Total Pageviews

Saturday, April 27, 2024

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

 

எது கெடும் ?

அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும்  கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு...✍🏼🌹

Thursday, April 25, 2024

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

 

வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்.

கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரி தானா?

CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற
தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?

நல்ல வேலைக்குப் போகவா?

ஆங்கிலம் சரளமாகப் பேசவா?
குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?

ஏன்?
எதற்கு? ....என்று சிந்தித்ததுண்டா?

Pre kg 25,000 இல் தொடங்குகிறது

Lkg         40,000
Ukg         50,000
1st          60,000
2nd         70,000
3rd          80,000
4th          90,000
5th        1,00,000
6to8      1,20,000
9to10.   1,50,000
11to12  2,00,000 இலட்சம்....

ஆக மொத்தம்
9,85,000 ரூபாய்.

 
இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்பு தான்.

நகரத்தில் இருக்கின்ற பெரிய பள்ளிகளில் 20 இலட்சத்தில் இருந்து 40 இலட்சம் வரை வாங்குறாங்க.

சரி!
இதெல்லாம் இருக்கட்டும், இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளியில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்.

அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் உங்களால்.?

 ஒன்றை நினைவில் வையுங்கள்.....  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்குக் கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவழித்து?

தமிழகத்தில் 9 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வர முடியுமா?
சரி!
இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?

CBSE கல்லூரியிலா?
அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே !?

அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான், இல்லையா?

இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,
மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?

இல்லை!
இல்லவேஇல்லை!

இப்போது உங்கள் பிள்ளைகளோடு, அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?

பத்து இலட்சத்திற்கு மேல் செலவளித்துப் படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியைப் பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கவில்லையா ?

இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி, கடைசியில் ஏமாளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?

உங்கள் பிள்ளை சாதனையாளனா?

இல்லை.. பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?

உங்களுக்குத் தெரியுமா.....

 TNPSC தேர்வில் தேர்வாகும் 99 விழுக்காட்டினர் அரசுப்பள்ளியில், தமிழில் படித்தவர்கள் என்று?

TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?

 இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?

ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?

உங்களால் ஆணித்தரமாக எடுத்துக் கூற முடியுமா... CBSE , மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?

அந்தப் பள்ளிகளைப் பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ?

இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே?

அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்?

*வாருங்கள் குரல் கொடுப்போம் .....  

👍ஆங்கில வழியில் கல்வி என்ற மோகம் தற்போது அரசு பள்ளியிலும் ஆங்கில வழி கல்வி உள்ளது

 👍 வெட்டி கௌரவத்தை விடுவோம்

👍  அரசு
 பள்ளியில் படிப்போம்

👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம்

👍 அரசின் அனைத்து சலுகைகளையும் பெறுவோம்

👍 இதனால்
நம் செலவுகள் குறைக்கப்பட்டு, நம் எதிர்காலத்திற்காகபணம் சேமிக்கப்படும்.

சிந்திப்போம்! மற்றவரின் சிந்தனையைத் தூண்டுவோம்!                                                                           


🌱🌱🌱🌱🌱🌱🌱🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🎋🎋🎋🎋🎋

சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மரம் நடுவோம் இயற்கையை காப்போம்

  

 


 இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம் !


இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பலம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது,
நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பின் முடிந்த அளவிற்கு மரங்களை நடுங்கள்,

மரம் நடுவோம் இயற்கையை காப்போம்

வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம்

மர கன்றுகள் உற்பத்தியாளர்கள்,
வன துறை,
பள்ளி தாளாளர்கள்,
உயர் பதவிகளில் இருப்போர்,
பிரபலங்கள்,  
ஆன்மீக தலைவர்கள்,
அனைத்து மதங்களின் குருமார்கள்,
கிராம தலைவர்கள்,
ஊர் தலைவர்கள்,
அனைத்து கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.

அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகி கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள்

1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மர கன்றிற்கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.

இதே போல் சில வருடங்கள் செய்தால், 2030 ககுள் தமிழகமும் குளிர்ந்து போகும்

அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மர கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள்.

இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள்.

மர கன்றுகள் நடுங்கள்
அல்லது மர கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது மர கன்றுகள் நட உதவுங்கள்.

