Total Pageviews

Thursday, April 26, 2012

மின்சாரத் தட்டுப்பாட்டை தடுப்பது எப்படி?மின்சார தட்டுபாட்டுக்கு காரணம் நீங்கள்தான்!


என்ன நண்பர்களே இது உங்களை கோபம் கொள்ள வைக்கின்றதா அமைதியாக சிந்தித்து பார்த்தால் நாம்தான் மின்சாரத்தை தின்று தீர்க்கின்றோம் எப்படியென்பதை இந்த கட்டுரை மூலம் விளக்குகின்றோம்,பல லட்சத்தில் வீடு கட்டுகிறோம் ஆனால் முறையாக மின் இணைப்புகளை தருகிறோமா என்றால் இல்லையென்றே வருத்ததுடன் நாம் கூற வேண்டியுள்ளது, வெளிநாடுகளில் வீட்டுக்கு மின்சார இணைப்பு பிளான்(வரைபடம்) தயாரிப்பதைப் போல் இந்தியாவில் ஒரு சிலர் தவிர யாரும் வரைபடம் தயாரிப்பது இல்லை,மின்சார கேபிள்களை தரமானதாக பயன்படுத்துவதில்லை, மலிவான விலையில்தான் பெரும்பான்மையினர் பயன்படுத்துகின்றனர், வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் செல்லும்போது அனைத்து மின் இணைப்பையும், யுபிஎஸ், குளிர்சாதன பெட்டி தவிர அனைத்தும் துண்டிக்கபடும் வகையில் வெளியே ஒரு பொத்தான் வைக்க வேண்டும் அதனால் மின்சாரம் மிச்சப்படுவதுடன், மின்கசிவினால் ஏற்படும் தீவிபத்தை தவிர்க்கலாம், இனி எப்படி மின்சாரத்தை சிக்கனம் செய்வது என 
பார்க்கலாம்.


நாம் பயன்படுத்தும் விளக்குகள்
விளக்குகளில் குண்டுபல்புகள் மின்சாரத்தை பெரும்வாரியாக தின்றுவிடும் அரக்கன், அதுமட்டுமில்லாமல் பூமியை வெப்பமயமாக்குதலில் பெரும்பங்கு வகிக்கின்றது. கேரளாவில் மின்சாரவாரியம் சார்பில் குண்டுபல்புகளை பெற்றுக் கொண்டு சிஎப்எல் பல்புகளை தருகிறார்கள், தமிழகத்திலும் இம்முறையைப் பயன்படுத்தலாம், குழல் விளக்குகளில் இன்னும் மலிவு விலையில் கிடைக்கும் நாற்பது வாட்ஸ் பல்புகளையே பயன் படுத்து கின்றோம், அதை விட சற்று விலையதிகமான 18வாட்ஸில் மெல்லிய குழல் விளக்குகள் கடைகளில் கிடைக்கின்றன,இவை அதிக பிரகாசத்துடன் எரிகின்றன இதன் விலை நாற்பது ரூபாய்க்குள் அடங்கும், சாதாரண சோக் பயன்படுத்துவதை தவிருங்கள் எலக்ட்ராணிக் சோக் பயன்படுத்துங்கள் இவை மின்சாரத்தை அதிகமாக செலவு செய்வதில்லை, இதை யாரும் அதிகளவில் பயன்படுத்துவதில்லை.இதை பயன் படுத்தி மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.


நாம் பயன்படுத்தும் மின்சார சாதனங்கள்
மிக்ஸி,கிரைண்டர்,மின் விசிறிகள் வாங்கும் போது அதன் விலையை மட்டும், அல்லது பிரபலமான நிறுவனம் இரண்டை மட்டும் பார்க்கிறோம், ஆனால் முக்கியமாக பார்க்க வேண்டியது அது எத்தனை வாட்ஸ் என பார்ப்பதில்லை, ISI முத்திரை மட்டுமின்றி, அதன் வாட்ஸ் கண்டிப்பாக கணக்கிட வேண்டும், விலை குறைவான மலிவு விலை மின் சாதனங்கள் மின்சாரத்தினை தேவையில்லாமல் தின்று விடும், மின்சார கசிவினை ஏற்படுத்தி விபத்தினை உண்டு பண்ணும்.

600வாட்ஸ் மிக்ஸியில் அரைக்கும் அதே பொருளை வெறும் 325வாட்ஸ் மிக்ஸி அரைத்துவிடும்,பிறகு எதற்கு 600வாட்ஸ் மிக்ஸி,உங்கள் தேவை அறிந்து அதற்கு தகுந்தது போல் பொருட்களை வாங்க வேண்டும், குறைவான வாட்ஸ் கொண்ட பொருட்கள் சற்று விலையதிகம்தான் என்றாலும் வருட கணக்கு பார்க்கும் போது மிக அதிகமான பணம் சேமிப்பு அடைகிறது மட்டுமில்லாமல், பொருட்கள் எளிதில் செயல் இழப்பதில்லை, அதற்கு நீண்ட கால வாரண்டியும் வழங்குகிறது ஏனைய நிறுவனங்கள்.

மற்றும் கார்டனில் மற்றும் வீட்டு முகப்பில் வைக்கப்படும் அழகு விளக்குகள் பியூஸ் போகும் போது மாற்றுவதில்லை சிலர்,இதன் காரணமாக மழை பொழியும் போது ஈரபதம் காரணமாக பியூஸ் போன பல்பு மூலம் ஏராளமான மின்சாரம் விரையமாகிறது,முக்கியமாக ஒவ்வோரு வீட்டுக்கும் எர்த் தரவேண்டும் இது பாடி எர்த் மூலம் பாதிக்கப்படுவதை தவிர்க்கிறது, நம் மின்சாதனங்கள் கெட்டுபோகாமல் இருக்கவும் உதவுகின்றது.


உதாரணத்திக்கு ஒரு குண்டுபல்பு விலை பதினைந்து ரூபாய், அது செலவு செய்யும் மின்சாரம் இரு மாதத்திக்கு குறைந்த பட்சம் 60 யூனிட்கள், 60X1.00=60.00 வருடத்திக்கு 60X6=360 ஆக வருடத்திக்கு 360 ரூபாய் செலவு, பல்பு வருடத்திக்கு எப்படியும் மூன்று வாங்க வேண்டும், அது 45 ரூபாய், மொத்தம் 415 ரூபாய், ஆனால் 12 வாட்ஸ் சிஎப்எல் பல்ப் உயர்தரத்தில் வாங்கினால் 180 ரூபாய்,  ஒரு வருடம் வாரண்டி, ஒரு வருடத்திக்கு மின்சார செலவு வெறும் 60யூனிட்கள் 180 + 60 = 240 பார்த்தீர்களா தோழர்களே! 240 ரூபாய் மட்டுமே, சீரற்ற மின்சாரம், இடி,மின்னல் போன்ற இயற்கை பாதிப்பு தவிர இந்த பல்புகள் எளிதில் செயல் இழக்காமல் மூன்று வருடம் வரை உழைக்கின்றது, சிந்தித்து பாருங்கள்.

அடுத்தது கம்பி ஹீட்டர் பயன்படுத்துவது மிக அதிகமான மின்சாரத்தை செலவு செய்யும், அதற்கு பதிலாக இன்டெக்சன் அடுப்பு பயன்படுத்துவது சிறந்ததுவசதியுள்ளவர்கள் சோலார் ஹீட்டர் பயன்படுத்துவது நல்லது. வாசிங்மிசின், குளிர்சாதன பொருட்களை வாங்கும் போது ஐந்து நட்சத்திர குறியிட்ட பொருட்களை வாங்குவது நல்லது, இவை மிகக்குறைவான மின்சாரத்தை செலவு செய்கின்றது, கணினி,தொலைகாட்சிகளில் LED,LCD,பயன்படுத்துவது மிகச்சிறந்தது இன்னும் CRD மானிடர்களை பயன்படுத்தும் போது அதிக மின்சாரம் செலவளிக்கப்படுகிறது.

கணினி பயன்பாட்டில் 

கணினிக்கு தேவையான சிறிய 600 வாட்ஸ் UPS பயன்படுத்தும் போது, ஒரு வருடம் வரைதான் அதன் மின்கலன்கள் சிறப்பாக செயல்படும், அதன் பிறகு மெல்ல மெல்ல செயல் இழக்கத் தொடங்கிவிடும், அப்போதைய கட்டங்களில் மின்கலனை மாற்றி விடவேண்டும், வெறும் 750 ரூபாய் செலவு செய்தால் போதும், இல்லையென்றால் உங்கள் கணினி ஹார்ட்டிஸ்க்குக்கு முறையற்ற மின்சாரம் செல்லும், SMPSன் செய்ல்திறன் குறைந்து மதர்போர்டு வரை பாதிக்கப்படும்.

பிறகு UPS வாங்கும் போது நல்ல நிறுவனங்களை பார்த்து வாங்க வேண்டும், மலிவான லோக்கல் UPS வாங்கும் போது அவை தேவையில்லாத நேரத்திலும் மின்சாரத்தை மின்கலனுக்கு அனுப்பிக்கொண்டேயிருக்கும், இதனால் மின்சாரம் செலவளிக்கப்படும், விலை கூடுதலானாலும் நல்ல நிறுவனங்களின் பொருட்களை வாங்கவேண்டும்,அதில் தானியங்கி மின்சாரம் சேமிக்கும் முறையிருக்கின்றதா என பார்த்து வாங்க வேண்டும்,தேவையில்லாத நேரங்களில் மின்சாரம் செலவளிப்பதை தடுக்கும், பணமும் மிச்சமாகும். என்ன தோழர்களே இது போன்ற பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்பீர். 

டிஸ்கி : நீ சொல்லுவது எல்லாம் சரிய்யா இதுக்கு முறையான மின்சாரம் வேண்டுமே? என்று கேட்கிறீர்கள் அதற்கு நான் என்ன செய்யமுடியும். ஆட்சியாளர் கைகளில்தான் உள்ளது.

No comments:

Post a Comment

சர்க்கரை நோயாளிகள் - உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

  சுகர்னு  டாக்டர் கிட்ட போராங்க ..   அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet  கொடு க்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொட...