Total Pageviews

Tuesday, December 26, 2017

கொழுப்புக் கட்டிகள் - லைப்போமா (lipoma)



அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்திக் கொண்டு நின்றன. கையை நீட்டியபோது முன்கையில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது.


வேறும் இருக்கிறதா எனக் கேட்டபோது இடது முழங்கையின் உட்புறமாக ஒன்று சாடைமாடையாகத் தெரிந்தது. கண்ணில் தெரிந்ததைவிடத் தடவிப் பார்த்தபோது தெளிவாகப் புரிந்தது.

ஏதாவது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமா எனச் சந்தேகிக்கிறீர்களா? இல்லை. அந்தப் பெண்மணிக்கே புற்றுநோய் என்ற பயம் இருக்கவில்லை. ஏனெனில் பல வருடங்களாக இருக்கின்றன. எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. 

கொழுப்புக் கட்டிகள் - லைப்போமா (lipoma) எனப்படும் இவை ஆபத்தற்றவை. புற்று நோய் என்ற கலக்கத்திற்கு இடமே இல்லை. இவை சருமத்திற்குக் கீழாக வளர்கின்றன. தசை, சவ்வு எலும்புகள் போல ஆழத்தில் இருப்பதில்லை. மேற்புறத்தில் மட்டுமே இருக்கும். ஒன்று முதல் பல கொழுப்புக் கட்டிகள் ஒருவரில் தோன்றக் கூடும். 
 
பொதுவாக கட்டிளம் பருவத்திலேயே ஆரம்பித்தாலும், நடுத்தர வயதில் வெளிப்படையாகத் தெரியும். ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் இருபாலாரிலும் தோன்றும். 

காரணம் உண்டா?

இவை தோன்றுவதற்கான காரணம் தெரியாது. பொதுவாக குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்களில் அவதானிக்கப்படுவதால் பரம்பரைக் காரணிகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. வெளிப்டையான காயங்கள் இல்லாத ஊமைக் காயங்கள் அல்லது கண்டல் காரணங்களால் ஏற்படக் கூடும் எனவும் நம்பப்படுகிறது.

அறிகுறிகள்

திடீரெனத் தோன்றும் நோயல்ல. படிப்படியாக பல வருடங்களின் பின்னர் அதுவும், தொட்டால் தெரியுமளவு வளர்ந்த பின்னரே ஒருவர் அவதானிப்பார். வெளிப்படையாகத் தெரிய மேலும் காலம் எடுக்கும்.

பொதுவாக மென்மையானதாக இருக்கும். குழைத்த மாப் போல அல்லது ரப்பர் போல இருக்கும்.

தோலுக்குள் கீழாக நளுநளுவெனத் தோலுடன் ஒட்டாது நழுவிச் செல்வது போலிருப்பது இதன் முக்கிய அறிகுறியாகும். 

இதன் வடிவம் கும்பிபோல அல்லது முட்டைபோல நீள் வட்டமாக இருக்கும். அளவில் பெரு வேறுபாடுகள் இருக்கலாம். 2-10 செமி வரை வளரலாம். ஆனால் அதனிலும் பெரிதாகவும் நாம் காண்கிறோம்.

தோள், கழுத்து முதுகு, வயிற்றுப் புறம், கை போன்ற இடங்களில் காணப்;படுகிறது. ஆனால் சருமத்தில் கொழுப்பு உள்ள இடமெங்கும் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.

கண்ணில் படுவதைத் தவிர இந்தக் கொழுப்புக் கட்டிகள் வேறெந்த அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை.

தொட்டால் கூட வலிப்பதில்லை. ஆயினும் சில மட்டும் இறுக அழுத்தினால் சற்று வலியை ஏற்படுத்தும். அவ்வாறு வலிப்பவை பொதுவாகச் சற்று குருதியோட்டம் அதிகமான கொழுப்புக் கட்டிகளாகும். இவற்றை அஞ்சியோ லைப்போமா என்பார்கள். அவையும் ஆபத்தானவை அல்ல என்பது குறிப்பி;த்தக்கது.

புற்றுநோயாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் உடனடியாக ஆபத்தானவை அல்ல என்றாலும் இவை எதிர்காலத்தில் புற்றுநோயாக மாறுமா என்ற பயம் ஏற்படுவது இயல்பே. ஆனால் அவ்வாறு மாறுவதில்லை. 

ஆயினும் லைப்போ சார்க்கோமா என்ற ஒருவகை கொழுப்புப் புற்றுநோய் இருக்கிறது. தோலில் அல்லாது சற்று ஆழத்தில் கண்ணில் படாதவாறு இருக்கும் சில கொழுப்புக் கட்டிகள் திடீரென பருமனடைந்து வலியையும் கொடுக்குமாயின் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம். ஊசி மூலம் சிறு துளியை எடுத்து ஆராய்ந்து (biopsy) பார்ப்பார்கள்.
 