மர கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகில் உள்ள நாற்று பண்ணைகளில், நர்சரிகளில் இப்போதே முன் பதிவு செய்யுங்கள்

பொது இடங்களில் -
1,புங்கன் மரம்
2,வெப்ப மரம்
3,ஆவி மரம்
4,அரச மரம்
5,குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம்
இவைகளை வளர்ந்த கன்றுகளாக பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் புங்கன் மரத்தை ஆடு மாடுகள் கடிக்காது

நீர் வழி தடங்கள் அருகில்
1,பூவரசு மரம்
2,பனை மரம்

பாதுகாப்பு உள்ள வீட்டு அருகில் உள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம்.
1,கறிவேப்பிலை
2,லட்ச கொட்டை கீரை
3,தேக்கு
4,நாட்டு மா மரம்
5,நாட்டு பலா
6,நாட்டு அத்தி
7,குமிழ்
8,மகா கனி
9,மலை வேம்பு
போன்ற மரங்கள் நடலாம்

வழிபாட்டு தலங்கள் -
1,மர மல்லி
2,மகிழம் மரம்
3,மனோரஞ்சிதம்
4,பாரிஜாதம்
5,புன்னை மரம்
6,செண்பக மரம்
7,மருதாணி போன்றவற்றை நடலாம்

2030 இல் பச்சை பசேல் என்ற தமிழகம் உருவாக்குவோம்

இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். விழிப்புணர்வு செய்யுங்கள்.

மர கன்றுகள் நடுவதற்கு  ஆவணி மாதத்தில் முதல் மழை பெய்ததும் 1 நாள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுகிறோம்

வெப்ப அலைகளுக்கேதிரான ஒரு போர் போல் தான் இதுவும்

ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்

நன்றே செய்வோம்

அதனை இன்றே துவங்குவோம்

பிடித்திருந்தால் காப்பி செய்து பதிவிட்டு இயற்கையை காக்க உதவுங்கள்...


🌱🌱🌱🌱🌱🌱🌱🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🎋🎋🎋🎋🎋

Wednesday, April 24, 2024

முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா!ஒரு நிமிடம் இதை படியுங்கள்!

 ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.

அந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார்.

மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும்.

உணப்பொருட்களை கொண்டு வந்த  பாத்திரங்களை திரும்பவும்  ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி கொடுக்கவேண்டும்." என்றார்.

அவர் குறிப்பிட்ட அந்த ஓட்டல் மிகவும் காஸ்ட்லி.

ஒரு Special Meals க்கு ரூ. 150/- வாங்குகிறார்கள்.

அவர் போனதும் அந்த முதியோர் இல்ல நிர்வாகி சில விஷயங்களை சொன்னார்.

பெரும்பாலான முதியோர் இல்லங்களில் சொந்தமாக சமையல் கூடமும், சமைப்பதற்க்கு ஆட்களும் உண்டு.

முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்ப்படுத்தாத உணவைத் தான் இங்கு சமைக்கிறோம்.

நம் மக்களின் ஆர்வக்கோளாறு மிகுதியால், புண்ணியம் சம்பாரிக்கும் வெறியில் ஒரு நல்லநாள், விஷேசம் என்றால் அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா, கொத்து புரோட்டா, தந்தூரி உணவுகள், Sweet, நூடுல்ஸ், Fried Rice என்று வாங்கி அன்னதான மளிக்க வந்து விடுகிறார்கள். (70 வயது பாட்டிக்கு இங்கு சாம்பாரில் போடும் பருப்பே ஜீரணம் ஆகாமல் Acidity பிரச்சனை ஆகிறது.)

குழைந்து போன சாதமும், இட்லியை சாம்பாரில் உறப்போட்டு கரைத்து குடிக்கும் பெரியவர்களுக்கு புரோட்டாவும், சிக்கன் குருமாவும் குடுத்தால் என்ன ஆகும்❓

குறிப்பாக நாம் வழக்கமாக ஓட்டலில் சாப்பிடும் சாம்பார், வத்தக்குழம்பே இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.

ஓட்டல் சாப்பாடு எல்லாம் 40 வயசு வரை உள்ள ஆட்களுக்குத்தான்.  

