Total Pageviews

Tuesday, August 13, 2024

ஒரு புதிய தொழிலைத் தொடங்கும் போது எதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்?

தொழில் செய்தால் லாபம் வரலாம் அல்லது நஷ்டம் வரலாம்!

தொழில் தொடங்கும் மனநிலை!


 
தொழில் செய்தால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

 பாஸ் பிடிக்கவில்லை என்று தொழில் கூடாது.

 நம் இஷ்டப்படி போகலாம் என்பதற்காக தொழில் கூடாது.

வேலை  10 to 5 வேலை பிடிக்கவில்லை என்பதற்காக தொழில் கூடாது.

 ஒருவரிடம் கைகட்டி வேலை செய்வது பிடிக்க வில்லை என்று தொழில் கூடாது

 FREE TIME வேண்டும் என்று தொழில் கூடாது

 365 நாட்களும் வேலை செய்யவேண்டும்

ஒரு வேலையில் இருந்தால் உங்கள் முதலாளிக்குத்தான் நீங்கள் பதில் சொல்லவேண்டும். தொழிலில், வேலை செய்பவர், சப்ளையர்,  வாடிக்கையாளர், அரசாங்கம், உங்கள் குடும்பம் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும்.

 வெறும் 20 சதவிகிதம் தொழில்முனைவோர்களே வெற்றி பெறுகிறார்கள்

குடும்ப சூழல் :  குடும்பத்திற்கு உடனடியாக பணம்  வேண்டுமென்று தொழில் தொடங்கக்கூடாது. தொழிலில் நஷ்டம் உடனடியாக கிடைக்கும்! லாபம் எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

 பொறுமை

தொழிலை தொடங்க வேண்டும், வளர்க்க வேண்டும், மேலே எடுத்து செல்ல வேண்டும். இதற்கு 5 ஆண்டுகள் ஆகலாம்.

 குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் தொழிலின் நெளிவு சுளிவுகள் புரியும். (எந்த வாடிக்கையாளரை நம்பலாம், எந்த மாதம் தொழில் மந்தமாகும், எப்போது நன்றாக இருக்கும் என்று புரியும்.)

 விடாமுயற்சி

 வெட்கமில்லாமல் பிறரிடம் ஆர்டர் கேட்க வேண்டும். (ஒரு ஸ்டேஜ் வந்த பிறகு வாடிக்கையாளர்களை நம் பின்னாடி வர செய்யவேண்டும்.)

 வாடிக்கையாளர் ஏதாவது தவறாக சொல்லிவிட்டால் ஒத்துக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

 எந்த பொருளை விற்பது

 5% முதலாளிகள் ஒரு நாளைக்கு 1 லட்சம் குண்டூசி விற்கிறார்கள்; 5% முதலாளிகள் ஒரு கப்பல் செய்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை விற்கிறார்கள். 90% மக்கள் இவை இரண்டையும் தவிர மீதியை விற்கிறார்கள்.

எந்த பொருள் எந்த பகுதியில் விற்கும் என்று பார்த்து விற்க வேண்டும். (காபிப்பொடி கடை நடுத்தர மக்கள், குறிப்பாக BRAHMINS இருக்கும் இடத்தில விற்கும். மீதி இடத்தில அதிகமாக விற்காது )

ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது ஒரு சில பொருட்களை யோதான் விற்கவேண்டும். அப்போதுதான், அந்த பொருளில் உள்ள சாதக பாதகங்கள் தெரியும்.

எந்த பொருளை விற்கிறோமோ அதை பயன்படுத்தி பார்க்க வேண்டும். 90% அவ்வாறு செய்வது கிடையாது. (எண்ணையை பாட்டிலிலிருந்து விளக்கில் ஊற்றிப் பார்த்தால்தான் அதில் உள்ள சிக்கல்கள் தெரியும்.

தன்னை மேம்படுத்திகொள்ளுதல்

எப்போதும் நல்ல ஆடைகளை அணிய வேண்டும்.

புத்தங்களை படித்துக்கொண்டே இருக்கவேண்டும். மிக முக்கியம் - அதில் சொல்லப்பட்ட கருத்துகளை செயல்படுத்தவேண்டும்.

பார்ட்னர்

வேறு ஒருவருடன் சேர்ந்து தொழில் செய்ய வேண்டுமென்றால், அவரை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவரை எங்காவது கோவிலில் பார்த்து அங்கு அவர் நல்ல முறையில் பழகுவதை பார்த்து அவருடன் சேர முடிவெடுக்கக்கூடாது.

அந்த தொழிலின் சூழ்நிலையில் அவர் எப்படி பழகுகிறார் என்று தெரிந்த பின்னரே தொழில் தொடங்க வேண்டும்.

சிலருக்கு ஏதோ காரணத்தினால் பணத்தில் ஒரு ஈர்ப்பு இருக்காது.  அவர்கள் முடிவெடுக்க (விட) மாட்டார்கள். அவர்களுடன் சேரக்கூடாது.

தொடர்ந்து முதலீடு

சந்தையில் நம்மை நினைவு வைத்துக்கொள்வர்தற்கு தொடர்ந்து விளம்பரங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். (குறிப்பாக டிஜிட்டல் மீடியாவில்.)

தொழில் துறை தொடர்பான கூட்டங்களுக்கு செல்லவேண்டும்.

கணக்கு வழக்கு

தொடர்ந்து வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  உங்களுக்கு வரவேண்டிய தொகை உங்களுடைய 2 அல்லது 3 மாத விற்பனைக்கு மேலிருந்தால், எந்த வாடிக்கையாளரிடமிருந்து அதிக பட்ச பணம் வரவேண்டி இருக்கிறதோ, அந்த வாடிக்கையாளருக்கு பொருள் கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும்.

ஒருவர் 1 லட்ச ரூபாய் கொடுக்கவேண்டும். ஆனால் இப்போது 75,000 கொடுக்கிறேன் ; மீதியை  பிறகு  கொடுக்கிறேன் என்று சொன்னால்,  உடனே 75,000 பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். இது WORKING CAPITAL-க்கு உதவும். மற்றவர்களுடைய அறிவுரைகளையும் கேட்டு முடிவெடுக்கவும் !

No comments:

Post a Comment

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...