Total Pageviews

Thursday, April 5, 2012

புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மன அமைதியுடன் வாழ முடியும்.



படித்தில் பிடித்தது
 
 1.வன்ருவன் மற்றனுக்கு  உள்ளத்தாலும் உடலாலும் தீங்கு செய்யாமல் இருக்கி ன்றாரோ அவனே  மனிதன்!

2. பொருள் இல்லார்க்கு இவ்வுகம்   ல்லைருள் இல்லார்க்கு எவ்வுமும் ல்லை!

3. உன்னிடம் மற்றர் எப்படி  ந்து கொள்ள வேண்டும் நினைக்கின்றாயோ, முலில் அதன்டி நாம்  ந்து கொள்ள வேண்டும்;

4.பிருக்கு வி செய்யாவிட்டாலும்உத்திரம் செய்யாமல் இருந்தாலே வி செய்ர்க்கு  ம்!

5.விட்டுக் கொடுத்ர்கள்  கெட்டு போ தில்லை  கெட்டு போக நினைப்பவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை!

6. செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.

7. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகி விடுகிறாய்.

8. செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டி யையும் ஒன்றாக நினைத்து  வாழும் துறவிகளின்  வாழ்வே சிறந்தது!

9. ன்னை யாராவது புகழும் போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே. புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மன அமைதியுடன் வாழ முடியும்.

10.தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளை களிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்க வழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறி முறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.


11.சிலர் தேவையே இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதி யாகவே இருங்கள்.


12.சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.


13. எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது. கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்குக் கட்டுப் போடும் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம், சோதனையில் கூடவே வரும் நட்பு உறவு பூர்த்தியாகி விடுகிறது.


14. மண்ணாசை!பொன்னாசை! பெண்ணாசை!   மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.பெண்ணாசை வளர்ந்து விட்டால், பாபம் நிகழ்கிறது. இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவுஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்தது.


  பற்றற்று வாழ்வதென்றால், எல்லா வற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்லஇருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்என்று சலனங் களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.


 15. தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள்  முட்டாள்களல்ல


 (1)  கஷ்டத்திலும் நேர்மையாக இரு

 (2)நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே

 (3)உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்.   தெய்வ நம்பிக்கை உன்னை கை விடாது


16. நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே உன்னிடம் திரும்பி விடுகின்றன. அந்த அளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. ஒருவனை எந்த வார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒரு முறை நீ திட்டப்படுகிறாய்.

  “எப்படித் தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள்என்று கிறிஸ்தவ வேதம் கூறுகிறது. “செய்த வினை, அதே வடிவத்தில் திரும்ப வரும்என்று முதன் முதலில் போதித்தது இந்துமதம் தான். “பாவம் என்பது நீ செய்யும் தீமை.” “புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை.”  “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.” “அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.” 


  “விநாச காலே விபரீத புத்தி.”


17.பாவமும் குற்றமும் செய்துவிட்டுத் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?’   `யாருக்கு நீ பாவம் செய்தாலும் அதற்குத் தண்டனை உண்டுஎன்பது அழிக்க முடியாத உண்மை.


 18.ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாவங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளேஅவற்றுக்கு உடனே மன்னிப்பு உண்டு.அறிந்து செய்யும்  தவறு,  தவறல்ல; அது குற்றம்.அதற்குமன்னிப்புக் கிடையாது!


 19.ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயற்காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. நாணலோ  பணிந்து,  வளைந்து,  எந்தக்  காற்றிலும்   தப்பிவிடுகிறது.


   20.  எதற்கும்  தான் காரணமல்ல; ஏதோ ஒரு சக்திதான் காரணம்என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.


   `மற்றவர்களுக்கு என்ன தெரியும்என்று நினைப்பவன்,சபைகளில்  அவமானப் படாமல் தப்பியதில்லை. ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு. அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.
 
  21.எதுவரை நம்மிடம் ஆசைகள் இருக்குமோ, அதுவரை அவற்றால் உண்டாகக் கூடிய துன்பம், கவலை, அமைதியின்மை ஆகியவையும் கூடவே இருக்கும். ஆசைகளை விட்டால், செயல்கள் உடனே நம்மில் இருந்து அகன்று விடுகின்றன. அமைதி  கிடைக்கிறது.

  22. மனிதனும், வாழ்நாளில் சிறு சிறு தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், அதுவே ஒரு பெரிய புண்ணிய மூட்டையாகி விடும். இந்த புண்ணிய மூட்டை தான் பரலோகத்திலும் சரிஅடுத்த பிறவியிலும் சரி, இவனுக்கு உதவும். ஒருவன் வாழ்க்கையில் சுகமாக இருக்கிறான் என்றால், “அவனுக்கென்ன, பூர்வஜென்ம புண்ணியம்இப்போ அனுபவிக்கிறான்…’ என்று சொல்கின்றனர் அல்லவா? அந்த பூர்வஜென்ம புண்ணியம், இப்போது அவனுக்கு உதவுகிறதுபாவம் செய் திருந்தால் அதற்குண்டான வேதனையை அனுபவிக்கிறான். இரண்டையும் நாமே தான் சம்பாதித்துக் கொள்கிறோம்.       

 

23நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது. சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது.


24. பகவான், மனிதர்களுக்கு மனதைக் கொடுத்தான். அதிலே எண்ணங்களை எழச் செய்தான். எண்ணங்களில் ஆசைகளைத் தோன்றச் செய்தான். ஆசையின் காரணமாக பாவங்களைச் செய்கின்றனர். பாவத்தின் காரணமாக பிறவி ஏற்படுகிறது. பிறப்பதும், பாவம் செய்வதும், மீண்டும் பிறப்பதுமே தான் தொழிலா? இதற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடையாதா? ஆசைகளை விட்டால் விடுதலை கிடைக்கும் என்று சொன்னார்கள். இதற்கு ஆசார்யர்களும், மகான்களும் தான் வழி காட்ட வேண்டும். அவர்களை அண்டினால் வழி பிறக்கும். ஆசை என்பது மட்டுமல்ல, பொறாமை என்பதும் கூடாது. இதை, “மாச்சர்யம்என்பர்.


  நான், என்னுடையது என்று உலகில் என்ன சார் இருக்கிறது! ஏதோ அவன் கொடுத்தான்! வைத்துக் கொண்டிருக்கிறேன். அவன் எடுத்துக் கொள்வதானால் கொடுத்து விட வேண்டியது தானே…’ இப்படி ஒரு எண்ணம் இருந்து விட்டால் வாழ்க்கையே ரசமாக இருக்கும். பரமானந்தம் பெறலாம். அதனால், “தான்அற்றது ரசம் ன்கின்றனர். குழப்பம் வேண்டாம். மனத் தெளிவு இருந்தாலே போதும்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...