Total Pageviews

Tuesday, August 27, 2024

இன்றைய தலைமுறையினரின் போக்கு.....!!!


பயமாக இருக்கிறது.... இன்றைய தலை முறை யினரின் போக்கு.....!!!
 

 பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்!
 
படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.!
 
கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்!
 
யாருக்குமே மரியாதை தரக்கூடாது!
 
தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...!
 
எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. !
 
காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!
 
சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்!
 
பெண்கள் மீது மரியாதையே இல்லை!
 
ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரிதான் !
 
வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌!
 
ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது!
ஒரு வரி கூட வாசிப்பதில்லை!
 
தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது!
 
ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது!
 
வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டி ருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போட வேண்டும்!
 
பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌!
 
சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌!

 
எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை!
 

எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்!

 
ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது!

 
இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை!

 
பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..
பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்!

 
தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்!

 
அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்.
இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜோம்பியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..

 
பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை!

 
இவர்களுக்கும் அந்த இரு தலை முறையின ருக்கும் மலையளவு வித்தியாசம்!

 
மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இது இரு பாலருக்கும் பொருந்தும்!

 
காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்!

 
கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை!
 

எதிர்கால வரலாறு.....

 மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை!

தெருக்களில் பொழுதுபோக்கு நிகழ்வு,கேளிக்கை
நிகழ்ச்சி , மகளிர் நடனம், ஆடல், பாடல் போன்ற   
நிகழ்ச்சியில்   ஈடுபடுகின்றனர்!
பயமாக இருக்கிறது......இன்றைய தலை முறையின் போக்கு!

மனிதர்கள் விசித்திரமானவர்கள்!

  🥘மனிதர்கள் விசித்திரமானவர்கள். 🫕

 


 ஒரு உணவகத்தில்இங்கு அனைத்து உணவுகளும் இலவசம். 

ஆனால் கொஞ்சம் வாந்தி பேதி வரும் 🤮என்று எழுதி வைத்தனர்.

யாருமே சாப்பிட வரவில்லை கடையை மூடிவிட்டனர்!

 ******************

ஒரு பேருந்தில் 🚍 அனைவருக்கும் இலவசம்!

 ஆனால் அவ்வப்போது ப்ரேக் பிடிக்காது என்று எழுதினர்!

 ஆளே ஏறவில்லை!


**************************
ஒரு மருத்துவமனையில் 🏥 அனைத்து சிகிச்சையும் இலவசம் !

உயிருக்கு  உத்திரவாதம் இல்லை என்று எழுதி வைத்தால்,

 யாருமே வரவில்லை.

********************

குடி குடியை கெடுக்கும் உடல் நலத்தை கெடுக்கும் என்று எழுதி வைத்து விட்டு 

ஒதுக்கு புறத்தில் கடையை 10 மணிக்கு திறந்தால் ஒரே கூட்டம் !

எந்த விளம்பரமோ,  சலுகையோ, இலவசமோ, உட்கார  இடமோ, மரியாதையோ இல்லை. 

தினசரி 800 கோடிக்கு விற்பனை.

ரொக்கம் கொடுத்து சரக்கு விற்பனை ஜோர்.

🥘மனிதர்கள் விசித்திரமானவர்கள். 🫕

*********************

Saturday, August 24, 2024

நல்ல தூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

 நல்ல தூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

 


வெது வெதுப்பான குளியல், அமைதியான நேரம், அடிக்கடி வெது வெதுப்பான குளியல், சிறிது நேரம் தியானம் அல்லது நினைவாற்றலைப் பயிற்சி செய்வது நம் மனதை அமைதிப்படுத்த உதவும். தூக்கத்திற்கு முன் நம் மனதை அமைதிப்படுத்துவது முக்கியம், ஏனெனில் எண்ணங்கள் நம் மனதில் ஊடுருவி நம்மை அமைதியின்மைக்கு ஆளாக்க வேண்டாம்.

பெரும்பாலும், நாம் தூங்கத் திட்டமிடும் போது பல எண்ணங்கள் நம் மூளையை குழப்புகின்றன. அடுத்த நாளைத் திட்டமிடுவதும், 'அடுத்த நாளுக்காகக் கவலைப்படுவதை' போக்க, செய்ய வேண்டியவைகளின் பட்டியலை எழுதுவதும் நல்ல நடைமுறையாகும். இது உங்கள் தூக்க தாமதத்தை மேம்படுத்த உதவும்.

