Total Pageviews

Thursday, February 6, 2014

நாடு வளம் பெற கலாம் கூறும் 4 அம்சத் திட்டம்

இந்தியாவை வளமைமிக்க, வலிமை மிக்க நாடாக மாற்ற நான்கு அம்சங்களை முன் வைக்க விரும்புகிறேன்.

இந்த நான்கு அம்சங்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு செயல்பாட்டின் மூலம் சாத்தியமாகும். நமது நாட்டின் பொருளாதாரம் மூன்று பிரிவுகளாக உள்ளது. அந்த மூன்று பிரிவுகளையும் நான்கு கிரிடுகள் மூலம் இணைக்கலாம். 

நான்கு 'கிரிடுகள்'..
முதல் கிரிட் அறிவு. இது நமது நாட்டின் பல்கலைக்கழகங்களை, சமூக பொருளாதார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகங்கள் ஆகியவற்றுடன் இணைக்கிறது. அடுத்த கிரிட் சுகாதாரம். இது நமது அரசின் சுகாதார கழகங்களை, வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுடன் இணைக்கிறது.

அடுத்தது இ கவர்னன்ஸ் எனப்படும் மின் ஆளுமை. இது மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்டங்கள், தாலுகாக்கள் அளவிலான அலுவலகங்களை இணைக்கிறது.

நான்காவது புரா (PURA). அதாவது ஊரகப் பகுதிகளுக்கு நகர்ப்புறப் பகுதிகளின் வசதிகளைத் தருவது (Providing Urban Amenities in Rural Areas). இந்த நான்கையும் நம்மால் சாதிக்க முடிந்தால் இந்தியா நிச்சயம் செழுமையான, வளமையான, வலிமையான நாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. 

உலகை அச்சுறுத்தும் இரண்டு முக்கியப் பிரச்சினைகள் என்னவென்றால், எண்ணை வளம், நிலக்கரி, காஸ் ஆகியவற்றின் பற்றாக்குறை. 2வது சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவது. குடிநீர் மேலாண்மை... 

இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் மேலாண்மை. குடிநீர்ப் பிரச்சினைக்கு இந்தியா நிரந்தர தீர்வு கண்டால், அமைதி, வளமை, செழுமை, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றை இந்தியாவால் சாதிக்க முடியும்.

 மனிதகுலம் தழைத்தோங்க தண்ணீர் அவசியம். குடிநீர், விவசாயம், தொழில்துறை மற்றும் துப்புறவு ஆகியவற்றுக்கு தண்ணீர் மிகவும் அவசியம். இந்த லட்சியங்கள் அனைத்திலும் நம்மால் வெல்ல வேண்டுமானால் நம்மிடம் அறிவிப்பூர்வமாக சிந்திக்கக் கூடிய, திறமையான தலைவர்கள் இருக்க வேண்டும். அதுபோன்ற தலைமை இருந்தால்தான், நாம் பெரும் மாற்றங்களை சந்திக்க முடியும், சாதிக்க முடியும் என்றார் கலாம்.

l

பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ?


பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் விரும்பப்படுவதாலும், பெண் குழந்தைகளை மதிக்காத காரணத்தாலும் பெண் குழந்தைகளை மனமறிந்தே கொல்வது பெண்சிசுக்கொலையாகும். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை அதிகமாகப் போற்றும் கலாச்சாரமுடைய சமுதாயத்தில் இப்பழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

பெண் சிசுக்கொலை குறித்த உண்மைகள்:

அண்மைக்கால யூனிசெஃப் அறிக்கையின்படி இந்திய நாட்டில் 50 மில்லியன் சிறுமியரும், பெண்களும் தொடந்த பெண்பால் வேற்றுமையுணர்வு காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகின் பல நாடுகளில் ஏறத்தாழ 100 ஆண் குழந்தைகள் பிறக்கும்போது 105 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 90க்கும் குறைவாகவே பெண்கள் இருக்கிறார்கள்.

“இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கருவிலேயே கலைக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் கூறுகின்றன.’’


கண்களை மறைக்கும் மறைவான ஆபத்து:

ஏறத்தாழ சமமாக இருக்கவேண்டிய பிறப்பு இறப்பு விகிதத்தில், அதிகரித்துவரும் பெண்கருக்கொலை, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் குழந்தைகளும் பெண்களும் வன் புணர்ச்சிக்கு உள்ளாவர். ஒரு பெண்ணைப் பலர் மனைவியாகப் பங்கிட்டுக்கொள்ளும் நிலையும் ஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளன. இச்சூழல் ஏற்படின் அது சமுதாயப் பண்பாட்டினை, மதிப்பினைப் படிப்படியாகக் குறைத்து நெருக்கடி நிலையை ஏற்படுத்தலாம்.


