Total Pageviews

Friday, June 29, 2012

எலக்ட்ரிக் கார் / எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவது நல்லது.

நவீன வசதிகளுடன் கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்
சுற்றுச்சூழல் மாசுபடுதல், எரிபொருள் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையி்ல் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தயாரித்து அறிமுகம் செய்வதில் பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த வரிசையில்,பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பதில், ஹீரோ நிறுவனத்தின் ஓர் அங்கமான ஹீரோ எலக்ட்ரிக் ஈடுபட்டு வருகிறது. இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து உள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த இன்ஜினியர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தயாரித்துள்ளனர். ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 கி.மீ போகலாம்."டிபி ஸ்கூட்" என பெயரிடப்பட்டுள்ள இதற்கு மிக குறைந்த செலவே ஆகிறதாம்.

புதிய ஸ்கூட்டர் குறித்து தயாரிப்பாளர்கள் கூறியதாவது: சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடாது. சார்ஜ் செய்வது சுலபமாக இருக்க வேண்டும். சாதாரண மக்களும் வாங்குகிற அளவுக்கு விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மினி பைக் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.

இதைத் தொடர்ந்து தற்போது "டிபி ஸ்கூட்" தயாரித்துள்ளோம். இதன் மின்சார பயன்பாடு 1000 வாட். இதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் கொஞ்சம்கூட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

தேவையற்ற நேரத்தில் மடித்து கையில் எடுத்துச் சென்று விடலாம். இதற்கு வசதியாக 132 செ.மீ. நீளம், 35 செ.மீ. அகலம், 62 செ.மீ. உயரத்தில் தயாரித்துள்ளோம். சார்ஜ் செய்வதும் எளிது. மொபைல் போன் போல எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஒரு மைல் அதாவது சுமார் 1.6 கி.மீ. பயணம் செய்ய வெறும் 7 பைசா மட்டுமே செலவாகும். மேக்ஸ்மிலன் 2, பெர்டினண்ட் 2 என்ற இரு மாடல்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை 1330 யூரோ பவுண்டு. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சில மாற்றங்களையும் இந்த பைக்கில் செய்து கொள்ள முடியும்.

எளிதாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, குறைந்த செலவு, மடித்து வைத்துக் கொள்வது என அவற்றில் இல்லாத வசதிகள் டிபி ஸ்கூட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


எலக்ட்ரிக் கார்


சீட்டர் ரேவா என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. எனவே, இதுவும் பண்டிகை கால அறிமுக பட்டியலில் இணைந்து விடும் என்று தெரிகிறது.
இந்த முறை பெங்களூரில் சோதனை செய்யப்பட்டபோது கேமரா கண்ணில் சிக்கியுள்ளது. 2 கதவுகள் கொண்ட இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு பழைய ரேவா கார் போன்று இல்லாமல் அழகாக இருக்கிறது.

இதன் பாடி மிக தரமாக இருப்பதாக சோதனையின்போது நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். புரொஜெக்டர் லைட்டுகள், பெரிய முன்பக்க கிரில் என அசத்தலாக ஹைடெக் காருக்குரிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் 17.5 பிஎச்பி ஆற்றலையும், 55 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டது.

இந்த கார் மணிக்கு அதிகபட்சம் மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும். மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் செல்லும்.
வரும் தீபாவளியையொட்டிய பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ரூ.4.5 லட்சம் விலையில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போக டாடா நிறுவனமும்  எலக்ட்ரிக் கார்  உற்பத்தியில் முழு மூச்சுடன் ஈடுபடடு உள்ளது.


சொல்லில் சுத்தமும, சிந்தனையில் நேர்மையும், செயலில் துணிவும் கூடவே மற்றவர்களையும் தம்மைப்போல் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.
 


Thursday, June 28, 2012

மரணம் எப்படி இருக்கவேண்டும் ?


மரணம் ஒருவகை அமைதி. 

மரணம் உலகிற்கு புதிதல்ல!
ஆனால் அவரவர்க்கு வரும்போது
தான் மரணம் புதிதாக உள்ளது!
மரணம் பற்றிய பேச்சு தவறல்ல!
வாழ்வின் யதார்த்தம் தான் மரணம்!

