Total Pageviews

Monday, April 2, 2012

பன்றி காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி ?

பன்றி காய்ச்சல் தும்மல், இருமலினால் காற்றின் மூலம் பன்றி காய்ச்சல் பரவுகிறது. ஆனால் அமெரிக்காவில் 'டிஸ்யூ' பேப்பர் மூலமாகவும், கைகள் மூலமாகவும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மூக்கில் இருந்து ஒழுகும் நீரை அல்லது சளியை 'டிஸ்யூ' பேப்பரில் துடைத்து விட்டு கீழே போடுவதாலும் பஸ், ரெயில், லிப்ட் போன்ற இடங்களில் கைப்பிடிகளில் பிடித்து செல்வதாலும் பன்றி காய்ச்சல் பரவுகிறது.

பன்றி காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி?

பன்றி காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு சளி, வறட்டு இருமல், கடுமையான காய்ச்சல் இருக்கும். மூக்கில் இருந்தும் கண்ணில் இருந்தும் நீர் வடியும், உடல்வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும். தனி அறையில் சிகிச்சை அளிக்க வேண்டும், மருத்துவ மனைகளில் சென்று நோய் பாதித்தவர்களை பார்க்க போவதை தவிர்க்க வேண்டும்.

இந்நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும்.

மருத்துவமனை ஊழியர்கள், கவச உறைகள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு இந்நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும் பழக்கத்தை செயல்படுத்த வேண்டும். நோய் பாதித்தவர்களின் ஆடைகளை தனியாக வைத்து கொதிக்கும் நீரில் போட்டு துவைக்க வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல், இருமல், தலைவலி ஏற்பட்டால் மருத்துவர்களை உடனே அணுக வேண்டும்.

தேவைப்பட்டால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். மேலும் இந்நோய் பற்றிய தகவல்களை அரசின் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். இலவச தொலைபேசி எண் வழங்கி தகவல் கொடுக்கலாம். பொது மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தலாம் .

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...