Total Pageviews

Wednesday, April 11, 2012

நிலநடுக்கம் வந்தால் தப்பிப்பது எப்படி?



நிலநடுக்கம் போன்ற இயற்கை மாற்றங்கள் எப்போது நிகழும் என்று தற்போதைய நவீன கால தொழில்நுட்பத்தால் கூட முன்கூட்டியே கண்டறியமுடியாத நிலை இருக்கிறது.

 எனவே,காரை ஓட்டும்போது சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை கண்காணித்து ஓட்டுவதும் அவசியம்.

நிலநடுக்கம் போன்ற பெரிய இயற்கை சீரழிவுகள் வரும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காரில் செல்லும்போது நிலநடுக்கம் வந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை குறித்து காணலாம்.

காரை ஓட்டிச் செல்லும்போது ஸ்டீயரிங் வீலில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தாலும், கார் பேலன்சாக செல்லவில்லை என்றாலும் உடனடியாக காரில் ஹேண்ட் பிரேக் போட்டு விட்டு இறங்கிவிடுங்கள்.

முடிந்தவரை மரங்கள், கட்டிடங்கள் இல்லாத பகுதியிலோ அல்லது சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு வெளியேறிவிடுங்கள்.

மேம்பாலங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் செல்லும் பகுதிகளுக்கு கீழே நிற்க வேண்டாம். நிலநடுக்கத்தை உணர்ந்தால் மரங்கள் கட்டிடங்கள் இல்லாத சமவெளியான பகுதிகளுக்கு செல்வது பாதுகாப்பானது.

பாலங்களில் செல்லும்போது அசாதாரணமான சூழ்நிலையை உணர்ந்தால் முடிந்தவரை பாலத்திலிருந்து கீழே இறங்கி காரை விட்டு வெளியேறிவிடுங்கள். மேம்பாலங்கள் வழியாக செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

மலைப்பாங்கான சாலைகளில் நிலச்சரிவு ஆபத்து இருக்கும் என்பதால், உடனடியாக அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல முயற்சி செய்யுங்கள்.

நிலநடுக்கம் வரும்போது தரைகளில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், தொடர்ந்து காரில் செல்ல முயற்சிக்காதீர்.

நிலநடுக்கம் வந்ததை உணர்ந்தால் கடலோர சாலைகளில் செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். சுனாமி வரும் ஆபத்து இருப்பதால் கடலோர சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

Thanks to Oneindia.com

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...