மரணம் என்பது கால நிகழ்வு. உடல் என்கிற சட்டையை விட்டு ஆத்துமா (ஜீவன்) வெளியேரும் ஒரு உன்னத நிகழ்ச்சி. இது ஆத்துமா அல்லது உடலுக்கு வலி இல்லாத நிகழ்வாக இருக்க வேண்டும். எப்படி மரத்தில் இருந்து காய்ந்த இலை விழுகிறதோ அது போல இருக்கவேண்டும். காய்ந்த இலை விழும்போது மரமும் வலி அறியாது, இலையும் வலி அறியாது.... மெல்ல,மெல்ல மெதுவாய் காற்றிலே அசைந்தாடி .........மரண காயம் இல்லாமல்...!!!! மனித மரணம் மதிப்புடையதாக இருக்க வேண்டும்.

மனிதராய் பிற்ந்த அனைவருக்கும்  மரணம் என்பது நிச்சயக்கப்பட்ட ஓன்று, அந்த மரணம் எப்படி இருக்கவேண்டும்

1) குடும்பத்திற்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை  நிறைவேற்றிய பின் வரும் மரணம் .

2) வாங்கிய ஓய்வுதியத்தை மருத்துவமனைகளுக்கு செலவிடாமல் வரும் மரணம்

3) நோய்வாய்பட்டு  உடல் வருந்தி, கவனிக்க ஆள் அரவம் இன்றி இல்லாமல் வரும் மரணம்

4) விபத்துக்கள், கொலைகள், தற்க்கொலை, போன்றவற்றின் மூலம் இல்லாமல் வரும் மரணம்

5) இயற்க்கையாய் தூக்கத்தில் வலி அறியாது வரும் மரணம்

6) நோய், நொடி இன்றி வரும் மரணம்

7) பழி பாவம்  இன்றி வரும் மரணம்

8) எழுபது  வயதுக்கு மேல் 75 வயதுக்குள் நிகழும் இயற்கை மரணம்.

9) தான, தர்மத்திற்க்கு பின் வரும் மரணம்

10) இவர் போல யார் என்று ஊர் சொல்லும் மரணம்.

11) வாழ்வது ஒரு முறை ஊருக்காக, உலகத்திற்க்காக, மனித நேயமுடன்,பண்புடன், அன்புடன்,     பிறர் பின் பற்றும் வாழ்க்கை வழி முறை யுடன் வாழ்ந்த பின் வரும் மரணம்

 மனித மரணம் மதிப்புடையதாக இருக்க வேண்டும்.


By: S.Sivakumar, Madurai 

வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும். சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.

Friday, June 22, 2012

பூண்டு வாசனை, புதினா செடி,பேபி ஷாம்பு பாம்புகளுக்கு அலர்ஜிபாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களில் பாம்புகள் எளிதாக குடிபுகும். நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் குழந்தைக்களை கடித்துவிடும். இதனால் அவை உயிருக்கே ஆபத்தாகிவிடும். வீட்டு தோட்டத்தில் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் குடிபுகாமல் இருக்க தோட்டக்கலைத்துறையினர் கூறும் அறிவுரைகளை படியுங்களேன்.

தோட்டத்தில் புதர்போல செடிகள் இருந்தால்தான் பாம்பு, தேள், பூரான் போன் விஷ ஜந்துகள் குடி புகும். எனவே புதர் செடிகளை வெட்டிவிடுவங்கள். அதிக அளவில் இலை, தலைகளையும், காய்ந்த சருகுகளையும் குவித்து வைக்காமல் அவ்வப்போது அகற்றுங்கள்.

தோட்டத்தில் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில்தான் பாம்புகள் குடிபுகும் எனவே சுத்தமாக தோட்டத்தை பராமரியுங்கள். அதேபோல் மரப்பொந்துகள், உடைந்த ஓடுகள் போன்றவைகளை குவித்து வைத்திருந்தாலும் அவை பாம்புகளுக்கு பிடித்தமான இடமாகிவிடும். எனவே முடிந்த வரை உடைந்து போன பொருட்களை தோட்டத்தில் குவித்து வைக்காதீர்கள்.

தோட்டத்தில் அதிக அளவில் புற்கள் இருந்தால் அங்கு பூச்சிகள், புழுக்கள் வளரும் எனவே தோட்டத்தில் புற்களை ஒரே சீராக வெட்டி விடவும். அதேபோல் ஒரே இடத்தில் ரோஜாச் செடிகளை புதர்போல வளர்ப்பதையும் தவிர்க்கவும்.