இவ்வளவு உப்பும், காரமும் தொடர்ந்து 2 நாள் சாப்பிட்டால் 4-5 நாட்களுக்கு இந்த முதியோர்கள் எதுவுமே சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.

போன மாதமெல்லாம் ஒருத்தர் சாப்பாட்டுடன் ஐஸ்கிரீமை நல்ல குளிர்காலத்தில் வந்து முதியோர் இல்லத்தில் குடுத்துவிட்டு போகிறார். (இதற்க்கும் அவர் ஒரு Software கம்பெனியின் மேலாளர். 1 இலட்சத்துக்கும் மேல் மாத சம்பளம் வாங்குகிறார்.)

ஆரம்பகாலங்களில் இப்படி அன்னதானம் செய்ய வந்தவர்களிடம், எங்களிடம் பணமாக கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிப் பார்த்தோம்...

சிலர் மளிகை பொருட்களாக வாங்கிக்கொடுத்தார்கள்.

ஆனால் பலரும் அவர்கள் கண்முன்னே எல்லாம் நடக்கவேண்டும், அவர்கள் கையால் 4 பேருக்கு உணவு பரிமாற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். (பணமாக நேரடியாக கொடுக்கவோ, அல்லது மளிகை பொருட்களை நாங்கள் வெளியில் விற்று விடுவோம் என்று தவறாக எண்ணி பலரும் முன்வருவதில்லை.)

ஒரு முதியோர் இல்லத்தில் சாப்பாட்டு செலவுக்கு நிகராக மருத்துவ செலவு உண்டு...

கட்டணமே இல்லாமல் ஒரு சேவை போல் இங்குள்ள முதியோர்களுக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய  சில நல்ல மருத்துவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமாவது சமாளிக்கமுடிகிறது...

ஓட்டலில் ஒரு நபருக்கு ரூ. 100/- க்கு மேல் ஒரு சாப்பாட்டுக்கு செலவு ஆகிறது.

ஆனால் நாங்களே இங்கு சமைக்கும் போது ஒரு நபருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 45/- ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது.

அதுவும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத முதியோர்களுக்கான சாப்பாடு.

ஒருவர் முதியோர் இல்லத்துக்கு கொடுக்கும் பணம் என்பது பல செலவுகளுக்கு உதவும் மருத்துவம், போர்வை, சோப்பு, எண்ணெய், பல்பொடி, கிருமிநாசினி, உடை, கட்டிடம் / தோட்ட பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம், முடி திருத்துவோர் சம்பளம்... என்று.

ஒருவன் பசியில் இருப்பதை விட கொடுமையான விஷயம், நாம் குடுத்த உணவு செரிக்காமல் / சாப்பிட்ட உணவு  வெளியெற முடியாமல்  அவஸ்தை படுவதுதான்...

ஆர்வக் கோளாரில் புண்ணியம் சம்பாரிக்க ஆசைப்பட்டு, பெரும்பாவத்தை தேடாதீர்கள்.

நம்பிக்கை தான் வாழ்க்கை•

நாம் செய்யும் உதவி மற்றவருக்கு பயனுள்ளதாக அமையட்டும்!

Saturday, April 6, 2024

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?


 

பெண்கள்

1)  பையன் நல்லா படிச்சிருக்கனும்,

2)  சொந்த வீடு இருக்கனும்,

3)  நல்ல கம்பெனியில வேலை பார்க்கனும்,

4)  ஒரு லட்ச ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்கனும்,

5)  வழுக்கை தொப்பை இல்லாம பார்க்க நல்லா இருக்கனும்,

6)  பெரிய குடும்பமா இருக்கக்கூடாது,

7)  வெளிநாட்டுல வேலை செஞ்சா கல்யாணம் முடிஞ்ச உடனே மனைவியை கூட்டிகிட்டு போயிடனும்,

8)  வயசும் முப்பதுக்கு மேல இருக்கக்கூடாது.

இப்படிப்பட்ட கண்டிஷன்கள் பெண் அல்லது அந்த பெண்ணை பெற்ற பெற்றோர்களால் வைக்கப்படும்போது எப்படி திருமணம் ஆகும் ? முதிர் கண்ணன்களையும் முதிர் கன்னிகளையும் தான் உருவாக்கும், திருமணத்தை கடின நிகழ்வாக்கும்.

