Total Pageviews

Friday, April 27, 2012

வாழ்வை இனிதாக்க புத்தர் கூறிய எட்டு வழிகள்
1.நற்காட்சி,
2
.நல்லூற்றம்,
3
.நல்வாய்மை,
4
.நற்செய்கை
5
.நல்வாழ்க்கை,
6
.நல்லூக்கம்,
7
.நற்கடைப்பிடி,
8
.நல்லமைதி.....

1.நற்காட்சி.
மனிதனுடைய தனிப் பெருமை பகுத்தறிவு ..தன்னுடைய பகுத்தறிவை கண்ணாக கொண்டு பார்பதே காட்சி..காட்சியில் இருவகை..

1
.நற்காட்சி  ௨.தீய காட்சி (அ) பொய் காட்சி.

எதையுமே பகுத்தறிவு கண் கொண்டு ஆராய்ந்து தெளிவது நற்காட்சி..

எதையும் வெறும் நம்பிக்கைகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு பார்ப்பது பொய்காட்சி..இதனால் தீமைகள் விளையும் சாத்தியங்கள் அதிகம்..

ஒவ்வொரு செயலுக்கும் காரணம் நோக்கம் அல்லது லட்சியம். நோக்கத்திற்கு தூண்டு கோளாக விளங்குபவை நம்பிக்கையும் கொள்கையும். ஆதலால் தன காட்சி நற்காட்சியாக இருக்க வேண்டு மென்று கூறப்பட்டது ...

மனிதன் ஏதயும் தன புத்தியை கொண்டு அறிந்து இருந்தால் மட்டும் போதாது...அதனை வாழ்க்கைலயே அனுபவித்தும் உணர்ந்திருக்க வேண்டும்.

 
2.நல்லூற்றம்:

 1)
புலன் இன்பங்களை துறத்தல்
 2)
மனக்காழ்ப்பு கொல்லாமை
 3)
அஹிம்சை ஆகியவற்றில் உறுதியாக நிற்றலே ஆகும்..

நல்லூற்றம் என்பது சத்யத்தை அடிப்படையாக கொண்ட நல்ல ஆசைகளை வளர்த்தல் எனவே உண்மையை நாடி செல்பவன் மகான்கள் என்றும் மகரிஷிகள் என்றும் எவரெவர்களோ எக்காலதிலோ சொல்லிவைதவை எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு இராமல் தானாக முயன்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.அறிவுக்கு பொருத்தம் இல்லாதவைகளை உதறிவிட வேண்டும். மேலும் புலன் இன்பங்களை துறத்தல் என்று புத்தர் சொல்வது "6”  புலன்களால் மற்றவர்க்கு துன்பம் செய்து அடைந்த இன்பம்" எவருக்கும் துன்பம் தராத இன்பங்களை அனுபவிப்பதில் தவறு இல்லை.

மனக்காழ்ப்பு கொல்லாமை என்பது மற்றவரிடம் காரணம் இன்றி கோபம் அடைவது. .அவர்களை வெறுப்பது.

அஹிம்சை என்பது முடிந்த அளவு எல்லா உயுர்கட்கும் துன்பம் தராமல் இருப்பது.

3.நல்வாய்மை

பொய்யுரையில் இருந்தும், புறம்கூறு வதில் இருந்தும், நிந்தைப்பேச்சில் இருந்தும், பயனற்ற சோம்பேறி பேச்சுகளில் இருந்தும் ஒதுங்கி இருத்தல் . இதுவே நல்வாய்மை எனப்படுவது. நல்வாய்மை நயம்பட உரைத்தலும் ஆகும். எவருக்கும் எந்த தீமையும் இல்லாத சொற்களே நல்வாய்மை.ஆகும் .

இதை விளக்கும் குறள் .....