பாம்புகளுக்கு பூண்டு வாசனை அலர்ஜி எனவே பூண்டினை நசுக்கி தண்ணீரில் கரைத்து செடிகளின் மீது கரைத்து விடலாம்.

தோட்டத்தின் மூளையில் புதினா செடிகளை வளர்க்கலாம். ஏனெனில் புதினா வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது என்பதால் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பாம்புகள் வர வாய்ப்பே இல்லை என்கின்றனர் தோட்டக்கலைத்துறையினர்.

பேபி ஷாம்புவை தண்ணீரில் கலந்து அதனை தோட்டத்தில் ஸ்ப்ரே செய்து விடலாம். மூன்று மணிநேரம் கழித்து மறுபடியும் செடிகளின் மீது தண்ணீர் தெளித்து விடலாம். இந்த வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது எனவே தோட்டத்தில் பாம்புகள் இருந்தாலும் அவை ஓடிவிடும். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் உங்கள் தோட்டத்தில் அச்சமின்றி பொழுதை கழிக்கலாம்.

Thanks to One India.com

 
பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . .
உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு. . . .
வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம். . . .
நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா. . . .
அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட ...

பாம்பு சீராது ,
கடிக்காது,
ஓடாது ;
அங்கேயே மயங்கி கிடக்கும்.!!


 பத்திரிகைகளும் புத்தகங்களும் ஓரளவிற்கு உதவி செய்யக்கூடியவை. மற்றவை அனுபவ வாயிலாக அறியவேண்டியவை. கைகாட்டி மரம் வழியைக் காட்டுமே தவிர நாம் போக வேண்டிய இடத்திற்கு நம்மைக் கொண்டு சேர்க்காது.
.
 

வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.அதிக அளவில் கட்டணம் கொடுத்து மிகப்பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தாலும் சில குழந்தைகள் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாகிவிடும். எனவே குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும் பொழுதிலிருந்தே அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும். நண்பர்களை கூட வாடி,போடி, என்று பேசுவதை தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது நலம்.

பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள். இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,"நாங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்" என்று தெளிவாக சொல்ல வேண்டும். Waiting their turn என்று ஆங்கிலத்தில் சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில் இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். இது தவறு என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும். கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.இதனால் விருந்தினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும். அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய் விடுவார்கள். இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிஜத்தில் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். அதுதான் Good sportsmanship. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது "You're welcome" சொல்ல மறக்காதீங்க. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப் பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை சொல்லத் துவங்கக் கூடாது.

லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியேவந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான் நாம் உள் செல்ல வேண்டும்.

வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால் என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு பிரத்யோக பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் இருக்கின்றன. அவை அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். அதேபோல் வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின் பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவைகளை கற்றுக்கொண்டால் உங்கள் குழந்தைகள் பிறர் பாரட்டத்தக்க வகையில் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள்.

கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.
படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!
பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.
காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!
 

வீடு அழகாக இருக்க செய்ய வேண்டியவை

அனைவரும் வீடு அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அழகாக வைக்க முயற்சியும் செய்ய வேண்டும். எவ்வளவு தான் வீடு பெரியதாக இருந்தாலும் வீடு அடைத்து கொண்டு இருப்பது போல் தான் இருக்கும். அதற்கு காரணம் நாம் தான். எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதை உபயோகித்து தீர்த்த பின்னர் தூக்கி போடாமல், அழகாக இருக்கிறது என்று வீட்டிலேயே வைத்து வீட்டை அழுக்காக, அசிங்கமாக வைத்திருக்கிறோம். இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்கவும், வீட்டை அழகாக வைத்திருக்கவும் என்னென்ன பொருட்கள் வீட்டில் இருக்க கூடாது என்று வீட்டு உள் அலங்கார நிபுணர்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளனர்.


1. தினமும் படிக்க வாங்கும் நியூஸ் பேப்பரை நீண்ட நாட்கள் சேகரித்து வைக்காமல், மாதத்திற்கு ஒரு முறையாவது அதனை எடைக்கும் போடலாம், இல்லையென்றால் பழைய புக் ஸ்டோரிலும் விற்கலாம்.

