Total Pageviews

Thursday, February 6, 2014

மழை காலத்தில் வாகனங்களை ஓட்டுவது எப்படி ?



காரில் பயணம் செய்தால் நனையாமல் செல்லலாம் என்பது உண்மைதான்.


ஆனால் மழையில் பத்திரமாக செல்ல, சில நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து தான் ஆக வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக கவனம் வேண்டும்.


* ஸ்டைலாக ஒரே கையால் ஸ்டியரிங்கை வளைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். இரு கைகளாலும் பிடித்து ஓட்டுவது பாதுகாப்பானது.


* காரை ஓட்டும்போது மொபைல் போனில் பேசுவது, ஹெட்போனில் பாட்டுக் கேட்பது ஆகிய கவனத்தை திசை திருப்பும் விஷயங்களை சுத்தமாக "கட்' செய்து விட வேண்டும்


உங்கள் கவனம் முழுவதும் ரோட்டின் மீதும், இடது, வலது பக்க ரியர் வியூ கண்ணாடிகளின் மீதும் மாறி, மாறி இருந்தால்தான், பயணம் பத்திரமாக முடிந்து நீங்கள் வீட்டில் இருக்க முடியும்.


அடை மழையில் செல்லும் உங்கள் காரின் முன்னே திடீரென ஒரு மரமோ, மின் கம்பமோ சாயலாம். மின் ஒயர்கள் துண்டாகி விழலாம் அல்லது தண்ணீரால் சூழப்பட்ட பெரிய பள்ளத்தில் டயர் இறங்கலாம். ஆகவே மிதமான வேகத்தில் கவனமாக ஓட்டுதல் முக்கியம்.


* மழையில் கார் ஓட்டும்போது, முகப்பு விளக்குகள் பத்திரம். அத்துடன் மிஸ்ட் லைட்டுகள் கட்டாயம் தேவை. இரவில் மட்டுமல்ல, விடாது மழை தட்டியெடுக்கும் பகல் வேளையிலும் தேவைப்படலாம்.


 எதிரே வரும் வாகனங்களுக்கு, விளக்குகளால் "டிம்,டிப்' அடிப்பது, உங்களுக்கு மட்டுமல்லாமல், எதிரே வரும் வாகன ஓட்டுனருக்கும் பாதுகாப்பானது.

* மழையில் பயணிக்கும் போது, முன்னால் செல்லும் வாகனங்களை ஒட்டியபடி தொடர்வது நல்லதல்ல.

முன்னே செல்லும் வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்பு உங்களுக்கும் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போகலாம். ஆகவே குறைந்தது மூன்று கார் இடைவெளியில், முன்னே செல்லும் வாகனத்தை பின்தொடர்வது பாதுகாப்பானது.


* மழை நாட்களில் பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை இயக்குவது நல்லது. வேகமாக செல்லும்போது, நீங்கள் எடுக்கும் திடீர் முடிவுகளுக்கு உங்கள் கார் கட்டுப்படாமல் போகலாம்.


* தண்ணீர் அதிகளவில் பாயும் ரோடு வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். காரின் இன்ஜினில் தண்ணீர் புகுந்து விட்டால் கார் நின்று விடும்.


* மழையில் முக்கியமாக பிரேக்குகளை கவனிக்க வேண்டும். பிரேக்கின் ஈரமான டிரம்கள், சாதாரண நிலையை விட மந்தமாகவே செயல்படும். ஆகவே திடீரென பிரேக் போட்டால் கார் நிற்காமல் போகலாம்.


* தண்ணீர் எதிர்ப்பு திரவத்தை கண்ணாடிகளிலும் ரியர்வியூ கண்ணாடிகளிலும் ஸ்ப்ரே செய்யலாம்.

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...