Total Pageviews

Wednesday, September 18, 2024

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

 


நிம்மதி என்றால், எந்த ஒரு குழப்பமும், கவலையும், யோசனையும் இல்லாத நிலை

தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே, நிம்மதியை அடைந்து விடலாம்

தேவையற்ற எண்ணங்களை சுமந்து கொண்டிருந்தால், நிம்மதி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று

இருப்பதில் சந்தோஷமாக அமைதியாக வாழ்வது நிம்மதி.

இருப்பதில் சந்தோஷமாக இருந் தாலே நிம்மதி.

இருப்பதில் சந்தோசமாக இல்லாமல் இல்லாததை வேண்டி நினைப்பதால் நிம்மதி தொலைகிறது.

இல்லாததை விட்டுவிட்டு இருப்பதில் சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள் நிம்மதியாக இருக்கும்.

எல்லாம் உங்கள் மனம்தான் காரணம் இல்லாததை எண்ணி அலைந்து நிம்மதியைக் கெடுக்கிறது நீங்கள் அதற்கு அடிமையாக தொலைந்துபோய் இருக்கின்றீர்கள் அதனால் நிம்மதி இருப்பது தெரியாமல் எங்கோ தேடுகிறீர்கள்.

இருக்கும் இடத்தில் இருந்த பொருட்களை வைத்துக் கொண்டு இன்பமாக இருங்கள் நிம்மதி தானாய் தெரியும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் இருந்தபடியே வாழ கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் முயற்சி இருக்கட்டும் ஆனாலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் முயன்றவரை நேர்மையான வழியில் உழைத்து சம்பாதித்து இருப்பதில் சந்தோஷமாக வாழ கற்று உங்கள் நிம்மதியை தொலைக்காமல் இருங்கள்!

மனதில் நிம்மதி, வீட்டில் நிம்மதி, பொருளாதாரத்தில் நிம்மதி எல்லாம் இறைவனை நினைவுக் கூர்ந்து வாழ்வதில் உள்ளது.

 நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

1.ஆரோக்கியமான உடல்

2.திருப்தி அடையும் மனம்

3.நேர்மையாக சம்பாதித்த பணம்

4.அனுசரணையான குடும்பம்

5.ஊக்கப்படுத்தும் துணை

6.உற்சாகம் தரும் நட்பு

7.சரி தவறு கணிக்கும் பக்குவம் !

8.சில சறுக்கல்களைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை !

9.தேவை ஆசை வித்தியாசம் உணர்வது !

10.இறை நம்பிக்கை அல்லது இயற்கையின் மீது நம்பிக்கை !

செல்வம் தான் நிம்மதியா ?

அதுவும் ஒரு காரணம் !

Monday, September 16, 2024

உலகில் உள்ள அனைவருக்குமே "வாழ்க்கை நிரந்தரம் அல்ல" !

 

உலகில் உள்ள அனைவருக்குமே "வாழ்க்கை நிரந்தரம் அல்ல"

இதை தான் கண்ணதாசன் தன் பாடல் வரிகளினால் உணர்த்தியிருக்கிறார்.

எங்கே வாழ்க்கை தொடங்கும்

அது எங்கே எவ்விதம் முடியும்

இதுதான் பாதை

இது தான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது!

"வாழ்க்கை நிரந்தரம் அல்ல" என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இன்று(26-ஜூலை-2021) இணையத்தில் பார்த்த அப்படிப்பட்ட ஒரு செய்தியை இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

இந்த படத்தில் இருப்பவரின் பெயர் தீபா சர்மா.

ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர்.

இவர் தனது 38 வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

பல்வேறு இடங்களுக்குச் சென்ற இவர் சென்ற இடமெல்லாம் புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்திருக்கிறார்.

அதுபோல தான் 25-ஜூலை-2021 நண்பகல் 12.59 மணிக்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நகஸ்டி செக் பாய்ண்டில் நின்று போட்டோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

“இதுதான் இந்திய எல்லையின் கடைசி இடம்.

இங்கு வரை மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த இடத்திலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் திபெத்தில் இந்திய எல்லை உள்ளது.

ஆனால் அதனை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது”

என்று தனது கடைசி பதிவை பதிவிட்டுள்ளார்.