சிகிச்சை

பொதுவாக எந்தச் சிகிச்சையும் தேவைப்படாது. ஓரளவு காலத்தின் பின் அது வளர்ச்சியடைவது தானாகவே நின்றுவிடும். ஆயினும் மறையாது. அது இருப்பதால் அருகில் உள்ள தசைகளின் இயக்கத்திற்கு பிரச்சனை இருக்குமாயின் அகற்ற நேரிடும். சத்திர சிகிச்சை மூலம் அன்றி உறிஞ்சி எடுப்பதன் (Liposuction)    மூலம் அகற்றலாம்.


புற்றுநோயல்லாத மற்றொரு கட்டி பற்றிய எனது முன்னைய பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Thursday, December 14, 2017

சாலைகளில் கார் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது !

நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள் தான். இதன்_பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.

விபத்தில்_சிக்கும்_வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன்_பாட்டிற்காக வாங்கிய வண்டிகள்.

இதற்கு_காரணம்..


1. #சொந்த_வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.

2. #சொந்த_கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.

3. #தொலை_தூரங்களுக்கு செல்லும் போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் திடீரென காரை கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.
4. #காரை_அடிக்கடி ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள்.
1. #பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது. இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.
2. #அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது
3. #வாகனத்தை தொலைதூர பயணத்திற்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின்பக்க சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.
4. #லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து. ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. அதனால் விபத்து ஏற்படுவது எளிது.
5. #நான்குவழிச்சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்க்கு மாறும் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.
6. #அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல்.

Monday, November 27, 2017

இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்..



சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..!! முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம்..

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும்.

ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.

துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.

சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.

பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.

ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .

ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் .இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.

அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது .முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.

இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே

இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்..

Wednesday, August 30, 2017

பாலிதீன் பைகள் .......தேசத்தின் தூக்கு கயிறு...



 அன்பு நண்பர்களே...
 

நீ தூக்கிச் செல்லும்
பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்கு கயிறு...

ஆய்வு சொல்லதுப்பா! 


நெகிழி உபயோகித்தால்
மீன்கள் முதல்
மான்கள் வரை
மாண்டுப் போகும்.

ஈக்கள் முதல்
பூக்கள் வரை
மலடாகும்.

அத்தனை நதியின் காம்புகளும்
அதிவிரைவில் வற்றிவிடுமாம்.

புத்தனைப்போல் வாழ்ந்தாலும்
புற்றுநோய் முற்றிவிடுமாம்.

தீவனமில்லா ஏழை கால்நடைகள்
தினம் தின்றுமடிகிறது
பாலிதீன் பைகளை
காகிதமென்று எண்ணி....

நெகிழி நம் தேசத்தின்
வற்றா மடுகளில் ரத்தம்
உறிஞ்சுமொரு உன்னி.

கால்நடை இறப்புக்கும்
சாக்கடை அடைப்புக்கும்
காரணமிந்த நெகிழி

சுகாதார கேடுக்கும்
சூதறியா நாடுக்கும்
இதுவே சகுனி.

பாலிதீன் பைகள்
பாவை நம் மண்ணோடு
பலவந்தமாக
பாலியல் வல்லுறவு கொள்கிறதே!
தமிழ் மக்களே நாமிதை
தடுக்க வேண்டாமா ?

மூச்சு திணறுதப்பா பூமிக்கு - அவள்
முந்தியில் பிறந்த
சந்ததிகள் நாமொரு
முடிவெடுக்க வேண்டாமா?

பொய்யும் புரட்டும் பேசும்
போலி உதட்டுக்கு
எதற்க்கப்பா லிப்ஸ்டிக்?
பெய்யும் மழையின்றி
தவிக்கும் நமக்கு
எதற்க்கப்பா பிளாஸ்டிக்?

பெண்சிசு கொலையைப் போல
மன்னிக்க இயலா
பெரிய குற்றம்
மண்சிசு கொலை.

ஊருக்கு விழிப்புணர்வு
ஊட்ட
ஊர் ஊராக
ஊர்வலம் வேண்டாம்
போலியாக
பேரணி வேண்டாம்.

நானிலம் நலம் பெற
நடைமுறை வாழ்வில்
நானினி நெகிழியை
பயன்படுத்த மாட்டேன்

டீக்கடையில் தந்தாலும்
நெகிழி குவளையில்
இனிக்கும் தேநீர்
இனியும் அருந்த மாட்டேன்.

இப்படி ஒவ்வொருவரும்
உறுதி கொள்வோம். -இதை
தனிமனித கொள்கையில்
இணைத்து கொள்வோம்.

முற்றிலுமாக பிளாஸ்டிக்கை
முடக்க பழக வேண்டும்.
நாளை நம் குழந்தைகள் வாழ
உலகம் வேண்டும்.

பாலிதீன் பை - எமனின்
பாசக் கயிறு போல
தவிர்த்திடுங்கள் தோழர்களே
இனியெம் தலைமுறைகள்
உயிர் வாழ...

Thursday, August 24, 2017

தலைக்கவசம் உயிர் கவசம் !

தலைக்கவசம் உயிர் கவசம் !


