Total Pageviews

Thursday, February 6, 2014

நாடு வளம் பெற கலாம் கூறும் 4 அம்சத் திட்டம்

இந்தியாவை வளமைமிக்க, வலிமை மிக்க நாடாக மாற்ற நான்கு அம்சங்களை முன் வைக்க விரும்புகிறேன்.

இந்த நான்கு அம்சங்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு செயல்பாட்டின் மூலம் சாத்தியமாகும். நமது நாட்டின் பொருளாதாரம் மூன்று பிரிவுகளாக உள்ளது. அந்த மூன்று பிரிவுகளையும் நான்கு கிரிடுகள் மூலம் இணைக்கலாம். 

நான்கு 'கிரிடுகள்'..
முதல் கிரிட் அறிவு. இது நமது நாட்டின் பல்கலைக்கழகங்களை, சமூக பொருளாதார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகங்கள் ஆகியவற்றுடன் இணைக்கிறது. அடுத்த கிரிட் சுகாதாரம். இது நமது அரசின் சுகாதார கழகங்களை, வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுடன் இணைக்கிறது.

அடுத்தது இ கவர்னன்ஸ் எனப்படும் மின் ஆளுமை. இது மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்டங்கள், தாலுகாக்கள் அளவிலான அலுவலகங்களை இணைக்கிறது.

நான்காவது புரா (PURA). அதாவது ஊரகப் பகுதிகளுக்கு நகர்ப்புறப் பகுதிகளின் வசதிகளைத் தருவது (Providing Urban Amenities in Rural Areas). இந்த நான்கையும் நம்மால் சாதிக்க முடிந்தால் இந்தியா நிச்சயம் செழுமையான, வளமையான, வலிமையான நாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. 

உலகை அச்சுறுத்தும் இரண்டு முக்கியப் பிரச்சினைகள் என்னவென்றால், எண்ணை வளம், நிலக்கரி, காஸ் ஆகியவற்றின் பற்றாக்குறை. 2வது சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவது. குடிநீர் மேலாண்மை... 

இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் மேலாண்மை. குடிநீர்ப் பிரச்சினைக்கு இந்தியா நிரந்தர தீர்வு கண்டால், அமைதி, வளமை, செழுமை, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றை இந்தியாவால் சாதிக்க முடியும்.

 மனிதகுலம் தழைத்தோங்க தண்ணீர் அவசியம். குடிநீர், விவசாயம், தொழில்துறை மற்றும் துப்புறவு ஆகியவற்றுக்கு தண்ணீர் மிகவும் அவசியம். இந்த லட்சியங்கள் அனைத்திலும் நம்மால் வெல்ல வேண்டுமானால் நம்மிடம் அறிவிப்பூர்வமாக சிந்திக்கக் கூடிய, திறமையான தலைவர்கள் இருக்க வேண்டும். அதுபோன்ற தலைமை இருந்தால்தான், நாம் பெரும் மாற்றங்களை சந்திக்க முடியும், சாதிக்க முடியும் என்றார் கலாம்.

l

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...