Total Pageviews

Wednesday, April 29, 2015

குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் 5000/- என வரையறை செய்யப்பட வேண்டும் !


குறைந்த பட்ச பிஎஃப் ஓய்வூதியம் ரூ.1000: திட்ட நீட்டிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லியில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்த நிலையில் இதைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவால் 20 லட்சம் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் பலன் அடைவர். இது தவிர கம்பெனிகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை களையும் வகையில் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

Comments :

ஓரு காபி மற்றும் டீ யின் விலை 10 ருபாய்

ஒரு நாளைக்கு  2 தடவை  கணவன் - மனைவி 2 நபர்கள் காபி  சாப்பிட்டால்  40 ரூபாய்  தேவைப்படும். [40 x 30 = 1200 ]

மற்ற செலவிற்க்கு எங்கே செல்வார்கள்! சாப்பாடு, மருத்துவம், மின்சாரம், கேஸ், பால், காய்கறி செலவுக்கு எங்கே போவார்கள் !

குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் 5000/- என வரையறை செய்யப்பட வேண்டும் ! 

Friday, April 17, 2015

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் !

 


1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே. 

2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. 

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது. 

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.
  
5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும். 


6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகியனவற்றையும் கடைப்பிடித்து வரவேண்டும். 

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும். 

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்.

புகைத்ததினால், உடலில் கலந்த நிகோடின் அளவைக் குறைக்க !

 

புகை பிடிப்பது உடலுக்குத் தீங்கு என்பது அனைவருக்கும் தெரியும். புகைக்கு அடிமையானவர்கள் எளிதில் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். 

புகையிலையில் இருக்கும் மிக முக்கிய மூலப்பொருளான நிகோடின் தொடர்ந்து உடலில் செல்லும்போது ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும். இந்த அதிவேக ரத்த அழுத்ததைத் தாங்க முடியாமல், நுரையீரல் தன்னுடைய சுத்திகரிக்கும் வேலையைச் சரிவரச் செய்ய முடியாமல் போகும். இதனால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். மது அருந்தும்போது அதை உட்கொள்பவருக்கே அதிக பாதிப்பு. ஆனால், புகையால், புகைப்பவருக்கு மட்டுமல்லாமல், சுற்றி இருப்பவர்களுக்கும் அதிகப் பாதிப்பை தந்து, சுற்று சூழலுக்கும் அது தீங்கை விளைவிக்கிறது.
  
                                                                                                     
மேலும், புகைப்பிடிப்பதால், உடலில் வைட்டமின்கள் ஏ, சி சத்துக்கள் இழக்கப்படும். இந்த வைட்டமின் நம் உடலில் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நிரந்தர நோயாளியாக வாய்ப்பு அதிகம். புகைப் பிடிப்பதை நிறுத்தினாலும், நம் உடலில் இருந்து நிகோடினை வெளியேற்ற பல வருடங்கள் ஆகும் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம், புகைத்ததினால், உடலில் கலந்த நிகோடின் அளவைக் குறைக்கலாம். 

ப்ராக்கோலி 

இதில் வைட்டமின் சி மற்றும் பி5 அதிகமாக இருப்பதால், புகையிலையினால் குறைந்த, வைட்டமின் சி-யின் அளவை அதிகரிக்கச் செய்யும். அது மட்டுமின்றி, உடலில் கலந்துள்ள நிகோடின் அளவைக் குறைக்க இது உதவுகிறது.

ஆரஞ்சு 

பொதுவாக நோயிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு ஆரஞ்சு சாறு மிகவும் நல்லது. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸை குடிப்பவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதுடன் மன அழுத்தம், சோர்வுகளை நீக்கவல்லது. இதிலிருந்தும் நமக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். 

கேரட் 

ஒவ்வொருமுறை புகைப்பிடிக்கும் போதும் நம் உடலில் மூன்று முதல் நான்கு நாட்கள் அந்த நிகோடின் அளவு குறையாமல் தங்கி விடுகிறது. இதனால் நமது உடலின் உள் உறுப்புகள் மட்டுமில்லாமல் தோலின் தன்மையும் மாறிவிடுகிறது. கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பி சத்துக்கள் வேகமாகச் செயல் புரிந்து உடலில் கலந்துள்ள நச்சுப்பொருளான நிகோடினை வெளியேற்றும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. 

பசலைக் கீரை 

கீரை என்றாலே சத்துதான். அதிலும் பசலைக் கீரையில் பல வைட்டமின்கள் உள்ளன. இதில் ஃபோலிக் ஆசிட் அதிகமாகக் காணப்படுகிறது. ஃபோலிக் ஆசிட், ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோயைக் கட்டுப்படுத்தும். 