தலைக்கவசம் போடாததால, தலைல அடிப்பட்டு இறந்த ஒரு சொந்தமோ, ஒரு நட்போ, அக்கம் பக்க உறவினரையோ நாம நிச்சயம் கடந்திருப்போம்
இருசக்கர வாகனங்களில் செல்வோர் [ஹெல்மெட்] தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்துதான் இந்த அதிரடி நடவடிக்கை.

விபத்துகளின்போது உயிர் காக்கும் கட்டாய ஹெல்மெட் தலைக்கவசம் விதி வரவேற்கப்பட்டாலும், அதில் பலவிதமான நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

உலகிலேயே விலை மதிப்பற்றது மனித உயிர் தான்..! அப்படிப்பட்ட மனித உயிர்களைநம்முடைய அலட்சியத்தினாலும், கவனக்குறைவினாலும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதுமிகவும் வருத்தத்துக்குரியது.! உலகளாவிய அளவில் இந்தியாவில் தான் அதிகவிபத்துக்கள் நடப்பதாக புள்ளியியல் விவரம் தெரிவிக்கிறது. அதிலும் தமிழ்நாட்டில்தான் அதிகமாக நடை பெறுவதாகவும் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக தலைக்கவசம் அணியாமல் இரு  சக்கர வாகனம்  ஓட்டுபவர்கள் அதிகமாக விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது தான் தற்போதைய உண்மைநிலவரம்.

தலைக்கவசம் அணிவது என்னமோ காவல் அதிகாரியின் அபராத்திற்க்கு பயந்து தான் என்ற எண்ணம்  படித்தவர்கள் மத்தியிலும் நிலவுகிறது. போக்குவரத்து காவலர் இருக்கும் இடத்தில் அணிந்துக் கொள்வதும், பின்பு கழற்றி பெட்ரோல் டாங்க் மீது வைக்கும் பழக்கம்  நம்மில் பலருக்கு இருக்கிறது. தலைக்கவசம் நம் உயிரை காப்பாற்றத்தானே தவிர போக்குவரத்துக் காவலர் உயிரைக்  காப்பாற்ற  அல்ல. அல்லது  பெட்ரோல் டாங்க்கை காப்பதற்க்கு அல்ல! நாம் நமக்காகத்தானே மருந்து சாப்பிடுகிறோம். மருத்துவருக்காக அல்லவே.! இதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நம் அரசாங்கம் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற சட்டம் அமலாக்கப்பட்ட ஆரம்பத்தில், மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டது. அபராதம் கூடவிதித்தார்கள். நாளடைவில் அச்சட்டம் நீர்த்து போய் விட்டது. யாரும் பின்பற்றவில்லை.  யாரையும் பிடிப்பதும் இல்லை. ! தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. எப்படிப்பட்டவிபத்தாக இருந்தாலும் , சிறு சிறு காயங்கள், எலும்பு முறிவுகள் என்று உண்டாக்குமேதவிர உயிருக்கு ஆபத்து ஏற்படாது. உயிர் பிழைத்துக் கொள்ளலாம். சமீப காலமாக நம்தமிழ்நாட்டில் அதிக மூளை சாவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தலைக்கவசம்அணிவதினால் இதை தவிர்க்கலாமே.!


தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை சமீபத்தில்  உணர்த்திய  என்அனுபவத்தை இங்கே பகிரலாமென நினைக்கிறேன். இக்கட்டுரையை எழுதத் தூண்டியதும் அந்தஅனுபவமே.!

சில வாரங்களுக்கு முன் என் நண்பர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிர் திசையில்,  தவறாக ஒரு மூன்றுசக்கர மோட்டார் பொருத்திய மிதிவண்டி திடீரென்று வந்ததால் அதன் மீது மோதி விடக்கூடாது என்ற  எண்ணத்தில் சாலையின் ஓரமாக செல்ல எத்தனித்துள்ளார்கள். ஆனால்வண்டி கட்டுப்பாட்டை இழந்து பக்கத்திலுள்ள நடை மேடையில் இடித்து, மின் கம்பத்தில்மோதியுள்ளது. தலை மின் கம்பத்தில் மோதி, பிறகு கிழே விழுந்துள்ளார்கள். தலைக்கவசம் அணியும் பழக்கம் உள்ளதால் எப்போதுமே தலைக்கவசத்துடன் தான்செல்வார்கள்.  ஆதலால் அன்று உயிருக்கு ஏதும் ஆபத்தில்லாமல் போனது.  எலும்பு முறிவு ஏற்பட்டு , அறுவை சிகிச்சை செய்து தற்போது நலமாக உள்ளார்கள்.அன்று அவர்களின்உயிரைக் காப்பாற்றியது தலைக்கவசம் தான்..!  ‘

நம்மில் பல  பேருக்கு  நம்பிக்கை இருக்கிறது.,  நான் நன்றாக ஓட்டுவேன்.  , சாலை விதிகளை சரியாக பின்பற்றுகிறேன் என்று.! ஆனால்  நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் , எதிர் திசையில் வருபவர்கள் சரியாக இருக்கிறார்களா என்று நமக்கு தெரியாது.  இன்னும் சில பேர் மது அருந்தி விட்டுஓட்டுவார்கள். இளைஞர்கள் அவசரமாகவும், வேகமாகவும் ஓட்டும் போது சாலை விதிகளைமதிப்பதில்லை. மருத்துவமனைகளில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக வருவோரில் பலர்சாலை விபத்தின் மூலம் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அதிலும்இருபது வயது முதல் முப்பத்தைந்து வயது வரையுள்ள இளைஞர்களே என்பது மிகவும்வருத்தத்துக்குரிய செய்தியாக இருக்கிறது.!   இரவு நேரங்களில்கேட்கவே வேண்டாம். யாருமே கவனத்துடன் ஓட்டுவதில்லை. ஒருவழிப் பாதையைக்  கூடசரியாகப் பின்பற்றுவதில்லை.!

