Total Pageviews

Friday, August 16, 2024

நீண்ட காலம் நிம்மதியாக, வாழ வழிகாட்டும் வள்ளலார்!

 


1. சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து, சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.

2. பசி எடுத்த பிறகே சாப்பிட வேண்டும்.

3. உணவில் உப்பு, புளி, மிளகாய் குறைவாகவும், மிளகு, சீரகம் ஆகியவை அதிகமாகவும் சேர்த்து சார்ப்பிட வேண்டும்.

4. விருந்து என்றாலும் குறைவாகவே உண்ண வேண்டும்.

5. பகலில் சாப்பிடும் உணவில் அரைப்பங்கு அளவு உணவை மட்டுமே இரவில் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

6. உறங்கும் போது இடது கைப் பக்கமாகவே உறங்க வேண்டும்.

7. பதற்றம் அதிகரிப்பதால் பிராணவாயு அதிகமாக செலவாகும். இதனால் பதற்றமின்றியும், ஆரவாரமின்றியும் அமைதியான வாழ்க்கை வாழ பழக வேண்டும்.

8.வாழ்க்கை என்பது வாழும் வரை மட்டுமே. அதனால் அனைத்து உயிர்களிடத்தும் அன்புடனும், கருணையுடன் வாழ்.

9. முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்.

10 மரணத்திற்கு பிறகு எதையும் கொண்டு செல்ல போவதில்லை. அதனால் தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்காதே.

11. வாழும் வரை ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்.

12. பணத்தை சேமிப்பதற்காக ஆரோக்கியத்தை இழந்து விடாதே.

13. மரணத்திற்கு பிறகு என்ன ஆகும் என சிந்திக்காதே.

14. வாழும் போதே உறவுகள், நண்பர்கள், மனைவி, குழந்தைகள் ஆகியோரை ஆத்மார்த்தமாக நேசி.

15. பிள்ளைகளிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கவோ, அவர்களை உனது அடிமைகளாக நடத்த வேண்டும் என நினைக்காதே.

16. என்னுடைய மரணத்திற்கு பிறகு என ஒரு போதும் உன் பிள்ளைகளிடம் சொல்லாதே. பிறகு உனது மரணம் எப்போது வரும் என அவர்கள் காத்திருக்க துவங்கி விடுவார்கள்.

 

17. உன்னால் முடியாததை மாற்ற முயற்சி செய்யாதே.

18. மற்றவர்களின் வாழ்க்கையை பார்த்து பொறாமை கொள்ளாதே.

19. வாழ்க்கையை அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்.

20. மற்றவர்களின் நல்ல பழக்கங்களை மனம் திறந்து பாராட்டு.

21. வாழ்க்கை வாழ்வதற்கு தான். காலம் ஓடி விடும். ஆர்வத்துடன், வாழ்க்கையை நேசித்து வாழ்.

22. ஆதரவற்றவர்கள், ஏழைகள், வயதானவர்கள், நோயுள்ளவர்களிடம் ஒரு போதும் கடுமையாக நடந்து கொள்ளாதே.


23. உணவு, தூக்கம், ஓய்வு, பேச்சு ஆகியவற்றை குறைத்து, அதிகமாக உழை.

24. நல்ல மனிதர்களுடன் வாழ பழகு. அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடு.

25. தியானம், படிப்பு, உடற்பயிற்சி, மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு அதிக நேரம் செலவிடு.

இதுவே சரியான வாழ்க்கை முறை என்றும், இந்த முறையில் வாழ்க்கையை நடத்தினால் நீண்ட காலம் நிம்மதியாக, சரியான வாழ்க்கையை வாழலாம் என வள்ளலார் வழிகாட்டுகிறார்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...