பெண் சிசுக்கொலைக்கான காரணங்கள்:

என்ன பெண் குழந்தையா? எப்படி கட்டிக்கொடுக்க போகுற? “போன்ற சமுதாயத்தின் வார்த்தைகளுக்கு அஞ்சியே பல பெற்றோர்கள் இந்த பாவச்செயலுக்கு துணிகின்றன.’’ பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த மனநிலை வறுமையிலிருக்கும் குடும்பங்களில் மட்டும் நிலவவில்லை. இத்தகைய பாலின வேறுபாடு, வெறுப்பு தோன்ற சமுதாய விதிகளும் கலாச்சார நம்பிக்கைகளுமே காரணம். இத்தகைய சமுதாய விதிகளை மாற்றியமைப்பதன் மூலமாக மட்டுமே பெண் சிசுக்கொலை என்னும்  நிலையை மாற்ற முடியும்.

இந்திய நாட்டில் பெண் குழந்தைகளை விரும்பாத அல்லது தேர்ந்தெடுக்காத நிலைக்குச் சமுதாயப் பொருளாதாரக் காரணங்களைக் கூறலாம். இந்திய நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பின்வரும் மூன்று செய்திகளைப் பெண் குழந்தைகளை ஒதுக்குவதற்குக் காரணங்களாகக் கூறுகின்றன.

அவைகள்:
1. பொருளாதாரப் பயன்பாடு,
2. சமுதாய கலாச்சாரப் பயன்பாடு,
3. மதச் சார்புடைய நிகழ்வுகளின் பங்கு; என்பனவாம்.


மகளைவிட மகன் வயல்வெளியில் வேலை செய்து அல்லது குடும்ப வியாபாரத்தை கவனித்து பொருளீட்டுவதினாலும், முதுமைக் காலத்தில் பாதுகாப்பும் ஆதரவும் தருவதாலும், பொருளாதாரப் பயன்பாடு கருதி மகனை இந்திய மக்கள் விரும்புகின்றனர்.

திருமணத்தின் மூலம் மகன் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள மனைவியை அழைத்து வருகிறான். மேலும் வரதட்சணை மூலம் பொருளாதாரத்தையும் உயர்த்துகிறான். ஆனால் மகளோ திருமணத்தின் மூலம் வீட்டை விட்டுப் பிரிவது மட்டுமின்றி வரதட்சணையாகப் பணமும் வீட்டிலிருந்து எடுத்துச் செல்கிறாள்.

சைனாவைப்போல் இந்திய நாட்டிலும் தந்தைக்குப்பின் மகன் குடும்பத்தலைவன் என்ற அமைப்பிருத்தலால் ஒரு மகனாவது குடும்பத்தில் இருக்கவேண்டும். பல மகன்கள் இருப்பது குடும்பத்திற்குக் கூடுதல் மதிப்பைத் தருகிறது.

பெற்றோர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவர்களின் அஸ்தியைக் கரைத்து, இறந்தவர் இறந்தவர்களின் ஆன்மா முக்தியடைய வழிகோலும் உரிமையும் வாய்ப்பும் ஒரு மகனுக்கு மட்டுமே இருப்பதால் இந்து மதத்தினர் ஆண் குழந்தையையே அதிகம் விரும்புகின்றனர். பெண் குழந்தைகள் வேண்டாமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது இதுவேயாகும்.


பெண் சிசுக்கொலையால் ஏற்படும் தீமைகள்:

கிழக்காசிய நாடுகளான இந்தியா, சீனா, திபெத்து ஆகியவையில் தான் இந்த கொடுமை பரவலாக நடக்கிறது. ஒரு நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையும், பெண்களின் எண்ணிக்கையும் சமன்பட்டு இருக்க வேண்டும். அதுதான் இந்த சமுதாயத்துக்கும் நல்லது, நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது. ஆனால் இந்தியாவில் நூறுஆண்களுக்கு தொன்னூற்றி மூன்று என்ற எண்ணிக்கையில் தான் பெண்கள் உள்ளன. மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவெனில் ஒரு கணக்கெடுப்பின் படி 2020, இல் இந்தியாவில் இருபத்தைந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும், சீனாவில் முப்பத்தி ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும் அளவுக்கு அதிகமாகவே இருப்பார். நினைத்துப்பாருங்கள் தற்பொழுதே ஆண்களுக்கு பெண் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதனால் பாலியல் முறைகேடுகள் அதிகமாய் பெருகிவிட்டன. மேலும் பல சமுதாய சீர்கேடுகள் பெருக வாய்ப்புள்ளது. கருக்கலைப்பு செய்யும் பொழுதும், பிறந்த பிறகு குழந்தையை கொல்லும் பொழுதும் தாய் மனதளவிலும், உடலளவிலும் பெரிதாய் பாதிக்கப்படுகிறாள்.


பெண் சிசுக்கொலையினைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள்:

சமுதாயத்தைச் சிரழிக்கும் இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வரவும், மக்களின் எண்ணப் போக்கை மாற்றவும் பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பல சட்ட திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. உதாரணமாகக் கிழ்காணும் சட்டங்களைக் கூறலாம்.


    வரதட்சணைக்கு எதிரான சட்டம் / வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1961
    கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரானச் சட்டம் - PCPNDT Act.
    பெண் கல்விக்கு ஆதரவான சட்டம்.
    பெண்ணுரிமைக்கு ஆதரவான சட்டம்.
    பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை / பங்கு தரும் சட்டம்.


ஒரு பெண்ணின் கருப்பையில் கள்ளமில்லாமல் வளரும் மனிதக் குழந்தையின் பாலினம் பெண்ணென்றால், அதை அழிக்க துணிகின்றனர் பெற்றேர். இந்த பாவத்தை செய்ய துணிவதில் ஆணென்ன? பெண்ணென்ன? பெற்ற மனம் தான் என்ன? அனைத்தும் கள்ளமுள்ள சமுதாயத்திற்கு அஞ்சுகிறது. கோழைத்தனமும், மூட நம்பிக்கைகளும், மாயையாய் இவர்களை ஆட்டிப் படைக்கிறது.

பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ?     

இதே சமூதாயம் தான் பெண் கடவுளர்களை வணங்குகிறது, இதே சமுதாயம் தான் மொழி, நாடு, நீர் நிலையென அனைத்தையும் தாயென கூறி உயர்த்துகிறது. ஆனாலும் ஏனிந்த பாகுபாடு? அன்று தாய்மடி பாராப் பச்சிளம் குழந்தைகளுக்கு சங்கில் கள்ளிப்பால் புகட்டியும், நெற்மணி ஊட்டியும் கொன்று வந்த மக்கள், இன்று விஞ்ஞான வளர்ச்சியில் கொலையை நேர்த்தியாய் செய்கின்றனர், தாய் கருப்பையிலேலே பாலினம் கண்டு உயிரைக் களைக்கின்றனர். இது கிராமப்பகுதியில் மட்டுமல்ல நகரப்பகுதிகளிலும் இத்தகைய கொடுமைகள் நடந்துவருகின்றன இதற்குத் தீர்வுதான் என்ன? “எங்கே இந்த நஞ்சு விதைக்கப்பட்டதோ அதையறிந்து இந்த குற்றத்தை வேரோடு பிடுங்கி எறியவேண்டும்.’’ஒழக்கம்

வாகனத்தை அதிக காலம் உழைக்கச் செய்வது எப்படி?

வாகனம் வைத்திருப்பவரும், புதிதாக வாங்க நினைப்பவரும் அதிகமாக கவனம் செலுத்துவது நீண்ட நாள் உழைப்பும், அதிகப்படி செலவில்லாத பாராமரிப்புச் செலவும், காலம் சென்றாலும் நல்ல மதிப்புடன் விற்பனை விலை அமைய வேண்டும் என்பதாகும். ஒவ்வொருவரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனத்தை சீரான முறையில் பராமரித்து வருவதன் மூலம் குறைந்த பெட்ரோல் செலவு, அதிக கால உழைப்பு, இனிய பயணம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை போன்றவைகளை அடையலாம். இந்த தொகுப்பில் குறிப்பாக வாகனம் வைத்திருப்பவர்கள் எவ்வாறு பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

முதலில் நீங்கள் வாகனம் ஓட்டும் விஷயத்தில் பின்வருவனவற்றில் கவனம் தேவை:-

1. உங்கள் வாகனத்தின் டயர்களில் சரியான காற்று அழுத்தம் உள்ளதா? என்பதை குறைந்தது மாதத்திற்கு இருமுறை சரிசெய்து கொள்ளுங்கள், எப்பொழுதும் வாகனத்தில் அமர்ந்து பயணிக்கும் முன் வாகனத்தின் டயர்களிலுள்ள காற்று அழுத்தம் சரியான நிலையிலுள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சரியான காற்று அழுத்தமில்லாமல் வாகனத்தை ஓட்டுவதால் அதிக பெட்ரோல் செலவும், விரைவில் டயர்கள் தேய்ந்தும் விடுகிறது, இதனால் விரைவில் புதிய டயர்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டியுள்ளது.

2. வாகனத்தை 'Start' செய்தவுடன் அதிக Accelerate செய்யாமல் நிதானமான விதத்தில் Engine-க்கு தகுந்த Accelerate தரவும் அது போல் அதிக நேரம் நிறுத்த வேண்டிய தருணத்தில் எஞ்சினை ஓடவிடாமல் நிறுத்துவது சிறந்தது.

3. சரியான வேகத்திற்கேற்ற Gear-யை செலுத்தவும். அடிக்கடி திடீர் வேகம் திடீர் மிக நிதான வேகத்துடன் செல்வதால் பெட்ரோல் செலவு அதிகமாகிறது. அதுபோல் Brake செய்யும்பொழுது சீரான முறையில் Brake- அழுத்தவும். அதனால் Brake தேய்மானத்தை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் அடிக்கடி திடீர் Brake போடுவதால் Brake Pad சீக்கிரமாக தேய்வதோடு அல்லாமல் வாகனத்தின் டயரில் ஒரு பகுதியிலும் அதிக தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.

4. தேவையில்லாமல் கிளட்ச்சியோ (Clutch) அல்லது Brake Pedal-யோ மிதித்து கொண்டிருக்க வேண்டாம். நெடுஞ்சாலையில் ஓட்டுபொழுது அதிகப்படியான வேகமில்லாமல் சீரான முறையில் வாகனத்தை ஓட்டினால் அதிக பெட்ரோல் செலவழிப்பை தடுக்கலாம். Signal போன்ற இடங்களில் சிலர் தேவையில்லாமல் Clutch-யில் காலை வைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

5. உங்கள் வாகனத்தில் அதிக படபடப்பு (vibration) இருந்தால் Wheel Alignment செய்துக் கொள்ளுங்கள். Wheel Alignment செய்வதால் டயர் தேய்மானத்தை தவிர்ப்பதோடு அல்லாமல் Vibration (படபடப்பு) தவிர்த்து Steering நேராகவும், ஒரே சீராகவும் அமைதல் போன்ற பயன்களை பெறலாம்.

பின்வருவனவற்றில் வாகனத்தின் சில முக்கிய Maintenance service பற்றிப் பார்ப்போம்.

பொதுவாக 3000 கிலோ மீட்டரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிறகு Engine Oil மாற்றுவது நல்லது. முக்கியமாக இது உங்கள் வாகனத்தை பொறுத்தும் மாற்றப்படும் Engine oil-யின் தரம் பொறுத்தது ஆகும். இஞ்சின் ஆயில்கள் உங்கள் வாகனத்தின் இஞ்சினுக்கு பாதுகாப்பாகவும், குளிரூட்டவும், தேய்மானத்தை தவிர்க்கவும் உதவுகிறது. எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வாகனத்தின் Engine Oil அளவு சரியாக உள்ளதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள் அதுப்போல் Oil Filter-யை குறைந்தது ஒவ்வொரு 10,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.

ஒவ்வொரு 20,000 கி.மீக்கு ஒருமுறை Spark plug நிலைமையை சரிபார்த்து தேவைப்பட்டால் புதிய Spark plug-யை மாற்றிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் Battery-யின் தண்ணீர் அளவு, Brake Pad மற்றும் அதன் Fluid அளவு, Clutch Fluid அளவு, Power Steering-ஆக இருந்தால் அதன் Fluid அளவை சரிபார்ப்பது நல்லது தேவைப்பட்டால் தேவையான அளவு நிரப்பிக் கொள்ளுங்கள்.


