நாம் நம்மைவிட அனுபவசாலிகள் கூறும் அறிவுரைபடி நடந்தால்
நமக்கும் நல்லதே நடக்கும்.
ஆடைகளில் நிறம் மாறலாம்..
குணத்தில் நிறம் மாறக் கூடாது
குணத்தில் நிறம் மாறக் கூடாது
எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் முடிக்க
வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே ஏற்படும்.
எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன்,
அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது
சிந்திக்கும் திறனும்,புத்திசாலித்தனமும்
இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
நாம் இருக்கும் இடமே உலகம்,,,
நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது,
நமக்கு எல்லாம் தெரியும்.. என எண்ணி...
நம் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து விடக்கூடாது.
வாழ்க்கையில் முன்னேறிச் சென்று வெற்றி பெற்றால் போதும்
என்று நில்லாது.. மேலும் மேலும் முயன்றால் வெற்றிமீது வெற்றி
நம்மை வந்து சேரும்.
முயற்சி திருவினையாக்கும்....முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்
முயற்சி திருவினையாக்கும்....முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்
நன்றி கெட்டவர்களுக்கு உதவி செய்வது நல்லதல்ல..
மேலும்...'பாத்திரமறிந்து பிச்சை இடு'
ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறக்கக்கூடாது.
அதே சமயம் யாரேனும் நமக்கு தீமை செய்தால் அதை மறந்துவிடுவது நல்லது.
நாமும்...நமக்கு கிடைக்கும் பொருளை வைத்து சந்தோஷம் அடைய
வேண்டுமேயன்றி பெரும் பொருள் வேண்டி
பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.
நாம் செய்யும் நல்லது.. கெட்டது எல்லாவற்றையும் இறைவன் நம்முடன் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் .... அவன் நம்
செயலுக்கு ஏற்ப பின்னாளில் தண்டனையைக் கொடுப்பான்
நாமும் யாருக்கும் தீங்கு
செய்யக்கூடாது.அதே சமயம் யாரும் நமக்கு தீங்கு செய்யக் கூடாது என்பதால்..
அவர்கள் நம்மிடம் அச்சம் கலந்த மரியாதை ஏற்படும் வண்ணம்
நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் இளிச்சவாயர்களாக
ஆகிவிடுவோம்
மூடர்களை திருத்துவது என்பது மிகவும்
கடினம்
நாம் மூடர்களுக்கு அறிவுரை சொல்லும்போது மிகவும் கவனமாக
இருக்கவேண்டும்.
No comments:
Post a Comment