Total Pageviews

Wednesday, May 29, 2013

மனக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை தத்துவம்


 


பிறரை தண்டனைக்குள்ளாக்காதீர்கள் !

நீங்களும் தண்டிக்கப்படமாட்டீர்க்ள் !.

பிறரை மன்னியுங்கள்!

நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள் !

உன்னிடத்தில் / உங்களிடத்தில் உதவி கேட்கின்ற எவருக்கும் உங்களிடம் உள்ளதைக் கொடுங்கள்!.

உன்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்பவனிடம் அதைத் திரும்பக் கேட்காதீர்கள்!.

ஏனெனில்,எதுஎடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே அதாவது இந்த பூஉலகில் இருந்தேஎடுக்க ப்பட்டது. எது இன்று உன்னுடையதாக இருக்கின்றதோ, அது நாளை வேறொருவருடையதாகின்றது. எது எடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எது கொடுக்கப்பட்டதோ அதுவும் இங்கிருந்தே கொடுக்கப்பட்டது. இந்த உண்மை தெரியாமல்,  இது என்னுடையது,   இது அவனுடையது என்பது அறியாமையே !

வாழ்க்கை என்றல் என்ன?

வாழ்க்கை நம் கையில் ஒப்படைக்கப்படிருக்கிறதா?  அல்லது அது விதிப்படி நடக்குமா?

நீங்கள் போகும் பாதையில் ஒரு கல் கிடக்கிறது நீங்கள் அதை காலால் உதைத்தால் உங்களுக்கு அடிபட்டு துன்பம் வந்துவிடும் அந்த கல்லை எடுத்து ஒரு சிற்பம் செய்தீர்களானால் அந்த சிற்பத்தின் அழகு உங்கள்ளுக்கு மட்டுமல்லாமல் அதை காண்கிற அனைவருக்கும் இன்பத்தை ஏற்படுத்தும்.

வாழ்க்கையும் அந்த கல் போன்றதே நீங்கள் அதனுடன் தொடர்புகொல்லாதவரை அது விதிப்படியே நடக்கும் நீங்கள் வாழ்க்கை என்னும் கல்லின் மீது மேற்கொள்ளும் வினையின் தன்மையை பொறுத்தே உங்கள் வாழ்க்கை மாறுபடும் நீங்கள் மேற்கொள்ளும் வினையின் தன்மை நன்மையாக இருக்குமாயின் உங்களுக்கு நன்மை ஏற்படும் தீமையாக இருக்குமாயின் தீமை ஏற்படும்.

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் மாசற்றவராக எதிலும்  எங்கேயும்  நிறைந்து  இருக்கிறார். யார் ஒருவர் நல்ல ஓழுகத்துடனும், பிறருக்கு கனவிலும் துன்பம் இழைகாதிருப்பவரும், தூய நெறி, நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவரும், தான,  தர்ம, வழிகளைப்பின்பற்றுபவருமே  கடவுளாகிறார். உங்களை சுற்றியுள்ள உலகை கூர்ந்து கவனியுங்கள் பூமியில் பிறக்கிற எந்த ஒரு சிசுவும் மாசற்றுத்தான் பிறக்கிறது அதற்க்கு ஏதும் செய்ய தெரியாது பொய்சொல்ல தெரியாது தவறு என்பதே அந்த சிசுவிடம் இருக்காது ஏனெனில் கடவுள் மாசற்றவர் அவருடைய படைப்பும் அவ்வாறே இருக்கும்,

பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

கொலை, களவு, செய்யாதிருப்பாயாக.

விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.

உன் தாயையும் தகப்பனையும் கணம் பண்ணுவாயாக.

உன்னிடத்தில் உள்ளவற்றை பாவப்பட்டவருக்கு கொடுப்பாயாக்!

நீங்கள் பிறரிடத்தில் என்ன  எதிர் பார்க்கின்றீகளோ  அதனையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள்.

பிற உயர்களிடத்தில் அன்பாய் இரு.

இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல. ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒரு தவறும் இல்லை. இவை நம்மை வழிநடத்த நாம் மாடுகள் போல் இயந்திரதனமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.

நமது கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும். மனம் சிறந்த சேவையாற்றும் உறுப்பு நுட்பமான வேலைதிறன் கொண்டது. ஆனால் மிக மோசமான முதலாளி. நம் அனைவருடைய இன்றைய முதலாளி நம் மனமே. மனதை நாம் சரியான வழியில் பயன்படுத்த தவறிவிட்டோம்.

நம் மனதிலிருந்து தான் தோன்றித்தனமான எண்ணங்களும் சிந்தனைகளும் வெளிவருவதற்கு நாம் காரணமாகிவிட்டோம். இன்று இவற்றை இல்லாது செய்வது பெரும் பணியாக உள்ளது.

நம் மனம் எப்பொழுது தான் தோன்றித்தனமாக சிந்தனைகளை வெளிவிடுவதை நிறுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றதோ அன்று நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்பதை உத்தரவாதப்படுத்தலாம். நம் மனதை முதலாளி பதவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால் நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் இல்லாமல் போய்விடும் என ஓசோ கூறுகின்றார். ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும். மனதிற்காக நாம் வாழவில்லை.Monday, May 27, 2013

பிரச்னைகள்
பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும். 

ஆபீஸில் பிரச்னையா?