2. நாம் வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில், கூல்டிரிங்ஸ் பாட்டில் போன்றவை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. ஆகவே அவற்றை ஒருமுறை பயன்படுத்தியப் பின்னர் சேகரிக்காமல், அதனை தூக்கி போட்டு விட வேண்டும்.

3. ஞாபகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி பருவத்தில் பயன்படுத்திய முதல் மொபைல் போன், ஹெட் போன் போன்றவற்றை சேகரித்து வைத்தல், மேலும் மிகவும் பிடித்த சில எலக்ட்ரானிக் பொருட்கள் சேகரித்தல் போன்றவற்றை வீடு அழகாக இருக்க வேண்டுமென்றால் தூக்கி போடத்தான் வேண்டும்.

4. ஏதேனும் பண்டிகை என்றால் நண்பர்கள் வீட்டிற்கு அனுப்பும் கிரீட்டிங் கார்டு மற்றும் கடிதங்கள் போன்றவற்றை சேகரித்து வைக்காமல், அவற்றையெல்லாம் தூக்கி போட வேண்டும். என்ன செய்வது, வீடு அழகாக இருக்க வேண்டுமென்றால் ஒரு சிலவற்றை தியாகம் செய்யத் தானே வேண்டும்.

5. ஷாப்பிங் செய்யும் போது கொடுத்த பில், பௌன்ஸ் ஆன செக், மெடிக்கல் பில் போன்றவற்றை எப்போதாவது உபயோகப்படும் என்று சேகரித்து வைத்திருப்போம். இத்தகையவற்றை தூக்கிப்போடாமல், ஒரு டிராயரில் சேகரித்து வையுங்கள்.

6. மருந்துகளை அதை உபயோகப்படுத்தும் நாள் வரை மட்டும் பயன்படுத்த வேண்டும். தீர்ந்துவிட்டால் அவற்றை தூக்கி போட்டு விடுங்கள். மேலும் மருந்துகள் வாங்கும் போது தேதியை பார்த்து வாங்க வேண்டும்.

7. ஷாம்பு பாட்டில், பேஸ்ட், நெயில் பாலிஸ் பாட்டில் போன்றவற்றை தீர்ந்தவுடன், வீட்டில் அடுக்கி வைக்காமல், தூக்கி போட்டு விடுங்கள். இதனால் வீட்டில் எந்த ஒரு தேவையில்லாத பொருளும் இருக்காது, வீடும் அழகாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Thanks to :Oneindia .com

விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.

அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான். 

அளவுக்கு அதிகமான  பணிவை  ஒரு போதும்  நம்பக் கூடாது!

தன் கையே என்றாலும், விஷம்  ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!

எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி!

 

ஜுன் 5 பசுமை தினம்

ஜுன் 5 பசுமை தினம்உலக சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலகம் முழுதுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. பூமியின் வெப்பம் தொடர்​ந்து அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்று சொல்லலாம். சுற்றுச்சூழலை பாதுகாக்​க தவறியதன் விளைவை நாம் ​நாள்தோறும் தற்போது அனுபவித்து வருகிறோம். குடிக்​கும் தண்​ணீர், சுவாசிக்​கும் காற்று, உண்ணும் உண​வு என அனைத்தும் சீர்கேடு அடைந்துள்ளன. இனி வரும் காலத்திலாவது இந்த நிலையை மாற்றிட அல்லது குறைந்த பட்சம் தடுத்திட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்வது அ​வசியமாகிறது. இதில், பள்ளி செல்லும் குழந்தை முதல் சமையல் அறையில் பரபரப்பாக இருக்​கும் இல்லத்தரசிகள் வரை அனைவருக்​குமே பங்குள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஆண்டு தோறும் ஜுன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் என்று கடைபிடிக்​கப்படுகிறது.

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!!

மாமனிதருக்கு...என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!

யார் இவர் ?அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

இவர்களுக்கு வானம் தொட்டுவிடும் தூரம் தானோ...?!!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம்

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல

மூங்கிலிலை காடுகளே...!!
தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.
கரை தொடும் நதி...பச்சை புடவை போர்த்திய மலை...பூலோக சுவர்க்கம் இதுவன்றோ !!

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!

இயற்கையை நேசிப்போம்...!! எங்கும் பசுமை செழிக்கட்டும்...!!

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...

Thanks to Muthusamy & Kousalyaraj

விதை எப்படியோ, பழமும் அப்படியே!

பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்!


