தனக்கு தெரிந்தை மற்றவருககு சரியான தருணத்தில்
அவர் உதவி கோராமலே, தாமாகவே மனம் உவந்து செய்வதே உதவி
கணினியில் ஆ...... பாசத்தை விடுத்து
ஆன்மீகத்தை, நற் சிந்தனையுள்ளவற்றை மட்டும் நாடு, தேடு.
எதுவரை நம்மிடம் ஆசைகள் இருக்குமோ, அதுவரை அவற்றால்
உண்டாகக் கூடிய துன்பம், கவலை, அமைதியின்மை ஆகியவையும்
கூடவே இருக்கும். ஆசைகளை விட்டால், பாவசெயல்கள் உடனே
நம்மில் இருந்து அகன்று விடுகின்றன. அமைதி கிடைக்கிறது.
மண்ணாசை! பொன்னாசை! பெண்ணாசை! விட்டு விடு
மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.
ஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.
பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு
ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!
“இருப்பது போதும் ; வருவது வரட்டும்;
போவது போகட்டும் ; மிஞ்சுவது மிஞ்சட்டும்”
என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே
பற்றற்ற வாழ்க்கையாகும்.
No comments:
Post a Comment