 பொது வேலைக்கு சென்ற இடத்தில் பிரச்னையா? 

அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். 

அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக வீட்டுக்குள் நுழையுங்கள். 

இரவு நல்லபடி கழியும். 

அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

மதுவை ஒழித்து, மக்களைக் காப்போம்மக்களின் வாழ்க்கையைச் சிதைத்து, சீரழித்து, சின்னாபின்னமாக்குகின்ற மது என்ற கொடிய அரக்கனை, எமனை, விஷத்தை, தமிழ்நாட்டிலிருந்து விரட்ட வேண்டும்.


தமிழ்நாட்டின் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில்  உள்ள திருமணமான ஆண்களில் பெரும்பாலானவர்கள் இப்போது மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். குடும்பங்களின் மீது பற்றின்றி, தன் பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் குறித்த சிந்தனை இன்றி, வேலைக்குச் செல்வது – கிடைக்கும் பணத்தில் குடிப்பது – ஒன்றையே கடமையாகக் கொண்டுள்ளனர். 

கூலி வேலையில்லாத நாள்களில், "நேற்று கொடுத்த கூலியைக் கொடு’ என்று மனைவியிடம் தகராறு செய்து, கொடுக்காவிட்டால் அடித்து உதைத்து வாங்கிச் செல்கின்றனர்.

பெண்களின் நிலையைக் கூறிடவே மனம் துடிக்கிறது. வருகின்ற சொற்ப 
வருமானத்தில் தினத் தண்டல், வாரத் தண்டல், மகளிர் குழுக் கடன், குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, வயிற்றுப் பசிக்கு என்று செலவுகளை மிகுந்த துயரத்தோடு அங்குமிங்கும் கடன் வாங்கிச் சமாளிக்கிறார்கள். குடிகாரக் கணவனை மாற்றவும் முடியாமல் திருத்தவும் முடியாமல் தவிக்கிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அடி – உதைகளைத் தாங்கிக்கொண்டு குடிகாரக் கணவனோடு வாழ்கிறார்கள்.


பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் கதை இதுவென்றால், "நாளைய தமிழகம்’ என்று வர்ணிக்கப்படும் இளைஞர்களின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். ஹான்ஸ், பான்பராக், மாவா போன்ற போதைப் பொருள்களையும் சேர்த்தே பயன்படுத்துகின்றனர்.

இவர்களைப் பார்த்து இவர்களுடைய தம்பிமார்களான பள்ளிக்கூட மாணவர்களும் பீர், சிகரெட் ஆகியவற்றைப் பழகிக்கொண்டுவருகிறார்கள்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்தாலும், மரணம் ஏற்படுத்தும் விபத்துகள் மட்டுமே பதிவாகின்றன. அதிலும் குடிபோதை விஷயம் முக்கியப்படுத்தப்படுவதில்லை. எனவே இதன் தீமை வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது. குடிகாரர்கள் தங்களுடைய குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், தாங்கள் பணி புரியும் இடத்திலும் பஸ், ரயில் போன்ற பொது இடங்களிலும்கூட வம்புச் சண்டை இழுத்து பொது அமைதியைக் குலைக்கிறார்கள்.குடிகாரர்கள் புற்றுநோய், இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர நோய்களுக்கும் ஆளாகிவருகின்றனர். சாராய வருமானத்தைவிட அதிக அளவு பொது சுகாதாரத்துக்குச் செலவிடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

குடும்பங்களின் வருமானம் குறைந்து வறிய நிலை நோக்கி வேகமாகச் செல்லத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்ற நினைக்கும் முதல்வரின் கனவுக்கு இது பெருத்த இடையூறாகவே அமையும் என்பதால் மதுவை ஒழிக்கும் முயற்சியில் முதல்வர்  உடனே இறங்க வேண்டும்.

தமிழக முதல்வர் ஏழைகளிடத்தில் பாசமும், சட்டத்தை மீறுகிறவர்களிடத்தில் கண்டிப்பும் காட்டும் பண்புள்ளவர். எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் கடத்துவதையும் காவல்துறை உதவியுடன் தடுத்து தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதே மதுவை எதிர்ப்பவர்களின் வேண்டுகோள்.

நன்றி-தினமணிSunday, May 12, 2013

சிந்தனைத் துளிகளில் சில

செல்வத்தை வைத்துச் சென்ற
தகப்பனை விடத் தொழில் கற்ப்பித்துச் சென்ற
தகப்பனே தன் மக்களூக்கு மிகுந்த பாதுகாப்பு
அளித்தவன்.

 

உழைத்து சம்பாதித்த பொருளுக்கு
எப்போதுமே மதிப்பு மிகுதி.


அமைதி இல்லாத இடத்தில் இன்பம் இருக்க
முடியாது.

முன்று முறை முகத்தில் அடித்தால்
புத்தருக்கும் கோபம் வந்தே தீரும்.


முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை செய்!
முடிந்த வகைகளில் எல்லாம் நன்மை செய்!
முடிந்த இடங்களில் எல்லாம் நன்மை செய்!
முடிந்த மனிதருக்கு எல்லாம் நன்மை செய்!
உனக்கு எல்லா வழிகளிலும் நன்மை வந்து சேரும்!.


