Total Pageviews

Tuesday, December 19, 2023

இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி?

 இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி?

உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் செல்ல முடியாது பொருளாதார, மற்றும் சில காரணங்களால நேரில் செல்ல முடியாது. அதனால் அதை செய்ய முடியாமால் போய்விடுகிறது. 

அதற்கு  கால காலமாக நம் நினைவில் ஒரு நீங்கா நிராசையாக நின்று விடுவதுண்டு. அதற்காக RSS ன் "அஸ்தி விசர்ஜன்" அமைப்பும், Indian SPEED POST ம் இணைந்து அந்த சேவையை செய்து வருவது பலருக்கு தெரிவதில்லை. ஆம், அஸ்தி சாம்பலை இப்போது ஸ்பீட் போஸ்ட் வழியாக அனுப்பி, புனித கங்கையில் கரைக்கலாம், அவர்கள் செய்யும் சடங்குகளை நேரலையில் பார்க்கலாம்.

வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயாவில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்திற்குப் பிந்தைய சடங்குகளைச் செய்ய அனுமதிக்கும் சமூக-மத அமைப்பான 'ஓம் திவ்ய தர்ஷன்", உடன் இணைந்து புதிய முயற்சியை அஞ்சல் துறை அறிவித்துள்ளது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது

வசதியை எப்படிப் பெறுவது

1) முதலில் http://www.omdivyadarshan.org// இல் உள்ள ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தாவின் போர்ட்டலில் ஒருவர் இறந்தவர் பற்றிய விபரத்தை Google Form ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்ய கீழே இருக்கும் லிங்:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfN3R-aP90EBEIXos_XOalJuRTgar8AhSU9ICrPk6cLRFDs_w/viewform

2) பதிவு செய்து அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பின்புதான் சாம்பல் அனுப்ப வேண்டும். +91 83696 66626

3) பதிவுசெய்த பிறகு, சாம்பல் பொட்டலம் வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயா/ஆகிய இடங்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படலாம்.

அதில் 'ஓம் திவ்ய தரிசனம்' என்று தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும். ஸ்பீட் போஸ்ட்டை முன்பதிவு செய்த பிறகு, அனுப்புநர் போர்ட்டலில் முன்பதிவு விவரங்களுடன் அந்த அஸ்தியை அனுப்பிய தபால் பற்றிய தகவலை புதுப்பிக்க வேண்டும்

4) இதற்குப் பிறகு, "ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தா", சாம்பல் மூழ்குதல் மற்றும் பிற சடங்குகளை கவனித்துக் கொள்ளும். அந்த இறுதி சடங்குகளை இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் இங்கிருந்தே இணைய ஒளிபரப்பு மூலம் பார்க்க முடியும்.

குறிப்பு: இது பற்றிய தகவல் எளிதாக கிடைப்பதில்லை. எனவே மற்றவர்களுடன் பகிர்ந்து புண்ணியம் தேடுங்கள்.   🙏

Sunday, December 17, 2023

மன முதிர்ச்சி என்றால் என்ன? What is Maturity of Mind ?

மன முதிர்ச்சி என்றால் என்ன?
What is Maturity of Mind ?

1.  மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு  
     நம்மை திருத்திக்கொள்வது.
     Correcting ourselves without trying to correct others.

2.  அனைவரையும் அப்படியே
     (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.
     Accepting others with their short  comings.

3.  மற்றவர்களின் கருத்துக்கள் அவர்கள்
     கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
     Understanding the opinions of others from their perspectives.

4.  எதை விட வேண்டுமோ அதை விட பழகி கொள்தல்.
     Learning to leave what are to be avoided.

5.  மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை
     விடுதல்.
     Leaving the expectations from others.

6.  செய்வதை மன அமைதியுடன் செய்வது.
      Doing whatever we do with peace of   mind.

7.  நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்
     நிரூபிப்பதை விடுவது.
     Avoiding to prove our intelligence on   others.

8.  நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
     என்ற நிலையை விடுதல்.
     Avoiding the status that others should accept our actions.

9.  மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை  
     விடுதல்.
     Avoiding the comparisons of our selves with others.

