Total Pageviews

Friday, June 22, 2012

வீடு அழகாக இருக்க செய்ய வேண்டியவை

அனைவரும் வீடு அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அழகாக வைக்க முயற்சியும் செய்ய வேண்டும். எவ்வளவு தான் வீடு பெரியதாக இருந்தாலும் வீடு அடைத்து கொண்டு இருப்பது போல் தான் இருக்கும். அதற்கு காரணம் நாம் தான். எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதை உபயோகித்து தீர்த்த பின்னர் தூக்கி போடாமல், அழகாக இருக்கிறது என்று வீட்டிலேயே வைத்து வீட்டை அழுக்காக, அசிங்கமாக வைத்திருக்கிறோம். இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்கவும், வீட்டை அழகாக வைத்திருக்கவும் என்னென்ன பொருட்கள் வீட்டில் இருக்க கூடாது என்று வீட்டு உள் அலங்கார நிபுணர்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளனர்.


1. தினமும் படிக்க வாங்கும் நியூஸ் பேப்பரை நீண்ட நாட்கள் சேகரித்து வைக்காமல், மாதத்திற்கு ஒரு முறையாவது அதனை எடைக்கும் போடலாம், இல்லையென்றால் பழைய புக் ஸ்டோரிலும் விற்கலாம்.

2. நாம் வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில், கூல்டிரிங்ஸ் பாட்டில் போன்றவை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. ஆகவே அவற்றை ஒருமுறை பயன்படுத்தியப் பின்னர் சேகரிக்காமல், அதனை தூக்கி போட்டு விட வேண்டும்.

3. ஞாபகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி பருவத்தில் பயன்படுத்திய முதல் மொபைல் போன், ஹெட் போன் போன்றவற்றை சேகரித்து வைத்தல், மேலும் மிகவும் பிடித்த சில எலக்ட்ரானிக் பொருட்கள் சேகரித்தல் போன்றவற்றை வீடு அழகாக இருக்க வேண்டுமென்றால் தூக்கி போடத்தான் வேண்டும்.

4. ஏதேனும் பண்டிகை என்றால் நண்பர்கள் வீட்டிற்கு அனுப்பும் கிரீட்டிங் கார்டு மற்றும் கடிதங்கள் போன்றவற்றை சேகரித்து வைக்காமல், அவற்றையெல்லாம் தூக்கி போட வேண்டும். என்ன செய்வது, வீடு அழகாக இருக்க வேண்டுமென்றால் ஒரு சிலவற்றை தியாகம் செய்யத் தானே வேண்டும்.

5. ஷாப்பிங் செய்யும் போது கொடுத்த பில், பௌன்ஸ் ஆன செக், மெடிக்கல் பில் போன்றவற்றை எப்போதாவது உபயோகப்படும் என்று சேகரித்து வைத்திருப்போம். இத்தகையவற்றை தூக்கிப்போடாமல், ஒரு டிராயரில் சேகரித்து வையுங்கள்.

6. மருந்துகளை அதை உபயோகப்படுத்தும் நாள் வரை மட்டும் பயன்படுத்த வேண்டும். தீர்ந்துவிட்டால் அவற்றை தூக்கி போட்டு விடுங்கள். மேலும் மருந்துகள் வாங்கும் போது தேதியை பார்த்து வாங்க வேண்டும்.

7. ஷாம்பு பாட்டில், பேஸ்ட், நெயில் பாலிஸ் பாட்டில் போன்றவற்றை தீர்ந்தவுடன், வீட்டில் அடுக்கி வைக்காமல், தூக்கி போட்டு விடுங்கள். இதனால் வீட்டில் எந்த ஒரு தேவையில்லாத பொருளும் இருக்காது, வீடும் அழகாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Thanks to :Oneindia .com

விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.

அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான். 

அளவுக்கு அதிகமான  பணிவை  ஒரு போதும்  நம்பக் கூடாது!

தன் கையே என்றாலும், விஷம்  ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!

எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி!

 

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...