 

Wednesday, June 20, 2012

ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக இதோ சில யோசனைகள்வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரமில்லை என்பதுதான் கவலை. ஆனால் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை.  வீட்டில் வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள். 
                                                                                                                                                                                                                           தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம்.  வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம்.  வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம்.  லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் எல்லால் மருதாணி, வாழை இலை, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம்.  சிறிய தொட்டிகளில் புதினா செடி, கீரை வகைகளை ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம்.   அதிகம் சிரமம் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி நட்டு வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள்.  தினமும் அது ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடும். அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும். 

  நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்  வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்பது நமது கொள்கையாக இருக்கட்டுமே.      
   
ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதாவது ஒரு சிலர் பாடல் பாடுவது, நடனம், சமையல், நல்ல கல்வி அறிவு போன்றவை பெற்றிருப்பார்கள்.

இவர்கள் பெரிய பெரிய கல்வி நிலையங்களை எல்லாம் உருவாக்க வேண்டாம். நமக்கு கிடைக்கும் நேரத்தில் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு நமக்குத் தெரிந்த கலையை சொல்லிக் கொடுத்தாலே போதும். பிற மொழி தெரிந்திருந்தால் அதற்காக வரும் பிள்ளைகளுக்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே வகுப்பெடுத்து அவர்களுக்கும் உதவலாம். நாமும் பயனடையலாம்.

   தினந்தோறும் அல்லது முடிந்த போதெல்லாம் அருகில் உள்ள ஆசிரமம், முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் அளவளாவி வரலாம். அவர்கள் ஏங்கும் ஒரே விஷயம் உறவுகள்தான். அதையும் நீங்கள் செய்த மாதிரி இருக்கும். உங்களுக்கும் ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கும்.

Thanks to Web Dunia.
பணத்தின் மிகப் பெரிய பயன், அதை இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழ முடிவது தான்!

நம்முடைய தொழில் எதுவானாலும் அதில் நமக்குச் சில போட்டியாளர்கள் இருப்பது நல்லதுதான்.

Tuesday, June 19, 2012

பூக்களை மிதிக்காதீர்.


பூக்கள் மென்மை ஆனவை

பூக்கள் மற்றும் மாலைகள் கடவுளுக்கு மட்டுமே  சாத்தப்படுகிறது.

மரண்ம் அடைந்தவரும் கடவுளுக்கு நீகரானவரே !

இறுதி ஊர்வலங்களில் எச்சரிக்கை தேவை!
இருப்பினும் எல்லா ஊர்களிலும், இறுதி ஊர்வலங்களில் மலர் மாலைகளை மரண்ம் அடைந்த நபரின் மேலிருந்து எடுத்து வீசுகின்றனர்.

 இறந்த பிணம் நோய் கிருமிகளின் கூடாரம் என்பர்... அதுவும், இறந்தவர் நோயாளி எனில், கிருமிகள் அந்த மாலைகளில் மிக அதிகமாக இருக்கும்

அதை வீசி எறிவதால் அக்கிருமிகளால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, பிணத்தின் மீதுள்ள மாலைகளின் மீது கை வைக்காதீர்கள்

என்ன தான் நமக்கு வேண்டியவராயினும், நோய்க் கிருமிகள் நம்மை தாக்காது இருக்குமா? ஊர்வலத்தில் மாலைகளை உயரமாகத் தூக்கி வீச, மின்சார ஒயர்களில் மாட்டிக் கொண்டு மின் வெட்டுக்கு வழி வகுக்கின்றனர்

பட்டாசை கட்டுக் கட்டாக கைகளில் பிடித்து தூர வீசுவதால் தீ விபத்தும், தீக்காயங்களும் பலருக்கு ஏற்படுகின்றன. இறுதி ஊர்வலம் அமைதியாக, யாருக்கும் இடையூறு இன்றி நடக்க வேண்டும்

இந்த இழி செயல்களால், மற்றவர்கள், இறந்தவர்  தம் குடும்பத்தை அசிங்கமாகப் பேசக்கூடும். எனவே, இதிலும் கவனமாக இருக்க வேண்டும்.. 
அந்த காலத்தில் அறியாமையால் செய்த காரியங்களை  இப்போதும் செய்தல் கூடாது

சின்ன வயதில் அம்மா சொன்னது இது.

