Total Pageviews

Tuesday, July 30, 2024

பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்!

சார்...  நான்  தி.நகர்  இருந்து [T.Nagar] பேறேன். உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.

 நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரன் பார்க்கறோம்ன்னு சொல்றோம்.. அப்புறம் நீங்க பேசுங்க!

சார்! கொஞ்சம் பொறுங்க.. நான் என்ன சொல்ல வர்றேன்னா...

 நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...

  சரி.. முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க.. அப்புறம் நான் சொல்லறேன்.

நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.

6,5,4,3,2,1, அப்படின்ன என்ன?

  6,5,4,3,2,1ங்கறது என்னதுன்னா..

6 ன்னா பையன் 6 டிஜிட்ல சம்பளம் வாங்கனும் அதாவது குறைஞ்சபட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும்.

5 ன்னா பொண்ணுக்கு நிச்சயதார்த்தின் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும்.

4 ன்னா, 4 சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும்.

3 ன்னா, மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே இருக்கணும்.

2 ன்னா, பையனோட அப்பா, அம்மா கல்யாணத்திற்கு பிறகு, 2 பேரும் பையனோட சேர்ந்து இருக்கக்கூடாது.

1 ன்னா, கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு 1குழந்தை தான் பெத்துப்பா.. அதுவும் அவ விருப்பப்படும் போதுதான்.

அப்புறம் எங்களுக்கு பையனை பிடிச்சுடுத்துன்ன, நீங்க பையனோட SALARY சர்டிபிகேட் "கொடுக்கனும்.

வைர நெக்லஸ் போடறதுக்கு, தகுதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கு, பையனோட பேங்க் ஸ்டேட்மெண்ட் வேணும்.

பையன் பேர்ல இருக்கிற காரோட RC certificate, பிளாட்டோட Property document வேணும்.

 மேலே சொன்ன விஷயங்களெல்லாம் உங்க பொண்ணு தன்னுடைய கல்யாணத்திற்கு போட்ட கண்டிஷன்களா?

 என் பொண்ணு சின்ன பொண்ணு சார்! அவளுக்கு இதெல்லாம் தெரியாது.. ரொம்ப வெகுளியா பழகுவா சார்.. இதெல்லாம் நாங்க போடற கண்டிஷன்கள். ஒரே பொண்ணு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்துஇருக்கோம்". புகுந்த வீட்லே போய் கஷ்டப் படக்கூடாது என்பதற்காக நாங்க போடற கன்டிஷன்கள் இது.. அவளுக்கு வாசல் தெளித்து கோலம் போடத்தெரியாது.. சமையல் பண்ணத் தெரியாது.. லீவு நாளுன்னா 10 மணிக்குத்தான் எழுந்திருப்பா, புடவை கட்டிக்கத் தெரியாது, அதனாலே விசேஷங்களுக்கு சுடிதார் தான் போட்டுப்பா...

அப்புறம் இன்னொரு விஷயம்..

என் பொண்ணு சுயமரியாதைக்காரி, யார் காலிலேயும் விழுந்து கும்பிடமாட்டா.. இதுக்கெல்லாம் நீங்க  ஓகேன்னு சொன்னா மேற்கொண்டு, என் பொண்ணு கல்யாண விஷயமா, என் மனைவி உங்ககிட்ட பேசுவா!

 சார்! எனக்கு நீங்க பேசினதே தலைய சுத்தறது... இதுலே உங்க மனைவி வேறயா? நான் என் பையனுக்கு வரன் தேடலே சார்..

அப்புறம் எதுக்கு என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்ன்னு சொன்னீங்க...

என்னை எங்க சார் பேசவிட்டீங்க நீங்க..

  நான் T.நகர்ல இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசறேன்... 

உங்க பொண்ணு, இன்னிக்கு உங்க தெரு மெக்கானிக் ஷாப் பக்கத்திலே இருக்கிற ஒரு பையனை காதலிச்சு, தெருமுனையிலே இருக்கிற கோயிலிலே கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேஷனுக்கு வந்துருக்கா... 

நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டீங்க.. 

  நீங்க உங்க ஊரு சனத்தை கொண்டு கல்யாணம் பண்ணினா இவங்களை பிரிச்சுடுவீங்களாம், அதனாலே, அவங்க குடும்பம் நடத்தறதுக்கு, போலீஸ் பாதுகாப்பு வேணும்ன்னு கேட்டு வந்துருக்கா சார்!

😳😳😳

"என்னது"...
என்றவாறே மயக்கமாய் கீழே சாய்கிறார்...

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...