இது தான் அவருடைய கடைசி பதிவு என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த புகைப்படத்தை பதிவிட்ட அடுத்த அரை மணி நேரத்தில் (1.25 மணி) இவர் உயிரோடு இல்லை.

ஹிமாச்சலம் பிரதேசத்தில் உள்ள கின்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைகளிலிருந்து ராட்சத பாறைகள் வேகமாக உருண்டு தரை பகுதியை நோக்கி வந்தன.

இந்நிலையில் சங்லா-சிட்குல் சாலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்றும் வந்து கொண்டிருந்தது.அந்த சமயத்தில் பாலத்தின் மீது நிறைய பாறைகள் விழுந்ததால் தரையிலிருந்த பாலம் இடிந்து விழுந்தது.

அந்த நேரத்தில் பாலத்தின் மீது டெம்போவும் இருந்ததால் பாலத்துடன் சேர்ந்து டெம்போவும் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே டெம்போவிலிருந்த ஒன்பது சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

அதில் தீபா சர்மாவும் ஒருவர்.

"ஜூலை 29 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சுற்றுலா சென்றார்.

மிகவும் மகிழ்ச்சியோடு இந்த பயணத்தை மேற்கொண்டார்.

இந்த பயணத்திற்காக புதியதாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராவும் புது ஸ்மார்ட்போனையும் வாங்கி இருந்தார்.

சிறுவயது முதலே இயற்கையை மிகவும் நேசித்தார்.

இப்போது இயற்கையின் மடியில் சரணடைந்து விட்டார்.

அவரின் ஆத்மா நிம்மதியாக உறங்கட்டும்"

என்று தீபாவின் சகோதரரான மகேஷ் குமார் சர்மா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


விட்டுக் கொடுத்தல் இருந்தால் குடும்பம் என்றும் அழியாது !

 

* கணவரிடம் எந்த வேலையாவது சொன்னால் அதில் குறை கூறாதீர்கள். அவர்கள் நீயே செய்துகொள் என்று நழுவி விடுவார்கள். சொத்தை கத்தரிக்காய்,முற்றிய வெண்டைக்காய் வாங்கிவந்தாலும் வாய் திறக்காதீர்கள்.நாளடைவில் நல்லதை தேர்ந்தெடுக்க பழகிடுவார்கள்.

* பசியோடு இருக்கும் போது உங்கள் கோரிக்கைகளை வைக்காதீர்கள் நிராகரிக்கப்படும்.

* நொடிக்கு நொடி அம்மாவீட்டு பெருமையை பேசாதீர்கள்.நொய்நொய்ன்னு மாமியார் வீட்டைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்காதீர்கள். வீண் சண்டை தான் வரும்.

* குடும்பச் செலவுக்காக இருந்தாலும் கணவனுக்கு தெரியாமல் கடன் வாங்காதீர்கள்.சில நேரங்களில் பொறுப்பு உங்கள் தலையில் விழுந்துவிடும்.

*போன் பேசினால் யார் என்ன என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். தும்பு உங்களிடம் இருக்கிறது. தைரியமாக இருங்கள்.

*உங்கள் தேவைகளை அதிகாரமாக கேட்காதீர்கள் அன்பாக கேளுங்கள் உடனே கிடைக்கும்.

*கணவரின் ஆடை அலங்காரங்களை ரசித்துப் பாராட்டுங்கள்.மனைவியை விட்டால் ரசிக்கவும்,பாராட்டவும் அவர்களுக்கு யாரும் இல்லை.

* கணவன் கோபப்படும் போது உங்கள் கருத்தை சொல்லி நீங்களும் கத்தாதீர்கள்.அமைதியாக இருந்து விட்டு சரியான நேரத்தில் வலிமையாக உங்கள் கருத்தை சொல்லுங்கள் பலன் இருக்கும்.

பெண்களின் அன்பு பட்டம் போன்றது.

ஆண்களின் அன்பு நூல் போன்றது !

கண்ணுக்குத் தெரியாது.

குடும்பம் என்பது அழகான,கூடு. அங்கு விட்டுக் கொடுத்தல் இருந்தால் என்றும் அழியாது........

Saturday, September 7, 2024

என்ன தொழில் செய்யலாம்!