"
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

4.நற்செய்கை:
நற்செய்கை யாதெனின்.உயிர் கொலை, தமக்கு அளிக்கப்படாதவைகளை கவர்ந்து கொள்ளல், முறை தவறிய சிற்றின்ப உணர்சிகள் ஆகியவற்றில் இருந்து விலகுதல் ஆகும்.
5.நல்வாழ்க்கை:
தவறான வழிகளில் வாழ்க்கை நடத்துவதை விட்டு நியாயமான முறையில் சாதகன் தன ஜீவனத்திற்கு வேண்டிய வருவாயை பெறுகிறான்.இதுவே நல்வாழ்க்கை

6.நல்லூக்கம்:
இதற்கு முன் தோன்றி இராத ஒழுக்கக்கேடான நிலைமைகள் எழாதபடி சித்த உறுதியை எற்படுத்தி கொள்ளுதல்.ஏற்கனவே எழுந்துள்ள தீய, ஒழுக்கக் குறைவான நிலைமைகளை நீக்குதல்.. இதுவரை தோன்றி இராத நல்ல நிலைமைகளை தோற்றுவித்தல் ..ஏற்கனவே தோன்றிய நல்ல நிலைமைகளை பழுதாகாதபடி நிலை பெற்று பெருகும் படி செய்தல்...இவையே நல்லூக்கமாம்

7.நற்கடைப்பிடி:
உடல் கந்தங்களால் ஆகிய கலப்பு என்று கருதி ஊக்கத்துடனும் நிலைத்த சிந்தயுடனும் உலகிலுள்ள பேராசையையும் அயர்வையும் அடக்குதல்.அதன் மூலம் சாந்தி அடைதல் உணர்ச்சி சம்மந்தமாயும் புலன்களின் அறிவு சம்மந்தமாயும் ,செய்கைகள் சம்மந்தமாயும், மனதின் சிந்தனைகள் சம்மந்தமாயும் அடக்க வேண்டியவைகளை அடக்குதல்....

8.நல்லமைதி.

இதுவே அனைதுப்படிகளின் சிகரம் ..ஞானத்தால் நன்மை தீமைகளை பாகுபடுத்தி அறிந்துகொள்ள முடியுமே தவிர, அதனால் மனதை ஒருமைப்படுத்த முடியாது.. தியானமே அதற்கு சிறந்த வழி..

உயர் கொலை புரிவோருக்கும் சீலங்களை பேனாதோருக்கும் ஏற்பட்டது அன்று தியானம். அவா, வெறுப்பு, மயக்கம், கர்வம், போய கட்சி ஆகிய தளைகளை கடந்து மேலேரியாவர்களுககே அது உகந்தது.
புலன்களின் ஆசைகள், துவேஷம், சோர்வு, பரபரப்பு, சந்தேகங்கள் ஆகியவற்றை அறவே நீக்கி விட்டு அவற்றிற்கு பதிலாக பரிசுத்தம், அன்பு உள்ளத்தின் விழிப்பு ,தெளிவு அறிவை ஆதாரமாக கொண்ட நம்பிக்கை ஆகியவற்றை பெற வேண்டும்.அதன் பின்னரே தியானம் அல்லது சமாதி எளிதாகும்.

தியானம் நான்கு வகைப்படும் :

1.ஏகாக்ரக வாசத்தில் ஆராய்ச்சி, பரிசீலனை, ஏகாக்ரக சிந்தனை ஆகியவற்றின் மூலம் பெரும் இன்பா நிலை. (இதில் ஒரு பிக்கு புலன்களின் ஆசைகளில் இருந்து ஒதுங்கி தீய நிலைகளில் இருந்தும் ஒதுங்கி குறிப்பிட்ட ஒரு பொருளை சார்ந்து நிலைத்துள்ள சிந்தனையுடன் முதலாவது தியானத்தில் பிரவேசிக்கிறான்..)

2.ஆராய்ச்சி சிந்தனை முதலியவைகளை கடந்து மன சாந்தியும் ஆனந்தமும் பெரும் நிலை

3
.சகல உணர்சிகளும் ஒடுங்கும் நிலை..

4.
.தன்னிலே தான் நிறைவு பெற்று ,இன்ப துன்பங்களை கடந்து பூரணமான அமைதியை பெரும் நிலை...