அடுத்து ஒரு மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால், சாலைகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை . மின்சார  வாரியம், குடிநீர் வாரியம், கழிவு நீரகற்று  வாரியம் என அனைத்து துறையைச் சேர்ந்தவர்கள் பழுதுப் பார்க்கிறோமென்று அங்கெங்கேகுழித் தோண்டி விடுகிறார்கள். அதை சரியாக மூடுவதுமில்லை. அதிலும் மழைக்காலம்வந்து விட்டால் நீர் தேங்கி வழுக்கி விடும் அபாயமும் உள்ளது. எடைக் குறைவாக உள்ளவாகனங்கள் , அந்த சேற்றில் போகும்போது வழுக்கி விழ ஏதுவாகிறது. விபத்து என்பது எதிர்பாரா விதமாக நடப்பது தானே.! அது எந்த நேரத்தில், எந்த வடிவத்தில் , எப்படிவேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நாம் தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கை விசயத்தில் முதலில் இருப்பது தலைக்கவசம் தான்.!

தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தையும், சாலை விதிகளை மதிப்பது குறித்தும் ஒருமிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இக்காலத்தின் கட்டாயமாகிறது. இதற்கான புரிதலை நாம் உண்டாக்க வேண்டும். இந்த விடயத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும். சட்டங்கள் இயற்றப்படுவதும், பின்பு செல்லரித்து போவதுமாக இருந்தால்மக்களுக்கு எப்படி சட்டத்தின் மீது ஒரு மதிப்பு உண்டாகும் .?   சட்டங்கள் இயற்ற மட்டும் தான். பின்பற்ற அல்ல என்ற மனப்பான்மை தானே தோன்றும்.!  தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, மது அருந்தி விட்டு ஓட்டுவது, சாலை விதிகளை மதியாமல் இருப்பது போன்றவற்றிற்கு கடுமையான தண்டனை, அபராதம் விதித்தல்என்பதை அமல்படுத்த வேண்டும். மக்களின் நன்மைக்காக சிலவற்றில் சமரசம் செய்துக்கொள்ளாமல் கட்டாயமாக்கினால் தான் அதன் முழு பயனையும் அடைய முடியும்.!   சாலை விதிகளை பற்றிய  அறிவை  நாம் மாணவர்களாக இருக்கும்போதே, பள்ளிப்பருவத்திலேயே உண்டாக்க  வேண்டும். சிறு  வயதிலேயே ஒருசரியான புரிதலை உண்டாக்கி விட்டோமானால், அது மனதில் நன்கு பதிந்து  பலதவறுகளையும், அதன் மூலம் ஏற்படும் விபத்துக்களையும் தவிர்க்கஏதுவாகயிருக்கும்.

தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவோம்.!

சாலை  விதிகளை மதிப்போம்.!

விபத்துக்களைத் தவிர்ப்போம்.!

நன்றி! சிறகுகள்-ஆச்சாரி!

உயிர் காக்கும் சீட் பெல்ட்!

பொதுவாக கார் பயணிகள் அதாவது ஓட்டுநர் மற்றும் முன்புற பயணி கூட பல சமயங்களில் சீட் பெல்ட் அணிவதில்லை. காரில் உயிர் காக்கும் ஏர் பேக் வசதி உள்ளதே என்ற அசிரத்தை தான் இதற்குக் காரணம். ஆனால் சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஏர் பேக் சரிவர வேலைசெய்யும்போது உயிர் காக்கப்படும்.
உலக சுகாதார மையம் இது தொடர்பாக நடத்திய ஆய்வில்கூட வாகன விபத்தில் முன்னிருக்கை பயணி மற்றும் டிரைவர் சீட் பெல்ட் அணிருந்திருந்தால் 45 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான உயிரிழப்பை விபத்தின்போது தடுக்க உதவுவது தெரிய வந்துள்ளது. அதே போல சீட் பெல்ட் அணிவதால் மிக மோசமான காயம் அடைவது 25% வரை குறைவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்போர் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றிருந்தாலும் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. அதே சமயம் இதை கடுமையாக பின்பற்ற போதிய காவல்துறையினரும் இல்லாதது துரதிருஷ்டமாகும்.