கிவி 

பார்ப்பதற்குச் சப்போட்டா பழம் போல இருக்கும் இது. எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவே இருக்கிறது. இந்த அதிசய பழத்தின் மூலம் உடலில் கலந்துள்ள நிகோடின் அளவை விரைவில் வெளியேற்றலாம். 

தண்ணீர் 

புகைப்பதினால் உடலில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படும். அதிகளவு தண்ணீர் குடிப்பதின் மூலம், புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும். அது மட்டுமின்றி, நிகோடின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. 

-தமிழ் மருத்துவம்-

நீர்க் கடுப்பு'



கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும்.
  
கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம். 
கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 
இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது. 
நோய்க்கான அறிகுறிகள்:
 
அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போல் உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும். 
குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும். 
கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம். 
இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும். 
மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது. 
உணவுகள்:
 
இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். 
கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. 
கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச் சத்து ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும். 
'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி அவரது உதவியோடு எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

Thursday, April 16, 2015

உடல் பருமனை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்.

உடல் பருமனாக உள்ளீர்களா?

 உடல் பருமனை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். அது இன்று, நோயின் அடையாளமாக மாறி போயிருக்கிறது.

‘கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக பெருகிவருகிறது. இது ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு அறிகுறி’ என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சித்த மருத்துவர் என். சந்திரகுமார் இங்கே விரிவாக விளக்குகிறார்.

‘இந்திய மக்கள் தொகையில், 15 சதவிகிதத்தினர் உடல் பருமனுடன் இருக்கின்றனர். தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதில், ஆண்கள் 20 சதவிகிதத்திற்கு மேலும், பெண்கள் 25 சதவிகிதத்திற்கு மேலும் உடல் பருமனால் பாதிப்புக்குள்ளாகி தவிக்கின்றனர்’ என்று புள்ளிவிவரங்களை அடுக்கியவர், பாதிப்புகளை பற்றி பேசினார்.

‘அதிக பருமனால், மிக விரைவிலேயே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உடலின் எடையை தாங்கமுடியாமல் எலும்பு மூட்டு தேய்மானம் ஏற்படலாம்.

இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் அதிக கொழுப்பு சேருவதால், பித்தப் பையில் கற்கள், வயிற்றுப் புண், வாயு தொந்தரவு, தோல் நோய், சுவாசக் கோளாறு, தூக்கமின்மை, அதீத தூக்கம் போன்ற பல நோய்கள் தாக்கக்கூடும். அதிக உடல் பருமனாக இருந்தால், தூக்கத்திலேகூட மூச்சு நின்று விடக்கூடிய அபாயம் இருக்கிறது. கர்ப்பப்பையில் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஆண், பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மை ஏற்படும்.

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலமாக உடல் பருமனை சரி செய்துவிட முடியும். ஆனால், உடல் பருமன் பிரச்னை அளவுக்கு மீறி முற்றி போய்விட்டால், உடம்பில் உள்ள கொழுப்பை ஊசி மூலம் உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஜாக்கிரதை!’ என்று எச்சரிக்கும் டாக்டர், உடல் பருமனை குறைப்பதற்கான டிப்ஸ்களை வழங்கினார்.

அதிகமாக எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.

தோல் மற்றும் கொழுப்பு நீக்கிய கோழி இறைச்சியைதான் சாப்பிட வேண்டும்.

ஆடு, மாடு இறைச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அரிசி சாதத்தின் அளவை குறைத்து, கோதுமை, கம்பு, கேழ்வரகு, ஓட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

பழங்கள், பழ ரசங்கள், காய்கறிகள் போன்ற நீர் சத்து நிறைந்த உணவை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும், இரவில் கோதுமை சப்பாத்தி, தோசை போன்ற டிபன்தான் சாப்பிடவேண்டும்.

தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். இதனால், உடலிலிருந்து அதிகஅளவு சிறுநீர் மற்றும் வியர்வை வெளியேறும்படி பார்த்துக் கொள்ளமுடியும்.

புடலங்காய் அல்லது வெண்டைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் பருமன் கணிசமாக குறையும்.

கொத்தமல்லி விதை (தனியா) தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்ட கொதிக்க வைத்து, காலை மற்றும் மாலை வேளையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காபி, டீ மற்றும் பானங்களில் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து, கருப்பட்டி மற்றும் பனக்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.

இவையெல்லாம் தாண்டி, வீட்டை பெருக்குவது, தோட்ட வேலை, வாகனம் கழுவுதல், துணி துவைப்பது போன்று குனிந்து நிமிர்ந்து செய்யக்கூடிய அன்றாட வேலைகளே உடல் பருமனைக் குறைப்பதற்கான உன்னத பயிற்சிகள்தான்!

இஞ்சிப் பால்..! நுரையீரல் சுத்தமாகும் !

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..


கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் பு...