ஒரு நபருக்கு தேவையான அளவை விட குறைவான தூக்கம் வரும்போது தூக்கமின்மை ஏற்படுகிறது, அவர்கள் சிறந்த முறையில் செயல்பட வேண்டும். இது கடுமையான அல்லது நாள்பட்டதாக இருக்கலாம், மேலும் அறிவாற்றல் செயல்பாடு, உணர்ச்சி சமநிலை மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனைக் குறைப்பதன் மூலம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

தூக்கமின்மைக்கு சிகிச்சை தரும் முன்னர் மருந்துகளால் அல்லது மன உளைச்சலால் தூக்கமின்மை ஏற்படுகிறதா கண்டறிய வேண்டும். உறக்கம் தரக்கூடிய சூழ்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தினமும் இரவில் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகத்தான் தூங்குவது என்ற பழக்கம் தொடருமானால், மாரடைப்பு, பக்கவாதம் அல்லது புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை அதிகரித்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். தூக்கக் குறைபாடு உங்கள் ஆயுளைக் குறைக்கும் என்று மருத்துவப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு நாம் எல்லோருமே தூங்கப்போனால், நாளைக்கு காலையில் கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் மக்கள் எழமாட்டார்கள். உலகத்தில் நடக்கிற இயற்கையான மரணம் இது. ஒருவேளை நீங்கள் நாளைக்கு காலையில் எழுவதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? நீங்கள் உத்தரவாதத்துடன் வந்திருக்கிறீர்களா என்ன? கேரண்டி கார்டு இல்லை! நீங்கள் எழுந்திருப்பீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம், இந்த அளவுக்காவது நீங்கள் செய்ய வேண்டும்.

இது உங்கள் ஆன்மீக செயல்முறைக்கான முதல் படி!. நீங்கள் விழித்திருந்தால், ஒரு சின்ன கொண்டாட்டம் வேண்டாமா? நீங்கள் எழுந்து நடனமாடத் தேவையில்லை, ஒரு புன்னகையாவது செய்யலாமே? இன்னும் இது உயிரோடு இருக்கிறதே! ரெண்டரை லட்சம் மக்கள் இறந்துவிட்டார்கள், அவர்கள் எல்லாம், உங்களை, என்னைப் போன்ற மக்கள். ஆனால் இப்போது காணாமல் போய்விட்டார்கள்! எங்கே தேடினாலும் அவர்கள் இல்லை! ஆனால், இங்கே நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்! இதற்காக ஒரு பெரிய புன்னகை செய்வீர்களா?

Wednesday, August 21, 2024

மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஏன் ?

 


உலகின் மக்கள் தொகை 800 கோடியில் கஷ்டப் படாதவரோ அல்லது கஷ்டத்தை அனுபவிக்காத வரோ கிடையாது!

நீங்கள் மட்டும் விதிவிலக்கல்ல!

நிலத்தைக் கூரிய ஏர்முனை கொண்டு கீறுவது நிலத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்குமென்றால் பயிரிட முடியாது, விளைச்சல் இருக்காது,உண்ண உணவு கிடைக்காது. உழவு செய்யப்பட்ட நிலம் பண்படுத்தப் பட்டு விவசாயம்திற்குத் தயாரா வது போல் கஷ்டங்கள் மனிதனைப் பண் படுத்து கின்றன; அனுபவங்கள் வாழ்க்கையை எதிர் கொள்ள உதவும் பேருபாயங்களாகும்.


மகிழ்ச்சியினால் ஏற்படும் அனுபவங்களை விட இடர்களினால் விளையும் அனுபவங்கள் மனிதனு க்கு உற்ற துணையாகும் என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவம். பெரும் பான்மையோரும் இதை ஆமோதிப்பர்.

இறைவன் நம்மால் தாங்கமுடியாத எதையும் தரமாட்டார் என்பதும் இறை நம்பிக்கையுடைய எனது மற்றொரு அனுபவம். “நமக்கு ஏனிந்த கஷ்டம்? என்ற கேள்வியில் ஆரம்பமாகும் ஆக்க பூர்வமான சிந்தனை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் ஆகும்.

நம்மை கேட்டு சூரியன் உதிக்கவில்லை, காற்று வீசுவதில்லை , மழை பெய்யவில்லை!

நம் கையில் இருப்பது , இன் நேரம் , இப்போதைய செயல் , அது மட்டுமே, அது போல் செய்து முடிக்க வேண்டிய செயல்களை பட்டியலிட்டு , ஒவ்வொ ன்றாக முடிக்கவும்!

நடப்பவை நடக்கட்டும் என்று ஏற்று கொள்ளவும். மனது அமைதி அடையும்!

Tuesday, August 20, 2024

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய செய்யவேண்டிய பரிகாரம் !

 திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய செய்யவேண்டிய பரிகாரம் | Happy Marriage Life Worship

வாழ்க்கையில் திருமண பந்தம் என்பது மிக முக்கியமான பந்தம்.நம்முடைய பாதி வாழ்க்கையின் ஒரு பகுதி திருமண வாழ்க்கையில் தான் செலவிட வேண்டும்.அப்படியாக அந்த திருமணத்திற்கு சரியான வரன் அமையவேண்டும் என்று தான் எல்லோருடைய கனவாக இருக்கும்.

திருமணத்தில் மணமகன் மணமகளும் நல்ல பந்தத்தோடு அன்பும் பாசமும் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். அப்படியாக திருமணம் ஆகும் வயத்தில் இருப்பவர்கள் அனைவர்க்கும் ஒரு வித பயம் ஏற்படும் அதாவது நல்ல கணவன் மனைவி அமையவேண்டும் என்று.

அப்படியாக ஒருவருடைய திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம். 

பொதுவாகவே திருமணத்தில் தடைகள் ஏற்படுகிறது அல்லது திருமணத்தில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறது என்னும் பட்சத்தில் அதற்கு முக்கியமான காரணமாக திகழக்கூடியவர்கள் ராகு கேது தான்.

இவர்களின் ஆதிக்கத்தால் தான் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் என்பது ஏற்படும். அதனால் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பவர்கள் ராகு கேதுவை வழிபாடு செய்ய வேண்டும்.

மேலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், போன்ற தோஷங்கள் இருந்தாலும் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் என்பது ஏற்படும். எப்பேர்ப்பட்ட திருமண பிரச்சினையாக இருந்தாலும் ராகு கேதுவை வழிபாடு செய்யும்பொழுது அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று ராகு காலமான காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணிக்குள் அருகில் நாக சொரூபமாக இருக்கக்கூடிய தெய்வத்தின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

உதாரணமாக நாகாத்தம்மன், மாரியம்மன் போன்ற கோவில்களுக்கு செல்லலாம். கோயில்கள் இல்லாத பட்சத்தில் புற்று இருக்கும் இடத்திற்கு கூட சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இப்படி தொடர்ந்து 8 வாரம் செய்து வர திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலகி வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

நம்முடைய கர்மாக்களை குறைப்பது எப்படி?

 Karma Quotes Images – Browse 732 Stock Photos, Vectors, and ...

பொதுவாக கர்மா என்பது நம்முடைய பாவம் புண்ணியம் தான்.அதாவது மனிதனுக்கு சில நேரங்களில் இது எல்லாம் பாவமா?இதற்கெல்லாம் தண்டனையா என்று ஆச்சிரிய படுத்தும் வகையில் அமைந்து இருக்கும்.அதாவது நம்முடைய சொல்லும் செயலும் கண்காணிக்க படுகிறது.

அதற்கு எல்லாம் கர்மா வினைகள் உண்டு.அப்படியாக கர்மா வினைகள் அதிகம் ஆனால் அவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கும்.அப்பொழுது அந்த கர்ம வினையின் கெடுதல்களை குறைக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

(1) பறவைகளுக்கு நீர் வைத்தல் தானியங்கள் வைத்தல்

(2) நாய்களுக்கு உணவளித்தல்

(3) மீன்களுக்கு உணவளித்தல்

(4) குரங்குகளுக்கு உணவளித்தல்

(5) குதிரைகளுக்கு உணவளித்தல்

(6) யானைகளுக்கு உணவு அளித்தல் 

(7) பசுக்களுக்கு உணவளித்தல்

(8)ஆடுகளுக்கு உணவளித்தல்

(9) தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தல்

(10) சகோதர, சகோதரிகள் அவர்கள் கஷ்டப்படும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும்

(11) கர்ப்பஸ்திரிகளுக்கு

(12) ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும்

(13) நோயளிகளுக்கு மருந்து வாங்கி கொடுப்பது

(14) மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல்

(15) திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.

இவை செய்தால் நம்முடைய கர்ம வினைகள் குறையும்.மேலும் பாவம் செய்யமல் இருந்தால் போதும்.மனிதனுடைய மனதிற்கு தெரியும் எது நல்ல செயல் தீய செயல் இருப்பினும் அவன் சமயங்களில் அவனுடைய சுயநலத்திற்காக பாவம் இழைகின்றான்.