பின்னிருக்கை பயணிகளுக்குக் கூட சீட் பெல்ட் அணிய வேண்டிய வசதி அளிக்கப்பட்டாலும் அதை யாருமே பொருட்படுத்துவதில்லை. விபத்து நடக்கக் கூடாது என்பதே அனைவரது விருப்பமாகும். எதிர்பாராமல் நிகழ்வதே விபத்து. உயிர் காக்கும் ஏர் பேக் இருந்தாலும் முறையாக சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே அது உயிர் காக்கும் என்பதை உணர வேண்டும்.சட்டத்தினால்எதையும் கட்டாயமாக்க முடியாது. வாகனம் பயன்படுத்தும்போது நமது உயிர் மற்றும் மற்றவர்களின் உயிரை மதித்து விதிகளை கடைபிடிப்பதே சிறப்பானதாகும்.

Thanks to Tamil Hindu 

மாரடைப்பு ஏற்படாமல் இருக்க சாப்பிட்டவுடன் சூடான குடிநீர்:அல்லது சூப் குடிப்பது நல்லது.



 நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். 


ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.    

டித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள். விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்

Sunday, August 20, 2017

மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது.



மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.

வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

கிராமப்புறங்களில் மண்பாண்டத்தில் தான் சமையல் செய்வார்கள். அதிலும் மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். மண்பாண்டத்தில் சமையல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு எந்த விதமான நோயும் அண்டாது. உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.
ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே

Monday, August 7, 2017

கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?

உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?


நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,

விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!

பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!

சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...

சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.

இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள்,

உங்கள் பக்கத்தில் இருப்பது யார்..?

உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?

விரக்தி எண்ணம் உள்ளவரா?

இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!

மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்.

லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!

உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

Wednesday, July 26, 2017

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

தலைப்பைச் சேருங்கள்
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:--

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை
நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்தது.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருங்கைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

Tuesday, July 25, 2017

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.

கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.

சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.

அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.

ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.

அரசு கொஞ்சம் உதவினால்…

20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்...

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன்.

விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன.

மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன.

இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன்.

தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

➡90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

➡பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

➡ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

➡கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

➡நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

➡வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்

அலைபேசி : 97903 95796

வாழ்த்துகள் நண்பர்களே...!

வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ?

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .   


நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!         

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!                    

Wednesday, June 28, 2017

கோயிலுக்குச் செல்லும் பொழுது… கோயில் விதிகளை மதிப்போம். இறையருளைப் பெற்று இன்புறுவோம்!

வழிபாட்டு முறைகளில், ஆலயத்தில் நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்தால்தானே பலன் கிடைக்கும். கோயிலுக்குள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி விவரிக்கிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் கவிதா ஜவகர்.


“நாம் சந்தோஷம் நிறைந்த அமைதியான வாழ்வைப் பெறுவதற்காக, தினந்தோறும் ஆலயத்திற்கு வந்து தெய்வ தரிசனம் பெறுகிறோம். நம்மில் பலர் இறையருளைப் பெறும் ஆர்வத்தில், நம்மையும் அறியாமல் சாஸ்திரங்களின் விதிகளையே மீறவிடுகிறோம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். அவரை வழிபடும்போது இனியாவது சில விதிகளை நாம் பின்பற்றுவோம்.

கோயிலுக்குச் செல்லும் பொழுது…

1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.

3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.

5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும்.

6. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும்.

7. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது.

8. கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.

9. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.

கோயிலுக்குள் இருக்கும்பொழுது…

10. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

11. நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.

12. சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.

13. சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.

14. விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.

15. இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

16. பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.

17. கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.

18. விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.

19. சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.

20. ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.

21 மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.

22. நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.

23. நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

24 பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.

25. பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.

26. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

27. கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.

28. நடந்துகொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது.

29. கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

30. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.

31. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ கெடுக்கக் கூடாது.

32. கோயில் உள்ளே உரக்கப் பேசுதல் கூடாது.

33. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

34. வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.

35. கோயிலுக்குள் முக்கியமாக பூஜை நேரத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது.

36. கோயில் உள்ளே செல்போன் பேசுதல் கட்டாயம் கூடாது. அணைத்து வைப்பது அனைவருக்கும் சிறப்பு.

தரிசனத்திற்கு முன்னும்.. பின்னும்…

37. கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
38. தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.
39. தரிசனம் செய்த பின், பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
40. கோயிலுக்குள் உறங்கக் கூடாது.
41. கோயிலில் இருந்து வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.

கோயிலுக்கு வெளியே…

42. கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

43. கோயிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி, கடவுளை நமக்குள் உணர்ந்து மந்திரம் கூறி வழிபடுவது சிறப்பு.

44. கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக் கால்களைக் கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகுதான் கழுவ வேண்டும்

45. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக் கூடாது.

46. அஷ்டமி,நவமி, அமாவாசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

47. கோயில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

48. கோயிலுக்குச் சென்று வந்ததும், குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்.

49. கோயிலுக்கு வரும்பொழுதும், திரும்பிச் செலும்பொழுதும், நமது மனதில் உள்ள அனைத்து விதமான தீய எண்ணங்களையும் முழுவதுமாக அழித்து விட வேண்டும். எந்த கறை படிந்த எண்ணங்களும் நமது மனதில் இருக்கக்கூடாது.