1) 1000/- இருந்தால்.நீங்கள் ஆணோ, பெண்ணோ.. உங்களுக்கு பூ, மாலை கட்டத் தெரியும் என்றால் முதல் போட்டு வீட்டிலேயே நீங்களும் கட்டி, உங்கள் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் கூலி கொடுத்து, கட்டக் கொடுத்து முதலில் தெரிந்தவர்கள்,  சிறிய மற்றும் பெரிய கடைகளுக்கு தினம் அல்லது செவ்வாய் வெள்ளி கொண்டுபோய் கொடுத்து ( கடனுக்குக் கொடுக்காமல் ) முதலை அப்படியே வைத்து அடுத்த நாள் வியாபாரத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள்..

2)  2000/- இருந்தால் உங்களுக்கு Wire கூடை பின்னத் தெரியும் என்றால் நீங்களும் பின்னி பிறகு உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பின்னக் கொடுத்து கூடையாக விற்கும்போது பாதிக்கு பாதி லாபம் கிட்டும்..

3) 5000/- இருந்தால் வீட்டிலேயே சிறிய அளவில் Tiffin & Variety Meals செய்து ஆர்டர் எடுத்து Door Delivery செய்யலாம்..

4)  10000/- இருந்தால் சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் போர்டிகோ - வில் கமர்ஷியல் கரண்ட் சப்ளை வாங்கி இரண்டு கிரைண்டர் போட்டு இட்லிமாவு அரைத்து பாக்கெட் போட்டு கடைகளுக்கு கொடுக்கலாம்..நல்ல வருமானம் தரும்..

5) 25000/- இருந்தால் வாசலில் சிறிய பெட்டிக் கடை வைத்து சிறிய அளவில் வியாபாரம் செய்யலாம்.. 5000/- வரை வியாபாரம் நடந்தால் 500/- லாபம் கிட்டும்..

6)  50000/- இருந்தால் உதிரி மசாலா பொருட்கள் பாக்கெட் போட்டு கடைகளுக்கு கொடுக்கலாம்..

7) 100000/- இருந்தால் உங்கள் வீட்டின் அருகில் Xerox, Online Money Transactions ( Aadhaar & ATM ) வைக்கலாம்..

8) உங்கள் வீட்டின் அருகில் Ice cream கடை இல்லையெனில் சிறிய 2 × 2 Freezer போட்டு 10, 15, 20/- என்ற குறைந்த விலையில் செய்யலாம்..

9) முதலில் உள்ளூர் மொத்த ஜவுளி கடையில் எடுத்து செய்யலாம். பிறகு வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக எடுத்து செய்யலாம்..

10) கவரிங் நகைகள் மற்றும் திருமணத்திற்கு வாடகை நகைகள் கொடுத்து வியாபாரம் செய்யலாம்..

11) வீட்டு விசேஷங்களுக்கு வாடகை பாத்திரம், பந்தல் போடுதல், Light Setting செய்யலாம்..

12) நன்றாக சமைக்கத் தெரிந்தவராக இருப்பின் கேட்டரிங் ஆர்டர் எடுத்து செய்யலாம்..நல்ல வருமானம்..

13) Seasoning வருமானமாக Cool Drinks & Fresh Juices & மூலிகை டீ போன்றவை செய்யலாம்..

14)மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மசாலா பொடி போன்றவைகளை 10/- , 20/- பாக்கெட் போட்டு கடைகளுக்கு கொடுக்கலாம்..

15)  இட்லி மிளகாய் பொடி, பூண்டு பொடி போன்றவை நல்ல வருமானம் தரும் தரமாகவும், சுவையாகவும் செய்யும் பட்சத்தில்.. 

16)மாவு வகைகள் ( கோதுமை மாவு, கேழ்வரகு மாவு ) போன்றவைகள் திருமண வீடுகளுக்கும், ஹோட்டல் சிறிய மற்றும் பெரிய கடைகளுக்கு Supply செய்யலாம்….இன்னும் நிறைய..நிறைய…யோசனைகள்..மனம் இருந்தால்..உடல் உழைத்து தரமான முறையில், சேவை மனப்பான்மை அதனுடன் வருமானம் தரும் தொழில் செய்யலாம்..

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...