பொதுவாக கர்மா என்பது நம்முடைய பாவம் புண்ணியம் தான்.அதாவது மனிதனுக்கு சில நேரங்களில் இது எல்லாம் பாவமா?இதற்கெல்லாம் தண்டனையா என்று ஆச்சிரிய படுத்தும் வகையில் அமைந்து இருக்கும்.அதாவது நம்முடைய சொல்லும் செயலும் கண்காணிக்க படுகிறது.
அதற்கு எல்லாம் கர்மா வினைகள் உண்டு.அப்படியாக கர்மா வினைகள் அதிகம் ஆனால் அவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கும்.அப்பொழுது அந்த கர்ம வினையின் கெடுதல்களை குறைக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
(1) பறவைகளுக்கு நீர் வைத்தல் தானியங்கள் வைத்தல்
(2) நாய்களுக்கு உணவளித்தல்
(3) மீன்களுக்கு உணவளித்தல்
(4) குரங்குகளுக்கு உணவளித்தல்
(5) குதிரைகளுக்கு உணவளித்தல்
(6) யானைகளுக்கு உணவு அளித்தல்
(7) பசுக்களுக்கு உணவளித்தல்
(8)ஆடுகளுக்கு உணவளித்தல்
(9) தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தல்
(10) சகோதர, சகோதரிகள் அவர்கள் கஷ்டப்படும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும்
(11) கர்ப்பஸ்திரிகளுக்கு
(12) ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும்
(13) நோயளிகளுக்கு மருந்து வாங்கி கொடுப்பது
(14) மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல்
(15) திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.
இவை செய்தால் நம்முடைய கர்ம வினைகள் குறையும்.மேலும் பாவம் செய்யமல் இருந்தால் போதும்.மனிதனுடைய மனதிற்கு தெரியும் எது நல்ல செயல் தீய செயல் இருப்பினும் அவன் சமயங்களில் அவனுடைய சுயநலத்திற்காக பாவம் இழைகின்றான்.
அந்த
செயல் அனைத்தும் அவன் பாவங்களுக்கு சேரும்,ஆகா வாழும் இந்த சிறிது
காலத்தில்,தாய் தந்தையரே அடுத்து ஜென்மம் நம்முடன் வருவார்களா என்று
நிச்சயம் இல்லாத இந்த உலகில் பிறருக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய
சுயநலத்திற்காக பிறரை வாட்டி வதைத்து துன்புறுத்தி தீய செயலில் ஈடுபடாமல்
இருப்பது நன்மையை உண்டாகும்.
No comments:
Post a Comment