Total Pageviews

Sunday, August 11, 2024

சாப்பாட்டைவீட்டுல,சமைச்சு சாப்பிட்ட வரைக்கும் ஊர்ல இவ்வளவு நோயாளிகளின் கூட்டம் இல்லை!

 

குளிக்கும் பழக்கம்

நாமும் தினமும் குளித்து குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம்-கை-கால்  மட்டுமே கழுவிக்கொண்டு செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து  நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள். தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத் துணியில் பாக்டீரியா வேகமாக  வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.. வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக்  குளிக்கவைக்கவும்.

கை சுத்தம்

சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப்  பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு  குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள். மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத்  தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற  இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.

  உணவு பாதுகாப்பு

 எல்லா  தனியார் மருத்துவமனைகளிலும்,  நோயாளிகளின் கூட்டம்,
அலை மோதுகிறது. 


இதற்கான காரணம் பற்றி எனக்கு தெரிந்த பிரபல டாக்டர் ஒருவர்
சொன்னது.

"இன்னிக்கு இருக்கிற இளைய தலைமுறை நிறைய சம்பாதிக்கறாங்க . அதுல பாதி பணத்தை  ஹோட்டல்களுக்கு போய் சாப்பிட செலவழிக்கறாங்க.மீதி பாதி பணத்தை நாங்க வாங்கிக்கறோம்.

சாப்பாட்டைவீட்டுல,சமைச்சு சாப்பிட்ட வரைக்கும் ஊர்ல
இவ்வளவு ஹாஸ்பிடல்கள் இல்லை.
 

நான்கைந்து க்ளீனிக்குகளும்,ஒரு கவர்மென்ட் ஹாஸ்பிடல் மட்டுமே இருந்தது.

ஆனா.....
 

இன்னிக்கு ஏக்கர் கணக்கில்  பிரம்மாண்டமான ஹாஸ்பிடல்கள்.
ஐ.சி.யூனிட்டில் அட்மிட்டானால் லட்சங்களில் ஃபீஸ். சொந்த வீடும், நகைகளும் பணமாக மாறி எங்கள் கைகளுக்கு வந்துவிடும்.

தயவு பண்ணி வீட்ல சமைச்சு சாப்பிடுங்க.மாசத்துக்கு ஒரு தடவை
ஹோட்டல்ல சாப்பிடுங்க.எவ்வளவு பெரிய ஹோட்டலாக
இருந்தாலும் நாம் எதிர்பார்க்கும் சுத்தம், சுகாதாரம் இருக்காது.!


No comments:

Post a Comment

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...