50. கோயிலில் இருந்து நேராக நாம், வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்”.

கோயில்களில் விதிகளை மதிப்போம். இறையருளைப் பெற்று இன்புறுவோம்!

Thursday, May 18, 2017

கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்!

கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்!

• உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.
 
• ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.


• 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.


• அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.


• ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.


• "பி' காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.


• மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.


• கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும ், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை...

"மாஸ்டர் செக்கப்" நீங்கள் ஆரோக்கியமானவர்தான் என்பதை எப்படி உறுதி செய்வது?.

நீங்கள் ஆரோக்கியமானவர்தான் என்பதை எப்படி உறுதி செய்வது?.

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?.
இல்லையா?.

எப்படி தெரிந்து கொள்வது?.

"மாஸ்டர் செக்கப்" செய்து கொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!.

பரிசோதனை செய்வது என்பது
"சொந்தக் காசில் சூனியம்" வைத்துக் கொள்வது போன்றது.

நோய் இல்லாமல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவரை, "நீ நோயாளிதான்" என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும்
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.

அல்லது,
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.

நம்மில் அநேகர் இதில் மாட்டிக் கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டு வரிசையில் இருப்பவர்கள்தான்.

இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்
(most affected victims)

நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.

எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வது போல்தான் இயங்க வேண்டும்.
*சர்க்கரை நோய் ரீடிங் 80/140,
*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,
*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,
*கொழுப்பு அளவு,
*உப்பு அளவு
பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".

Our Body mechanism is beyond சயின்ஸ்.

நம் உடல் இயற்கை விதிகளின் படி இயங்குகிறது.
ஒவ்வொருவரின் உடலியக்கமும் வெவ்வேறு மாதிரி இயங்குகிறது.

உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்று போல் இருக்காது
யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது

உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,
வெவ்வேறு தட்ப வெப்ப நிலை ,
வெவ்வேறு உணவு பழக்கம்,
வெவ்வேறு உணவு உண்ணும் முறை,
வெவ்வேறு கலாச்சாரம்,
வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு இருக்கின்றன!.

இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித் தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்.

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்று போல் இயங்காது.

அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்க வேண்டும்",
என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக் கொண்டு, அதற்குத்தக்கப் படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".

எனவே இந்த பரிந்துரைகளை கட்டவிழ்த்து விடும்
"Master check-up"
என்பது இந்த நூற்றாண்டின்
"மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடியில் ஒன்று".

அப்படியானால்,
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது,
எப்படி தெரிந்துக் கொள்வது?.
வரும் முன் காப்பது எப்படி?.
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?.
என உறுதி செய்து கொள்ளுங்கள்.

1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.

"தரம்" என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.

அனுபவத்தில் உணர்ந்தது.

சிந்திப்பவர் மட்டுமே.....
அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,

விடுதலை பெறுவர் ... !!!

முடிந்த வரை மற்றவர்களுக்கு ப
கிர்ந்து கொள்ளுங்கள்....

Friday, April 28, 2017

முழங்கால் வலிக்கு பிரண்டையை துவையல் !



இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக  முழங்கால் வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள். ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும் உலகிலேயே கடினமான பொருள் வைரம் தானே அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

ஜீரணம் ஆக எளிய மருத்துவம்

நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால் கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் . இதற்காகவே பல மருந்துகளை மருந்து கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன . ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால் நீங்கி நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம் .

👉விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணம் , பசியின்மை , வயிறு உப்பி காணப்படுதல் , உடல் வலி , அசதி முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் சிறந்தது . 2 பெரிய சுக்கு , 2 ஏலக்காய் இவற்றை நசுக்கி கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து , 2 டம்ளர் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து , முக்கால் தம்ளராக சுண்டியவுடன் கருப்பட்டி ( பனை வெல்லம் ) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால் அணைத்து அஜீரண கோளாறுகளும் நீங்கி உடம்பு கலகலப்பாக இருக்கும் .


👉 ஓமம் - 200 கிராம் , சீரகம் - 100 கிராம் , மிளகு - 100 கிராம் , கருஞ்சீரகம் - 100 கிராம் , பூண்டு - 50 கிராம் , கறிவேப்பிலை - 100 கிராம் , தோல் நீக்கிய சுக்கு - 200 கிராம் ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் வரித்து பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர செரிமானம் நல்ல நிலையில் ஆகி வயிற்று கோளாறு இன்றி சுகமாக இருக்கலாம் .


👉 தினசரி 4 பேரீச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கடுப்பு , அஜீரண பேதி , மலசிக்கல் போன்ற வயிற்று கோளாறுகள் வருவதில்லை .


👉 சுக்கு பொடியுடன் சுடு நீரை சேர்த்து குடித்தாலும் அஜீரணத்தில் இருந்து நல்ல சுகம் கிடைக்கும்.

கருஞ்சீரகம் !

கருஞ்சீரகம்
👉 கருஞ்சீரகம், சுக்கு - தலா 50 கிராம் எடுத்துப் பொடி சேய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சைனஸ் தொல்லை தீரும்.