ஒருவரிடம் பணி செய்து ஓடிப்போன பணியாளர் தனது முதலாளியிடம் திரும்ப வரும் வரை அவருடைய தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

- பணியாளர்கள் மீது முதலாளிகள் இரக்கம் கொள்ள வேண்டும்.
 

தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவர்களே இருக்க முடியாது, அத்துடன் தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம்.
இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ,
கறிவேப்பிலை - 200 கிராம் 
பச்சை கொத்தமல்லி - 50 கிராம் 
சீரகம் - 50 கிராம் 
நல்லெண்ணை - 600 கிராம் 
பசுவின் பால் - 200 மில்லி.
கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.
சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும்.
அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
Thanks to Lankasri.com

சைனஸ் பிரச்னைக்கான தீர்வுகள்
கோடையில் உண்டாகும் சைனஸ் பிரச்னையை 2 வகையாகப் பிரிக்கலாம். ஒன்று திடீர் திடீரென வந்து போகும், அதிக வலியை தரும் சைனஸ். இன்னொன்று நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ்.
முதல் வகையை நாசில்ஸ் ஸ்பிரே, நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும்.
சைனஸ் பிரச்னையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் 2-வது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாது.
வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால் தான் முழு நிவாரணம் கிடைக்கும். தற்போதைய நவீன சிகிச்சை முறையில் திசுக்களை நீக்க வேண்டியதில்லை.
என்டோஸ்கோப்பிக் சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடிகிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை. மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படும் வகையில் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத்துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்

Thursday, April 26, 2012

மின்சாரத் தட்டுப்பாட்டை தடுப்பது எப்படி?மின்சார தட்டுபாட்டுக்கு காரணம் நீங்கள்தான்!


என்ன நண்பர்களே இது உங்களை கோபம் கொள்ள வைக்கின்றதா அமைதியாக சிந்தித்து பார்த்தால் நாம்தான் மின்சாரத்தை தின்று தீர்க்கின்றோம் எப்படியென்பதை இந்த கட்டுரை மூலம் விளக்குகின்றோம்,பல லட்சத்தில் வீடு கட்டுகிறோம் ஆனால் முறையாக மின் இணைப்புகளை தருகிறோமா என்றால் இல்லையென்றே வருத்ததுடன் நாம் கூற வேண்டியுள்ளது, வெளிநாடுகளில் வீட்டுக்கு மின்சார இணைப்பு பிளான்(வரைபடம்) தயாரிப்பதைப் போல் இந்தியாவில் ஒரு சிலர் தவிர யாரும் வரைபடம் தயாரிப்பது இல்லை,மின்சார கேபிள்களை தரமானதாக பயன்படுத்துவதில்லை, மலிவான விலையில்தான் பெரும்பான்மையினர் பயன்படுத்துகின்றனர், வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் செல்லும்போது அனைத்து மின் இணைப்பையும், யுபிஎஸ், குளிர்சாதன பெட்டி தவிர அனைத்தும் துண்டிக்கபடும் வகையில் வெளியே ஒரு பொத்தான் வைக்க வேண்டும் அதனால் மின்சாரம் மிச்சப்படுவதுடன், மின்கசிவினால் ஏற்படும் தீவிபத்தை தவிர்க்கலாம், இனி எப்படி மின்சாரத்தை சிக்கனம் செய்வது என 
பார்க்கலாம்.