சாவு வீட்டில் எல்லாமே தீட்டு. தெருவில் இருக்கும் பூவை எல்லாம் மிதிக்க தொடக் கூடாது. அப்படி செய்தல் உடனே குளித்து விட்டுத்தான் வர வேண்டும். அது சுகாதாரத்துக்கு தான் என்று இப்போது நன்றாக தெரிகிறது.... 

By : Sithayan Sivakumar 

தடைகளைக் கூட, நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்!

மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை முடித்துக் காட்டுவதுதான், நல்ல தலைமைப் பண்பின் அடையாளம்.

உயர்பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல. அது நமக்குச் சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும்.


மது

மது  பற்றி  கவியரசு கண்ணதாசன்

 
மதுப் பழக்கம் உள்ள ஒருவனே மதுவினால் விளையும் தீமைகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடியும்.


`எனக்கு இருபதாண்டுகளாக அந்தப் பழக்கம் உண்டு' என்பது ஒன்றும் புதிய செய்தியல்ல.


அந்தத் தார்மீக ஒழுக்கக் கேட்டிற்கு நான் வக்காலத்து வாங்க வரவில்லை.


ஆனால், `சட்டத்தினால் மதுவை ஒழிக்க முடியாது' என்று நான் வாதிட்டிருக்கிறேன்.


சட்டம் போட்டு ஒன்றை மறைக்க, மறைக்க அது பற்றிய ஆசைகளே கிளர்ந்து எழும

"குடித்தால் உன் உடம்பு கெடும்.


மலத்துக்கும், சோற்றுக்கும் வித்தியாசம் தெரியாது.


காரணம் இல்லாமல் வீண் பகைகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.


நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது.


நீ நிதானமாகப் பேசினாலும் கூட, `இது குடிகாரன் பேச்சு' என்று தள்ளிவிடும்.


நீ குடிக்கும் மது, உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.


உன் வருமானம் பாழாகும்.


செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்ய முடியாது.


மதுவினால் நீ நோயுற்றால், உனக்காக யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.


குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்ட புல்லாக, பூச்சியாக நீ மாறிவிடுவாய்.


நற்குலப் பெண்கள் உன் அருகில் வரவே பயப்படுவார்கள்.


மொத்தத்தில் நீ மனிதனாகவே வாழ முடியாது"


இப்படி அவனுக்கு இடித்துக் காட்டினால், ஒரு கட்டத்தில் இந்த அனுபவம் அவனுக்கு வந்து,


மதுவைக் கைவிட்டு விடுவான்.


ஆகவே தான், இந்தியா தோன்றிய காலத்தில் இருந்து, பின் இந்து மதம் பிறந்த காலத்தில் இருந்து, மதுவுக்கு எதிராக மதம் வாதாடிப் போதித்திருக்கிறதே தவிர, அரசர்களிடம் தன் சக்தியைப் பயன்படுத்தி, அதைத் தடைசெய்யச் சொன்னதில்லை.


"மது உள்ளே போனால், மதி வெளியே போகும்."


"சாராயத்தை உள்ளே போட்டால், பூராயம் எல்லாம் வெளியே வந்துவிடும்"


"குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாக்கப் போச்சு"


"கள்ளுக் குடிச்சவனுக்குச் சொல்லுப் புத்தி ஏறாது."


இவையெல்லாம் கிராமத்துப் பழமொழிகள்.


மதுவிலக்குப் பிரச்சாரம் இந்தியாவில் பல கோணங்களில், பல விதங்களில், பல கட்டங்களில் நடைபெற்று வந்திருக்கிறது.


அப்பொழுதெல்லாம், நாட்டிலே குடிகாரர்கள் குறைவாகவே இருந்தார்கள்.


என்று மதுவிலக்குச் சட்டம் வந்ததோ, அன்றிலிருந்துதான் குடிப்பவர்கள் அதிகமானார்கள்.


ஆகவே, இந்த வகையிலும் மதம் போதித்து எழுப்பும் தார்மீகச் சக்தியை சட்டம் உருவாக்க முடியாது.


இந்து மதம், மது உண்பவர்களையே `அரக்கர்கள்' என்று அழைத்தது.
  
மதுவினால் மதியிழந்தோர் கதைகள் இந்துமத ஏடுகளில் ஏராளம், ஏராளம
குடிப்பவனுக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள்.


"நெருப்பை நெய்யால் அணைத்தேன்" என்கிறான்.


கவலைக்காகக் குடிக்க ஆரம்பித்தால், உள்ளே போய் விழுந்த மது, அந்தக் கவலையை அதிகப்படுத்துமே தவிரக் குறைக்காது.


ஒரு குடிகாரன், குடிக்க ஆரம்பிக்கும்போது எதை நினைத்துக் கொண்டு குடிக்கத் துவங்குகிறானோ, அதுதான் அவன் குடித்து முடித்துத் தூங்கும்வரை விசுவரூபம் எடுத்து நிற்கும்.


முதல் ரவுண்டு குடிக்கும் போது, `ஒருவனை உதைக்க வேண்டும்' என்று நீ நினைத்தால் மூன்றாவது ரவுண்டு முடிந்ததும், அவனைத் தேடி உன்னைப் போகச் சொல்லுமே தவிர, அந்தக் கோபத்தை அது குறைக்காது.


அதனால்தான், மேலை நாட்டார் தனியாகக் குடிப்பது இல்லை.
குடிக்க குடிக்க, வயிற்றுக்குள்ளே Fluid உற்பத்தியாகிறது.
`வயிறு மகோதரம்' போல் ஆகிவிடுகிறது.
ஈரலில் Liver Sirosis என்ற நோய் உற்பத்தியாகிறது.
   
ஆரம்ப காலத்தில், குடிகாரர்கள் நிறையச் சாப்பாடு சாப்பிடுவார்கள்.
நாள் ஆகஆக, குடி அதிகமாகி சாப்பாடு குறைந்துவிடும்.


`மரணம் வாசல் வரைக்கும் வந்துவிட்டது' என்பது இதன் பொருள்.
தண்ணீரையும் நாம் குடிக்கிறோம்; பாலையும் குடிக்கிறோம்.


ஆனால், எதையும் `குடி' என்று அழைப்பதில்லை.


இதை மட்டும் ஏன் `குடி' என்கிறோம்? இது ஒன்றுதான், உயிரைக் குடிக்கிறத மதுவினால், உண்மையிலேயே நான் போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர முடியாமல் ரயிலைத் தவற விட்டிருக்கிறேன். வாழ்க்கை ரயிலையும் தவற விட்டிருக்கிறேன்.


ஒரு இந்து, மது அருந்துவதை மதம் நியாயப்படுத்தவில்லை.


வழக்கம்போலவே அவனைத் தட்டிக் கொடுத்துத் தர்ம போதனை மூலம் திருப்புகிறது.


மதுவிலக்கை சரியாகச் செயல்படுத்த வேண்டும்


மத விரிவுரையாளர்களால் மட்டுமே இயலும்.


உங்களிடம் பணி புரிகிறவர்களை, மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள். அவர்கள்தான் உங்களுடைய மிகப் பெரிய சொத்து.

உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான். 

Sunday, June 17, 2012

மன மகிழ்ச்சியையும் ஏமாற்றமும்


பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒன்றை ஒன்றுச் சார்ந்து ஏதாவது ஒன்றின் பக்கம் தேவையுடையதாகவே வாழ்கின்றன. அவ்வாறு தேவை பூர்த்தியாகும் போது மன மகிழ்ச்சியையும்,  மனம் நிறைவு பெறாத போது ஏமாற்றம் என்ற தத்துவத்தையும் தன்னுள் நிலை நிறுத்துகிறது.

ஆம்! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் அவற்றில் சிலவற்றை அவன் பெற்றுக்கொள்கிறான், சிலவற்றைத் தவறவிடுகிறான். இவ்வாறு நிகழ்வதெல்லாம் இறைவனின் செயல் என எண்ணும்போது, இன்பம் வரும் போதும், துன்பம் வரும் போதும் அவன் அதனை உற்சாகமாக எதிர் நோக்குவான். மனித வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி நிகழ்கிறது.