Automobile மெக்கானிக் வெர்க்ஷாப் செல்லும்போது மேலே குறிப்பிட்டதை சரி செய்வதோடு அல்லாமல் Clutch Pedal, Brake Pedal, Brake, Steering wheel மற்றும் அதன் தொடர்புகள் Tire & battery போன்றவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


ஒழுங்கான பராமரிப்பும், அக்கறையும், சீரான வாகன வேகமும், உங்கள் வாகனத்தை அதிக காலம் உழைக்க வைப்பது மட்டுமில்லாமல்  இனிய பயணமாக அமைய உதவும்.


எல்லாம் வல்ல  ஆண்டவன்  உங்கள் பயணங்களை இனிமையானதாக ஆக்குவானாக!

மழை காலத்தில் வாகனங்களை ஓட்டுவது எப்படி ?காரில் பயணம் செய்தால் நனையாமல் செல்லலாம் என்பது உண்மைதான்.


ஆனால் மழையில் பத்திரமாக செல்ல, சில நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து தான் ஆக வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக கவனம் வேண்டும்.


* ஸ்டைலாக ஒரே கையால் ஸ்டியரிங்கை வளைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். இரு கைகளாலும் பிடித்து ஓட்டுவது பாதுகாப்பானது.


* காரை ஓட்டும்போது மொபைல் போனில் பேசுவது, ஹெட்போனில் பாட்டுக் கேட்பது ஆகிய கவனத்தை திசை திருப்பும் விஷயங்களை சுத்தமாக "கட்' செய்து விட வேண்டும்


உங்கள் கவனம் முழுவதும் ரோட்டின் மீதும், இடது, வலது பக்க ரியர் வியூ கண்ணாடிகளின் மீதும் மாறி, மாறி இருந்தால்தான், பயணம் பத்திரமாக முடிந்து நீங்கள் வீட்டில் இருக்க முடியும்.


அடை மழையில் செல்லும் உங்கள் காரின் முன்னே திடீரென ஒரு மரமோ, மின் கம்பமோ சாயலாம். மின் ஒயர்கள் துண்டாகி விழலாம் அல்லது தண்ணீரால் சூழப்பட்ட பெரிய பள்ளத்தில் டயர் இறங்கலாம். ஆகவே மிதமான வேகத்தில் கவனமாக ஓட்டுதல் முக்கியம்.


* மழையில் கார் ஓட்டும்போது, முகப்பு விளக்குகள் பத்திரம். அத்துடன் மிஸ்ட் லைட்டுகள் கட்டாயம் தேவை. இரவில் மட்டுமல்ல, விடாது மழை தட்டியெடுக்கும் பகல் வேளையிலும் தேவைப்படலாம்.


 எதிரே வரும் வாகனங்களுக்கு, விளக்குகளால் "டிம்,டிப்' அடிப்பது, உங்களுக்கு மட்டுமல்லாமல், எதிரே வரும் வாகன ஓட்டுனருக்கும் பாதுகாப்பானது.

* மழையில் பயணிக்கும் போது, முன்னால் செல்லும் வாகனங்களை ஒட்டியபடி தொடர்வது நல்லதல்ல.

முன்னே செல்லும் வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்பு உங்களுக்கும் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போகலாம். ஆகவே குறைந்தது மூன்று கார் இடைவெளியில், முன்னே செல்லும் வாகனத்தை பின்தொடர்வது பாதுகாப்பானது.


* மழை நாட்களில் பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை இயக்குவது நல்லது. வேகமாக செல்லும்போது, நீங்கள் எடுக்கும் திடீர் முடிவுகளுக்கு உங்கள் கார் கட்டுப்படாமல் போகலாம்.


* தண்ணீர் அதிகளவில் பாயும் ரோடு வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். காரின் இன்ஜினில் தண்ணீர் புகுந்து விட்டால் கார் நின்று விடும்.


* மழையில் முக்கியமாக பிரேக்குகளை கவனிக்க வேண்டும். பிரேக்கின் ஈரமான டிரம்கள், சாதாரண நிலையை விட மந்தமாகவே செயல்படும். ஆகவே திடீரென பிரேக் போட்டால் கார் நிற்காமல் போகலாம்.


* தண்ணீர் எதிர்ப்பு திரவத்தை கண்ணாடிகளிலும் ரியர்வியூ கண்ணாடிகளிலும் ஸ்ப்ரே செய்யலாம்.

கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது!

கவலை , அச்சம் , பதற்றம் ... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது !   “ நாங்கெல்லாம் பயத்துக்கே பயங்காட்றவங்க , தெரியுமா ” என்று ச...