👉 கருஞ்சீரகத்தை பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் ஊற வைத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும்.

👉 கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.

👉 கருஞ்சீரகத்தை தயிர் சேர்த்து அரைத்து, உடலில் அரிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால், படை, சொரி, சிரங்கு போன்றவை மறையும்.

👉 கருஞ்சீரகத்தை (100 கிராம்) பொடி செய்து, தேங்காய்ப் பால் (அரை லிட்டர்) சேர்த்துக் கொதிக்கவைக்கவும். கடைசியாகக் கிடைக்கும் வண்டலை, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக்கி, புண்கள் மீது தடவினால் அவை உடனே ஆறும்.

👉 கருஞ்சீரகத்தை (100 கிராம்) நெல்லிக்காய்ச் சாற்றில் (அரைலிட்டர்) ஊறவைத்துக் காயவைத்து பொடிசெய்து, தினமும் அதிகாலையில் சாப்பிட்டுவந்தால் பித்தம் தணியும்.

👉 கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

👉 சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்

Friday, April 7, 2017

இளம் வயது நரைமுடி மறைய !

இளம் வயதிலேயே வெள்ளை முடி வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் பரம்பரை போன்றவை முக்கிய காரணங்காளாக இருக்கிறது. முடிக்கு போதிய பாராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

தேங்காய் எண்ணெயில் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கல்ப்பில் படும்படி மசாஜ் செய்து வந்தால், வெள்ளைமுடி மறைவதை நன்கு காணலாம்.

கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து அதனை தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.

இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

வெந்தயம் அரைத்து பேஸ்ட் செய்து தலைக்கு தடவி ஊற வத்து அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், நரைமுடி மறையும்.

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

Wednesday, March 29, 2017

தொப்புள்கொடி-ஸ்டெம்செல் வைத்தியம்

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.

தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள்.

சில நாட்களில் நோயும் பறந்து போகும்.

இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு.

ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்.

உண்மையில் இன்று நாம் முட்டாளா?

இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா?

என்று சிந்தித்து பார் தமிழா...

இனியாவது விழிப்போம்.

நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.

படித்ததில் பிடித்தது...

Monday, March 13, 2017

அதிகாலை வேளையில் நீண்ட தூரம் பிரயாணம் மேற்கொள்வோர் கவனிக்க வேண்டிய வழிமுறைகளை

அதிகாலை வேளையில் நீண்ட தூரம் பிரயாணம் மேற்கொள்வோர் கவனிக்க வேண்டிய வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.

accident.jpg



சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்[35]. சாஃப்ட்வேர் எஞ்சினியரான இவர் வார விடுமுறைக்காக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாப்பிரெட்டிப்பட்டிக்கு நேற்றுமுன்தினம் காரில் புறப்பட்டார். ராஜ்குமாரின் மனைவி நிரோஷா[30]. மகன் ஆதி[7] ஆகியோரும் காரில் உடன் சென்றனர்.


ராஜ்குமாரின் உறவினரான ராகேஷ் என்பவரும், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் அர்ச்சனா ஆகியோரும் அந்த காரில் சென்றனர். காரை ராகேஷ் ஓட்டி உள்ளார். வேலூர் அருகே பொய்கை என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இது மாதிரி விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?


இந்த விபத்தில் ராகேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ராஜ்குமாரின் மனைவி நிரோஷா, மகன் ஆதி மற்றும் அர்ச்சனா ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த கோர விபத்துக்கு காரை ஓட்டிய ராகேஷ் தூங்கியதே காரணமாக தெரிவிக்கப்படுகிறது.


இது மாதிரி விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?


வந்த வேகத்தில் கார் கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் மோதி சிக்கிக் கொண்டது. அத்துடன், கார் மோதியது தெரியாமலேயே, கன்டெய்னர் லாரி டிரைவர் 200 மீட்டர் வரை ஓட்டி சென்றுள்ளார். பின்னர், பின்னால் கார் மோதியதை அறிந்து லாரியை நிறுத்தியுள்ளார். இந்த கோர விபத்துக்கு காரை ஓட்டிய ராகேஷ் தூங்கியதே காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது மாதிரி விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?


சில நொடிகளில் இரண்டு குடும்பத்தினரையும் இந்த விபத்து சின்னாபின்னபடுத்தி விட்டது. கோடை காலம் பிறந்துவிட்ட நிலையில், விடுமுறையை கழிக்க பலர் இதுபோன்று நீண்ட தூர பயணங்களுக்கு திட்டமிட்டு இருப்பர். விபத்துக்களை தவிர்க்க, சில எளிய வழிமுறைகளை மனதில் வைத்து சென்றால் இதுபோன்ற விபத்துக்களை நிச்சயம் தவிர்க்க முடியும்.

இது மாதிரி விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?



