Total Pageviews

Tuesday, December 31, 2013

என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்!

 
 
தேர்வு முடிந்த பின் மாணவனும்

நோயாளி இறந்தபின் மருத்துவனும்

சொல்லும் பொய்

என்னால் முடிந்தவரை முயற்ச்சித்தேன்
------------------------------

அடிப்பதால் கல் நல்ல சிலையாகும்

உருக்குவதால் தங்கம் நல்ல நகையாகும்

அழுத்தப்பட்டதால் கரி வைரமாகும்

அடக்கப்படுவதால் ஆண் நல்ல கணவனாகிறான்.
 -----------------------------

Wednesday, December 25, 2013

C.F.L .பல்புகள் உடைந்தால்...!


எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...! சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல்அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் . சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ? * உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் . * வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் . * கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் . * உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் . முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும்
 

இன்றைய உண்மைகள்..



1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலகஅறிவும் மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு.

8. சாராயம் நிறைந்து கிடக்கு. குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.

9. முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் Google plus  நண்பர்களே அதிகம்.

10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..




1.நடிகனுக்கு பூசை செய்வதையும், கொடி பிடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

2.யோசிக்காமல் அறியாமையால், இலவசத்திற்காக மட்டும் ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும்.

3.எதற்காக இதை படிக்கிறோம் என்று தெரியாமலேயே உயர் கல்வி கற்பதை நிறுத்த வேண்டும்.

4.நம் வசதிகளுக்காக,நம் தேவைகள் சுலபமாக நிறைவேற அரசாங்க அலுவலங்களில் ஐந்து ,பத்து கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

5.படிப்பறிவு இல்லாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் நம் புலமையையும், வீரத்தையும் காட்டுவதை நிறுத்த வேண்டும்.

6.கேள்வி கேட்க வேண்டிய இடங்களில் கேட்காமல் இருப்பதை நிறுத்த வேண்டும்.

7.தாய் மொழி பேசுவது வெட்கம் என்றும், அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்பது பயனற்றது என்றும் நினைப்பதை நிறுத்த வேண்டும்.

8.டாஸ்மார் ன் வருமானத்தை கோடிக்கணக்கில் உயர்த்துவதை நிறுத்த வேண்டும்.

9.பெண்களை சோப்பு சீப்பு பவுடர் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை, சிகப்பு தான் அழாகான நிறம் என்ற முட்டாள் தனமான விளம்பரங்களை
மக்களிடம் திணிப்பதை நிறுத்த வேண்டும்.

10.காதலுக்கு முதலில் முக்கியம் தனிமனித ஒழுக்கம். காசை தண்ணீராய் செலவழித்து காதலிப்பதை நிறுத்த வேண்டும்.

11.ஆணாதிக்கம், பெண்ணடிமை, பெண்ணுரிமை போன்ற வார்த்தைகளின் புரிதல் இல்லாமல் தொட்ட தொண்ணூறுக்கும் அவைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

12.ஆன்மிகத்தின் அர்த்தம் அறியாமல் அதை ஆயுதம் ஆக்குவதை நிறுத்த வேண்டும்.

14.கலாச்சார காவலர்கள் என்று பேர் வைத்துக் கொண்டு கலாச்சாரத்தை பாதுகாப்பது போலவே சீரழிப்பதை நிறுத்த வேண்டும்.

15.சினிமாவால் வாழ்க்கை பாதிக்க படாமல் இருக்க , முகநூலால் சுய முன்னேற்றம் முடங்காமல் இருக்க, எதற்குமே அடிமை ஆவதை நிறுத்த வேண்டும்.

# அவனை நிறுத்த சொல்லு , நான் நிறுத்தறன்னு சொல்லாம , நாம மாறினா இங்கு நிறையவே மாறும்.

-ஆதிரா .

நன்றி: நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.

Sunday, December 22, 2013

வருமானத்தின் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்



வருமானத்தின் ஒரு பகுதியை  நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்


என்ன நடக்குதுனே தெரியாம, காலைலே தூங்கி எழுந்தோம். அவசர அவசரமா வேலைக்கு கெளம்பினோம். கஷ்டப்பட்டு சம்பாதிச்சோம். பிள்ளைகளை வளர்த்தோம். சொத்து சேர்த்தோம்.. நம்ம அனுபவிச்சோமோ இல்லையோ, நம்ம புள்ளைகளுக்கு சொத்து சேர்ப்போம்.  அப்புறம் ஒருநாள் ... டிக்கெட் வாங்கிட்டு கெளம்பியாச்சு... இதேதான்  இன்னைக்கு 100 க்கு 95 பேரு பண்ற விஷயம்.