பிறரை பாரட்டுங்கள்  - பாரட்டு கிடைக்கும்
பிறரை  மதியுங்கள்    - மதிப்பு கிடைக்கும்
பிறருக்கு அன்பு செலுத்துங்கள் - அன்பு தேடி வரும்
இவை ஒரு வழிப்பாதைகள் அல்ல இரு வழி பாதைகள்

அன்பினில் வணிகத்திற்க்கு இடமில்லை.
வணிகத்தில் அன்பிற்க்கு  இடமில்லை.Saturday, May 11, 2013

டீ , காபிக்கு பேப்பர் கப்'களை பயன்படுத்த வேண்டாம்!


ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் தினமும் இரவில் வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.

அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.

இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

Thanks to Mr.Jeyakumar, Bangalore

கார் வாங்கலாம் வாங்க !மிடில் கிளாஸ் மக்களின் கனவுகளில், முதல் இடத்தில் இருப்பது சொந்த வீடும், காரும்தான். ஆனால், தேவைக்கும் பயன்பாட்டுக்கும் சரியான கார் எது என்பதைத் தேர்ந்தெடுப்பதில், பலருக்கும் குழப்பம் துவங்குகிறது. பெரிய எஸ்யூவி காரை வாங்க வேண்டியவர்கள், மாருதி ஈக்கோ போன்ற காரை வாங்கிவிட்டு விழி பிதுங்குவதும், ஹூண்டாய் ஐ10 வாங்க வேண்டியவர்கள், மஹிந்திரா ஸைலோ வாங்கிவிட்டுப் புலம்புவதும் வாடிக்கை. உங்களுக்கான சரியான காரைத் தேர்ந்தெடுப்பதின் மூலம், பல லட்சங்கள் விரயமாவதைத் தடுக்க முடியும். உங்களுக்கான கார் எது?

 

முதலில், கார் வாங்க முடிவெடுத்தவுடன் உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து ஒரு பேப்பரில் எல்லோருடைய தேவைகளையும் எழுதுங்கள்.காரில் அடிக்கடி நிறையப் பொருட்களுடன் பயணிக்க வேண்டியது இருக்குமா? அப்படி என்றால், எவ்வளவு பெரிய டிக்கி வேண்டும்? அல்லது வீக் எண்ட் ஷாப்பிங் மட்டும்தானா?நீங்கள் அதிகம் பயணிப்பது, முன் சீட்டிலா அல்லது பின் சீட்டிலா? அப்பா, அம்மா போன்ற வயதானவர்கள் அதிகம் பயணிப்பார்களா அல்லது சின்னக் குழந்தைகள் மட்டும்தான் பின் பக்க இருக்கைகளில் உட்கார்வார்களா?தினமும் எவ்வளவு தூரம் பயணிப்பீர்கள்? நகருக்குள் அதிகம் பயணிப்பவரா அல்லது வேலை அல்லது தொழில் நிமித்தம் அடிக்கடி காரில் வெளியூர்களுக்குப் பயணம் செய்ய வேண்டியது இருக்குமா?பெட்ரோல் காரா, டீசல் காரா? இப்படி பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டு, அதற்கான பதில்களை அந்தத் தாளில் எழுதுங்கள்.பேப்பரில் எழுதி முடித்த உடனே, புதிய காரில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் குடும்பத்தினர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்துவிடும். உங்கள் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்யும் கார்கள் எவையெல்லாம் இருக்கின்றன என்று தேடுங்கள்.  அடுத்து, காரின் பட்ஜெட்டை முடிவு செய்யுங்கள்.பட்ஜெட்உங்கள் பட்ஜெட் என்ன? அதில் நீங்கள் பட்டியலிட்ட வசதிகள் கொண்ட கார் எதெல்லாம் மார்க்கெட்டில் இருக்கின்றன என்று பாருங்கள். நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்திருக்கும் பட்ஜெட்டைவிட, நீங்கள் வாங்கும் கார் ஒரு லட்சம் ரூபாய் முன்னும் பின்னும் இருக்கலாமே தவிர, அதற்கு மேல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். காரணம், கார் வாங்குவதோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. அதற்குப் பிறகு எரிபொருள் செலவு, மெயின்டனன்ஸ், சர்வீஸ் செலவுகள் இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.புது காரா, பழைய காரா?பட்ஜெட் முடிவானதும் புதிய காரா அல்லது பழைய காரா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால், நீங்கள் எதிர்பார்ப்பது எஸ்யூவி. ஆனால், உங்கள் கையில் அவ்வளவு பணம் இல்லை என்றால், பழைய காரை வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை.பெட்ரோலா, டீசலா?'பெட்ரோல் கார் என்றால் மெயின்டனன்ஸ் குறைவு, டீசல் கார் என்றால் அதிகச் செலவு வைக்கும்’ என்பதெல்லாம் பழைய புராணம். காமென் ரெயில் டீசல் இன்ஜின், டர்போ சார்ஜர் என பல நவீனத் தொழில்நுட்பங்களுடன் பெட்ரோல் இன்ஜினை மிஞ்சும் அளவுக்கு டீசல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதனால், டீசல் இன்ஜினின் மெயின்டனன்ஸ் குறித்து கவலைப்பட வேண்டாம். அதே சமயம், பெட்ரோல் மாடலைவிட, டீசல் மாடலின் விலை சுமார் 1 லட்சம் ரூபாய் அதிகம் என்பது நினைவிருக்கட்டும். அதிக தூரம் பயணிக்க மாட்டோம் என்பவர்கள், டீசல் கார் வாங்க வேண்டிய தேவையே இல்லை. டீசல் காரை வாங்கும் போது கூடுதலாகக் கொடுக்கும் 1 லட்சம் ரூபாய்க்கு, நீங்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பெட்ரோல் காரில், எரிபொருள் செலவைச் சரிக்கட்டலாம்.