நாம் பயன்படுத்தும் விளக்குகள்
விளக்குகளில் குண்டுபல்புகள் மின்சாரத்தை பெரும்வாரியாக தின்றுவிடும் அரக்கன், அதுமட்டுமில்லாமல் பூமியை வெப்பமயமாக்குதலில் பெரும்பங்கு வகிக்கின்றது. கேரளாவில் மின்சாரவாரியம் சார்பில் குண்டுபல்புகளை பெற்றுக் கொண்டு சிஎப்எல் பல்புகளை தருகிறார்கள், தமிழகத்திலும் இம்முறையைப் பயன்படுத்தலாம், குழல் விளக்குகளில் இன்னும் மலிவு விலையில் கிடைக்கும் நாற்பது வாட்ஸ் பல்புகளையே பயன் படுத்து கின்றோம், அதை விட சற்று விலையதிகமான 18வாட்ஸில் மெல்லிய குழல் விளக்குகள் கடைகளில் கிடைக்கின்றன,இவை அதிக பிரகாசத்துடன் எரிகின்றன இதன் விலை நாற்பது ரூபாய்க்குள் அடங்கும், சாதாரண சோக் பயன்படுத்துவதை தவிருங்கள் எலக்ட்ராணிக் சோக் பயன்படுத்துங்கள் இவை மின்சாரத்தை அதிகமாக செலவு செய்வதில்லை, இதை யாரும் அதிகளவில் பயன்படுத்துவதில்லை.இதை பயன் படுத்தி மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.


நாம் பயன்படுத்தும் மின்சார சாதனங்கள்
மிக்ஸி,கிரைண்டர்,மின் விசிறிகள் வாங்கும் போது அதன் விலையை மட்டும், அல்லது பிரபலமான நிறுவனம் இரண்டை மட்டும் பார்க்கிறோம், ஆனால் முக்கியமாக பார்க்க வேண்டியது அது எத்தனை வாட்ஸ் என பார்ப்பதில்லை, ISI முத்திரை மட்டுமின்றி, அதன் வாட்ஸ் கண்டிப்பாக கணக்கிட வேண்டும், விலை குறைவான மலிவு விலை மின் சாதனங்கள் மின்சாரத்தினை தேவையில்லாமல் தின்று விடும், மின்சார கசிவினை ஏற்படுத்தி விபத்தினை உண்டு பண்ணும்.

600வாட்ஸ் மிக்ஸியில் அரைக்கும் அதே பொருளை வெறும் 325வாட்ஸ் மிக்ஸி அரைத்துவிடும்,பிறகு எதற்கு 600வாட்ஸ் மிக்ஸி,உங்கள் தேவை அறிந்து அதற்கு தகுந்தது போல் பொருட்களை வாங்க வேண்டும், குறைவான வாட்ஸ் கொண்ட பொருட்கள் சற்று விலையதிகம்தான் என்றாலும் வருட கணக்கு பார்க்கும் போது மிக அதிகமான பணம் சேமிப்பு அடைகிறது மட்டுமில்லாமல், பொருட்கள் எளிதில் செயல் இழப்பதில்லை, அதற்கு நீண்ட கால வாரண்டியும் வழங்குகிறது ஏனைய நிறுவனங்கள்.

மற்றும் கார்டனில் மற்றும் வீட்டு முகப்பில் வைக்கப்படும் அழகு விளக்குகள் பியூஸ் போகும் போது மாற்றுவதில்லை சிலர்,இதன் காரணமாக மழை பொழியும் போது ஈரபதம் காரணமாக பியூஸ் போன பல்பு மூலம் ஏராளமான மின்சாரம் விரையமாகிறது,முக்கியமாக ஒவ்வோரு வீட்டுக்கும் எர்த் தரவேண்டும் இது பாடி எர்த் மூலம் பாதிக்கப்படுவதை தவிர்க்கிறது, நம் மின்சாதனங்கள் கெட்டுபோகாமல் இருக்கவும் உதவுகின்றது.