நம்ம பொண்ணுக்கு ரெண்டு வருஷம் சீனியர் அந்த பையன், அப்படி இருக்கும் போது அவன் எப்படி அதுக்குள்ள சொந்த வீடு கட்டியிருப்பான், எப்படி ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவான் என்ற அடிப்படை அறிவோ, சிந்தனையோகூட கிடையாது...

பேராசையும், கிறுக்குத்தனமான சிந்தனையும் சமகால ஆண், பெண் பிள்ளைகளின் திருமணத்தை கடினமாக்கி அவர்களின் வாழ்வை நாசமாக்குகின்றன...!!!

தற்கால கல்வியினால் சம்பாதிப்பதை தவிர, வாழ்க்கையை பற்றிய அறிவோ,சிந்தனையோ, புரிதலோ வளரவில்லை. பேராசையும், கிறுக்குத்தனமான சிந்தனைகளும், செயல்களும் தான் வளர்ந்துள்ளன...!!!

முன்பெல்லாம், பெண்கள் அதிகம் படிக்கவும் இல்லை, படித்தாலும் வேலைக்கும் அதிகம் சென்றது இல்லை.

அதனால் யாரோ ஒருத்தனுக்கு நம்ம பிள்ளையை கட்டிக்கொடுதா போதும்னு பெண்ணின் பெற்றோர் நினைச்சாங்க. ஆனால், இன்று பலரும் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு வரை படிக்கிறார்கள். வேலைக்கும் செல்கிறார்கள்.

கண்டிப்பாக இது மகிழ்ச்சியான விஷயம் தான்.. பெண்கள் படிப்பதும், வேலைக்குச் செல்வதும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால்

பிள்ளையைப் பெற்ற பெற்றோர் இருக்காங்க பாருங்க. நான் எல்லாரையும் சொல்லல..ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள், அவங்க மகள் வேலைக்குச் செல்வதை ஒப்பிட்டு அப்பெண்னை விட பல மடங்கு உயர்ந்த சம்பளத்தில் இருக்கும் பையனை தான் பாக்குறாங்க!

இப்போ வரைக்கும் ! பார்த்த வரன் எல்லாமே..பொண்ணுக்கும் , பையணுக்கும் பிடித்து இருந்தாலும் கூட அவங்க  அப்பாக்களுக்கு பிடிக்காமல் போனதே காரணம்!

வாழ்க்கை ஒரு பாடத்தை நடத்துகிறது. நிறைய மனிதர்களுக்கு அது புரிவது இல்லை. அது என்னவென்றால்:

"எதை நீ அவமதிக்கிறாயோ, எதை நீ வீணடிக்கிறாயோ அது உன்னிடம் இருந்து இயற்கை எடுத்து விடும்."

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திருமண வாய்ப்புகளை சொந்தக் காரணங்களுக்காக தள்ளி வைக்காமல், திருமணத்தை சரியான காலத்தில் செய்து கொள்வதே நல்லது. ஆண்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பெண்கள் அதிகபட்சம் 25 வயதிற்குள் திருமணம் செய்ய வேண்டும். இது அனைத்தும் தவறும்பட்சத்தில் புத்திர பாக்கியம் உண்டாவதிலிருந்து, மன ஒற்றுமை ஏற்படுவது வரை நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வருகிறது.

ஒரு சிலர் திருமணம் கூடி வரும்போது அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுவதும் அல்லது சொந்த வீடு வாங்கிய பின்பே திருமணம் செய்வேன் என்று சொல்வதும் தேவையான பணம் சேமிப்பாக மாறிய பிறகே திருமணம் செய்து கொள்வேன்  என்று சொல்வதும்  திருமணம் அமைவதற்கு  தடையாக   உள்ளது.


 

ஆண்கள் கேட்க வேண்டியவை

     உங்களுக்கு பிடித்து தானே திருமணத்திற்கு சம்மதம் சொன்னீர்கள். நிறைய பேர் வீட்டில் பெண்களை கேட்பதே இல்லை..

    என்னோட தோழிய இருக்க விருப்பமா..?

    சேலை கட்ட தெரியுமா.. இன்று பல பெண்களுக்கு சேலை கட்ட தெரியவில்லை..

   சமைக்க தெரியுமா..!