 

என்னென்ன வசதிகள் வேண்டும்?மியூசிக் சிஸ்டம், ஏ.சி, பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் போன்ற வசதிகள் ஒரு காருக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பாதுகாப்பு வசதிகளும் முக்கியம். காற்றுப் பை, ஏபிஎஸ் பிரேக் வசதிகள் கொண்ட காரை வாங்குவது பாதுகாப்பானது. 50,000 ரூபாய் கூடுதலாகப் பணம் செலுத்த வேண் டும் என்பதற்காக, பாதுகாப்பு வசதிகளைப் பின்னுக்குத் தள்ளக் கூடாது.நீங்கள் வாங்குவது புது காரா?உங்களுக்கான காரைத் தேர்ந்தெடுத்ததும், அதில் புது மாடல் எதுவும் வர இருக்கிறதா அல்லது இந்த காரையே கம்பெனி விரைவில் நிறுத்தும் எண்ணத்தில் இருக்கிறதா என்பதைத் தீர ஆராய்ந்துவிட்டு முடிவெடுங்கள். உதாரணத்துக்கு, இப்போது ஹோண்டா சிட்டி காரை வாங்குவது லாபகரமான விஷயம் இல்லை. காரணம், புதிய மாடல் ஹோண்டா சிட்டி, இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் டீசல் இன்ஜினுடனேயே வெளிவர இருக்கிறது. இந்த நேரத்தில், புதிதாக ஹோண்டா சிட்டி வாங்குவது லாபகரமான விஷயமாக இருக்காது.கார் வாங்க சிறந்த நேரம்!கார் மார்க்கெட்டைப் பொறுத்தவரை மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் பிசினஸ் டல் மாதங்கள். இந்த மாதங்களில் அதிக டிஸ்கவுன்ட் கிடைக்கும் என்பதால், இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், வாரத்தின் மூன்றாவது, நான்காவது வாரங்களில் டீலர்ஷிப்பை அணுகுவது நல்லது. எப்போதுமே டீலர்களிடம் சேல்ஸ் டார்கெட் இருக்கும். மாதத்தின் கடைசி வாரத்தில் டார்கெட்டை முடிப்பதற்காக டிஸ்கவுன்ட், ஆக்சஸரீஸ் சலுகைகள் என வாரி வழங்குவார்கள். அதனால், மூன்றாவது, நான்காவது வாரத்தில் டீலர்ஷிப்பை நோக்கிப் படையெடுப்பது நல்லது.டெஸ்ட் டிரைவ் பண்ணுங்க!நீங்கள் ஓட்டுவதற்கு எந்த கார் சிறந்த காராக இருக்கிறது, உங்களுக்கு கியர் பாக்ஸ் பயன்படுத்த எளிதாக இருக்கிறதா? உங்கள் குடும்பத்தினர் காருக்குள் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடிகிறதா? டிக்கியில் பொருட்கள் வைக்க அதிக இடம் இருக்கிறதா? என்றெல்லாம் பார்க்க, காரை டெஸ்ட் செய்து விட்டுத்தான் வாங்க வேண்டும்.டெஸ்ட் டிரைவின் போது உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களை அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் கருத்துகளும் முக்கியமானதாக இருக்கும். பல விஷயங்களை அவர்கள் வேறு கோணத்தோடு அணுகுவார்கள். அவர்களுக்கு கார்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.கார் லோன்கார் வாங்குபவர்களில் 75 சதவிகிதம் பேர் லோன் மூலம்தான் கார் வாங்குகிறார்கள். தனிப்பட்ட முறையில் கார் வாங்க வங்கிகளை அணுகலாம். ஆனால், நீங்கள் உங்கள் கம்பெனிக்காக வாங்குகிறீர்கள் என்றால், இப்போது லீஸிங் முறையில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அர்வால், லீஸ் பிளான், ஒரிக்ஸ் போன்ற கம்பெனிகள் கார் லீஸிங்கில் ஈடுபட்டு வருகின்றன. இதில், அர்வால் எனும் நிறுவனம் உலகப் புகழ் பெற்ற சர்வதேச நிறுவனமாகும்.கார் லீசிங் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, தனி நபர் லோன் பற்றிப் பார்ப்போம்.