10.  எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை
       அமைதியாக வைத்துக்கொள்ள
       முயற்சித்தல்..
       Trying to keep our peace in our mind
without worrying for anything.

11.  நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய   
      விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை
      உணர்தல்.
      Understanding the difference between
      the basic needs and what we want.

12.  சந்தோசம் என்பது பொருள்.  
       சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை
       அடைதல்.
       Reaching the status that happiness is
       not connected with material things.

இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்....
 

Saturday, December 9, 2023

நீரிழிவு நோய் முற்றிலும் குணமாக!

நீரிழிவு நோய்க்கு...



ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த

(கீழே கொடுக்கப்பட்டுள்ள)

மருந்தை பயன்படுத்தினார்.

அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.


டாக்டர்கள் அவருக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்

டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார். இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


நீரிழிவு சிகிச்சைக்குத் தேவையான பொருட்கள்:


1 - கோதுமை 100 கிராம்

2 - பார்லி 100 கிராம்

3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்

தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.


தயாரிக்கும் முறை:


5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.

அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.

அதை தானாகவே குளிர்வித்துக் கொள்ள அனுமதிக்கவும்.

அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.


பயன்படுத்தும் முறை:


உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.


அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.


இந்த சிகிச்சையால் 2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.


குறிப்பு:

ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.


இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.

Monday, July 24, 2023

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

sleepless 


நாங்கெல்லாம் பயத்துக்கே பயங்காட்றவங்க, தெரியுமாஎன்று சிலர் சினிமா பன்ச் பேசுவார்கள். ஆனால், உண்மையில், பயப்படாத மனிதர்கள் இருக்க முடியுமா? நம்மில் பலர் பகலில் சூப்பர்மேன் என்றால் இரவானால் பேட்மேனாக இல்லாமல், ‘காஞ்சனாராகவா லாரன்ஸ் போல மாறி விடுவோம். பேய், பிசாசு குறித்த கற்பனைகளை மட்டும் இங்கே பயமாக குறிப்பிடவில்லை. உயரமான இடத்தில் நிற்கப் பயம், பாம்பைப் பார்த்தால் பயம், பூச்சிகளைப் பார்த்தால் பயம், இருள் என்றால் பயம் என்று பயம் என்பது நம் அன்றாட வாழ்வில் எப்போதும் இருக்கும் உணர்வுதான் இது. திடீரென மின்சாரம் தடைப்பட்டால் கூட, ஏதோ ஓர் உருவம் வீட்டுக்குள் உலவுவது போன்ற பீதி ஏற்பட்டுவிடும். பலர் பயம் என்பதை ஒரு மனநோய் கணக்காக பில்ட்டப் செய்தாலும், இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சாதாரண பிரச்னைதான். பயத்தை ஒரு பிரச்னை என்று சொல்வதே தவறுதான் என்றாலும், பலர் இதிலிருந்து விடுபட முயற்சிப்பதால் இதை அப்படியே அணுகுவோம்.

பயம் ஏற்படக் காரணம் என்ன?

பயத்தின் முக்கியக் காரணி - அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத, புரியாத நிலையே! சுருக்கமாகச் சொன்னால், பயம் என்பது எதிர்காலத்தை நினைத்துத்தான். எதிர்காலம் என்பது இங்கே அடுத்த நொடி, அடுத்த நிமிடம், அடுத்த நாள், அடுத்தடுத்த வருடங்கள் என அனைத்துக்குமே பொருத்தும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க, உங்கள் எண்ணங்களோ எதிர்காலத்தில் இருக்கின்றது, அவ்வளவே!

ஓர் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, பயம் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த உணர்வு பயம் என்று பொதுமைப்படுத்தப்பட்டாலும் கவலை, அச்சம், பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக இது வெளிப்படுகிறது. மொத்தத்தில், பயம் என்பது முழுக்க முழுக்க நம் மன ஓட்டம் மட்டுமே. அது வெறும் விபரீதக் கற்பனையால் விளைவது. ஆபத்து என்பது கட்டாயமாக இருப்பது என்று எடுத்துக்கொண்டாலும், அங்கே பயம் என்பது, எப்போதும் தவிர்க்கக்கூடிய ஓர் உணர்வு மட்டுமே.