நம்ம வீடு, நம்ம குழந்தைகள்.. நம்ம சொந்தம் ? (அது கூட அபூர்வம் ) .. இதை தவிர வேற எதையும் யோசிக்க கூட நேரம் இல்லை.. சரி இந்த மாதிரி சொத்து சேர்த்து வைச்சா அது நல்ல விதமா உபயோகமாகுமா? இப்போ இருக்கிற பெரிய பெரிய கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைங்க , அரசியல்வாதி பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்கிறாங்க னு நெனைக்கிறீங்க...

எந்த மாடல் கார் வந்தாலும் வாங்கணும்..  எப்போவுமே குடி போதைலே இருக்கணும்.. எப்போவுமே ஏதாவது பொண்ணுங்க கூட சுத்தணும்.. எங்கேயும் ஒரு அடாவடித் தனம். அதனாலே ஒரு வம்பு... காசு இருக்கிற வரைக்கும் ஒரு கும்பலே கூட இருக்கும். அப்புறம் வாழ்க்கையிலே ஒரு செம அடி... அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்கும். இதே போல தான் உங்க பிள்ளையும் இருக்கணும் னு நெனைக்கிறீங்களா?
இவங்களுக்கு எல்லாம் ஏன் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை னு எப்போவாவது தோணுவது உண்டா?

ஆடி அடங்கி , நாடி தளர்ந்து .. கடைசி நாட்கள் வரும்போது படுக்கையிலே படுத்து இருப்போமே அப்போ நம்ம கிட்டே மிஞ்சி இருக்க போறது  ... வெறும் நினைவுகள் மட்டுமே. .. வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக ஆக்குவது ஒவ்வொரு மனிதனின் கடமை. நம் வருங்கால சந்ததி வளமான ஒரு வாழ்வு வாழ்வதும் நம்ம கையிலேதான்..


நீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்துவைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது அவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும் என்பதை ஒளவை மூதாட்டி அழகாக நான்கே வரிகளில் நச்சென்று சொல்லியுள்ளார்.

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்!”   (ஒளவையார் )


நம்பன் அடியவர்க்கு - சிவனின் அடியவர்களுக்கு
நல்காத் திரவியங்கள் - மனமுவந்து வழங்காத செல்வங்கள்
பம்புக்காம் - சூனிய வித்தைகளுக்கும்
பேய்க்காம் - பேய் வழிபாடுகளுக்கும்
பரத்தையர்க்காம் - தாசிகளுக்கும்
வம்புக்காம் - வீண் செலவுகளுக்கும்
கொள்ளையர்க்காம் - கொள்ளை கொடுப்பதற்கும்
கள்ளுக்காம் - மதுவிற்கும்
கோவுக்காம் - பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்
சாவுக்காம் - அவனுடைய சாவிற்கும்
கள்ளர்க்காம் - கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும்
தீக்காகும் - நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும்
காண் - உரியனவாகும் !

இன்றைய காலகட்டத்தில் அடியார்கள் என்பவர்கள் உலகம் மேன்மையுறப் பாடுபடுபவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

பேய் வழிபாடுகளுக்கும், தாசிகளுக்கும், வீண் செலவுகளுக்கும், கொள்ளை கொடுப்பதற்கும், மதுவிற்கும், பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்,
அவனுடைய சாவிற்கும், கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும், நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும், உரியனவாகும் !


சூனிய வித்தைகள் என்பதை இன்றைய காலகட்டத்தில், குதிரை ரேஸ், லாட்டரி சீட்டுக்கள், சீட்டாட்டம், விளையாட்டுக்களை வைத்து நடைபெறும் சூதாட்டங்கள் (betting)  என்று எடுத்துக் கொள்ளலாம்.

பேய்வழிபாடுகள் என்பதற்கு பெண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அல்லது நமது தீய நட்புக்களைக் கூட்டிக்கொண்டுபோய் - அதாவது கஃபிற்கும்,  ஃபிற்கும் அல்லது பார்களுக்கும் கூட்டிக் கொண்டுபோய்ச் செய்யும் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும் என்பதற்கு, வம்பு, வழக்கு, நீதிமன்றத்தண்டனை போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு செய்யும் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

சாவிற்கும் என்பதற்கு, தீராத நோய் நொடிகள் வந்து லட்சக்கணக்கில் சாகும்வரை செய்யப்படும் மருத்துவச் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

சரி என்ன செய்ய வேண்டும்?

அளவு முக்கியமில்லை! உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை  நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள். இறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர்களுக்கு செய்யுங்கள்

வாழ்க  மானுடம்..!



எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...