கார் வாங்குவதற்கான முழுத் தொகையையும் கடனாகத் தர மாட்டார்கள். காரின் வகையைப் (ஹேட்ச்பேக், செடான்...) பொறுத்து காரின் விலையில் 15 - 30 சதவிகிதத் தொகையை முன்பணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஒருவர் நான்கு லட்ச ரூபாய் விலைகொண்ட ஹூண்டாய் ஐ10 காரை வாங்குகிறார் என்றால், அவர் கிட்டத்தட்ட 80,000 - 1 லட்சம் ரூபாயை முன்பணமாகச் செலுத்த வேண்டும். மீதித் தொகைக்குத்தான் கடன் கொடுப்பார்கள்.பொதுவாக, முன் பணத்தை (Down Payment) எவ்வளவு அதிகமாகச் செலுத்த முடியுமோ, அவ்வளவு அதிகமாகச் செலுத்திவிடுவது நல்லது. வாங்கும் கடனை 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம். கடன் திருப்பிச் செலுத்தும் ஆண்டுகளை எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குக் குறைத்துக்கொள்வது நல்லது. அப்போதுதான் நீங்கள் கட்டும் வட்டித் தொகை குறைவாக இருக்கும்.எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதைத் தீர விசாரியுங்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். தனியார் வங்கிகளில் உடனடியாக கடனுக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஆனால், சில இடங்களில் அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்படும். கடன் வாங்கும்போதே மறைமுகக் கட்டணங்கள் (Hidden Charges)  எதுவும் இருக்கிறதா என்பதை நன்கு விசாரித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.பழைய கார்களுக்கும் கடன் தரப்படுகிறது. ஆனால், இதற்கான வட்டி விகிதம் புதிய கார்களைவிட 2 முதல் 4 சதவிகிதம் வரை அதிமாக இருக்கும். அதேபோல, மிகப் பழைய கார்களாக இருந்தால், அதற்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது. அதாவது, பொதுவாக ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கார்களாக இருந்தால், கடன் கிடைக்காது.லீஸிங்கார் லீஸிங் முறையில் முன்பணம் அதாவது, டவுன் பேமென்ட் கிடையாது. 5 லட்சம் ரூபாய் காருக்கு, நீங்கள் 1 லட்சம் ரூபாய் முன் பணம் கட்டி 80 சதவிகிதத் தொகைக்கு 3 வருடங்களுக்கு லோனில் கார் வாங்குகிறீர்கள் என்றால், 12,888 ரூபாய் மாதந்தோறும் இ.எம்.ஐ (வட்டி விகிதம் 10.5 சதவிகிதம்) கட்டுவீர்கள். அதுவே லீஸ் என்றால், முன் பணம் கட்ட வேண்டாம். அதற்குப் பதில் 3 வருடங்களுக்கு, மாதந்தோறும் 16,892 ரூபாய் இ.எம்.ஐ(வட்டி விகிதம் 14 சதவிகிதம்) கட்டுவீர்கள். 3 வருட முடிவில், கம்பெனி பெயரில் இருந்து உங்கள் பெயருக்கு காரை மாற்றிக் கொள்ள நீங்கள் இ.எம்.ஐ தொகையில் 10 சதவீதம் பணத்தைக் கட்ட வேண் டும். இதில் 5 லட்சம் ரூபாய் கார் என்றால், 3 வருட முடிவில் சுமார் 62,000 ரூபாய் செலுத்தினால், கார் உங்கள் கைக்கு கிடைத்துவிடும்.இப்போது நீங்கள் இ.எம்.ஐ திட்டத்தில் கார் வாங்கியிருந்தால், முன் பணம் 1 லட்சம் மற்றும் 3 வருட இ.எம்.ஐ சேர்த்து 5,63,975 ரூபாய் செலவு செய்திருப்பீர்கள். இதே லீஸ் என்றால் 6,08,103 ரூபாய் செலவு செய்திருப்பீர்கள்.நீங்கள் மாதாமாதம் கட்டிய இ.எம்.ஐ தொகையை வருமான வரியில் கழித்துக் கொள்ளலாம் என்பதுதான் லீஸிங்கின் பெரிய ப்ளஸ். கம்பெனிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