மருத்துவ அறிவியல் ரீதியாகப் பயம்குறித்து ஆராய்ந்தால், ஸ்டாத்மின் (Stathmin) என்ற மரபணுதான் பயம் உருவாகக் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதைக் கண்டறிய உதவியது வழக்கம் போல எலி ஒன்றை வைத்து நடத்திய சோதனைதான். எலிகள் பொதுவாக மிகவும் பயந்த சுபாவம் உடையவை. ஆபத்து பல கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது என்றாலே இங்கே பதற்றமாகி விடும். இந்த ஸ்டாத்மின் மரபணு நீக்கப்பட்ட எலிகள் மிகவும் வித்தியாசமாக செயல்படத் தொடங்கின. எலிகளைப் பொதுவாக பயப்பட வைக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியபோது, அதற்கு இந்த எலிகள் அஞ்சவேயில்லை. அதேசமயம், எலியின் மற்ற செயல்பாடுகள், உடலியல் மாற்றங்கள், இவற்றிற்கெல்லாம் எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அவ்வப்போது உருவாகும் மன அழுத்தம், ஆளுமைக் கோளாறு, கவலை மற்றும் அனைத்து வகை ஃபோபியாக்கள் குறித்துப் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியது. இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர், 2000-மாவது ஆண்டில், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். எரிக் கண்டெல்.

பயம் உருவாகும் அந்த நொடி

பயம் என்ற அந்த ஒற்றை உணர்வைத் தலைதூக்க வைக்க, நம் உடல் என்ன செய்கிறது? அது உருவாகும்போது, நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன?

ஓடி ஒளிதல் (hiding), செயல் முடக்கம் (freezing), நடுக்கம் (shivering), அழுகை (crying) எனப் பயம் பல வகைகளில் வெளிப்பட்டாலும், செயல் முடக்கம் என்பது மட்டுமே பெரும்பாலும் நடக்கும். பயம் ஏற்படுத்தும் ஒரு காட்சியோ, கற்பனையோ, தோன்றிவிட்டால், செயல் முடக்கம் இயல்பாக வந்துவிடுகிறது. இதற்குக் காரணம், நம் பெருமூளை புறணி (Cerebral Cortex). சிந்தனை மற்றும் செயலுக்குக் காரணமான மூளையின் இந்தப் பாகம், எப்போதும் நம் பாதுகாப்புகுறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். ஒரு சிறிய பள்ளத்தைத் தாண்டுவதற்கு கூட, அதனிடம் அனுமதி பெறவேண்டும். தாண்டிவிட முடியுமா என்று நீங்கள் மனதுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி, இந்தப் புறணி கேட்கும் கேள்விதான். இதற்கு ஆதரவாகச் செயல்படுவது மூளையின் மற்றொரு பகுதியான அமிக்டாலா (amygdala). இதுதான் நம் உணர்ச்சிகளின் ஒருங்கிணைப்பு மையம்.