உதாரணத்திக்கு ஒரு குண்டுபல்பு விலை பதினைந்து ரூபாய், அது செலவு செய்யும் மின்சாரம் இரு மாதத்திக்கு குறைந்த பட்சம் 60 யூனிட்கள், 60X1.00=60.00 வருடத்திக்கு 60X6=360 ஆக வருடத்திக்கு 360 ரூபாய் செலவு, பல்பு வருடத்திக்கு எப்படியும் மூன்று வாங்க வேண்டும், அது 45 ரூபாய், மொத்தம் 415 ரூபாய், ஆனால் 12 வாட்ஸ் சிஎப்எல் பல்ப் உயர்தரத்தில் வாங்கினால் 180 ரூபாய்,  ஒரு வருடம் வாரண்டி, ஒரு வருடத்திக்கு மின்சார செலவு வெறும் 60யூனிட்கள் 180 + 60 = 240 பார்த்தீர்களா தோழர்களே! 240 ரூபாய் மட்டுமே, சீரற்ற மின்சாரம், இடி,மின்னல் போன்ற இயற்கை பாதிப்பு தவிர இந்த பல்புகள் எளிதில் செயல் இழக்காமல் மூன்று வருடம் வரை உழைக்கின்றது, சிந்தித்து பாருங்கள்.

அடுத்தது கம்பி ஹீட்டர் பயன்படுத்துவது மிக அதிகமான மின்சாரத்தை செலவு செய்யும், அதற்கு பதிலாக இன்டெக்சன் அடுப்பு பயன்படுத்துவது சிறந்ததுவசதியுள்ளவர்கள் சோலார் ஹீட்டர் பயன்படுத்துவது நல்லது. வாசிங்மிசின், குளிர்சாதன பொருட்களை வாங்கும் போது ஐந்து நட்சத்திர குறியிட்ட பொருட்களை வாங்குவது நல்லது, இவை மிகக்குறைவான மின்சாரத்தை செலவு செய்கின்றது, கணினி,தொலைகாட்சிகளில் LED,LCD,பயன்படுத்துவது மிகச்சிறந்தது இன்னும் CRD மானிடர்களை பயன்படுத்தும் போது அதிக மின்சாரம் செலவளிக்கப்படுகிறது.

கணினி பயன்பாட்டில் 

கணினிக்கு தேவையான சிறிய 600 வாட்ஸ் UPS பயன்படுத்தும் போது, ஒரு வருடம் வரைதான் அதன் மின்கலன்கள் சிறப்பாக செயல்படும், அதன் பிறகு மெல்ல மெல்ல செயல் இழக்கத் தொடங்கிவிடும், அப்போதைய கட்டங்களில் மின்கலனை மாற்றி விடவேண்டும், வெறும் 750 ரூபாய் செலவு செய்தால் போதும், இல்லையென்றால் உங்கள் கணினி ஹார்ட்டிஸ்க்குக்கு முறையற்ற மின்சாரம் செல்லும், SMPSன் செய்ல்திறன் குறைந்து மதர்போர்டு வரை பாதிக்கப்படும்.

பிறகு UPS வாங்கும் போது நல்ல நிறுவனங்களை பார்த்து வாங்க வேண்டும், மலிவான லோக்கல் UPS வாங்கும் போது அவை தேவையில்லாத நேரத்திலும் மின்சாரத்தை மின்கலனுக்கு அனுப்பிக்கொண்டேயிருக்கும், இதனால் மின்சாரம் செலவளிக்கப்படும், விலை கூடுதலானாலும் நல்ல நிறுவனங்களின் பொருட்களை வாங்கவேண்டும்,அதில் தானியங்கி மின்சாரம் சேமிக்கும் முறையிருக்கின்றதா என பார்த்து வாங்க வேண்டும்,தேவையில்லாத நேரங்களில் மின்சாரம் செலவளிப்பதை தடுக்கும், பணமும் மிச்சமாகும். என்ன தோழர்களே இது போன்ற பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்பீர். 

டிஸ்கி : நீ சொல்லுவது எல்லாம் சரிய்யா இதுக்கு முறையான மின்சாரம் வேண்டுமே? என்று கேட்கிறீர்கள் அதற்கு நான் என்ன செய்யமுடியும். ஆட்சியாளர் கைகளில்தான் உள்ளது.

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

கவலை , அச்சம் , பதற்றம் ... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது !   “ நாங்கெல்லாம் பயத்துக்கே பயங்காட்றவங்க , தெரியுமா ” என்று ச...