 

ஆனால், லீஸிங்கில் வாங்குவதில் சில குறைகளும் உண்டு. லீஸ் காலகட்டத்தில் கார் இருக்கும்போது, காரில் நீங்கள் எந்த மாடிஃபிகேஷன் அதாவது தனியாக மியூஸிக் சிஸ்டம் வாங்குவது, அலாய் வீல் மாட்டுவது என எதையும் செய்ய முடியாது. அதேபோல், லீஸ் காலம் முடியும் வரை உங்கள் பெயரில் கார் இருக்காது.கார் எக்ஸ்சேஞ்ச்நீங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் காரைக் கொடுத்துவிட்டு, புதிதாக கார் வாங்குகிறீர்கள் என்றால், புது காருக்கான டீல் முடியாமல் பழைய காரைப் பற்றி வாய் திறக்காதீர்கள். உங்கள் புதிய காருக்கான சலுகைகள் எல்லாம் இறுதியான பிறகு, உங்கள் பழைய காரை எவ்வளவு விலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்று கேட்டு, அதன் பிறகு அந்த டீலை முடியுங்கள். ஒரே சமயத்தில் இரண்டையும் சொன்னால், ''உங்கள் பழைய கார் இந்த ரேட்டுக்குப் போகாது சார். உங்களுக்காகத்தான் இவ்வளவு விலைக்கு எடுத்துக்குறோம். புது காரில் பெரிதாக எந்த டிஸ்கவுன்ட்டையும் எதிர்பார்க்காதீர்கள்'' என்று சொல்லி சேல்ஸ்மேன்கள் காது குத்தப் பார்ப்பார்கள். உஷார்!ரிஜிஸ்ட்ரேஷன்காரை ரிஜிஸ்டர் செய்வதற்கு முன்பு, உங்கள் காரை ஒருமுறை டீலர்ஷிப்பிலேயே நேரில் போய் பார்த்துவிடுவது நல்லது. ஸ்க்ராட்ச் இருக்கிறதா அல்லது எவ்வளவு கி.மீ கார் ஓடியிருக்கிறது என்று பார்ப்பது மிகவும் முக்கியம். காரின் ஓடோ மீட்டர் ரீடிங் 50 கி.மீ-க்குள் இருந்தால் ஓகே. அதற்கு மேல் ஓடியிருந்தால், அந்த காரை வேறு வேலைக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். அதிக கி.மீ ஓடியிருந்தால், அதிக டிஸ்கவுன்ட் கேட்டு வாங்கலாம்.புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் லாபமா?சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆடி, பிஎம்டபிள்யூ, வால்வோ உள்ளிட்ட பல விலை உயர்ந்த கார்கள் புதுச்சேரி நம்பர் பிளேட்டுடன் வலம் வருவதைப் பார்க்கலாம். புதுச்சேரியில் ரிஜிஸ்டர் செய்வதற்குக் காரணம் குறைந்த வரி என்பதுதான். தமிழகத்தில் 10 லட்ச ரூபாய்க்கும் அதிக விலைகொண்ட கார்களுக்கு 20 சதவிகிதம் சாலை வரி. ஆனால், புதுச்சேரியில் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கார்களுக்கு 55,000 ரூபாய் மட்டுமே வரி.மேலும், 'புதுச்சேரியில் காரை ரிஜிஸ்டர் செய்ய தற்காலிக முகவரி இருந்தாலே போதுமானது’ என்ற விதிமுறை முன்பு இருந்தது. அதனால் ஏஜென்ட்டுகள், கார் டீலர்களே அவர்களது முகவரியை தற்காலிக முகவரியாகவும், கார் உரிமையாளர்களின் முகவரியை நிரந்தர முகவரியாகவும் போட்டு, ரிஜிஸ்டர் செய்து தருவார்கள். இதனால், பெரிய கார்களை புதுச்சேரியில் ரிஜிஸ்டர் செய்வதால், பல லட்சம் ரூபாய் லாபம் பார்த்து வந்தார்கள்.புதுச்சேரியின் இந்த விதிமுறைக்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், காரை ரிஜிஸ்டர் செய்ய, புதுச்சேரியை நிரந்தர முகவரியாகக் கொண்ட வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு அல்லது பான் கார்டு உள்ளிட்ட முகவரிச் சான்றிதழ்கள் வேண்டும் என அறிவித்திருக்கிறது புதுச்சேரி அரசு.அதனால், இப்போது புதுச்சேரிக்கு காரைக் கொண்டுசெல்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதோடு, இது சட்டப்படியும் தவறு!இரவில் டெலிவரி வேண்டாம்!காரை டெலிவரி எடுக்கும்போது, பகல் நேரத்திலேயே டெலிவரி எடுங்கள். அப்போதுதான் காரில் சிராய்ப்புகள் ஏதும் இருக்கிறதா, நீங்கள் கேட்ட ஆக்சஸரீஸ் அனைத்தும் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்று பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். ''ஃப்ளோர் மேட் இப்போது இல்லை. அடுத்த வாரம் வாங்க சார். நீங்கள் கேட்ட மியூசிக் சிஸ்டம் இல்லை. அதற்குப் பதில் இதைப் பொருத்தி இருக்கிறோம்'' என்று சேல்ஸ்மேன்கள் சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மியூசிக் சிஸ்டம் அல்லது அலாய் வீல் மாறியிருந்தால், அதற்கு நீங்கள் டிஸ்கவுன்ட் கேட்கலாம்.காரை நீங்கள் பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள் என்பதால், இதைக் கேட்கலாமா? இதைக் கேட்டால் ரொம்பவும் கேவலமாக நினைத்து விடுவார்கள் என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். காரை வாங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. அந்த காரோடு அடுத்த 10 வருடங்கள் வாழ இருக்கிறீர்கள் என்பதால், காரை வாங்கும்போது மிகவும் கவனமாக இருங்கள்.ஆல் தி பெஸ்ட்!- சார்லஸ்

Thanks to Motor VikatanThursday, May 9, 2013

நற்சிந்தனைகள்


சிந்தனைக்கு சில...!
 
நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்

பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

- சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக் கொடுப்பவ ரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.

நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.

நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

முழுமையானவன் இன்னும் பிறக்கவில்லை; இனியும் பிறக்க மாட்டான்.

பரபரத்து ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்.

எல்லோரையும் நேசிப்பது சிரமம்தான்; ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை.

விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.

யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒருமுறை முடிவெடுங்கள்.

அச்சம்தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம்.

நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக எவருடனும் விவாதிப்பது சிறப்பாகும்.

உண்மை புறப்பட ஆரம்பிக்கும்முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

உண்மை தனியாகச் செல்லும்; பொய்க்குத்தான் துணை வேண்டும்

வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்கட்டும்.

தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாறிப் போகிறான்.

உலகம் ஒரு நாடக மேடை; ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்; அப்போதுதான் முன்னேற முடியும்.அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்றவனாவான்.

தோல்வி ஏற்படுவது, "அடுத்தச் செயலைக் கவனமாகச் செய்" என்பதற்கான எச்சரிக்கை.

பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயல வேண்டும்.

கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.உடல் எடை குறைய - பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை. . .
1 எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

2 தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்

3 பட்டினிக் கிடத்தல் கூடாது

4 அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது ௦

5 உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்

6 இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

7 எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

8 முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்

9 கூல் ட்ரிங்ஸ்சுக்கு 'தடா' விதிக்க வேண்டும்.

10. தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-லிருந்து 4 வரை)

11 இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.

12.   2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

13. கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

14. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்துங்கள்.

15. அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.

உணவுப் பழக்கத்தை சரி விகிதமாக்கி உண்டுவாழ்வதால் உடல் பருமன் குறையும்.இரண்டு விசயத்துக்கு கவனம் கொடுங்கள்.
ஒன்று உணவு, மற்றொன்று உடற்பயிற்சி.

உணவு. . .

காலையில் கண்டிப்பாகப் பசியாறுங்கள்.
அதன்பின் மதியம்வரை எதுவும் சாப்பிட வேணடாம்.

மதியம் நல்ல சாப்பாடு. பாதி சோறு, கோழி அல்லது மீன் என்று நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுங்கள். அதன் பின் இரவு வரை எதுவும் சாப்பிட வேணடாம்.


இரவு உணவாக, சப்பாத்தி, ரொட்டி என்று சாப்பிடுங்கள். அதன் பிறகு எதுவும் உண்ண வேண்டாம்.

இந்த சாப்பாடுகளைத் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

அடுத்து, குடிக்கும் பானம். வெறும் ஆறிய தண்ணீர்தான்.
ஆறிய தண்ணீரைத் தவிர வேறு எதுவும் குடிக்ககாமல் இருக்க வேண்டும்

தேநீர், காப்பி, என்று சூடான பானம் முதல், ஆரஞ்சு, பெப்சி, கோலா போன்ற குளிர் பானம் வரை ஏதும் அருந்த வேண்டாம்.

உடற்பயிற்சி. . .

உடற்பயிற்சி என்று தனியாக செய்வது கஷ்டம்தான். அதனால், தனியாக உடற்பயிற்சி என்று எதுவும் செய்யாவிடினும் பரவாயில்லை.

அன்றாடம் நடைப் பயிற்சி மேற்க்கொள்ளூங்கள்.

மார்க்கெட் போக வேண்டுமா?  காரை ஒரு 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் நிறுத்த்ம் செய்து விட்டு நடந்து செல்லுங்கள்.

வேறு எங்காவது போக  வேண்டுமா? கடையின் வாசலில் கார் நிறுத்த்ம் செய்ய இடமிருந்தாலும், அதை பயன்படுத்தாதிர்கள். தூரமாக நிறுத்த்ம் செய்து விட்டு நடந்து செல்லுங்கள்.

படி ஏறும் வேலையே இல்லாவிட்டாலும், ப்டிக்க்ட்டுக்கள் மூலமாக ஏறி இற்ங்கிச் செல்லுங்கள்.

குப்பை போடணுமா? வயிறு அழுந்த குனிந்து குப்பையை கொட்டுங்கள்.

வீடு கூட்டணுமா? வயிறு அழுந்த குனிந்து கூட்டுங்கள்.

மெனக்கெட்டு, அக்கறை எடுத்து, மிகவும் முக்கியமாக விருப்பப்பட்டு, வீட்டு வேலைகளை அன்றாடம் செய்யுங்கள்.

மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் மிகவும் சுலபமான வழிமுறைகள். எந்த செலவும் இல்லை.

ஒரு மாதம் செய்து பாருங்கள். உடல் எடை வித்தியாசம் தெரியும்.Wednesday, May 8, 2013

மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள்!மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவது ஒரு தொற்றுநோய் அல்ல. இது எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால், வயது அதிகரிக்கும் போது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதற்கான காரணங்கள் சரியாக தெரியவில்லை. பரம்பரை மரபணு, கதிர்வீச்சு, புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என சில காரணங்களால் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.


மின் கம்பிகளுக்கு அருகே வசித்தல், அலைப்பேசிகளை அதிகமாக பயன்படுத்துவது, ஆஸ்பிரின் பயன்பாடு ஆகியவற்றுக்கும் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கும் தொடர்பு உண்டு என்று பரவலாக பேசப்பட்டாலும், அவை நிரூபிக்கப்படாத காரணங்களாகவே இருந்து வருகின்றன. மூளை ஓடு, மூளையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அல்லது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படும் இடத்தில் இயக்கக்கோளாறு ஏற்படுவதால், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம். மேலும் வேறு சில அறிகுறிகள் கொண்டும், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை அறியலாம். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தலைவலி
அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் தலைவலி பொதுவாக மந்தமாகவும், நிலையானதாகவும், அவ்வப்போது துடிப்பு உடையதாகவும் இருக்கிறது. இயல்பாக கடுமையான தலைவலிகள் எதுவும் இருக்காது. இருமல், தும்மல், குனிதல் மற்றும் கடுமையான வேலையை செய்தல் ஆகிய சூழ்நிலைகளில் இந்த தலைவலி அதிகரிக்கும். இவை அனைத்தும் மூளையில் அழுத்தத்தை அதிகரிக்கும். சில சமயங்களில் தலைவலிகள் இரவில் அதிகரித்து, தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளவும் செய்யும்.

காய்ச்சல் மற்றும் குமட்டல் அதிகரிக்கும் அழுத்தம் காய்ச்சலை ஏற்படுத்தினால், பகல்பொழுதில் அது இன்னும் மோசம் அடையும். மேலம் திடீரென்று தோரணையை மாற்றினால், அது இன்னும் மோசம் அடையும். உதாரணமாக உட்கார்தல், படுத்தல் ஆகிய நிலையில் இருந்து, நிற்கும் போது காய்ச்சல் அதிகரிக்கும்.

வலிப்பு நோய்கள் மூலையில் இரத்தக்கட்டு இருப்பதற்கான இயல்பான அறிகுறி. கைகள், கால்கள் அல்லது முழு உடலையும் உதரும் காக்காய் வலிப்பு நோயும் சிலருக்கு ஏற்படலாம். சில சமயங்களில் இதனால் சுயநினைவு இழப்பும் ஏற்படலாம். வலிப்பு என்பது ஒரு அச்சுறுத்தும் அனுபவமாக இருக்கலாம். அப்படி ஒரு அனுபவம் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடி, பரிசோதித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவும். மூலையில் இரத்தக்கட்டு இருப்பது தவிற மற்ற மருத்துவ காரணங்களினாலும் வலிப்பு நோய் உண்டாகலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

தூக்க கலக்கமும் ஒரு அறிகுறி ஆகும். மண்டை ஓட்டின் மீது அழுத்தம் ஏற்படுவதால் இது நிகழலாம். மேலும் இயல்பாக தூங்காத நேரங்களிலும், பகலிலும் அதிகமாக தூங்குவதை உணர்வீர்கள். இங்கு குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தவிர பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, மங்கலான பார்வை, மிதக்கும் பொருட்கள் மற்றும் சுரங்கப்பார்வை ஆகிய அறிகுறிகளையும் கொடுக்கலாம். அது குழப்பத்தை ஏற்படுத்தி, உடல் சமன்பாட்டை பாதிக்கலாம்.

பயம் அல்லது தீவிர பரீட்சையம், விநோதமான வாசனைகள் அல்லது கருமையடைதல், பேச்சு மற்றும் நினைவு சிரமங்கள்.

வார்த்தைகளை பேசவும், புரிந்துகொள்ளவும், எழுதுவதற்கும், வாசிப்பதற்கும், எளிய கணக்குகளை செய்வதிலும் பிரச்சனை ஏற்படுதல், சில அசைவுகளை ஒருங்கிணைப்பது, செல்லும் பாதையை கண்டிபிடித்தல் ஆகியவற்றில் சிரமம், உடலின் ஒரு பகுதி செயலிழந்து போதல் மற்றும் பலவீனம் அடைதல் ஆகியவையும் சில அறிகுறிகள் ஆகும்.

ஒருங்கிணைப்பு இல்லாத நடை மற்றும் உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் பலவீனம், நுகர்தல் உணர்வை இழத்தல், அவ்வப்போது பேச்சு திணறல் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படலாம்.

ஒருவர் ஆரம்பத்தில் கவனிக்காமல் வழக்கமான கண் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கண் பார்வை இழத்தல்.

ஒருங்கிணைப்பு குறைவு, திக்குவாய், நிலையின்மை, கண்கள் இயல்புக்கு மாறாக துடித்தல், குமட்டல் மற்றும் கழுத்து கடினமடைதல் போன்றவையும்.

முகம் பொலிவிழந்து, ஒரு பக்கம் புன்னகை அல்லது கண் இமை தளர்ச்சி, இரட்டை பார்வை, பேசவும் விழுங்கவும் சிரமப்படுதல், நடந்த உடன் குமட்டல் அல்லது தலைவலி என்று படிப்படியாக அறிகுறிகள் ஏற்படலாம்.

தலைவலிகள், நோய்கள் மற்றும் பார்வை மற்றும் இயக்கம் சார்ந்த பிரச்சனைகள்.

கபச்சுரப்பி பல்வேறுபட்ட ஹார்மோன்களை சுரக்கின்றது, இதனால் இந்த சுரப்பியில் இரத்தக்கட்டு ஏற்படும் போது பல்வேறு விதமான அறிகுறிகள் ஏற்படும். அவை நிலையற்ற மாதவிடாய், மலட்டுத்தன்மை, எடை அதிகரித்தல், மந்தம், உயர்ந்த இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மனநிலை தடுமாற்றம், கை கால்கள் விரிவடைதல் போன்றவை. மேலும் கபச்சுரப்பியில் ஏற்படும் இரத்தக்கட்டு, கண்களுக்கு செல்லும் நரம்புகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்தி, சுரங்கப் பார்வையை ஏற்படுத்தலாம்.

முகம் அல்லது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் பலவீனம் மூளையில் இரத்தக்கட்டு இருப்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.

சில சமயங்களில் மூளையில் ஏற்படும் இரத்தக்கட்டுகள் குணம் மற்றும் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதுவும் இரத்தக்கட்டு மூளையின் மைய அரையுருண்டையில் இருக்கும் போது, இந்த அறிகுறி ஏற்படும். குறிப்பாக இந்த சூழ்நிலை அந்த நபருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் மிகுந்த பிரச்சனையை கொடுக்கும். ஆகவே ஒரு மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை சில நேரங்களில் உதவிகரமாக இருக்கும்.

Thanks to One india.comகவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

கவலை , அச்சம் , பதற்றம் ... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது !   “ நாங்கெல்லாம் பயத்துக்கே பயங்காட்றவங்க , தெரியுமா ” என்று ச...