தன்னை வணங்குவதற்காகவே மனிதனை படைத்த இறைவன் அவனை அறிவற்றவனாக வாழச் செய்யவில்லை மாறாக சிந்தித்துணரும் சிற்பியாக அவனை தோற்றுவித்துள்ளான். மேலும் இறைவன் மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளைப் பற்றியும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்து விட்டான்

வாழ்வில் நிகழும் ஒவ்வொரு வினாடியும் அழகானதாகவும் அலங்கோலமானதாகவும் நாம் மாற்றிக் கொள்வது நம் மனநிலையால் தான். சில நேரம் [ மன மகிழ்ச்சியின் போது] இவ்வுலகத்திலுள்ள அனைத்தும் கண் முன் அழகாகத் தோன்றும். மறுநேரம் [மனம் நிறைவு பெறாத போது] உலகமே இருண்டு ஏமாற்றமாகத் தோன்றும் இவ்வாறு நிகழும் போது மனிதன் நிலை குலைந்து தடுமாறுகிறான். அந்நிலையில்தான் இறைநம்பிக்கை என்னும் ஊன்றுகோல் அவனைத் தாங்கி நிலை நிறுத்துகின்றது.

உங்களை விட்டுத்தவறிப் போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும் அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் அதிகம் மகிழாதிருக்கவும். ஒரு மனிதன் எப்போது முழுமையடைகிறான் என்றால் அவன் தன்னைப் பக்குவப் படுத்திக்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளும்போதுதான். எந்த விதமான ஏமாற்றமும் இல்லாமல் மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்துவிட்டால், அவன் வாழ்வு சீராக அமையாது. தன் மனம் போன போக்கில் அவன் வாழ ஆரம்பித்துவிடுவான். அதனால்தான் இறைவன் மனிதன் விரும்பியவற்றில் சிலதை நிறைவேற்றியும் சிலவற்றை தடுத்தும் வைத்துக் கொள்கிறான்.

"நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது" என்பதை, இறைவன் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளான்.

அதாவது மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் மனநிலையைப் பொறுத்தே அமைகின்றது. ஆகையால் வெற்றிக் கிடைக்கும் போது மகிழும் மனம்,      தோல்வியை சந்திக்கும் போது அதனை தாங்கிக் கொள்ள தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

உலகத்தின் அலங்காரங்களை மனிதன் ரசித்துணரும் போது தன்னையே மறந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருக்கிறான். அப்போது அவன் தன்னைப் படைத்த இறைவனை மறந்து அவனுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைத் தவறவிடுகிறான். வாழ்நாள் முழுவதையும் இவ்வாறே அவன் கழித்தால், மறுமை என்ற நிரந்தர வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்த மாட்டான் என்பதை கருத்தில் கொண்டுதான் இறைவன் இவ்வுலக மயக்கத்திலிருந்து அவனைத் தட்டி எழுப்ப சிறிது ஏமாற்றத்தைக் கொடுக்கிறானே தவிர, நிரந்தரமாக அவனை ஏமாற்றத்திலேயே விடுவதில்லை.  யார் இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு எல்லாவற்றையும் இறைவன் அளிக்கிறான்.

மனிதனின் வாழ்க்கை ஒரே சீராக சென்றால், அது அவனுக்கு சுவாரசியமான வாழ்க்கையாக இருக்காது என்பதற்காகத்தான் எதிர்ப்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் இறைவன் ஏற்படுத்தியுள்ளான். ஏமாற்றமாய் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் உறுதியான அஸ்திவாரங்கள். ஆனால் இதனை அறிந்து கொள்ளாத மனிதனோ தன் எதிர்ப்பார்ப்புக்கு மாற்றமாக நடக்கும் போது தன்னையே மாய்த்துக் கொள்கிறான். சிறிது நேரத்தில் எடுத்த கோழைத்தனமான முடிவால் இவ்வுலகிலும் மறுமை வாழ்க்கையிலும் அவதியுறுவதை எண்ணி உயிர் ஊசலாடும் போது வருந்துகிறான்.

இதனையெல்லாம் அறிந்து நாம் தெளிவு பெறுவோமானால்! ஏமாற்றங்களைக் கூட சிகரங்களாக மாற்றி வெற்றி நடை போடலாம்


ருக்கிற செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்தால், நம்முடைய நாட்டின் வறுமை எப்போதும் தீராது. இந்த வறுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி, நியாயப்படியும் தர்மப்படியும் நிறைய செல்வம் சேர்ப்பதுதான்!

தயாராக இருக்கிறவர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன!

எப்போதும், எதற்காகவும் உங்களுடைய அக சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.
 

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

கவலை , அச்சம் , பதற்றம் ... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது !   “ நாங்கெல்லாம் பயத்துக்கே பயங்காட்றவங்க , தெரியுமா ” என்று ச...