   மேற்கொண்டு படிக்க விருப்பமா!

   நல்ல பேசத் தெரியுமா..?

     

ஆண்கள் கேட்க கூடாதாவைகள்    :   வரதட்சணை

 

பெண்கள் கேட்க கூடாதாவைகள்

   உங்களோட சம்பளம் எவ்வளவு?

  திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் வருவீங்களா?

  பேங்க அக்கவுண்ட் எவ்வளவு இருப்பு உள்ளது?

  சொத்து எவ்வளவு வரும்?

  வீடு சொந்தமா? வீடு யாரு பெயர்ல இருக்கு!

இதை எல்லாம் பெண் வீட்டார்கள் கேட்பார்கள், கேட்டால் நீங்கள் மாப்பிள்ளையை விரும்பவில்லை. அவர் பெயரில் இருக்கும் சொத்து மற்றும் பணத்தை தான் விரும்புகிறீர்கள்.

உங்கள் மகளின் எதிர்கால வாழ்க்கை பற்றி நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால் ஒரு ஆணுடன் நீங்கள் பேசும்பொழுதே தெரிந்துவிடும் இவன் நம்ம பொண்ணுக்கு சரியானவனா இல்லையா என்று.

பெண்கள் கேட்வேண்டியவைகள் 

 நெடுந்தொலைவு பயணம் போகப் புடிக்குமா?

(சில பெண்களுக்கு மட்டும் ஊர் சுற்றும் விருப்பம் உண்டு)

   மது, புகை பழக்கம் உண்டா?

   நீங்க வெஜ் இல்ல  நான்வெஜ் .?

 என்னோட தோழனா இருக்க விருப்பமா 

 சமைக்க தெரியுமா… (நிகழ்காலத்தின் டிரெண்டு)

இதைப்போல நிறைய கேள்விகள் கேட்கலாம்….

 

ஜாதகப் பொருத்தம் மிக அவசியமானதுதான், ஆனால் அதற்காக ஜாதகத்தை மட்டுமே நம்பி இருப்பதும் வீண். இன்றைய காலகட்டத்தில் வயது குறைந்த பெண்ணிற்க்கும் அதிக வயது வித்தியாசத்துடன் கூடிய ஆணைத் திருமணம் செய்வதில் தொடங்குகிறது சிக்கல். இது முன்னோர்கள் செய்த முட்டாள்தனம். ஆமாம் பெண்ணை ஆண்கள் எளிதாக அடிமை செய்திட உருவாக்கப்பட்டதே இத்தகைய விடயம்.

ஆணுக்குப் பெண், இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாரதி பாடியது இதனைத்தான்.

ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் வித்தியாசம் இருந்தால் கூட பரவாயில்லை. 5 க்கு மேற்படும் பொழுது கிட்டத்தட்ட அந்த ஆண் அந்த பெண்ணிற்க்கு, அண்ணனைப் போன்றோ, நிலைமை இன்னும் மோசமாகும் பொழுது தந்தையைப் போன்றோ அமைந்து விடுகிறது.

அந்ததந்த ஆத்மா எவ்விதமான காதலை, அன்பை, இன்னும் சொல்லப்போனால் உருவத்தை விரும்புகிறதோ, அத்தகைய திருமணத்தை அடைவதே மேலானது.

 நிறைவு

அதைவிட்டு விட்டு ஒன்னத்துக்கும் உதவாத சொத்து,பணத்தை இரு வீட்டார்களும் கேட்பது முறைஅல்ல

இக்காலத்துக்கு பணம் தேவை தான் ஆனால் பணமே வாழ்க்கை அன்றுஒரு நகரத்தில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவன் தினறுகிறான்.. ஆனால் அதே ஊரில் மாதம் 10 ஆயிரம் வாங்குபவன் சந்தோஷமாய் இருகிறான்.

இந்த பிரபஞ்சத்தில் யார் ஒருவரோக்கு அம்மா அப்பா, நல்ல மனைவி / கணவன் மற்றும் நோயில்லாத வாழ்வு பெறுகின்றானோஅவனே இவ்வுலக்த்தின் ஆஸ்தியும் அந்தஸ்வும் உள்ளவன்

இதைப்பற்றி சொன்னால் நீ பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள்

ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் பு...