துணிவு !
உங்களிடம் உள்ளது என்று
பொருள் !

தோல்வி
என்றால் வாழ்க்கை வீணாகி
விட்டதாகப் பொருள் இல்லை !
வெற்றி  மீண்டும் ஆரம்பிக்க ஒரு
வாய்ப்புக் கிடைத்துள்ளது
என்று பொருள் !

தோல்வி
என்றால் விட்டு விட
வேண்டும் என்று பொருள்
அல்ல இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று
பொருள்!

தோல்வி
என்றால் உங்களால் அடைய
முடியாது என்று பொருள் அல்ல !

அடைய கொஞ்சம் காலம்
தாமதமாகலாம் என்று பொருள்!

தோல்வி
என்றால் கடவுள் உங்களைக் கை
விட்டு விட்டார் என்று
பொருள் இல்லை !

உங்களுக்கு
வேறு நல்ல எதிர்காலத்தை
நிர்ணயம் செய்து வைத்து
இருக்கிறார் என்று பொருள்..

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குங்கள்!

👍 நல்லதே நடக்கும்....

  Thanks ! KARUNA MSM:

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

கவலை , அச்சம் , பதற்றம் ... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது !   “ நாங்கெல்லாம் பயத்துக்கே பயங்காட்றவங்க , தெரியுமா ” என்று ச...