நகர்ப்புறத்தில் இருப்போர், நீண்ட தூரம் பிரயாணம் மேற்கொள்ளும்போது போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக, அதிகாலை காலை 3 மணி அல்லது 4 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புவதற்கு முடிவு செய்கின்றனர். இது நல்ல திட்டம்தான் என்றாலும், கார் ஓட்டுபவரை யாரும் மனதில் கொள்வதில்லை.



ராஜ்குமாரின் கார் காலை 6 மணிக்கு வேலூர் அருகே விபத்தில் சிக்கியிருக்கிறது. அப்படியென்றால், அவர்கள் 3.30 மணி அல்லது 4 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு, புறப்பட்டதால், அரைகுறை தூக்கத்துடன் ராகேஷ் கார் ஓட்டியதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.



போதிய தூக்கம் இல்லாமல் அல்லது தூங்கி வழிந்து கொண்டு காரை எடுத்து நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது நிச்சயம் உடல் அசதி கூடுதலாகும். அந்த சமயத்தில் தங்களை அறியாமல் சிலர் தூங்கி விடுவதே, இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம். எனவே, போதிய தூக்கம் இல்லாமல் அதிகாலை பயணங்கள் செல்வதை தவிர்க்கவும்.



நாம் நன்றாக தூங்கி எழுந்து உடற்சோர்வு இல்லாமல் சென்றாலும் கூட, விடியற்காலையில் செல்லும் கனரக வாகனங்களின் ஓட்டுனர்களும் இதேபோன்று தூங்கி விடுவதால் பல விபரீதங்கள் நெடுஞ்சாலைகளில் நடக்கின்றன. எனவே, முடிந்தவரை பகல் வேளையில் பயணத்தை திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவும். காலை 6 மணிக்கு பின்னர் நீண்ட தூர பயணங்களை துவங்குவது சிறந்தது.




திருவிழா, உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு சென்றுவிட்டு உடனடியாக திரும்பும்போதும் போதிய தூக்கமின்மை, உடல் சோர்வு காரணமாக சில நொடிகள் கண் சொக்கிவிடும். அதுவும் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துவிடும். எனவே, அதுபோன்ற சமயங்களில் வழியில் உள்ள ஓட்டல்களில் சில மணிநேரம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு பயணத்தை தொடரவும். மல்லுக்கட்டினால் உயிருக்கே உலை வைத்துவிடும்.



குடும்பத்தினர் எல்லோரும் கிளம்பி விட்டார்களே, எனவே, அரைகுறை தூக்கத்துடன் எழுந்து வண்டியை எடுத்து ஓட்டுவதை தவிர்க்கவும். உங்களது உடல்நிலை குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துவிடுவது சிறப்பு. இல்லையெனில், நீண்ட தூர பயணங்களின்போது நன்கு கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் இருந்தால் பரவாயில்லை.

இது மாதிரி விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?

எப்போதாவது கார் ஓட்டுபவர், புதிதாக கார் ஓட்டக் கற்றுக்கொண்டவர்களிடம் நெடுஞ்சாலையில் காரை கொடுக்க வேண்டாம். அதேபோன்று, உங்களது காரின் ஓட்டுதல் முறை, உங்களுக்கு அத்துப்படியாக இருக்கும். ஆனால், கார் ஓட்ட தெரிந்தாலும், பிறர் உங்களது காரை ஓட்டும்போது அவர்களுக்கு அந்த காரின் பேலன்ஸ் பிடிபட சற்று கால அவகாசம் எடுக்கும். எனவே, அதிவேகத்தில் ஓட்டுவதை தவிர்க்க சொல்லுங்கள்.




இரவு வேளைகளில் நெடுஞ்சாலை சந்திப்புகளில் கனரக வாகனங்கள் கடக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே, மிதமான வேகத்தில் காரை செலுத்துவதே, இதுபோன்ற சமயங்களில் காரை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். அருகில் சென்று கட்டுப்படுத்துவது மிக மிக கடினம்.




முன்னால் செல்லும் கனரக வாகனங்களை கடக்கும்போது வேகத்தை குறைத்து கவனமாக கடக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் சில வேளைகளில் புலப்படாது. சிலர் அதிவேகத்தில் இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்று, முன்னால் செல்லும் வாகனங்களை கவனிக்காமல் விபத்தில் சிக்கிக் கொண்டுவிடுகின்றனர்.



நள்ளிரவு நேரத்தில் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், கார் டிரைவரை அமர்த்திக் கொண்டு செல்வது நலம். இல்லையெனில், நன்கு கார் ஓட்ட தெரிந்த மற்றொருவரை உடன் அழைத்துக் கொண்டு புறப்படுங்கள்.



இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை காரை நிறுத்தி 15 நிமிடங்கள் காருக்கு ஓய்வு கொடுக்கவும். அந்த வேளையில், உங்களது உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கிடைக்கும். கார் ஓட்டுபவர் தூங்குவதாக உணர்ந்தால், உடனடியாக காரை நிறுத்தி அவருக்கு ஓய்வு கொடுக்கவும். இந்த எளிய வழிமுறைகளை கடைப்பிடித்தால், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்.

Written By: Saravana Rajan
Published: Monday, March 13, 2017, 14:33 [IST]
THANKS TO ONEINDIA.COM

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...