ஓர் இருட்டான ஒற்றையடிப் பாதையை நீங்கள் தனியாக கடக்கும்போது, “இது பாதுகாப்பான வழி தானா?”, “எந்தப் பிரச்னையும் இல்லாமல் இதைக் கடந்துவிட முடியுமா?”, “இருட்டில் கண் ஒழுங்காகத் தெரியுமா?” என்று நமக்குள் பல கேள்விகளை இந்தப் புறணி எழுப்பும். அந்தக் கேள்விகளில் ஏதோ ஒன்றிற்கு விடை இல்லையென்றாலும், உங்கள் இதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமாக துடிக்கத் தொடங்கும். அண்ணீர் எனப்படும் அட்ரினலின் (Adrenaline) உடலில் வேகமாக சுரக்கத் தொடங்கும். இது எல்லாம் உங்களை அந்தப் பாதையில் செல்ல விடாமல் தடுக்க உங்கள் மூளை நடத்தும் நாடகங்கள். அதையும் மீறி நீங்கள் அந்த இருட்டான பாதையில் மெதுவாக நடக்கத் தொடங்கினால், கை, கால்களில் நடுக்கம் ஏற்படத் தொடங்கும். அதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்தால், இப்போது மூச்சு விடுவதுகூட சிரமமாகத் தோன்றும். இருட்டில் ஏதோ ஓர் உருவம், வித்தியாசமான ஒலி, அல்லது ஒருவித சலசலப்பு ஏற்படுவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும். நீங்கள் ஓடி விடலாமா என்று எத்தனிக்க, உங்கள் தோலிலுள்ள ‘pores’ எனப்படும் சிறுதுளைகள் திறந்து பயம் என்ற உணர்வை உடல் முழுவதும் பரப்பி, நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. பேய், பிசாசு என்று பயம் ஏற்படுவதும் இதுபோன்ற ஒரு சமயத்தில் தான். இந்தப் பேய் பயம் தான் நம் பெருமூளை புறணியின் டிரம்ப் கார்டு! அந்த எண்ணம் உதித்தவுடன் அந்த இருட்டில் நடந்து போக முடியாமல் பின்வாங்க வேண்டியதுதான்.

பயமில்லாத மனிதர்கள் உண்டா?

பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கும் பயம் என்ற இந்த உணர்வு, உலகிலேயே அரிதிலும் அரிதாக வெறும் 400 பேர்களுக்கு இல்லையெனக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்குக் காரணம் ஒருவித அரிதான மரபணுக் கோளாறு. அதன் பெயர் Urbach–Wiethe Disease. சமீபத்தில், அமெரிக்காவில் SM என்ற குறியீடுடன் அழைக்கப்படும் ஒரு பெண்ணை குறித்து ஒரு செய்தி வந்தது. இவரின் அமிக்டாலா (amygdala) சேதமடைந்துவிட்டதால், இவரால் பயம் என்ற ஓர் உணர்வை உடல் முழுவதும் கடத்தவே முடியவில்லை. துப்பாக்கி, கத்தி என எந்த ஆயுதத்தை வைத்து மிரட்டிய போதும், உயிருக்கு ஆபத்தான பல சம்பவங்கள் அரங்கேறிய போதும், இவருக்குப் பயம் என்பதே ஏற்படவில்லை. அவரின் கணவர், அவரைக் கொடுமைப்படுத்தி சாவின் விளிம்புவரை சென்றபோது கூட, இவர் அசைந்து கொடுக்கவேயில்லை. சில சமயம், மூளையிலுள்ள திசுக்கள் அதிக வலுவடைவதால்கூட இந்தக் கோளாறு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சரி, இப்படி பயமில்லாமல் இருப்பவர்கள் சூப்பர்ஹீரோக்கள் போன்று கொண்டாடப்பட வேண்டியவர்கள் தானே? பின்பு ஏன், இதை ஒரு நோயாக, ஒரு குறைபாடாக பார்க்கிறோம்? காரணம், பயம் என்ற உணர்வு, மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா வகை உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமானது. அதுதான்  நம்மை ஆபத்தை நோக்கி நகரவிடாமல் காக்கிறது. தொடர்ந்து வாழவைக்கிறது. எனவே, பயம் மிகவும் அவசியமானது. அதீத பயமும், ஃபோபியாக்களும் தான் பிரச்னையே!

எது எப்படியோ, கட்டுரையை ஆரம்பித்த இடத்திலேயே முடித்துவிடுவோம். பேட்மேன் என்ற கற்பனை சூப்பர்ஹீரோ இரவில் நகரைக் காப்பவன். பேட் எனப்படும் வௌவால் உருவத்தை இவன் தேர்ந்தெடுக்க காரணம் என்ன தெரியுமா? சிறு வயதிலிருந்தே இவனுக்கு வௌவால் என்றால் மிகவும் பயம், அதிலிருந்து விடுபட இவன் தன்னை வௌவாலாகவே மாற்றிக்கொள்கிறான். ஊரையே காக்கிறான். அப்படி நம் பயம் என்னவென்று கண்டறிந்து அதைக் கடந்து செல்ல முயற்சி செய்வோம்!

Thanks to Vikatan! 

ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் பு...