அந்த செயல் அனைத்தும் அவன் பாவங்களுக்கு சேரும்,ஆகா வாழும் இந்த சிறிது காலத்தில்,தாய் தந்தையரே அடுத்து ஜென்மம் நம்முடன் வருவார்களா என்று நிச்சயம் இல்லாத இந்த உலகில் பிறருக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய சுயநலத்திற்காக பிறரை வாட்டி வதைத்து துன்புறுத்தி தீய செயலில் ஈடுபடாமல் இருப்பது நன்மையை உண்டாகும்.

Saturday, August 17, 2024

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் !

 


 1.  இன்றிருப்போர் நாளை இல்லை .

2.   இதில் யாரும் விலக்கும் இல்லை

3.  வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.

4.   எண்ணம் போல் வாழ்க்கை. நம் எண்ணங்கள் நன்றாக இருந்தால் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

5.வாழ்க்கையில் எதையும் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக நடக்கும்.

6.மற்றவர்களை திருப்திப்படுத்த எதையும் செய்ய கூடாது.

7.செய்யும் செயல் சிறியதோ பெரியதோ செய்வதை சிறப்பாக         செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .

8. உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே வந்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது.

9.நீ எதை இழந்தாலும் உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

10.நீ இழந்ததை நினைத்து வருந்தினாள் இருப்பதையும் இழந்துவிடுவாய். இருப்பதை நினைத்து மகிழ்ந்தாள் இழந்தடையும் அடைந்து விடுவாய்.

11.அன்பை செயல்களால் வெளிப்படுத்தமுடியாத போது தான் வார்த்தைகள் தேவைப்படுகின்றன.

12.மகிழ்ச்சியை விட மிகப்பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை.

13.துன்பம் வரும் வேளையில் அமைதியாக அல்லது சிரிப்புடன் இருக்க முடியுமானால் அது மனப்பக்குவம்! 

14.வெற்றி கிடைக்கும் வேளையில் அமைதியாக இருக்க முடியுமானால் அது மனப்பக்குவம் !

15.தனக்கென கடுமையான நெறிமுறைகளை கடைபிடிப்பதுடன் பிறரிடம் எளிதான கட்டுக்கோப்பையும் எதிர்பார்ப்பதும் பக்குவம்! 

16.புத்திக்கும் மனசுக்கும் நடக்கும் போராட்டம் தான் நாம். 

17.ஒன்றை பெற வேண்டும் என்று நினைத்து விட்டால் இறுதி வரைக்கும் போராடு விளைவுகளையோ அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ கவலைப்படாதே! 

18.  நீ பேச முடியாத இடங்களில் உன் திறமையை பேச விடு கண்டிப்பாக வாழ்வில் வெற்றி நிச்சயம்!

19.எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மனம் தளராமல் இருப்பது. 

20.வெற்றியை தலைக்கு கொண்டு செல்லா மலும்,தோல்வியை இதயத்துக்கு எடுத்து செல்லாமல் சரியாக கையாள்வது.

21.  தோல்வியை கண்டு பயப்படாமல் இருப்பது.

22.தன் எந்த ஒரு செயலும் பிறரை புண்படுத்தாமல் பார்த்து கொள்வது.

23.மற்றவர் சந்தோஷத்திற்காக சிலவற்றை விட்டு தருவது.

24.நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நாமே இழந்து கொண்டி ருக்கிறோம்.

25.நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

 26.  இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது  ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.

28.எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள,உங்களை விட நல்ல வேலை. நல்ல கார். வங்கியில் நிறைய பணம்.நல்ல படிப்பு. அழகிய மனைவி. அழகான கணவன். நல்ல குழந்தைகள். நல்ல சுற்றுப்புற சூழ்நிலை. நல்ல நிலை..........

ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்,

29.நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.

30.சிலர் தங்கள் கவனத்தை, அடுத்தவர்கள் எப்படிஇருக்கின்றார்கள்,எங்கேசெல்கின்றார்கள்,? என்ன அணிகிறார்கள்,என்ன வாகனம் ஓட்டு கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்?..என்பதிலேயே கவனத்தை, செலுத்துவதால் பாதுகாப் பின்மையை உணருகின்றார்கள்.

உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.

கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கிய மான ஒரு வாழ்வை வாழுங்கள்.நாம் யாருக்கும் போட்டி இல்லை. யாரும் நமக்கு போட்டி இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.

*ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.*

மற்றவரைக் கவிழ்க்க எண்ணி நாம் கவிழ்ந்து போவது தெரியாமல் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுகிறோம்.

உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.

'வாழும் இந்த காலம் வசந்தமாக அமையும்.

வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில்தான்!


ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் பு...