Total Pageviews

Friday, June 29, 2012

எலக்ட்ரிக் கார் / எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவது நல்லது.

நவீன வசதிகளுடன் கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்
சுற்றுச்சூழல் மாசுபடுதல், எரிபொருள் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையி்ல் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தயாரித்து அறிமுகம் செய்வதில் பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த வரிசையில்,பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பதில், ஹீரோ நிறுவனத்தின் ஓர் அங்கமான ஹீரோ எலக்ட்ரிக் ஈடுபட்டு வருகிறது. இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து உள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த இன்ஜினியர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தயாரித்துள்ளனர். ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 கி.மீ போகலாம்."டிபி ஸ்கூட்" என பெயரிடப்பட்டுள்ள இதற்கு மிக குறைந்த செலவே ஆகிறதாம்.

புதிய ஸ்கூட்டர் குறித்து தயாரிப்பாளர்கள் கூறியதாவது: சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடாது. சார்ஜ் செய்வது சுலபமாக இருக்க வேண்டும். சாதாரண மக்களும் வாங்குகிற அளவுக்கு விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மினி பைக் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.

இதைத் தொடர்ந்து தற்போது "டிபி ஸ்கூட்" தயாரித்துள்ளோம். இதன் மின்சார பயன்பாடு 1000 வாட். இதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் கொஞ்சம்கூட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

தேவையற்ற நேரத்தில் மடித்து கையில் எடுத்துச் சென்று விடலாம். இதற்கு வசதியாக 132 செ.மீ. நீளம், 35 செ.மீ. அகலம், 62 செ.மீ. உயரத்தில் தயாரித்துள்ளோம். சார்ஜ் செய்வதும் எளிது. மொபைல் போன் போல எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஒரு மைல் அதாவது சுமார் 1.6 கி.மீ. பயணம் செய்ய வெறும் 7 பைசா மட்டுமே செலவாகும். மேக்ஸ்மிலன் 2, பெர்டினண்ட் 2 என்ற இரு மாடல்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை 1330 யூரோ பவுண்டு. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சில மாற்றங்களையும் இந்த பைக்கில் செய்து கொள்ள முடியும்.

எளிதாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, குறைந்த செலவு, மடித்து வைத்துக் கொள்வது என அவற்றில் இல்லாத வசதிகள் டிபி ஸ்கூட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


எலக்ட்ரிக் கார்


சீட்டர் ரேவா என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. எனவே, இதுவும் பண்டிகை கால அறிமுக பட்டியலில் இணைந்து விடும் என்று தெரிகிறது.
இந்த முறை பெங்களூரில் சோதனை செய்யப்பட்டபோது கேமரா கண்ணில் சிக்கியுள்ளது. 2 கதவுகள் கொண்ட இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு பழைய ரேவா கார் போன்று இல்லாமல் அழகாக இருக்கிறது.

இதன் பாடி மிக தரமாக இருப்பதாக சோதனையின்போது நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். புரொஜெக்டர் லைட்டுகள், பெரிய முன்பக்க கிரில் என அசத்தலாக ஹைடெக் காருக்குரிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் 17.5 பிஎச்பி ஆற்றலையும், 55 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டது.

இந்த கார் மணிக்கு அதிகபட்சம் மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும். மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் செல்லும்.
வரும் தீபாவளியையொட்டிய பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ரூ.4.5 லட்சம் விலையில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போக டாடா நிறுவனமும்  எலக்ட்ரிக் கார்  உற்பத்தியில் முழு மூச்சுடன் ஈடுபடடு உள்ளது.


சொல்லில் சுத்தமும, சிந்தனையில் நேர்மையும், செயலில் துணிவும் கூடவே மற்றவர்களையும் தம்மைப்போல் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.
 


No comments:

Post a Comment

சர்க்கரை நோயாளிகள் - உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

  சுகர்னு  டாக்டர் கிட்ட போராங்க ..   அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet  கொடு க்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொட...